Monday, 4 August 2014

திருவிளையாடற் புராணம் பகுதி-4

திருநகரச்  சிறப்பு.
                    திருநகரச் சிறப்பு என்ற இந்த படலத்தில் பரஞ்சோதி மாமுனிவர் மதுரை மாநகரின் சிறப்புகளை எடுத்தியம்புகிறார்.திரு நாட்டு சிறப்பு என்பதில் பொதிகை மலை,பொருநை ஆற்றை வர்ணித்தவர்,திருநகரச் சிறப்பில் மதுரை நகரை சிறப்பிக்கிறார்.இதில் நகரை சுற்றிய இயற்கை காட்சி,அகழி,மதிற்சுவர்கள்,அதில் உள்ள பொறி,மற்றும் நகில் உள்ள வீதிகளை பற்றி விவரிக்கின்றார்.அதை இதோ ஆசிரியர் வழியில் காண்போம்.
மங்கலம் புனை பாண்டி நாடு ஆகிய மகட்குச் 
சங்கலம் புகை தோள் இணை தட முலை ஆதி 

அங்கம் ஆம் புறம் தழுவிய நகர் எலாம் அனைய 
நங்கை மா முகம் ஆகிய நகர் வளம் பகர்வாம்.
          மங்கலம் மிக்க பாண்டிய நாட்டிற்கு மதுரை நகரானது அடையாளம் 
தரும் முகம் போன்றது மதுரை மாநகர்.அதன் புறத்தே உள்ள நகரம் எல்லாம் பாண்டிய மங்கையின், வளையால் ஒலிக்கும் கைகள்,அதை தாங்கி நிற்கும் தோள்கள் ,மற்றும் மார்புகளை போன்றது .திருப்பரங்குன்றமும்,பிரான்மலை  கொங்கைகள் ஆயின.திருசுழி அங்கம் ஆனது,திருக்குற்றாலம் வயிறு  போன்றது,செங்கையே 
திருவேடகம்,மேனியே திருப்பூவணம்,தோள்கள் வேய்வனம் என்று விளங்கும் திருநெல்வேலி என பாண்டிய நங்கையை போற்றுகிறார்.
நகரை சுற்றியுள்ள இயற்கைக் காட்சி 
சிவந்த வாய்க் கரும் கயல் கணாள் வலாரியைச் சீறிக் 
கவர்ந்த வான் தருக் குலங்களே கடி மணம் வீசி 
உவந்து வேறு பல் பலங்களும் வேண்டினர்க்கு உதவி 
நிவந்த காட்சியே போன்றது நிழல் மலர்ச் சோலை.
குளிர்ந்த மலர்களை உடைய சோலையில் பூக்கும் பூக்களின் சிவந்த நிறத்தை அதரத்தில் ஏந்தி,கரிய கயல் கண்களை உடைய தடாதகை பிராட்டி,வலாரியை -இந்திரனை கோபித்து வான் தருக்கள் ஆகிய 
சந்தானம், அரிசந்தனம, மந்தாரம், பாரிசாதம், கற்பகம் ஆகிய மரங்கள் மிக்க மணத்தினை வீசி,வேண்டினார்க்கு வேண்டிய பலனை தந்து மகிழ்ந்ததை போன்றது இக்காட்சி என்கிறார்.
அகழி 
பிறங்கு ஆலவாய் அகத்து எம்பிரான் அருளால் வந்து 
அறம் கொள் தீர்த்தம் ஆய் எழு கடல் அமர்ந்த வா                                                     நோக்கிக் 
கறங்கு தெண் திரைப் பெரும் புறக் கடலும் வந்து                                                     இவ்வூர்ப் 
புறம் கிடந்ததே போன்றது புரிசை சூழ் கிடங்கு

மதுரை நகர் மதிலை சுற்றிய அகழியானது சோம சுந்தரராய் ,எழுந்தருளிய எம்பெருமானின் அருளினால் உருவான எழுகடல் -
உவர் நீர்க்கடல், பாற்கடல், தயிர்க்கடல், நெய்க்கடல், கருப்பஞ் 
சாற்றுக்கடல், மதுக்கடல், நன்னீர்க்கடல் என்பன. அறவடிவாகிய தீர்த்தமாகி வந்த தன்மையை ,ஒலிக்கின்ற பெரும் புறக்கடலே இங்கே பாய்ந்தது போல் இருந்தது என்பார்.

மதிற்சுவர் 
மாக முந்திய கடி மதின் மதுரை நாயகர் கைந் 
நாகம் என்பதே தேற்றம் அந் நகர் மதில் விழுங்கி 
மேகம் நின்று அசைகின்ற அவ் வெம் சினப் பணிதன் 
ஆகம் ஒன்று தோல் ஊரிபட நெளிவதே ஆகும்.

மதுரை மாநகர் எம்பெருமானே சோமசுந்தர மூர்த்தியாய் ஆளப்பெற்றது ,எனவே அதன் மதிர்சுவராய் அவர்தம் கை பாம்பே நீண்டது என்றும்,அது வானுலகையும் கிழித்து சீறிப்பாயும் என்றும் ,சூரியன்,சந்திரன் உள்ளே பிரவேசிக்க வேண்டுமெனின்,பாம்பின் வாய் உமிழ்ந்து அளித்தாலே சாத்தியம் என்றும்,அங்கு வரும் முகிலும் அவ்விடத்திலே  நின்று அசையும் என்றும் வர்ணிக்கப்பட்டது,அதோடும் அல்லாமல் அப்பன் கையால் வளைக்கப் பெற்ற மேருமலையே மாதிர சுவராய் நின்றது போலும் என்றும்,மதிற்சுவரின் பெருமை சொல்லப்பட்டது.
மதிர்பொறி 
மழுக்கள் வீசுவன நஞ்சு பூசுமுனை
     வாள்கள் வீசுவன முத்தலைக்
கழுக்கள் வீசுவன குந்த நேமியெரி
     கால வீசுவன காலனேர்
எழுக்கள் வீசுவன கப்ப ணங்கள்விட
     மென்ன வீசுவன வன்னெடுங்
கொழுக்கள் வீசுவன வார்த்தரோ.
நஞ்சு முனை தடவிய கோடலிகளை வீசுவன ,வாட்களை எரிவன ,மூன்று தலையுடைய சூலத்தை எரிவன ,கை வேல் திகரி எனும் தீபந்தம் வீசுவன ,கூற்றுவனை ஒத்த வளைத்தடிகள் ,இரும்பால் ஆனா நெருஞ்சின்முள் வடிவ படையல்களை வீசுவன ,வலிய நெடிய கொழுப்படைகளை வீசுவன ,கவன் கயிற்றில் கல்லை கோர்த்து எரிவன என்று மதிர்பொறிகள் பலம் வாய்ந்தவையாய் இருந்தன என்று உரைக்கிறார் 
வீதிகள் 
பரஞ்சோதி முனிவர் நகரின் வீதிகளை வர்ணிக்கும் பாங்கு அழகுற அமைந்துள்ளது.இதில் பரத்தையர் வீதி,வேளாளர் வீதி,வணிகர் வீதி,மன்னவர் வாதி,மறையவர் வீதி சைவர் வீதி என அவரவர் குணத்திற்கு ஏற்ப அவர் தம் வீதிகளையும்,அவர் தம் பெருமைகளையும் அள்ளி தந்துள்ளார்.
கழையும் தாமமும் சுண்ணமும் மணி நிழல் கலனுங் 
குழையும் தூபமும் தீபமும் கும்பமும் தாங்கித் 
தழையும் காதலர் வரவு பார்த்து அன்பு அகம் ததும்பி 
விழையும் கற்பினார் ஒத்தன விழவு அறா வீதி.
அகம் முழுதும் துலக்கி,சுண்ணம் அடித்து வண்ணம் தீட்டி,பூமாலை சூட்டி ,கரும்பினால் தோரணம் கட்டி,தீபம் ஏற்றி ஒளியை நிறைத்து,தூபம் காட்டி கும்பமும் தாங்கி,தம் அன்பு காதல் கணவர் வரவு நோக்கி காத்திருக்கும் அன்பு அறம்  மறவா கற்பினர் நிறைந்த வீதிகள் என்று வர்ணிக்கின்றார்.