யார் இந்த நிலவு- 14
ஒவ்வொரு புதிய விடியலும், தங்கள் வாழ்வில் எதாவது ஒரு புதுவசந்தத்தைக் கொண்டு வரும் என்று நம்பியே உலகம் விழிக்கிறது. இந்த நம்பிக்கை இல்லாவிடின் உலகின் இயக்கம் தான் ஏது.
இதோ, ஆதிரா பிகே, காலையில் குளித்துப் புதுமலராகப் பூஜையறையில் பூ போட்டு, விளக்கேற்றி தயாராக ஹாலுக்கு வந்தாள். . இன்று கைலாஷ் ராஜின் அப்பா, அம்மா வருவதால்,காலையிலேயே ஒரு மீட்டிங்கை முடித்து விட எண்ணி மாற்றி அமைத்திருந்தார். அதற்காகவே டிரைவர் சத்தியனும் நேரமே கிளம்பி வந்து விட்டான், தன் கையிலிருந்த நாளிதழைப் படிப்பதும், மாடிப் படியைப் பார்ப்பதுமாக முதலாளியின் வரவை எதிர்பார்த்துக் காத்திருந்தான்
ஆதிரா, ஹாலுக்கு வரவும், சமையல் வேலைச் செய்யும் செல்லி, காபியைக் கொண்டு வந்து தர, "பாபாசாப், இன்னும் எந்திரிக்கலையா" என வினவினாள்.
" இல்லைங்க , அப்பலையே காபி எடுத்துட்டு போனேன், ஐயா இன்னும் எந்திரிகலையாட்டத்துக்குங்க , கதவை தட்டினேன் பதிலே இல்லை வந்துட்டேனுங்க . அவிகளா எந்திரிச்சு வருவாங்க" எனச் செல்லி சொல்லவும், அவள் சத்தியனை நோக்க,
" இல்லைங்க சிஸ்டர் , எப்பவுமே நாம எழுப்பறதே இல்லைங்க. அவரே கரெக்டா டயத்துக்கு வந்திருவாருங்க. மீறி கூப்பிட்டமுன்னா நம்மளை ஒரு முறை, முறைப்பாருங்க. டாய்லட் ஓட வேண்டியது தானுங்க" என அவனும் பயந்தபடி மழுப்பலாகப் பதில் தரவும், மணியைப் பார்த்தாள், எட்டு எனக் காட்டியது.
" இரண்டு பேரும், ஜ்யாதா சொல்றீங்க. இன்னைக்கு அஜோபா, ஆபா வருவாங்களே, பாபாசாப்பை நான் கூட்டிட்டு வர்றேன்" என எழுப்பச் செல்ல, மற்ற இருவரும் ஒருவரை ஒருவர் சங்கடமாகப் பார்த்துக் கொண்டனர்.
ஒரு முடிவாக, சத்தியன் " இல்லைங்க சிஸ்டர். நீங்க இருங்க. நானே எழுப்புறேன்" என அவள் பின்னாடியே படியேற.
" நீங்க மறைஞ்சு நில்லுங்க. பாபாசாப் முஜே , தோ குச் நஹி கஹேங்கே" எனப் பெருமையாகச் சென்றவள்,
" பாபாசாப், பாபா, ஆப்கி முல்கி ஆயி. கதவை திறங்க. குட்மார்னிங் " என வரிசையாகப் பேசவும், சத்தியன் த்ரில்லிங்காகவே பார்த்து நின்றான். உள்ளிருந்து ஒரு பதிலும் இல்லை. ஆதிரா போன் செய்து பார்த்தவள், அதுவும் எடுக்கப்பட வில்லை எனவும் பயந்தவளாக, பதட்டமாகக் குரல் கொடுக்க, சத்தியன், " இது எப்பவும் நடக்கறது தானுங்க அம்மிணி . நீங்க கவலைப்படாதீங்க" என ஆறுதல் சொன்னவன், தானும் அழைக்கலானான்.
இருவர் அழைத்தும் கதவைத் திறக்கவில்லை எனவும், " பாவு, நீங்க ஸ்பேர் கீ எடுத்திட்டு வாங்க" என அவனை அனுப்பி விட்டு, " பாபா, பாபா" என நெஞ்சம் தடதடக்க, " துல்ஜா பவானி, பாபாசாப் நல்லா இருக்கனும்" என வேண்டிக் கொண்டே கதவைத் தட்ட, சத்தியன் சாவியோடு ஓடிவந்தான்.
அப்போது தான் வீட்டுக்குள் நுழைந்த அபிராம், கைலாஷ் அறையின் முன்னே நிற்பதைப் பார்த்து, " மாமாவுக்கு என்ன" என இரண்டு இரண்டு படிக்கட்டுகளாகத் தாண்டி ஓடிவர,
" ராம் சார், டென் மினிட்ஸா தட்டுறேன். பாபாசாப் தர்வாஜா கோல்தே நஹி. எனக்குப் பயமா இருக்கு" என அவன் கையைப் பற்றவும்.
" ஹேய், இல்லை. மாமாக்கு ஒன்னும் ஆகாது. ஹீ இஸ் வெரி ஸ்ட்ராங்" என்றவன், அவளைத் தோளோடு அணைத்து விடுத்துச் சத்தியனிடம் கண்ணால் வினவினான்.
" நேத்து வெளியே எங்கையுமே போகலைங்க. சிஸ்டர் வந்ததிலிருந்து ஒரு வாரமாவே அதெல்லாம் இல்லைங்க" என ரகசியத் தகவலும் சொல்லிக் கொண்டே கதவைச் சாவி கொண்டு திறந்தும் உள்ளே தாழ்ப்பாள் போட்டிருந்தார்.
ஆதிரா, “ ராம் ப்ளீஸ் தர்வாஜா தொடியே, கதவை உடைங்க. பாபாசாப் திட்டினாலும், அடிச்சாலும் நான் வாங்கிக்கிறேன். எனக்கு என்ன மோ பயமா இருக்கு” என அபிராமை கட்டாயப் படுத்த,
“ அவர் திட்டுக்கு யாரு பயந்தா, குளிச்சுட்டு கீது இருந்தார்னா, எம்பேரிசிங்கா போயிடும் “ என எடுத்துச் சொல்லவும்,
“ஆமாங்க அம்மணி,சிலநேரம் மணிக்கணக்கா, பாத் டாப்ல ,பழசை நினைச்சுகிட்டு படுத்துக் கிடப்பார்.” எனச் சத்தியன் சொல்லவும், அபிராமிக்கு, தான் பெங்களூரு ஹோட்டலில் பாத் டப்பில் ஆதிரா நினைவில் மிதந்து கிடந்தது நினைவில் வர, “எஸ், மாமா என்னை மாதிரியே சம் டைம்ஸ் அப்படிச் செய்வார் “ என ராம் ஒத்து உதவும்,
ஆதிரா அவனை முறைத்து விட்டு, “நீங்க ஒன்னும் செய்ய வேணாம்.நானே கூப்புட்டுக்குறேன்’ என் தன பலம் கொண்ட மட்டும், அந்தத் தேக்கு கதவைக் குத்தி தட்டி, குரலிலும் தீவிரத்தைக் காட்ட, அவளது கையை வேகமாக பற்றிக் கொண்டவன்,
“ஆரா , என்ன இது சின்னப் பிள்ளைத்தனம், பூ போல இருக்கக் கையை வச்சுக்கிட்டு உன்னால முடியுமா, நகரு அங்குட்டு “ என்றவன், மீண்டும் " மாமா" என அழைக்கப் பதில் இல்லை.
அவனுக்கும் பதட்டம் தொற்றிக் கொள்ள, " ஒருவேளை ஆரா சொல்ற மாதிரி மயங்கி கிடந்தா, ஓ கோட், சத்யா கதவை உடைப்போம்" என இருவருமாகக் கதவை மோத, வேலைக்காரர்கள் ஆங்காங்கே கூடி நின்றனர்.
கதவை உடைத்து இருவரும் உள்ளே போக, ஆதிரா அவர்களைத் தாண்டிக் கொண்டு, பாபாவைப் பார்க்க ஓடினாள் .
அபிராம், ‘அவர் எந்த நிலையில் இருக்காரே ‘ என யூகித்தவன் ,அவள் கையைப் பற்றி " நீ இரு. நான் பார்த்துட்டு வர்றேன்" என அவளைத் தடுக்க, " அவர் என் பாபா. எப்படி இருந்தாலும் நான் பார்ப்பேன்" எனக் கண்ணீர் விட்டபடி அடுத்த அறைக்குள் சென்றாள்.
அந்தப் பெரிய கட்டிலில், கைலாஷ், நினைவின்றிக் குப்புறப் படுத்துக் கிடந்தார். அறையே அலங்கோலமாக, பாட்டில் அங்குமிங்கும் உருண்டு கிடக்க, கண்ணாடி டம்ளர் உடைந்தும் கிடந்தது, சத்தியன் அவசரமாக அதைச் சுத்தப்படுத்த, அபி, ஆதிரா கைலாஷ் அருகில் சென்றனர்.
அபி கட்டிலுக்கு அருகே நின்று, " மாமா" என அழைக்க, ஆதிரா கட்டிலில் ஏறித் தவழ்ந்து அவரிடம் சென்றவள், " பாபா" என அவர் முகத்தை, தோளைத் தொட, நெருப்பாகச் சுட்டது.
" ராம் , பீவரா இருக்கு. கால் த டாக்டர்" என்றவள், "பாபா, பாபா" என மடி தாங்க, அரை மயக்கத்தில் கண் சொருகி இருந்தவருக்கு, ஆதிராவே பாருவாகத் தெரிய. " பாரு, வந்துட்டியா. முடியலைமா. என்னையும் உன்கிட்டையே கூப்பிட்டுக்க" எனப் புலம்ப,
" பாபாசாப், நோ. ஆங்கே கோலியே. நான் உங்க ரஜ்ஜும்மா" எனவும் ,
" ஹாங் ரஜ்ஜும்மா, நமக்குப் பொண்ணு பிறந்தா, அப்படிக் கூப்பிடுவேன்னு சொன்னியே பாரு. ராஜ் உடைய மகள், ரஜ்ஜும்மா" எனப் புலம்ப , அதைச் செவியில் ஏற்றுக்கொள்ளும் நிலையில் அவள் இல்லை ." ராம், இவரைத் திருப்பிப் படுக்க வைங்க. பாவு, வெள்ளை துணியும் தண்ணியும் கொண்டு வாங்க" என மற்ற இருவரையும் வேலை ஏவியவள், டாக்டர் வரும் முன்பே தனக்குத் தெரிந்த சிகிச்சையை ஆரம்பித்து இருந்தாள்.
துணியைப் பச்சைத் தண்ணீர் நனைத்து, நெற்றியில் பட்டி போடுதல், தலையை அமுக்கி விடுதல், எனத் தொடர்ந்தவள், செல்லியிடம் சொல்லி, ஹார்லிக்ஸ் கலந்து கொண்டு வந்து தரச் சொல்லி, அபிராம் உதவியோடு தூக்கிச் சாய்ந்து அமரவைத்து , கொஞ்சம் கொஞ்சமாகப் பாலையும் புகட்டவும், அங்குப் பார்த்துக் கொண்டிருந்த, அத்தனை பேரும், ஆதிராவை கைலாஷின் மகளாகவே பார்த்தனர்.
இரண்டு மடக்கு குடித்தவர், சட்டென வாந்தி வருவது போல் எழ முயலவும், " இதிலையே எடுங்க பாபா" எனப் பவுலை நீட்டியவள், அவர் தலையை ஒரு கையால் பிடிக்க முயல, அபிராம் கட்டிலின் பின்னே வந்து நின்று கைலாஷை தாங்கிக் கொண்டான். சத்யன், அதிரா கைகளிலிருந்து பவுலை வாங்கிப் பிடித்துக் கொள்ள, முகத்தைச் சுளித்துக் கொண்டு, மூவரையும் விலகிச் சொல்லி சைகை காட்ட,
“பாபா , சும்மா இதிலையே எடுங்க, பெட்டை விட்டு கீழ இறங்கக் கூடாது “ என ஆணையிட, பாருவின் குரல் போலவே கேட்கவும், அதற்கு அடி பணிந்தார் கைலாஷ் . ஆதிரா சங்கடப் படாமல், வாயை, முகத்தைத் துடைத்து , சட்டையையும் கழட்ட, அபிராம் அவள் முகம் பார்த்தே, அவள் கட்டளைகளை ஏற்று, அவனும் மாமனுக்குச் சேவை செய்தான்.
அபிராம் , டாக்டருக்கு போன் செய்யும் போதே, விஜயனுக்குப் போன் அடித்து விட, டாக்டர் உள்ளே வர, அவரோடு பின்னே விஜயனும் நுழைந்தார்.
" ராஜா, என்னடா ஆச்சு" எனப் பதட்டமாக வந்தவர், ஆந்திராவைப் பார்க்கவும் அமைதியானார். அரை மயக்கத்திலிருந்த ராஜ், நண்பனைப் பார்க்கவும், புலம்பலை ஆரம்பிக்க, " டாக்டர் பார்க்கட்டும். அப்புற மேட்டுக்கு நாம பேசுவோம்" என விஜய ரங்கன், நண்பன் தோள்களைத் தட்டி அமைதிப் படுத்தினார்.
டாக்டர் பரிசோதித்து விட்டு, " மன உளைச்சல் தான்" என விஜயனைப் பார்த்துச் சொன்னவர், சத்தியனைத் தேட, அவனும் தலையை ஆட்டினான். அவனை ஆட்சேபனையாகப் பார்க்கவும், “ டாக்டர், சத்யன் மேல தப்பில்லை, மாமா சுயம்பு லிங்கமா பண்ண வேலை “ என ராம் சப்போர்ட் செய்ய,
“ கைலாஷ் சார், ஒரு ஊசி போடுறேன்.கொஞ்சம் உடம்பை பார்த்துக்குங்க. லிமிட்ல இருந்துக்குங்க” என்ற அறிவுரையோடு ஊசியைப் போட, ஆதிரா தன் சந்தேகங்களை எல்லாம் கேட்டு, டாக்டரை ஒரு வழி ஆக்கியிருந்தாள்.
" வாமிட்டிங் சேர்த்து இன்ஜெக்சன் போட்டிருக்கேன். கொஞ்ச நேரம் கழிச்சு, இட்லி கொடுங்க, தெளிஞ்சிடுவார்" என்றவர், விஜயனோடு அறையை விட்டுச் செல்ல, அபிராமும் பின் தொடர்ந்தான்.
ஆதிரா, கைலாஷை விட்டு அசையவே இல்லை. “பாபாசாப், இப்போ பரவாயில்லையா, புகார் நஹி ,தலை வலிகிதா “ என நெற்றிப் பொட்டை ,அழுத்திக் கொடுக்க, அவள் கையைப் பற்றி, முத்தமிட்டவர் , “வேணாம்டா ,ரஜும்மாவுக்குக் கை வலிக்கும் “ என்றார் வாஞ்சையாக.
“உங்களுக்குச் சரியான போதும். எனக்கு ஒன்னும் கை வலிக்காது “ என்றவள், இதமாகப் பிடித்து விட, அப்படியே கண் அயர்ந்தார்.
ஆதிராவின் பேசிக்கு அவள் அம்மாவின் அழைப்பு வந்தது, ஹெட் போனில் போட்டுக் கொண்டு அழைப்பை ஏற்றவள், " ஆயி" என அழுது கொண்டே பேசவும், " ரஜ்ஜும்மா, என்ன முலே" எனப் பதறினார் அவள் ஆயி . கண்ணீரைத் துடைக்கவும் இல்லாமல், " பாபாசாப்க்கே தபியத் டீக் நஹி, பீவர்" எனக் கைலாஷ்க்கு காய்ச்சல் இருப்பதை, அழுதபடிச் சொல்லவும்.
" டீக் ஹை பேட்டா, பீவர் தானே, டாக்டர் பார்த்திட்டாங்கல்ல, சரியாகிடும். " என அவளது ஆயி தைரியம் சொல்லவும்
" நஹி ஆயி. பாபாசாப் ஹோஸ் மே பீ நஹி.( சுய நினைவே இல்லை) நேத்து உங்கக்கிட்ட சொன்னேன்ல, பாரு பத்தி, இப்பவும் என்னை அவங்க பாருன்னு நினைச்சு புலம்புறாங்க. " என அவள் நடந்ததைச் சொல்லவும், அவரும் அந்தப் பக்கம் அமைதியாக இருந்தார்.
" பாருங்கள், உங்களுக்கே பேச்சு வரலை. நான் ஒரு அன்லக்கி முல்கி ஆயி. பாபாசாப் னு சொன்னதுக்கே அவுங்களுக்கு முடியலை" எனத் தனது ராசியைப் பற்றி அவள் பேசவும்
" நஹி முலே, நீ பக்கத்தில இருக்கிறதால, சரியான நேரத்தில் பார்த்திட்டியே, ஏ அச்சி பாத் ஹை. அவர் பக்கத்திலேயே உட்கார்ந்து அழுவாதே . அவங்களுக்குத் தேவையானதைச் செய் " என அதட்டி மிரட்டியவர், அவரைப் பார்த்துக் கொள்ளும் முறைகளைச் சொல்லித் தந்தார்.
கைலாஷ், இருமும் சத்தம் கேட்கவும், " ஆயி போனை வைக்கிறேன்" எனப் பதறி அவசரத்தில் , போனை அணைப்பதற்குப் பதில் ஸ்பீக்கரில் போட்டுவிட்டு, கைலாஷிடம் விரைந்தவள்,
" பாபாசாப், எதாவது வேணுமா ." என வினவ, கண் விழித்துச் சுற்றும், முற்றும் பார்த்தவர், " பாரு , இங்க உட்கார்ந்திருந்தாலே, என்னை விட்டுட்டு போயிட்டாளா. அவளைப் போகாதேன்னு சொல்லணும்" எனப் பெட்டை விட்டு இறங்கியவர் தள்ளாடி நடக்க,
" பாபா, என்ன பண்றீங்க. நீங்க ஹோஸ்ல இல்லை" என அவள் பின்னாடியே ஓடியவள், அவர் " ராம், சத்யா பாவு" என அலறினாள்.
டாக்டரை அனுப்பி விட்டு, அபிராம், விஜயரங்கன், சத்தியன் மூவருமே ஓடி வர, அபிராம் தான், மாமனைத் தாங்கிக் கொண்டான்.
" விஜயா, “ பாரு” வீட்டை விட்டு வெளில போறாடா, நீ போயி கூப்பிடு. நீ கூப்பிட்டா தான் வருவா. கூப்பிடுறா. அன்னைக்கு நீ சொன்னது பொய் தானடா. வேற யார் யாரோ, சோட்டி ராணி வாரிசுன்னு வராங்கலாம். அப்ப அவள் என்னை மறந்துட்டாலாடா. அதுனால தான் அவ செத்துட்டான்னு நீ பொய் சொன்னியா. இப்படிக் கொஞ்சம் கொஞ்சமா, சித்திரவதை பண்றதை விட என்னை மொத்தமா கொண்ணு புதைடா. உன் கையாலையே சாகுறேன்" என விஜயன் கையைப் பிடித்து, தன் கழுத்தில் வைத்துக் கொள்ள, அபிராம், ஆதிரா இருவரும் அதிர்ச்சியிலிருந்தனர். இருவருக்குமே கைலாஷ் ரோல் மாடல். அவரை இப்படிக் கம்பீரம் இழந்து, குழைந்து பார்த்தது இல்லை. ஆனால் இவர்கள் இருவருக்கும் மேல், ஸ்பீக்கரில் கைலாஷின் பேச்சைக் கேட்ட மற்றொரு ஜீவன், ஏன் உயிரோடு இருக்கிறோம் , என நொந்து துடித்துக் கொண்டிருந்தது.
ஆனால் சத்தியனுக்கும், விஜய ரங்கனுக்கும் இது வாடிக்கை ஆதலால், அவரைச் சமாதானப் படுத்த முயன்றவர், டாக்டர் சொன்ன விசயமும் அவரது கலக்கத்தைக் கூட்டியிருக்க, நண்பனை எப்படியாவது அமைதிப் படுத்த வேண்டும் என முயன்றவர்.
" பேசாமல், படுத்து தூங்குறியா இல்லையாடா. அடிச்சுப் போடுவேன் ராஸ்கல். அத்தையும், மாமாவும் வராங்கன்னு, வேணும்னே ஆட்டம் காட்டுறியா. உன் வீட்டில வச்சுக்கப் பிடிக்கலைன்னா சொல்லு, அவிகளை என் வீட்டுக்கு கூட்டிட்டு போறேன் . " என டாப்பிக்கை மாற்றிப் பெரிய சத்தமாக, விஜயன் திட்டவும்
" டேய், வேணாம்டா. அவிகளுக்காகத் தான் இந்த உயிரையே கைல பிடிச்சிட்டு இருக்கேன். இல்லைனா எப்பவோ, என் பாருக்கிட்ட போயிருப்பேன்" என அடங்க மறுத்து, நண்பனிடம் சண்டையிட்டார் கைலாஷ்.
" பேசுறான் பாரு பேச்சு. எவ்வளவு பெரிய மில்லை கட்டி சாதனை பண்ணியிருக்க. உன்னை நம்பி எத்தனை ஆயிரம் குடும்பம் வாழுது. ஒரு வார்த்தை பேசாத. போய்ப் படு" என விஜயன் அதட்டவும்.
அபிராம், அப்பாவுக்கும், மாமாவுக்கும் இடையில் புகுந்தவன், " அப்பா, நீங்களும் பதிலுக்குப் பதில் பேசாதீங்க. மாமா ஸ்டெடியா இல்லையிங்க" எனத் தன் தகப்பனை அடக்கவும், " டேய் உன்ற மாமனைச் சொல்லு, எப்ப பார்த்தாலும், என்னை மிரட்டறதுக்கு வந்திடுவ' என இருவரும் வாக்குவாதம் செய்து கொண்டிருக்க. இவர்களைக் கடந்து வெளியே செல்ல வேண்டும் என வழியைப் பார்த்துக் கொண்டிருந்த கைலாஷ்க்கு முன்னாள் வந்து நின்றாள் ஆதிரா.
" பாபாசாப், உங்களை இப்படிப் பார்க்க முடியலை. ரொம்பக் கஷ்டமா இருக்கு. ப்ளீஸ் நார்மலுக்கு வாங்க. ப்ரேவா, கெத்தா இருக்கப் பாபாசாப் தான் எனக்கு வேணும்" என அவள் அழவும். கையை நீட்டி அவளை அணைத்துக் கொண்டவர்,
" எப்பவுமே அப்பா ப்ரேவ் தாண்டா. நீ அழக் கூடாது. அவன் சொல்றதையெல்லாம் நம்பாத. உன் பாபாசாப் கூல் தான். இவனைப் பார்த்தில தான் டென்ஷன் ஆகிட்டேன்" என ஆதிராவை உச்சி முகர்ந்தவர், சற்றே தணிந்து மீண்டும் மகளை அணைத்தபடியே கட்டிலுக்குச் சென்று அமர்ந்தார்.
" சரி, நான் கண் முன்னாடி நின்னா தானே டென்ஷன். நான் போறேன் போ. நீ உன் மகளோட சந்தோஷமா இரு" என விஜயரங்கன் கோபித்துக் கிளம்பவும்,
" அங்கிள், நீங்க இங்கேயே இருங்க. பாபாசாப் திட்டினாலும், உங்களோட இருக்கும் போது தான் சந்தோஷமா இருக்காங்க. அஜோபா, பாபா சாப்பை இப்படிப் பார்த்தா டென்ஷன் ஆகிடுவாங்க. நாளைக்கு வரச் சொல்லலாமே " என அவள் யோசனைச் சொல்லவும்
" வேண்டாம்" எனக் கைலாஷ், விஜயன், அபிராம் என மூவருமே கோரஸ் பாடினர். ஆதிரா முழிக்கவும், செல்லி டிபன் தட்டோடு வரவும், சரியாக இருந்தது.
" வராதேன்னு சொன்னா, அடுத்த நிமிசமே இங்க இருப்பாங்க. நான் கேர் டேக்கர்கிட்டச் சொல்லி, மதியத்துக்கு மேல அனுப்பச் சொல்றேன். அதுக்குள்ள ஒரு லெமன் ஜூஸை ஊத்து, உன் பாபாசாப் க்கு நஷா (போதை) இறங்கிடும்" என விஜயன், கைலாஷை கோர்த்து விடவும் " டேய்" என மிரட்டினார் கைலாஷ். அவருக்கு ஒரு முறைப்பைத் தந்த ஆதிரா, கைலாஷுக்கு ஊட்டி விட்டாள்.
"நானே சாப்பிட்டுகிறேன்டா" என அவர் கேட்கவும். " நோ, நான் தான் கொடுப்பேன்" என ஆதிரா பிடிவாதமாக ஊட்டி விட்டவள்,
"பாபா சாப், கவலை இருக்கவங்க எல்லாம், ட்ரிங்க்ஸ் எடுக்கணும்ன்னு ஆரபிச்சா, நான் எல்லாம் என்ன செய்யிறது, பிறந்ததிலிருந்து பாபாவை பார்த்தது இல்லை. என் ஆயுளில் பாதி நாள் , ஆயியை பிரிஞ்சு தான் இருந்திருக்கேன். நார்மல் , செயில்டு மாதிரி, என்ஜோய்மேன்ட் தொ க்யா, நிம்மதியா கூட இருந்ததில்லை. எப்ப யாரால ஆபத்து வருமுன்னு மறைஞ்சு, திரிஞ்சு, ஊர் ஊரா, ஸ்டேட் , ஸ்டேட்ட சுத்தியிருக்கேன். அடுத்தத் தடவை ட்ரின்க் பண்ணும் போது என்னையும் கூப்பிடுங்க" என அவள் கோபமாகச் சொல்லவும், விஜயன், "அப்படிப் போடு" என் சிரிக்க, அபிராம் முழிக்கக் கைலாஷுக்கு புரை ஏறியது
" இல்லைடா ரஜூம்மா, நீ பாபா கூட இருக்க வரை ,ட்ரிங்க்ஸ் இனிமே தொடலை" எனச் சமாதான உடன்படிக்கை செய்துக்கக் கொண்டார் கைலாஷ். விஜயனுக்கு மனம் நிறைந்தது.
"என்ன சொல்லு, பாசமான மகள் போடும் கட்டளையை மீறும் அப்பனுங்க இன்னும் புறாக்களை" எனச் சிரித்தார். "அதுல நீயும் தான் சேர்த்தி, உன் திருட்டுத்தனத்தையெல்லாம், ரஞ்சி டார்லிங்கிட்ட சொல்லித் தரேன்" என நண்பனை வாரினார் கைலாஷ்.
அபிராம் சத்தியனை டாக்டர் எழுதித் தந்த மாத்திரைகளை வாங்க அனுப்பிவிட்டு , அதே அறையில் சேரில் அமர்ந்தவன், மாமனுக்கு உதவும் மாமன் மகளைக் கண்ணில் நிறைத்துக் கொண்டே, இருவருக்குமான உதவிகளைச் செய்தான்.
விஜயன், அறைக்கு வெளியே சென்று முதலில் பவானியை அழைத்தவர், அது பிசியாக இருக்கவும், தன் தகப்பனுக்கே அழைத்து விசயத்தைச் சொன்னார்.
" மாப்பிள்ளை இப்ப சும்மா இருக்காப்லையா. இது தெரிஞ்சா, பாலா இன்னும் ஆடுவானே" என ராமு கவலைப் படவும். தனது தந்தைக்கும் வயதாவதை உணர்ந்த விஜய ரங்கன், " அத்தை வந்தாங்கன்னாலே சரியாயிடுவானில்லிங்க, நீங்க அவிகளை மதியம் சாப்பிட்ட பிறகு அனுப்பிவிடுங்க, அதுக்குள்ள சமாளிச்சிடலாம். " என்றவர் பவானியைப் பற்றியும் கேட்க, " அப்பளையே போனைப் புடிச்சிட்டு போச்சு, நான் பார்த்துச் சொல்லிப் போடுறேன்" என ராமு போனை வைத்தார்.
ஆதிரா, கைலாஷை சாப்பிட வைத்து, மாத்திரையையும் கொடுத்திருக்க, விஜயன் நீங்க இரண்டு பேரும் போயி சாப்பிடுங்க. நான் இருக்கேன்" என அனுப்பியவர், நண்பனிடம் ," உனக்கு என்னடா ஆச்சு" எனத் தனித்துக் கேட்க, தனது மொபைலை எடுத்து ரஞ்சன் அனுப்பிய டிடெக்டிவ் ரிபோர்ட்டை காட்டினார்.
" இத்தனை நாள், யாரை உருகி, உருகி காதலிச்சு, பெத்தவங்க சொல் பேச்சுக் கூடக் கேட்காத இருந்தனோ, அது அர்த்தமில்லாத போயிடும் போல" எனக் கைலாஷ் வருந்தவும்,
" பைரவி இன்னொரு கல்யாணம் செஞ்சிருக்கும்னு சந்தேகப் படுறியாடா" என உடைத்தே கேட்டு விடவும், சட்டென நிமிர்ந்து பார்த்தவர்,
" அப்படி மனசார வாழ்ந்திருந்தால்னா கூடச் சரிதான்டா. நான் அவளுக்கு லாயக்கு இல்லைனு நினைச்சு, மனசை தேற்றிக்குவேன். ஆனால் ஜெயந்த் எதாவது செஞ்சிருந்தா. எனக்கு நினைக்க, நினைக்கப் பதறுது" எனக் கண்ணீர் விட்டவரை,
" ராஜா, கண்டதையும் போட்டு மனசை அழட்டிக்காத. நீ நினைக்கிற மாதிரி, உன் பாரு சாதாரணப் பொண்ணு இல்லை. உன் கைல தாலி வாங்கிட்டு, அடுத்தவனை நெருங்க விட்டுருமா. நீ யாரைப் பத்தி கவலைபடுற. அன்னைக்கு, உன்னையும், என்னையுமே காப்பாற்ற போராடின பைரவி பாய் போஸ்லே அவங்க. அப்படி ஒரு சோட்டி ராணி வாரிசு இருந்தா, அது உன் வாரிசா தான் இருக்கனும்" என விஜயன் , கைலாஷ் ராஜனைச் சமாதானப் படுத்துவதற்காகச் சொல்லவும், அவர் மூளை இன்னும் வேகமெடுத்து வேலை செய்தது.
" கண்டு பிடிக்கிறேன். எனக்கு ஆட்டம் காட்டுற அத்தனை பேருக்கும், ஆப்பு வைக்கிறேன்" என வாய் விட்டவர், தனது மொபைலை எடுத்து, ஒரு நம்பரை அழுத்தி.
" யெஸ் மிஸ்டர். போஸ்லே. நான் உங்களோட டீல் போட ரெடி. " என்றவர், அந்தப் பக்கம் என்ன சொன்னானோ, ஹாஹாவெனச் சிரித்தவர், " யெஸ், யு ஆர் ரைட். பிஸ்னஸ்மேனுக்கு உடம்பு சரியில்லைனா தான் வேகமா வேலைப் பார்க்கும். உங்களுக்காகக் காத்திருக்கேன், ஆதர்ஷ் ராஜே போஸ்லே " எனச் சவாலோடு தங்க ஊசிக் கொண்டு வரும் இளையவனுக்கும் அழைப்பு விடுத்தார் கைலாஷ்.
அறைக்கு வெளியே, தனது அலைப்பேசியை எடுக்க வந்த ஆதிரா, இவர்கள் சம்பாஷணையைக் கேட்டுத் திகைப்பூண்டை மிதித்தவள் போல், அதிர்ந்து நிற்க, அவளைத் தேடி வந்தான் அபிராம்.
ஆதிராவுக்கு உண்மை தெரிந்து விட்டதா, அடுத்து என்ன நடக்கும்...
நினவு வளரும்.
No comments:
Post a Comment