Tuesday, 19 October 2021

யார் இந்த நிலவு-5

 யார் இந்த நிலவு-5

பெங்களூரில் கௌரி இதோடு குறுஞ்செய்திகளாக, ஒலிப்பதிவாக , அழைப்புகளாக எனக் கால் மணிக்கு ஒரு முறை ஆதிராவுக்கு அத்தனை செய்திகள் அனுப்பியிருப்பார். ஆனால் ஆதிரா தான் சொல்ல வந்ததை மட்டுமே சொன்னாலே ஒழிய, இவரது செய்திகளை நின்று நிதானமாகக் கேட்கவும் நேரமின்றி ஒளிந்து மறைந்து அலைந்தாள்.

கௌரி பதட்டமாகப் பைரவிக்கும் போன் செய்து விட்டார். " நீ பயப்படாத கௌரி, என் மகளாகப் பிறந்தவளுக்கு இந்தத் தைரியமாவது கட்டாயம் வேணும். அவள் சமாளிச்சுக்குவா. அந்தக் கம்பெனியைப் பற்றி விசாரிச்சிட்டேன், பாதுகாப்பானது தான். நீ இங்கேயே இரு. அப்படியே ராஜும்மாவை பிடிச்சாலும் அக்கா, தாயி, மாஸீ யாராவது தகவல் தந்திருவாங்க. நானும் சண்டைக்குத் தயாராகத் தான் இருக்கேன். " என்று விட்டு வைக்கவும் , கௌரிக்குத் தான் மனம் ஆறவில்லை.

' நல்ல வீரப் பரம்பரை. பெத்த மகளுக்கு ஆபத்து வந்தாலும் , அவள் சமாளிச்சுக்குவான்னு எனக்கு ஆறுதல் சொல்றாங்க. எனக்குத் தான் பதருது. நல்ல ஆயி, நல்ல முல்கி. அம்மா தாயி துல்ஜா பவானி, நீதான் அவங்களுக்குத் துணை இருக்கனும்" என வேண்டிக் கொண்டவர் மீண்டும் தன் முயற்சியைத் தொடர்ந்தார்.

ஆதிரா ஓபுராய் ஹோட்டலின் உணவகத்தில் காத்திருந்த பொழுதே, இனியும் பார்ட்டிக்குச் செல்லாமல் இருக்க முடியாது என அபிராம், ஹோட்டலுக்கு வந்துவிட்டான். அவன் பத்தே நிமிடத்தில் தயாராகி, பார்ட்டி ஹாலுக்குச் செல்ல, அங்கே கைலாஷ் ராஜ், அவர்கள் அம்மா சொன்ன குடும்பத்தோடு தான் பேசிக் கொண்டிருந்தார். ஆனால் அந்தப் பெண்ணின் நவநாகரீகமான ஆடையைப் பார்க்கவுமே, இது கஸ்தூரியின் மருமகளாக ஆகமுடியாது என முடிவுக்கு வந்தவர், அதை வெளிக்காட்டாமலே சிரித்துப் பேசிக் கொண்டிருந்தார்.

ஒரு பக்கம் அபிராம் வரவை எதிர்பார்த்துக் காத்திருந்தாலும், மறுபுறம் கைலாஷின் புலன்கள் யாவும், சோலாப்பூர் மில்ஸ்காரன் வரவுக்காகவே காத்திருந்தது, தங்கள் வாழ்வைக் கெடுத்தவன், அவனைப் பார்க்கும் போதெல்லாம் தன் மனதின் ரணத்தைக் கீறிக் கொள்வார். அதிலேயே சோகத்தில் மூழ்கிப் போய், அதிலேயே தன் பாருவின் நினைவுகளில் சஞ்சாரித்து இருப்பதும் ஒருவகையான போதையாக இருந்தது அவருக்கு.

தன்னோடு பேசிக் கொண்டிருந்த குடும்பத்தில் அந்தப் பெண்ணின் பார்வை அலை பாய்ந்ததை வைத்தே, அபிராம் வந்து விட்டதை அறிந்து கொண்டார் கைலாஷ். இது ஒரு அபிசியல் பார்ட்டியாக இல்லாமல், செமி அபிசியலாக இருந்தது. தென்னிந்திய மற்றும் மும்பை சார்ந்த மில் ஓனர்கள் சந்தித்துக் கொண்டு நட்பை வளர்க்கும் விதமாகவே இருந்தது.

அதனால், ஜீன்ஸ் பேண்ட், ரவுண்ட் காலர் டீசர்ட், ஸ்டைலிஷ் ஓவர் கோர்ட், இதழில் வசீகரப் புன்னகை எனச் சாக்லேட் பாயாகவே வந்தவனை அந்தப் பெண்ணின் பார்வை மேய்ந்தது. அதைக் கண்ட கைலாஷ், 'மாப்பிள்ளை மாட்டினான்' என மனதில் நினைத்தவர், அபிராமை அழைத்து அறிமுகம் செய்து வைத்துப் பேசிக் கொண்டிருந்தார்.

கொஞ்ச நேரத்திலேயே , மாமனைத் தனியாக ஓரம் கட்டிய அபிராம் , அந்த ஐடி அட்டையைக் காட்டி , " இந்தப் பொண்ணு தானுங்க மாமா " என மகிழ்ச்சியைத் தெரிவித்தான். அதைக் கவனமாகப் பார்த்தவர், " ஹேய், நம்ம கம்பெனி இன்டர்வ்யூவுக்கு வந்த பொண்ணு" என்றார்.

" செலக்ட் பண்ணிட்டிங்களா" என ஆர்வமாகக் கேட்டவனை, வம்பிழுக்கவும் ஆசை வர, " எங்கே, ஒரு கேள்விக்குக் கூட உருப்படியா பதில் சொல்லலை" என்றார்.

" மாமா, பதில் சொல்றது ரொம்ப முக்கியங்களா, பொண்ணைப் பார்த்தவுடனே தெரிய வேணாம்" எனக் கோபித்தவனைப் பார்த்துச் சிரித்தவர், " மாப்பிள்ளை, நான் இன்டர்வ்யு நடத்தினேன், என் மருமகனுக்குப் பொண்ணு பார்க்கலை. அதுவும் நீ இப்ப தானே கண்ணு, புள்ளை போட்டோவைக் காட்டுற" என்றார்.

"ம்ப்ச்" எனச் சோகமானவன், "இன்னைக்கு மதியத்திலிருந்து தேடி அலையிறேன். மிஸ்ஸாகிட்டா மாமா" என இவர்கள் பேசிக் கொண்டிருக்கையில் இவர்கள் பேச்சின் நாயகி அதற்கு அடுத்த அறையில் தான் இருந்தாள்.

கஸ்தூரி சொன்ன பெண்வீட்டுக் குடும்பம் இவர்களையே பார்த்துக் கொண்டு இருக்க, கைலாஷ் கை தேர்ந்த நடிகராக ஒரு இன்ஸ்டன்ட் புன்னகையை வீசியவர், அபிராமையும் அதே போல் இருக்கச் சொல்லி அழைத்து வந்தார்.

பார்ட்டி நடந்து கொண்டிருக்க, மீண்டும் ஓர் சலசலப்பு " போஸ்லே சாப், போஸ்லே சாப்" எனப் பேச்சு ஓடவும் கைலாஷ் உள்ளே விரைத்தார். வெளியே அதே நடிப்புத் தொடர்ந்தது.

ஆனால் அவர் எதிர்பார்த்த அவர் வயதை ஒத்த முரட்டு மீசைக்குப் பதில் இருபதின் தொடக்கத்திலிருந்த வசீகரமான இளைஞன் அவர்கள் குழுமத்தின் சார்பாக வந்தான். ஆறடி உயரம், கட்டான உடல், நீண்ட முகமென மின்னல் ஒளி பார்வை இருந்த போதும், அவன் வம்சத்துக்குச் சம்பந்தமில்லாத கண்கள் ஸ்நேகமாக யாரோடாவது பேசும் போது சிரித்தது. பாரின் ரிடர்ன், மிடுக்காக அவன் வந்த போதும் கைலாஷ்க்கு அவனைப் பார்க்கையில் ஃபீடிங் பாட்டிலை பிடுங்கி விட்டு அனுப்பினார்களோ என்ற நகைப்பே உதிர்ந்தது. 

ஆனால் மாமன் மருமகன் கண்ணில் விரல் விட்டு ஆட்ட வந்த தங்க ஊசி அவன் என அறிந்தார்கள் இல்லை. ஆனால் அவனோடே வந்த காரியதரிசியைப் பார்க்கவுமே, கைலாஷ்க்கு தான் வந்த வேலை முடிந்ததாகவே தோன்றியது. தன் ரணத்தைக் கீறிக் கொண்டார். இனி அவர் அம்மா வரும் வரை, இந்த ரணத்தை நோண்டிப் பார்த்துக் கொண்டே பொழுதை ஓட்டி விடுவார்.

" மாமா, யார் போஸ்லேன்னு பேர் , மராட்டிய ராஜ வம்சமா" என அபிராம் ஆச்சரியமாக வினவ, " ஆமாம் வர்றவன், போறவனெல்லாம், ஐ மீன், மகன், மகள் வம்சம்னு , பத்தாம் தலைமுறை , பதினஞ்சாம் தலைமுறை ஆட்கள், சொந்தக்காரனா இருந்தாலும், மிரட்டுறதுக்காகவே, இந்தச் சர்நேமை சேர்த்துக்கிறாங்க. இது எந்த வம்சமோ. ஆனால் பய சூப்பரா இருக்கான்ல" என மருமகனிடம் கேட்டார்.

" மாம்ஸ், உடம்பு தான் வச்சிருக்கான். ஆனால் ஸ்கூல்லிருந்து நேரா வந்துட்டானோ. என்ன வேணா இருந்திட்டுப் போகட்டும், அவன் யாரா வேணாலும் இருக்கட்டும்.நமக்கென்னங்க மாமா " எனப் பேசிக்கொண்டிருந்தவர்களை நெருங்கியிருந்தான் அந்தப் புதியவன்.

" இப்ப தான் என் செகரெட்டரி சொன்னார். நீங்களும் எங்களுக்கு நெருங்கின சொந்தமாம்ல." என ஓர் நமட்டுச்சிரிப்போடு தூய ஆங்கிலத்தில் கேட்டுக் கை நீட்டவும், அவனது நகைக்கும் கண்களால் கவரப்பட்டவர் கையை இயல்பாகக் கொடுத்தாலும், அருகிலிருந்தவனைப் பார்த்த கோபத்தில், " ஆனால் எனக்கு உங்களை மாதிரி வறட்டுக் கௌரவம் பிடிச்ச மக்களைச் சொந்தம்னு சொல்றதில் விருப்பமில்லை" என இகழ்ச்சியைக் காட்டியவர், அடுத்த நொடியே, " பை த பை யுவர் குட் நேம்" என்றார்.

" மீ" என ஏதோ ஹாசியத்தைக் கேட்டது போல் சிரித்தவன், "விதியோட விளையாட்டு, என்னை நானே உங்கள்ட்ட , ஐ மீன் இவ்வளவு நெருக்கமான உறவினர்கிட்ட , யாரோ மாதிரி அறிமுகப்படுத்திக்கிறேன். " என்றவன், 

"ஆதர்ஸ், ஆதர்ஸ் ராஜே போஸ்லே , இட் இஸ் இனஃப் நௌ. போகப் போகத் தெரிஞ்சுக்குவீங்க" எனக் குடும்பப் பெயரை மட்டுமே சொன்னவன் இன்னார் மகன் என விவரத்தைச் சொல்லாமலே, அபிராமைப் பார்க்க, கைலாஷ் அவனை அறிமுகம் செய்து வைத்தார்.பார்ட்டியில் ராத்தோட்'ஸ் , ஜான்சன்'ஸ் ,கபூர்ஸ், ரேம்'ஸ் என மும்பை மில் ஓனர்களும்,ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடக, தமிழ்நாடு மில் ஓனர்களும் அறிமுகமாகிக் கொண்டனர்.

எல்லாருக்குமே , கேஆர் மில்ஸின் கைலாஷ் ராஜ் பெண் தொழிலாளர்களைப் படிக்க வைப்பதை பெரிதாகவே பாராட்டினர். அதுவும் ஸ்வர்னி மில்ஸ் சேர்மேன் ரகுவீர் சிங் ராதோட் பர்சனலாக வந்து பாராட்டைத் தெரிவிக்க, தன்னை விட வயதில் இளையவரான தமிழ்நாட்டு மருமகனான அவரிடம், "உங்க சக்தி பவுண்டேஷனும் , உங்கள் சக்தி ஜானகிராத்தோடும் , பெண்களுக்குச் செய்யறதை விடவா "எனக் கைலாஷ் பதிலுக்குப் புகழவும், 

அதைத் தலை வணங்கி ஏற்ற ராஜஸ்தானி பிஸ்னஸ் மென், "உங்களுக்கு எந்த உதவி, எப்போது வேணும்னாலும் தயங்காமல் கேளுங்க " என்றவர், மற்றவர்களோடு பேச்சில் கலந்தார்.

கைலாஷ்க்கு, ஆதர்ஷை பார்த்ததில் ஓர் ஈர்ப்பு இருந்த போதும், அவனோடு வந்த காரியதரிசி, ஆதர்ஷ், இவரோடு பேசிக் கொண்டிருப்பதையே பார்த்துக் கொண்டுமிருப்பதைச் சகிக்க இயலவில்லை. இதற்கு மேல் அங்கிருக்க முடியுமெனத் தோன்ற வில்லை. "அபி, நீ முடிச்சிட்டு வா. நாளைக்கு அந்தப் பொண்ணு கட்டாயம் நம்ம ஆபீஸ்க்கு வரும். இருந்து மீட் பண்ணிட்டு, அப்பாயிண்மெண்ட் ஆர்டர் சைன் பண்ணி வச்சிருக்கேன் , குடுத்துட்டு வா. நான் கிளம்பறேன்" என்றார் .

" மாமா, ஒரு மாதிரி இருக்கீங்களே, நான் கூட வரவா. ரூமுக்கா, ஊருக்கா" என வினவினான்.

" நான் கோவைக்குப் போறேன் மாப்பிள்ளை. " என்றவரை, " நீங்க ட்ரைவ் பண்ணக் கூடாது" எனக் கட்டளையிட்டான். " இல்லை, இல்லை, இன்னைக்கு எல்லாம் ட்ரைவ் பண்ண முடியாது. சத்தியன் வந்துட்டான். " எனத் தனது வழக்கமான ஓட்டுநரைச் சொன்னவர், கிளம்பி வெளியேற முனைய, ஆதர்ஷ் நடுவில் வந்தான்.

" என்ன சார் கிளம்பிட்டீங்க. நான் உங்களோட ஒரு டீல் பேச வந்தேன். " என்றான்.

" உங்களோடது  பெரிய கம்பெனி, எங்களோட டீல் வச்சுக்க என்ன இருக்கு" என்ற  கைலாஷின் வார்த்தைகள் பவ்யமாக இருந்தாலும், பேச்சு தொணி ஒரு தெனாவெட்டாகவே வந்தது.   

" நீங்க பர்சனலை, ப்ரபசனல்ல கலக்க மாட்டீங்கன்னு நினைச்சேன். ஐ வாண்ட் எ ஃபேவர் ஃப்ரம் யூ" என்றான். அவன் கேட்ட விதம் அவரை ஈர்க்க, " யூ ஆர் ஆல்வேஸ் வெல்கம். கம் டூ கோவை " என்றார்.

" உங்களோட பிஸ்னஸ் ரைவல், பர்சனல் எதிரி. இருந்தும் வரச் சொல்றீங்களே" என ஆச்சரியமாகக் கேட்டான். ஓர் கசந்த முறுவலைத் தந்தவர், "யாருக்காகவும், மேலும் மேலும் சம்பாதிக்க வேண்டிய அவசியமும் இல்லை. எதையும் இழக்கிற பயமும் இல்லை. ஜஸ்ட் ஐ யம் வொர்கிங் ஃபார் மை வொர்க்கர்ஸ்" என்றார் ராஜன்.

" அப்படி எல்லாம் உங்கள் வாழ்க்கையைச் சுவாரஸ்யம் இல்லாமல் விட மாட்டேன். யூ ஹேவ் டு ஃபேஸ் த காம்படீசன்" என்றான் இளையவன், தன் மாமனிடம், எதிர்ப்பைக் கூட மிகவும் நெருக்கமாக காட்டும் இளையவன் மேல் அபிராமுக்கு எரிச்சலும், ஏன் பொறாமையும் கூட வந்தது. 

" ஓகே, வெல்கம். விளையாடி ரொம்பக் காலம் ஆச்சு. பார்ப்போம். பட் இட்ஸ் மை பாரு'ஸ் டைம். ஹேவ் டூ லீவ்" என அதற்கு மேல் யாருக்காகவும் அங்கே நிற்க இயலாது என்பது போல் அவசரமாக நடந்தவர் வழியில் இருந்த ஸ்லோப்பில் கவனமின்றி, ஷூக்கள் வழுக்கவும், பிடிமானத்துக்காக கையை விரித்து தடுமாற, " மாமா" என பதறியபடி அபிராமும், " பா" என அழைப்பை பாதியில் நிறுத்தி, கைலாஷிக்கு தோள் கொடுத்து, அவர் பின் முதுகையும் பற்றிக் கொண்டான் ஆதர்ஷ். 

இரண்டு புறமும், இளம் சிங்கங்களென இளைஞர்கள் பற்றி நின்று, பதட்டமாக அவரை விசாரிக்கவும், தலை சுற்றியதோ, ஒரு நொடி நிதனித்தவர், 

" நத்திங்" என அபிராம் பற்றியிருந்த கைகளை அழுத்தி அவனிடம் ஒன்றுமில்லை என்றவர், இடது பக்கம் தோள் கொடுத்து நிற்கும் ஆதர்ஷ் " பா….  ஸ்" என்றவன் முகத்தை அருகில் பார்த்தவர் மனதில் மேலும் மின்னல். 'இன்றைய நாள் இவ்வளவு கொடுமையா , என் நினைவுகளை  மலர வைக்க வேண்டாம் என நினைத்தவர்' 

" நீங்க யாரோட மகன், இப்ப இருக்க வம்சத்துக்கு, பின்னாடி இருந்து குத்த தான் தெரியுமே தவிர, இப்படி தாங்கத் தெரியாதே " என ஆவலாக அவன் பதிலை எதிர்பார்க்க, 

" அதை நீங்க தெரிஞ்சுக்கிற நேரம், இன்னும் வரலை. பை த பை, பீ கேர்ஃபுல், உங்க ரைவல் எப்பவுமே இப்படி தாங்க மாட்டான், ஹீ மஸ்ட் பீ வெரி டேஞ்சரஸ்" என கண்களால் மிரட்டி ஆதர்ஷ், சிறு நகையோடு அவரிடம் சொல்லவும், அதில் கவர பட்டவராக பெரிதாக ஹாஹாவென சிரித்தவர், 

" ஆல் ரெடி டோல்ட் யூ, நத்திங்க் டூ லூஸ். போஸ்லேஸ் தான் கேர்ஃபுல்லா இருக்கனும்.  பிகாஸ் ஐ ஹேவ் ரைட்ஸ் டு, டேக் ஓவர் யுவர் மில்ஸ்.பட்  ஐ யம் நாட் இன்ட்ரெஸ்டட்" என தோளை குலுக்கியவர், 

 "ஆனால் , அப்படி ஒரு சந்தர்பம் வந்தா, ஜ வோண்ட் லீவ் " என,கண்களில் தீவிரத்தோடு எச்சரித்து விட்டு, ஆதர்ஷ்,தன முகத்தையே கூர்ந்து பார்ப்பதை உணர்ந்தவர்,இலகுவாக  அவன் முதுகில் தட்டி விட்டு, மீண்டும் அதே மிடுக்கோடு நடந்தார். அவனும் மர்மப் புன்னகையோடு விடைத் தந்தான். 

அபிராம் இவர்கள் பேச்சின் போதும் கூடவே இருந்தான், ஆனால் அவர்கள் பேச்சு ஒரு பக்கம் புரியவில்லை, எனில் மறுபக்கம் பிடிக்கவும் இல்லை.   அபிராம், ஆதர்ஷ் இருவருமாகத் தான் கைலாஷை பார்ட்டி ஹால் வாசல் வரை வந்து வழியனுப்பி வைத்தார்கள்

" தென் மிஸ்டர் அபிராம். " என ஆதர்ஷ் அவனோடு பேச ஆரம்பிக்க, இருவரும் சம்பிரதாயமாகப் பேசிக் கொண்டே உள்ளே நடந்தனர்.

அபிராமுக்கு அறிமுகமான அந்தக் குடும்பத்துப் பெண் ஆதர்ஸோடும் பேச மும்மரம் காட்ட, தப்பித்தோம் பிழைத்தோமென இளையவனிடம் அவளைத் தள்ளி விட்டு அபிராம் நகர்ந்தான். ஆனால் அங்கேயே ஆதர்ஷ் கைலாஷ் சொன்ன வறட்டுக் கௌரவத்தை ஆயுதமாகக் கையில் எடுத்த ஆதர்ஷ், தன் பார்வையாலேயே தள்ளி நிறுத்தினான். அந்தப் பெண் அபிராமைத் தேடிச் சென்றாள். அபிராம் அவசரமாக அவ்விடத்தை விட்டுச் சென்றதில் அங்கே கிடந்த ஆதிராவின் அடையாள அட்டை, ஆதர்ஷின் கண்ணில் பட்டது. 

அதை எடுத்துப் பார்த்தவன், " நீ என் கண்ணிலிருந்து தப்பிக்க முடியாது முலே" என அதனைப் பத்திரப்படுத்திக் கொண்டான்.

கைலாஷ் ராஜ், பாருவுக்கான நேரம் என அவரை நினைவுகளால் தழுவ காரில் ஏறி ,கண்களில் கருப்பு சில்க் மாஸ்க் அணிந்து ,இருக்கையில் சாய்ந்து கண்ணை மூடிக் கொண்டார்.

ஆதிரா பயந்தது போல், ஓபுராய் ஹோட்டலில் நின்ற மராட்டியர்கள், அவளது தாய் வழி உறவான ஆதர்ஷ்க்கு காவலாகத் தான் வந்திருந்தனர். கைலாஷ் சொன்னது போல், மகன் வழி உறவுகள் எப்படிக் குடும்பப் பெயர்களை வைத்துக் கொள்கிறார்களோ, அதே போல் மகள் வழி வந்தவர்களும் இரண்டு குடும்பப் பெயர்களையுமே வைத்துக் கொண்டாளும், குடும்ப அடையாளமாக பிரபலமான  போஸ்லே வையே உபயோகித்தார்கள்.

ஆதிரா மிகையான எச்சரிக்கை உணர்வில் கைலாஷின் காரில் டிக்கியில் பயணித்தாள் . ஏறும் போதே பேணட் நெற்றியில் இடித்ததில் மயக்கம் வர, அதே காரில் டிக்கியில் மயக்கமும், உறக்கமுமான நிலையில் கிடந்தாள்.

பார்ட்டியிலிருந்த ஆதர்ஷ்க்கு போன் வந்தது, பார்ட்டியிலிருந்து விடை பெற்று, தனக்கான அறையில் ,தனது  பாதுகாப்பு காவலர்களோடு, மேலும் இருவரைச் சந்தித்தவன், " போலோ" என ஃ எதிரே நின்றவன் பதட்டமான குரலில், சோட்டே மகராஜ், தீ முல்கி , பிஜ்லி ஜய்சி காயப் சலி “ என தாங்கள் பின் தொடர்ந்து வந்த பெண்ணைப் பற்றி அவர்கள் சொல்ல, 

“டீ புரஸே அஹே ,” அதோட நிறுத்து, என்றவன்,  ”என்ன செய்வீங்களோ தெரியாது, தீ முல்கி (பொண்ணு} என் கைக்கு வரணும். “ என மொழிந்தவன் வார்த்தையில் கோபமும்  , “இது வேற யாருக்கும் தெரியக் கூடாது “ என்றவன் கண்கள் நெருப்பை உமிழ்ந்து , அதில் ஒரு எச்சரிக்கையும், மீறினால் என்ன ஆகும் என்ற மிரட்டலையும் தந்தது

மனதில், " முல்கி, கே. ஆர் மில்ஸ் வேலைக்கு  ட்ரை பண்றாளா. அப்ப நமக்கும் அங்க தான் வேலை. வெகு சீக்கிரம் வர்றேன், கே ஆர் சாப்" எனச் சிரித்துக் கொண்டான். 


No comments:

Post a Comment