கடவுள் வாழ்த்து
பரஞ்சோதி முனிவர் தனது திருவிளையாடற் புராணம் என்ற இந்த நூலில் கடவுள் வாழ்த்து பகுதியில்
சிவம்-சக்தி,
பரசிவம்-சிற்சக்தி,
சொக்கநாதர்-அங்கயற்கண்ணம்மை ,
சோமசுந்தரர்-தடாதகை பிராட்டி , என அம்மையப்பனை பல்வேறு வகைபிரித்து சொல்லாடல் செய்து துதி செய்துள்ளார்.
அதன் பின்னே
வெள்ளி அம்பலவாணர்
தட்சிணாமூர்த்தி
சித்திவிநாயக கடவுள்
முருகக்கடவுள்
நாமகள்
திருநந்தி தேவர் எனும் வரிசையில் சிவகுடும்பத்தை போற்றியுள்ளார்.
ஆளுடைய பிள்ளை
ஆளுடைய அரசுகள்
ஆளுடைய நம்பிகள்
ஆளுடைய அடிகள்
சண்டேசுரர் என திருத்தொண்டர்களை வணங்கி கடவுள் வாழ்த்து பகுதியை நிறைவு செய்கிறார்.
சிவம்-சக்தி.
மலை போன்ற இடபம் தனில் ஏறி காட்சி தரும்,தன பக்தனாம் பாண்டியன் வேண்டுகோளின் படி கால்மாற்றி ஆடும்,ஐம்புலம் தனை உயிர்க்குள்ளே பொய் களைந்து ,மெய் உள்ளம் அதை அன்பருக்கு அருளும் திருவருள் போற்றி.
வண்டார்குழலும் ,வளை தோலும், வில் புருவமும்,இளநகையும் ,சம்பந்தனுக்கு பால் சுரந்த கலசமுமாக,வேதமாகிய சிற்சிலம்பும் உடைய அன்னையே ,என்னை எடுத்தாண்ட அங்கையர்கன் அம்மையே போற்றி.
சிவமும் -சக்தியும் உலகின் பொதுவில் வைத்து வணங்குகிறார்.
பரசிவம்-சிற்சக்தி
பூவும்,நிறமும்,மணமும் ,போன்ற திருமேனி கொண்ட படைத்தல்,காத்தல்,அழித்தல் எனும் முத்தொழில் புரிகின்ற மூ வண்ணல் மூவர்க்கும் மேலாம் பரசிவம் அருளை பெற்று வினையை வெல்வோம்.
அண்டத்தினுள்ளே அனுவைக்காட்டி ,அனுவிற்குள்ளே அண்டம் காட்டி,ஆறாறு தத்துவம்[36 தத்துவங்கள் ] ஈன்ற சிற்சக்தி அவளை துணையாய் கொள்வோம்.
பரசிவம்-சிற்சக்தி இரண்டும் சைவ சித்தாந்தம் வழி நின்று துதிக்கிண்றார்.
சொக்கநாதர்-அங்கயற்கண்ணம்மை
மதுரை மானரில் கோவில் கொண்டு கொலு வீற்றிருக்கும் அம்மைக்கும்,அப்பனுக்கும் இப்பெயர் கொண்டு நாம் வழிபடுகிறோம்.
எனவே பரஞ்சோதி முனிவர் சொக்கநாதர்-அங்கயற் கண்ணம்மை வாழ்த்து துதி செய்கின்றார் அவர் பாடல் வரிகள் இவ்வாறு அமைகின்றன.
பூவின் நாயகன்-பிரம்மன்,பூமகள் நாயகன்-நாராயணன்,காவின் நாயகன்-இந்திரன் ஆகியோரெல்லாம் வணங்கும் ஆதி நாயகனாம்-சிவபெருமான், மலையத்துவசன் மகளாக அவதரித்து,மீனாட்சி என்ற பட்டபெயர் கொண்ட பட்டத்தரசி மணமுடிக்க,இறங்கி வந்த ஈசனின் அழகு கண்டு மதுரை நகர் மக்கள் சொக்கி நின்றமையால் சொக்கன் என்று பெயர் பெற்ற மாதேவி நாயகன் அடி போற்றி வணங்குவோம் .
பங்கயன் ஆகிய பிரமனும் நெருங்க இயலாத பரம் பரனாம் பர சிவனை தன் பாதியை உடைய அம்பிகை,அவன் புறம் விடுத்து வேறு உலகம் புகுந்தால். நிற்பனவும்,நடப்பனவும் ஆகிய உயிர்கள் நிறைந்த சராசரம் ஈன்றவள்,பாண்டியன் மகளாய் கோலம் கொண்டால் அவள் தன பங்கய பாதம் பணிவோம்.
பரஞ்சோதி முனிவர் தனது திருவிளையாடற் புராணம் என்ற இந்த நூலில் கடவுள் வாழ்த்து பகுதியில்
சிவம்-சக்தி,
பரசிவம்-சிற்சக்தி,
சொக்கநாதர்-அங்கயற்கண்ணம்மை ,
சோமசுந்தரர்-தடாதகை பிராட்டி , என அம்மையப்பனை பல்வேறு வகைபிரித்து சொல்லாடல் செய்து துதி செய்துள்ளார்.
அதன் பின்னே
வெள்ளி அம்பலவாணர்
தட்சிணாமூர்த்தி
சித்திவிநாயக கடவுள்
முருகக்கடவுள்
நாமகள்
திருநந்தி தேவர் எனும் வரிசையில் சிவகுடும்பத்தை போற்றியுள்ளார்.
ஆளுடைய பிள்ளை
ஆளுடைய அரசுகள்
ஆளுடைய நம்பிகள்
ஆளுடைய அடிகள்
சண்டேசுரர் என திருத்தொண்டர்களை வணங்கி கடவுள் வாழ்த்து பகுதியை நிறைவு செய்கிறார்.
சிவம்-சக்தி.
வென்று உளே புலன் களைந்தார் மெய் உணர் உள்ளம் தோறும்
சென்று உளே அமுதம் ஊற்றும் திரு அருள் போற்றி ஏற்றுக்
குன்று உளே இருந்து காட்சி கொடுத்து அருள் கோலம் போற்றி
மன்று உளே மாறி ஆடும் மறைச் சிலம்பு அடிகள்
மலை போன்ற இடபம் தனில் ஏறி காட்சி தரும்,தன பக்தனாம் பாண்டியன் வேண்டுகோளின் படி கால்மாற்றி ஆடும்,ஐம்புலம் தனை உயிர்க்குள்ளே பொய் களைந்து ,மெய் உள்ளம் அதை அன்பருக்கு அருளும் திருவருள் போற்றி.
சுரும்பு முரல் கடி மலர்ப்பூம் குழல் போற்றி உத்தரியத் தொடித் தோள் போற்றி
கரும் புருவச் சிலை போற்றி கவுணியர்க்குப் பால் சுரந்த கலசம் போற்றி
இரும்பு மனம் குழைத்து என்னை எடுத்து ஆண்ட அம் கயல் கண் எம் பிராட்டி
அரும்பும் இள நகை போற்றி ஆரண நூபுரம் சிலம்பும் அடிகள் போற்றி.
வண்டார்குழலும் ,வளை தோலும், வில் புருவமும்,இளநகையும் ,சம்பந்தனுக்கு பால் சுரந்த கலசமுமாக,வேதமாகிய சிற்சிலம்பும் உடைய அன்னையே ,என்னை எடுத்தாண்ட அங்கையர்கன் அம்மையே போற்றி.
சிவமும் -சக்தியும் உலகின் பொதுவில் வைத்து வணங்குகிறார்.
பரசிவம்-சிற்சக்தி
பூ வண்ணம் பூவின் மணம் போல மெய்ப் போத இன்பம்
ஆ வண்ண மெய் கொண்டவன் தன் வலி ஆணை தாங்கி
மூ வண்ணன் தன் சந்நிதி முத் தொழில் செய்ய வாளா
மே வண்ணல் அன்னான் விளை யாட்டின் வினையை வெல்வாம்.
பூவும்,நிறமும்,மணமும் ,போன்ற திருமேனி கொண்ட படைத்தல்,காத்தல்,அழித்தல் எனும் முத்தொழில் புரிகின்ற மூ வண்ணல் மூவர்க்கும் மேலாம் பரசிவம் அருளை பெற்று வினையை வெல்வோம்.
அண்டங்கள் எல்லாம் அணு ஆக அணுக்கள் எல்லாம்
அண்டங்கள் ஆகப் பெரிது ஆய்ச் சிறிது ஆயின் ஆனும்
அண்டங்கள் உள்ளும் புறம் புங்கரி ஆயின் ஆனும்
அண்டங்கள் ஈன்றாள் துணை என்பர் றிந்த நல்லோர்
அண்டத்தினுள்ளே அனுவைக்காட்டி ,அனுவிற்குள்ளே அண்டம் காட்டி,ஆறாறு தத்துவம்[36 தத்துவங்கள் ] ஈன்ற சிற்சக்தி அவளை துணையாய் கொள்வோம்.
பரசிவம்-சிற்சக்தி இரண்டும் சைவ சித்தாந்தம் வழி நின்று துதிக்கிண்றார்.
சொக்கநாதர்-அங்கயற்கண்ணம்மை
மதுரை மானரில் கோவில் கொண்டு கொலு வீற்றிருக்கும் அம்மைக்கும்,அப்பனுக்கும் இப்பெயர் கொண்டு நாம் வழிபடுகிறோம்.
எனவே பரஞ்சோதி முனிவர் சொக்கநாதர்-அங்கயற் கண்ணம்மை வாழ்த்து துதி செய்கின்றார் அவர் பாடல் வரிகள் இவ்வாறு அமைகின்றன.
பூவின் நாயகன் பூமகள் நாயகன்
காவின் நாயகன் ஆதிக் கடவுளர்க்கு
ஆவி நாயகன் அம் கயல் கண்ணிமா
தேவி நாயகன் சே அடி ஏத்துவாம்
பூவின் நாயகன்-பிரம்மன்,பூமகள் நாயகன்-நாராயணன்,காவின் நாயகன்-இந்திரன் ஆகியோரெல்லாம் வணங்கும் ஆதி நாயகனாம்-சிவபெருமான், மலையத்துவசன் மகளாக அவதரித்து,மீனாட்சி என்ற பட்டபெயர் கொண்ட பட்டத்தரசி மணமுடிக்க,இறங்கி வந்த ஈசனின் அழகு கண்டு மதுரை நகர் மக்கள் சொக்கி நின்றமையால் சொக்கன் என்று பெயர் பெற்ற மாதேவி நாயகன் அடி போற்றி வணங்குவோம் .
| பங்கயல் கண் அரிய பரம் பரன் உருவே தனக்கு உரிய படிவம் ஆகி இங்கயல் கண் உலகம் எண் இறந்த சரா சரங்கள் ஈன்றும் தாழாக் கொங் கயல் கண் மலர்க் கூந்தல் குமரி பாண்டியன் மகள் போல் கோலம் கொண்ட அம் கயல் கண் அம்மை இரு பாதம் போது எப்போதும் அகத்துள் வைப்பாம். |
சோமசுந்தரர்-தடாதகை பிராட்டி
திருவிளையாடற் புராணம் என்ற பெயர் கொண்ட இப்புராணத்தின்,தலைவன்,தலைவியாக வந்தருளி அப்பனும்,அம்மையும் கொண்ட நாமங்கள் சோமசுந்தரர்-தடாதகை பிராட்டி.
சடை மறைத்துக் கதிர் மகுடம் தரித்து நறும் கொன்றை அம் தார் தணந்து வேப்பம்
தொடை முடித்து விட நாகக் கலன் அகற்றி மாணிக்கச் சுடர்ப் பூண் ஏந்தி
விடை நிறுத்திக் கயல் எடுத்து வழுதி மரு மகன் ஆகி மீன நோக்கின்
மடவரலை மணந்து உலக முழுது ஆண்ட சுந்தரனை வணக்கம் செய்வாம்.
தன் புரிசடை மறைத்து கதிர்மகுடம் தரித்து,நறுங்கொன்றை மாலை தவிர்த்து,வேம்பு மாலை முடித்து,விடநாக காலன் அகற்றி,மனிசுடர் பூண் எனது,விடை வாகனம் நிறுத்தி,கயல் எடுத்து,பாண்டியன் மருகனாய்,மீனாட்சியை மணந்து,உலகம் முழுமையும் ஆண்ட சுந்தரனை வணங்குவோம்.
செழியர் பிரான் திரு மகளாய்க் கலை பயின்று முடி புனைந்து செம் கோல் ஓச்சி
முழுது உலகும் சயம் கொண்டு திறைகொண்டு நந்தி கணம் முனைப் போர் சாய்த்துத்
தொழு கணவற்கு அணி மண மாலிகை சூட்டித் தன் மகுடம் சூட்டிச் செல்வம்
தழை உறு தன் அரசு அளித்த பெண் அரசி அடிக் கமலம் தலை மேல் வைப்பாம்.
செழியர் பிரான் மகளாய் அவதரித்து,கலை யாவும் பயின்று,திருமுடி புனைந்து செங்கோல் செலுத்தி மூவுலகும் செயம் கொண்டு,திறை கொண்டு ,பூதகனத்தை முனைப்போரில் சாய்த்து,ஈசனார்க்கு மணமாலை சூட்டி,தன் மகுடமும் சூடி,செல்வம் முதலான அரசும் அளித்த பென்னரை அவள் அடிக்கமலம் தலை மேல் வைப்போம்.
இதனோடு வெள்ளி அம்பலவானரை -மாறன் -பாண்டியன் ,இறைவன் கால் தூக்கி ஆடும் நடம் கண்டு,மனதில் ஒருபாதம் தனில் நிக்கும் இறைவனே உன் திருப்பதம் நோகாதோ என மனம் வாட,அவன் துயர் களைய கால் மாற்றி நடம் ஆடி பவக்கடல் தனில் உழலும் மக்கள் நற்கதி அடைய அருளிய அண்ணலை வணங்குவோம் என்றும்.
கல் ஆலமரம் கீழே அமர்ந்து ஆறு அங்கங்கள் ஆகிய
சிக்க்ஷை -உச்சரிப்பு,
வியாகரணம்-இலக்கணம்,
சந்தஸ் -சந்தம்,அடிமுறை
மந்திரம்-நிறுத்தம்,வேர் சொல்
ஜோதீஸ் -வான சாஸ்திரம்
நிகண்ட் -சமய சொல்கள்-ஆகிய ஆறு அங்கங்களையும்,நன்கு மறைகள் ரிக்,யஜுர்,சாமம்,அதர்வணம்-ஆகிய வேதங்களை,சகாதி குமாரர்களுக்கு நல உபதேசம் தனை சொல்லாமல் சொல்லியவ போற்றி என உரைக்கிறார்.

No comments:
Post a Comment