கலைகளும் அதன் வகைகளும்-1
‘கலைகள்’ எனும் சொல்லை ஒரு வரையறையில் கொண்டு வருதல் என்பது இயலாதது. முறையான பயிற்சியால் கற்கப் படுவது கலை‘ என்றும், ‘உள்ளத்து உணர்வுகளின் வெளிப்பாடு கலை‘ என்றும் “ஆயக் கலைகள் அறுபத்து நான்கு’ எனவும் கலைகளின் வரையறை ,வெளிப்பாடு வகையைப் பொதுவாகச் சொல்லலாம்.
கலைகளின் வகைகள்
கலையை இரண்டு வகையாகக் 'கவின் கலை' மற்றும் 'நுட்பக் கலை' என இரண்டாகப் பகுக்கலாம். மனிதனின் அத்தியாவசிய தேவையை நிறைவேற்றுவது கவின் கலைகள். இவை மனிதனின் அடிப்படைத் தேவையான உணவு உடை உறைவிடத்தைப் பூர்த்திசெய்யும் வகையில், கற்பிக்கப்பட்டு முறையாகச் செய்தல் உபயோகக்கலை ,பயன்பாட்டுக் கலை அல்லது கவின்கலையாகும். .
அடிப்படை கலையானது உள்ளத்து உணர்வுகளை வெளிப்படுத்தும் வகையில் நுட்பத்தோடு வெளிப் படும்போது, அது நுட்பக்கலை எனும் வடிவம் பெறுகிறது.
இதையும் புலன்களால் உணரப் படுவதை வைத்து வகைப் பிரிக்கலாம். கண்ணுக்கு விருந்தாக அமைவதை அல்லது கண்களின் வழியாக உணர்வதைக் காட்சிக் கலை எனவும் ,வாயால் பேசி காதால் கேட்பதை, ரசிப்பதைக் கேள்விக் கலை எனவும் பகுக்கலாம்
கலை என்பது அடிப்படைத் தேவைகளைப் பூர்த்திச் செய்வதில் தொடங்கி, வளர்ச்சி அடைந்து , உள்ளத்து உணர்வுகளைப் பிரதிபலித்து, நாகரீகம் எனும் போர்வையில் பல மாற்றங்களைக் கண்டு , இன்று வியாபாரமாக உருவெடுத்து பிரம்மாண்டமாக நிற்கிறது.
உதாரணமாக நான்கு சுவர்களாக இருக்கும் உறைவிடம் கவின்கலை எனப் பெயர் பெரும்,அதே கலை நுட்ப வடிவம் பெரும் போது கட்டிடக் கலை எனும் வரையறைக்குள் வருகிறது. அது காட்சிக்கு விருந்தாகும்.
ஆயக் கலைகள் அறுபத்து நான்கு.
கவின் நுட்பம்,காட்சி கேள்வி என்ற வகைகளில் அடங்கும் இந்தக் கலைகளை ஆயக் கலைகள் அறுபத்துநான்கு என உரைப்பர். இந்தக் கலை பட்டியலை விதவிதமாகத் தருகின்றனர். உண்மையில் தொழில் நுட்ப வளர்ச்சியில் இது பல்லாயிரமாகப் பெருகி உள்ளது என்றே நாம் உணர வேண்டும்.
இயல், இசை நாடகம், ஓவியம் , நடனம் ,சமையல், எழுத்து, அழகு, வாத்தியங்கள், தற்காப்பு கலைகள் எனச் செய்தொழில்கள் அத்தனையிலும் கலை ,உடலில் உயிர் போல் கலந்து உள்ளது.
துகிலில் கலை வடிவம்.
மனிதன் தனது உடலை மறைக்க முதலில் விலங்குகளின் தோல், தாவரங்களை பயன்படுத்தினான். பருத்தியிலிருந்து ராட்டைப் போன்ற கருவிகளால் நூல் நூற்று ,தறிகள் மூலம் நெசவு செய்து, நீண்ட ஆடைகளாக, சேலை,வேட்டி போன்ற நீண்ட துணிகளை உடுத்தினான். இவ்வாறாக துகில் காலை வடிவம் கவின்கலை ஆகும்.
துகில் .
நூல் நூற்று நெசவில் நெய்யப்படும் ஆடை என்பது கவின் கலைக்குள் அடங்கினால், நுட்பம் அதன் மேல் சவாரி செய்து நூற்றலில் பல்வேறு முறைகள் வகைகளைத் தனதாக்கி வரும் போது நெசவுத் தொழில் நுட்பக்கலை பிரிவில் இணைகின்றன. இதையும் காட்சியில் உணர்வை வெளிப்படுத்தும் வகையில் அழகுக் கலையோடு இணைத்துக் கொள்ளலாம்.
பூந்துகில்
இங்கே நாம் கலைகளின் ஒரு பகுதியான பயன்பாட்டுக் கலையின் அத்தியாவசியமான உடைகளை, காட்சிக்கு விருந்தாக்கும் நுட்பக் கலையின் சிறப்பை தனதாக்கிச் சிறக்கும் சித்திரபூத் தையல் அல்லது எம்பிராய்டரி எனும் அலங்காரத் தையல்களைப் பற்றியும் அதன் வகைகளையும் காண்போம்.
நாம் உடுத்தும் உடையை மேலும் அழகாக மாற்றும் இந்தச் சித்திரப்பூத் தையல் .ஊசி நூல் கொண்டு நெய்யப் பட்ட ஆடைகளில் விதவிதமாகத் தைக்கப்படும் நுட்பக் கலை. இதன் வரலாறு என்பது 5000 ஆண்டுகள் பழமையானது. இவை முற்றிலும் பெண்களால் வளர்ச்சி அடைந்தது என்றால் அது மிகை இல்லை.
ஆதி மனிதன் தாவரங்கள், விலங்கின் தோல்கள் ஆகியவற்றை ஆடையாகப் பயன் படுத்த ஆரம்பித்த காலம் முதல் அதனை அழகு படுத்தும் கலையையும் ஆரம்பித்து இருப்பான் என்பதிலும் ஐயமில்லை.
சித்திர பூத்தையல் என்பது பட்டு சணல் கம்பளி பருத்தி, பொன் ,வெள்ளி சரிகை போன்ற நூல் வகைகளையும் செயற்கை நூல்கள் பலவற்றையும் கொண்டு ஊசியால் தைத்துப் பலவகைத் துணிகளை அழகு படுத்துவது ஆகும் .
உலகநாடுகளில் பூவேலை
சுமார் 3500 ஆண்டுகளுக்கு முன்னதாகவே எகிப்தில் தையல் கலையோடு பூத்தையல்களும் பிரசித்துப் பெற்று இருந்ததற்கான சான்றுகள் உள்ளன.
எகிப்தின் மன்னன் அமாஸிஸ் என்பான், தோலை தூரத்தில் வரும் தனது கப்பல்களை அறிந்துக் கொள்வதற்காக அவற்றின் பாயமரங்களில் கூடஇந்தப் பூத் தையற் கலையை பயன்படுத்தியதாக உள்ளது.
பழமையான கிரேக்க நூல், இலியாட்டில் பல இடங்களில் இவ்வகை உடைகளை அணிந்திருந்ததாக உள்ளத்திலிருந்து, அது ப்ரசித்திப் பெற்று இருந்ததை அறியலாம்.
பத்தாம் நூற்றாண்டுகளில் மேற்கத்திய நாடுகளிலும் இந்தக் கலை செழித்து வளர்ந்தது. பழைய ஏற்பாடு போன்ற நூல்களை, தேவாலயங்களில் உள்ளத் திரைச் சேலைகளில் அவர்களது புனிதச் சின்னம் பூ வேலைப் பாட்டில் செய்யப் பட்டதற்கான ஆதாரங்கள் உண்டு.
மேற்கத்திய நாடுகளின் ராணிகளும், மனப் பெண்களும் பூவேலைப்பாடு செய்யப்பட்ட துணிகளை விரும்பி அணிந்ததைப் பற்றிய வர்ணனை இருந்துள்ளது.
தமிழ் பண்டைய இலக்கியங்களிலும் , 'பூந்துகில்' 'பூங்கலிங்கம்' எனும் சொல் கையாளப்பட்டு இருக்கிறது. பலக் காலக்கட்டங்களில் இந்தக் கலை பெண்களால் போற்றி வளர்க்கப் பட்டு வந்துள்ளது.
19 நூற்றாண்டில் பூவவேலைப்பாடு செய்வதற்காக இயந்திரங்கள் வடிவமைக்கப்பட்டன.அதன் முதல் ஆடை வடிவமைப்புத் துறையிலும் புரட்சி வந்துள்ளது குறிப்பிடத் தக்கது.
இந்தியாவில் பூவேலை
இந்தியாவில் ஆதிவாசிகளால் செய்யப்பட்ட இந்தக் கலையானது, மெல்லப்பரவியது மொகலாயர்காலத்தில் சிறப்புப் பெற்று விளங்கியது. இன்று இந்தியாவில் உள்ள ஒவ்வொரு மாநிலத்திற்கும் பிரத்தியேகமான எம்பிராய்டரி எனச்சொல்லப்படும் பூவேலைகள் , ஆடைவடிவமைப்புத் துறையில் பெரும் புரட்சியை உருவாக்கியிருக்கின்றன.
தமிழ்நாட்டின் தோடா எம்பிராய்டரி., கர்நாடகா ஆந்திராவில் கசூதி, வங்காளத்தின் காந்தா, காஷ்மீரத்தின் காஸ்மீரி, பஞ்சாபின் புல்காரி,உத்தரப் பிரதேசத்தின் சிகன்காரி, ஆரி ,ஜெர்தோஸி, குஜராத்தின் கட்ச், ராஜஸ்தானின் கண்ணாடி வேலைப் பாடுகள் என இந்தியாவில் மாநிலம் வாரியாக, இந்தச் சித்திரப்பூ தையல் எனும் எம்பிராய்டரி கலை சிறந்து விளங்குகிறது.
வரும் பதிவுகளில் இந்த எம்பிராய்டரி வகைகளை , அதன் சிறப்புகளை, நமது நாகரீக ஆடை வடிவமைப்பில் அவை எவ்வாறு மிளிர்கின்றன என்பதைக் காண்போம்.