Friday, 2 July 2021

ஹாசினி சந்திரா-21

 ஹாசினி சந்திரா-21 பார்ட்-1

    சாந்தேவ் மாளிகை, சந்திரதேவின் மனதில் இடம்பிடித்த ரோஹினியாக அவனோடு ஜோடியாக இறங்கி வந்த தேவதையை, மேனகா பெற்ற தாராகையை, வைத்த கண் எடுக்காமல், அதிசயமாகப் பார்த்து நின்றான், மேத்யு வில்லியம்சன், இந்திய வம்சாவளியைச் சார்ந்த அமெரிக்கக் குடிமகன்.

        " ஹேய் க்ரானி , வாட் ஸ் திஸ். யூ ஜஸ்ட் லுக்ஸ் லைக் மை போட்டோ க்ரானி . வாவ் " என அகலக் கையை விரிக்க, அவளும் கன்னக்குழி விழ மலர்ந்த சிரிப்போடு , "மேதி" எனச் சந்திர தேவை விட்டு விட்டு ஓடிவந்து கட்டிக் கொண்டாள். " மேதி, மறுபடி க்ரானி ன்னு சொன்னேனா பாரு கொன்றுவேன். நான் பாட்டி மாதிரி இருக்கேனா. தலைமுடி நரைச்சா இருக்கு " என அவள் அடிக்கவும்.

      " நீ போட்டோல பாரத்திருக்கல்ல, அந்த க்ரானி யெங் அண்ட் ப்ரிடி. ஐ மீன் தட் ஒன்லி" என அவன் சமாதானம் சொல்ல இவள் சிறுபிள்ளையாகச் சண்டைக் கட்டிக்கொண்டிருந்தாள்.

       வீட்டில் ஒவ்வொருவராகக் கூடத்திற்கு வந்தவர்கள் இவர்களின் சலசல தத்த பேச்சையும் சண்டையையும், சந்திரதேவ் கண்ணில் தீ பறக்கப் பொறாமையோடு நிற்பதையும் பார்த்தனர். நிருபனுக்கும் பிறகு வந்த மேனகாவுக்கும் மேத்யுவை அடையாளம் தெரிந்தது.

    " நீ எப்படிச் சந்திரா முன்னாடி என்னை க்ரானின்னு சொல்லுவ. என் இமேஜே போச்சு " என அவள் சொல்லவும். " எந்தச் சந்திரா, உன் லவ்வர், அவன் எங்க இருக்கான் " என மேத்யு அதிசயமாகக் கேட்டான்.

     " உங்க ஃப்ரெண்டை விட்டுட்டு, சுத்தி பார்த்திங்கன்னா, மத்தவங்களையும் நீங்க பார்க்கலாம் மிஸ்டர். வில்லியம்சன்" எனத் தேவ் அடக்கப்பட்ட கோபத்தோடு சாதாரணம் போலவே சொல்லவும்.

     " ஓஹ், மிஸ்டர். சி.பி.தேவ். சாரி யார், அண்ட் தாங்க்ஸ் டுயு. என் ப்யூட்டியை பார்த்த சந்தோஷத்தில் எல்லாத்தையும் மறந்துட்டேன்" எனக் கை கொடுத்துக் கட்டியணைத்து விடுவித்தவன்.

       " வெல், இஸ் ட் யுவர் ஹவுஸ், வெரி நைஸ். ஐ வுட் லைக் டு மீட் யுவர் ஃபேமலி மேன். பிகாஸ் தேர் இஸ் மேன், நேம்டு சந்திரா. ஷீ லவ்ஸ் ஹிம். வேர் இஸ் ஹீ" எனச் சந்திரதேவிடமே அவன் ரகசியம் பேசவும், அருகில் வந்து ஒட்டுக் கேட்ட ஹாசினி, அவன் முதுகில் ஓர் அடி வைத்து, " ஏய் லூசு மேத்யு. அவன் தான் சந்திரா. மை ஹஸ்பன்ட். காலைல தான் அவனைக் கல்யாணம் பண்ணிக்கிட்டேன்" எனத் தன் தாலியைத் தூக்கிக் காட்டினாள்.

     " வாட்” எனக் கத்தியவனுக்கு, ஜோடியாக நின்று போஸ் கொடுத்தனர், ஹாசினிச்சந்திரா தம்பதியினர்.  “ஹேய் , தேவ் இது ஏமாத்து வேலை, நீ என்கிட்ட சொல்லவே இல்லை. நான் இதை எதிர் பார்க்கவே இல்லை. ஹாவ் இட் இஸ் பாசிபில். நீயும் ஒன் இயரா அங்க தானே இருந்த , ஹாசினியை வந்து மீட் பண்ணவே இல்லை " என மாற்றி மாற்றிப் புலம்பியவனை இருவருமாகவே ஆசுவாசம் செய்தனர்.

       " இருந்தாலும் நீ என்னைச் சீட் பண்ணிட்ட மேன். " என்றவன் மற்றவரிடமும் தன்னை அறிமுகம் செய்து கொண்டான். தேவ் தன்னுடைய குடும்பத்தினரை ஒவ்வொருவரையும் அறிமுகம் செய்ய, ஹாசினியின் முறையையும் கேட்டுக் கொண்டான். மேத்யூ சரியான வாயாடியாக, சிரித்த முகமாக எல்லோரிடமும் பேசியவன், “நான் முந்தி இப்படி இல்லை, என்கிட்டே பேசவே எல்லாரும் பயப்படுவாங்க, என் க்ரானி , ஓ சாரி, ஹாசினி தான் என்னை இப்படி மாத்துனா. ஐயம் வெரி தாங்க் புல் டு ஹேர்.” எனத் தங்களைப் பற்றியும், ஹாசினியை புகழ்ந்து பேசியவன் அப்போது தான் மேனகாவைப் பார்த்தான்.

      ஹாசினி, மேத்யுவை மேனகாவிடம் அழைத்துச் சென்று, " அம்மா" எனவும். "ஹாய் ஆண்டி, விடியோ கால்லையே பார்த்திட்டு இருந்தோம். இப்ப தான் நேரா பார்க்கிறோம்" என எஸ். ஆர்சந்திராவின் உடல் நிலையையும் விசாரித்தான். அங்கிள் கொஞ்ச நேரத்தில் வருவார் என்றார் மேனகா .

      மேனகா, ஹாசினி இருவர் கையையும் பிடித்துக் கொண்டவன், "ஐயம் வெரி ஸாரி. இரண்டு பேரையும் ரொம்பச் சிரமப்பட வச்சுட்டேன். அன்னைக்குச் சிசுவேஷன் அப்படி. ஹசியோட பாதுகாப்புக்காக அவளையே படுகொலைன்னு சொல்லி ட்ராமா செய்ய வேண்டியதாயிடுச்சு. அவள் உயிரோடவே இல்லைனு நீங்க எவ்வளவு துடிச்சிருப்பீங்க. மீடியா, ப்ரெண்ட்ஸ், ரிலேடிவ்ஸ், ஐ காண்ட் இமேஜின், நீங்க எப்படி அந்தச் சிசுவேஷன் மேனேஜ் பண்ணிங்க. ஐயம் சாரி ஆண்டி" என மேத்யு பேசப் பேச மேனகா தலையை ஆட்டிக் கொண்டே நின்றார்.

       " மேதி வெயிட், வாட் யு ஆர் சேயிங். ஐயம் கிட்னாப்ட். நாட் மர்டர்டு " என மேத்யுவுக்கு விளக்கம் சொன்னாள். மேத்யு, திரும்பி சந்திர தேவை பார்த்தான்,, “ஹாசி நோ பேபி, உனக்கு முழுசா தெரியலை “ என்றவன் " நீ ஹாசினிட்ட என்ன சொல்லி வச்சிருக்க" நேராக முறைத்தபடி கேட்டான். இருவருக்கு மிடையில் ஹாசினி வந்து நின்றாள்.

    " மேதி, நீ ஏதோ கன்ப்யூஸன்ல இருக்க" என மீண்டும் அவள் ஆரம்பிக்கவும், சந்திராவை கண்ணை மூடிக் கொண்டு நம்புவாள் போலவே என மனதில் நினைத்தவன் " ஓஹ் " என்றவன் கைகளைக் கட்டிக் கொண்டு, "மிஸ்டர். சி.பி.தேவ் ஐஸ்ட் எக்ஸ்ப்ளைன் மீ. வாட் ஹேப்பன்ட் டு மை ப்ரெண்ட். " என விளக்கம் கேட்டான்.

     எஸ்ஆர்சி வருகிறாரா என லிப்ட்டை பார்க்கவும், மயூரா சட்டெனப் பிள்ளைகள் இருவரையும் அழைத்துக் கொண்டு, நான் மாமா ரூம்ல போய் இவர்களை வச்சுக்கிறேன்." என அவரை மேலேயே சமாளிக்கப் பிள்ளைகளோடு சென்றாள்.

         " மேத்யு, சந்து, மது உட்கார்ந்து பேசுங்க. உணர்ச்சி வசப்படாமல் சிசுவேஷனை கூண்டில் பண்ணுங்க" என இரத்தின தேவ் சொல்லவும். அனுசுயா தேவி, " சந்து, அவள்கிட்ட எல்லா உண்மையும் சொல்லிடு. இனியும் மறைக்கக் கூடாது அவள் நிலைமை என்னன்னு அவளுக்குத் தெரியனும் "எனக் கறாராகப் பேசினார் அனுசுயா.

     ஹாசினிக்கு ஒரு புறம் சந்திரதேவும், மறுபுறம் மேத்யுவுமாக உட்கார்ந்து கொண்டனர். மேனகா அருகில் அதி, ப்ரதி அமர்ந்து அவர்களைக் கவனித்திருக்க மற்ற குடும்பத்தினரின் பார்வை ஹாசினி இதை எப்படி எடுத்துக் கொள்வாள் என எதிர் பார்த்து இருந்தனர். பரித்தி ஹாசினியின் மெடிக்கல் கிட்டோடு தயாராகவே இருந்தாள்.

     சந்திரதேவ் ஒரு பெருமூச்சோடு ஆரம்பித்தான், " மது, நான் எது செஞ்சாலும் உன் நன்மைக்குத் தான் செய்வேன்கிற நம்பிக்கை இருக்குல்ல" எனக் கேள்வியோடு ஆரம்பித்தவனை ஹாசினி கண் சிமிட்டாமல் பார்க்கவும், அதிபன், " சந்து, சும்மா பூசி மெழுகாத. அவள் ஒண்ணும் சின்னக் குழந்தை இல்லை" எனக் கோபமாகச் சொன்னான்.

    " அத்தான், என் பொண்டாட்டிட்ட எப்படிப் பேசனும்னு எனக்குத் தெரியும். நீங்க கொஞ்ச நேரம் பேசாம இருங்க" என அதிபன் மேல் பாய்த்தான்.

      " ஆமாம், இந்தத் தலைக்கனம் தாண்டா என் தங்கச்சியை இந்த நிலமைல நிறுத்தி இருக்கு " எனச் சத்தம் போட்டான் அதிபன், பிரதி பேசாமல் இரு எனத் தம்பிக்குச் சைகை செய்தான். ஆனால் தேவ் விடுவதாக இல்லை. " இப்ப மட்டும் திடீர்னு தங்கச்சி பாசம் வந்திருச்சு. அவள் அரசியல்வாதியா அவதாரம் எடுத்து அலைஞ்சாலே அப்பப் போய்க் கேட்டிருக்க வேண்டியது தானே. " எனக் கோபப்பட்டான்.

        " அது தாண்டா நாங்க பண்ணத் தப்பு" என அதிபனும் விடாப்பிடியாக நிற்கவும். " அது எல்லாமே என் தப்பு தான். நான் தான் என் சுயநலத்துக்காக , என் புருஷனுக்குக் கெட்ட பெயர் வரக்கூடாதுன்னு, அறிவு கெட்ட தனமா என் மகளையே அரசியல்ல இறக்கி விட்டுட்டேன் . ஏதோ விலங்கு, தன் குட்டியைத் தானே திங்கும்னு சொல்லுவாங்களே. அதிலையும் கேவலமா ஆயிட்டேன். என்மகளையும் பலி கொடுத்து, அவள் அடையாளத்தை அழிச்சு, என் புருஷன் கிட்டருந்து மறைச்சு, ஏமாத்துக்காரிங்கிற பட்டமும் வாங்கிக்கிட்டேன். மதும்மா நீ என் வயித்தில பிறக்காமல், உன் பெத்தம்மா வயித்தில பிறந்திருந்தா உனக்கு இந்தக் கஷ்டமே இல்லடி" என அழவும்.

       சந்திரதேவ், ஹாசினியை விட்டு அவரிடம் வந்து அவரை அணைத்தபடி உட்கார்ந்து ஆராதனாவைப் பார்த்துத் தண்ணீர் கொண்டு வரச் சொன்னான். "அத்தை பேசாம இருங்க. " என ஆசுவாசப்படுத்தும் போதே, " அம்மா, என்ன நடந்துன்னே சொல்லாமல் ஆளாளுக்குப் பேசுறீங்க. எனக்குத் தலையை வலிக்குது" என அம்மாவின் முன் வந்து மண்டியிட்டுக் கேட்டாள் ஹாசினி.

       அவளைத் தனது மறுபுறம் தூக்கி உட்காரவைத்துக் கொண்டவன், "நான் சொல்றேன்டி. நான் அன்னைக்குச் சுஹாசினி சந்திரதேவ்னு கையெழுத்துப் போட சொன்னேன்ல. அது தான் இனிமே உன் அடையாளம். தீவில இருக்கும் போது , நான் யாருன்னு தெரியாத போது , உன் அம்மா, அப்பா பாதுகாப்பு முக்கியம்னு அழுதியே ஞாபகம் இருக்கா" எனக் கேட்டான். அவள் எப்படி மறப்பாள், அந்த அவன் யாரென அறியாத போதும் அரக்கனின் பேச்சிலும் நம்பிக்கை வைத்துத் தானே சற்றே ஆசுவாசமடைந்தாள். அவள் ஆம் எனத் தலையாட்டினாள்.

        " அப்ப என்ன சொன்னேன், அவங்க பாதுகாப்பா தான் இருக்காங்க, இருப்பாங்க. ஆனால் நீதான் அதுக்கு மிகப்பெரிய விலை கொடுக்க வேண்டியது இருக்கும், அது உன் சம்மதம் இல்லாமலே நடந்துகிட்டு தான் இருக்குனு சொன்னேனா" எனக் கேட்கவும் அவள் மீண்டும் தலையை ஆட்டினாள்.

         " உன்னைக் கடத்தின அன்னைக்கு , நீ யுவராஜ் கிட்ட ஏர்போர்ட் ல வச்சுக் கோபமா பேசின அடுத்த நிமிஷம், அவன் உன்னைக் கொல்ல ஆள் ஏற்பாடு பண்ணிட்டான். ஆனால் நம்ம ஆளுங்க எப்பவுமே நஞ்சப்பாவை ஃபாலோ பண்ணதால உடனுக்குடன் தகவல் வந்திருச்சு.அப்பத் தான் மேத்யு கிட்டப் பேசினேன். யுவராஜ் உன்மேல கொலைவெறியில் இருந்தான். நான் உன் பின்னாடியே ஆறு மாசமா அலைஞ்சாலும் எப்படி உன்னைக் காப்பாற்ற போறேன்னு பயம் வந்துடிச்சு. மேத்யு நடுவில குட்டையைக் குழப்பக் கூடாதுன்னு அவனுக்கு ப்ளானைச் சொன்னேன். நாங்க இரண்டு பேரும் உன்னை விட்டு ரொம்பத் தூரத்திலிருந்துகிட்டு, உன்னைப் பாதுகாக்க முடியாது. உன்னையும் காப்பாற்றனும் மாமா, அத்தையும் அங்கிருந்து கிளப்பனும், அதுக்கு எதாவது பெரிசா செஞ்சு அவனுங்க எந்திரிக்க விடாமல் பண்ணனும்னு நினைச்சேன். குண்டு வெடிக்கட்டும் ,அதுதான் அவனுங்களுக்கும் முடிவுன்னு , முடிவெடுத்தேன் . நீ பாம்ப்ளாஸ்ட் ல இறந்துட்டதா நாடகமாடித் தான் , நான் உன்னைக் கடத்தினேன்" என்றுவிட்டு அவள் முகத்தையே பார்த்தான்.


ஹாசினி சந்திரா- 21 part -2

     அவள் தன் தலையைப் பிடித்துக் கொண்டு, "நான் அப்ப , இந்த உலகத்தைப் பொறுத்தவரை உயிரோட இல்லையா ." என அவன் சொல்லுவது தான் வேதவாக்கு என்பதைப் போல் பார்த்தாள்.

“அம்மா, நான் செத்துப் போய் ரொம்ப நாள் ஆச்சா . காரியமெல்லாம் செஞ்சியாமா , உன்கிட்ட துக்கம் விசாரிச்சாங்களா. நான் இல்லைனு ரொம்ப அழுதியா ,அப்பாவுக்குத் தெரியுமா, ஆனால் அப்பாவுக்குத் தெரியலையே சாதாரணமா பேசுறாங்க.” என மேனகாவை அடுக்கடுக்காகக் கேள்வி கேட்கவும், மேனகா அன்றைய நாளின் துக்கத்தை மகளோடு பகிர்ந்தார்.

“சந்திரா, அம்மாட்ட மட்டுமாவது சொல்லி இருக்கலாம்ல “ என அவள் அவனைக் கேள்வியாகப் பார்க்கவும், “ ஒரு மணி நேரம் கழிச்சு, அப்பா போனுக்கு மெசேஜ் வந்துச்சு மதுமா , அந்த நம்பிக்கையில் தான் , அப்பாவை கூட்டிட்டு இங்க வந்தேன்.” என மேனகா சொல்லவும், சற்றே மனம் தெளிந்தவள்,

“எங்கயோ வந்து சிக்கிட்டு நிற்கிறோம், நமக்கு மட்டும் ஏம்மா இப்படி. சின்ன வயசில் யாரோடையும் விளையாட முடியாது, ஸ்கூல்ல ப்ரியா பேசமுடியாது, எனக்குன்னு க்ளோஸ் பிரென்ட்ஸே கிடையாது , கொஞ்ச நாள் யூ எஸ் ல சுதந்திரமா இருந்தேன், திரும்பவும் அரசியல் , எனக்கு அது என்னனு கூடத் தெரியாது, நஞ்சப்பா ஆடி வச்ச மாதிரி ஆடினோம், மேதி ,டூ யு நோ அந்த ஆள் என்னை அவன் மகனுக்கு மேரேஜ் பண்ணி வைக்கணும்னு நினைச்சான், அதுக்குத் தான் கோபம் வந்து திட்டினேன், என் வாழ்க்கையை வாழ எனக்கு எப்பவுமே உரிமை இல்லை, அந்தப் பெயர் ஒன்னு தான் இருந்துச்சு, அதுவும் போச்சு.” எனக் கண்ணீர் விட்டவள்,

“ சந்திரா, நீ அன்னைக்கு என்னைக் காப்பாத்தி இருக்கவே வேணாம், இப்படி அடையாளத்தைத் தொலைச்சிட்டு இனிமே என்னத்தை வாழப் போறேன்” என அன்று போட்டில் கத்தியதை போல் அவள் கத்தவும், சந்திரதேவ்க்குப் பயம் வந்தது.

அண்ணன்கள் இருவருக்குமே ,அவள் சொல்லச் சொல்லக் கண்ணீர் பெருக்கெடுத்தது, அவர்களும் ஆரம்பக் காலத்தில் வீட்டு சிறையை அனுபவித்தவர்கள் தான், பானுமதி அது முடியாமல் தான் கிளம்பி வந்தார். அப்பாவின் பாசம் கிடைக்கவில்லையே என ஏங்கிய பிரதிபனுக்கு, அதே அப்பாவின் பாசத்துக்காக, அப்பாவுக்காகக் ஹாசினி எதை இழந்து இருக்கிறாள் என்பது புரிந்தது. “மது, எங்களோட, இந்த வீட்டுல இருக்கலாம், இனிமே இந்தக் குறையும் இருக்காது “ எனச் சமாதானம் செய்தனர். மேனகா ஓய்ந்து போய் அமர்ந்திருந்தார். மேத்யூ அவளைச் சமாதானம் செய்ய முயன்றான், அவள் எதையும் கேட்கும் நிலையில் இல்லாமல் தலையைப் பிடித்துக் கொள்ளவும், பெரியவர்களே கையறு நிலையிலிருந்தனர்.

சந்திர தேவ், அவள் முகத்தைத் தனக்கு நேராகப் பிடித்துக் கொண்டவன், “ஹாசினி , ஜஸ்ட் லிசென் , இங்க பாரு, என் மேல நம்பிக்கை இருக்கில்ல , நான் சொல்றேன் நீ இருக்கடி, நீ என் ஹாசினியா இருக்க, எனக்காக, என் கூட வாழறதுக்காக இப்படி இருக்க மாட்டியா. நீ இருக்கடி, , எஸ்ஆர் சந்திரா, மேனகாம்மாவோட மகளா, என் மனைவியா, ஹாசினி சந்திராவோட ட்வின் சிஸ்டரா, சுஹாசினி சந்திராவா இருக்க . அதுக்குத் தேவையான எல்லாமே செஞ்சுட்டேன் " என்றான்.

" ஆனால் அது பொய் தானே. ஃபோர்ஜரி. அது தப்புதானே. நானே இல்லையா. அப்ப நான் ஹாசினி இல்லை. அப்ப யுவராஜ் என்னைக் கொன்ற வழக்கில் தான் ஜெயில்ல இருக்கான். பெங்களூர் போக முடியாது. அம்மா நம்ம வீட்டுக்குப் போகவே முடியாதா. சந்திர பவனத்துக்குப் போகவே முடியாதா. " எனத் தன்னைப் போல் புலம்பியவள், தலையைப் பிடித்துக் கொண்டு, அவன் மீதே சரிய, மூக்கிலிருந்து இரத்தம் வந்தது. சந்திரதேவ் மேனகா இருந்த அறையில் பெட்டில் அவளைக் கிடத்தினான். எல்லாரும் டென்ஷனாக அந்த அறையில் கவலையோடு பார்த்திருந்தனர். கழுத்துக்கு அடியில் தலையணை வைத்து அவளுக்குச் சிகிச்சை செய்தான்.

மற்ற அனைவரும் பதறினாலும் மேனகா அமைதியாக, "அது ஒண்ணும் செய்யாது பயப்படாதீங்க" என்றவர் , ப்ரீத்தி கொண்டு வந்த ஊசியை அவளுக்குப் போட்டு விட்டார்.

" இது எப்போதிலிருந்து இப்படி வருது. என்கூட இருக்கும் போது இல்லையே " என மேத்யு கேட்கவும்,

" அதுக்குமுன்னாடிலிருந்தே இருக்கு. ஆனால் உன் கூட இருந்தப்ப ரொம்பச் சுதந்திரமா இருந்தா. ஸ்ட்ரெஸ் இல்லை. " என அவளுடைய ஹெல்த் பற்றியும் சொன்னார். ஆனால் சந்திரதேவ் ஹாசினியை கவனித்ததை ஆச்சரியத்தோடு பார்த்துக் கேட்கவும், " கிட்னாப் பண்ணும் போது உங்க மகள் மயங்கி விழாமலா இருந்திருப்பா. எல்லாம் பழகிட்டேன்" என்றான் தேவ்.

அனுசுயா, " நல்லா பழகின போ. இன்னும் என்னன்ன பார்க்க வேண்டியது இருக்கோ." என்றபடி அறையிலிருந்து வெளியே வந்தார். ஒவ்வொருவராக வெளியே வந்து ஹாலில் அவள் விழிப்பதற்காகக் காத்திருந்தனர். சந்து, மேனகா, மேத்யூ மட்டும் அறையிலிருந்தனர்.

ப்ரீத்தி ஆறு மாதம் ஹாசினியோடு கூடவே இருந்ததால், அவளிடம் நிரஞ்சனாவும், ஆராதனாவும் விவரம் கேட்டனர். அவளும் தனக்குத் தெரிந்ததைச் சொன்னாள். எல்லாருக்குமே காசினி மேல் ஒரு பரிதாபம் வந்தது. ரத்ன தேவிடம் மருமகன்கள் புலம்பினர்.

“இந்தப் பவர், பைசா, புகழ் எல்லாராலையும் எல்லாம் சமாளிக்க முடியாது மாப்பிள்ளை, அரசியல் ரொம்ப மோசம், புலி வாலை தோட்ட கதை தான், உங்கப்பா அதை விட முடியாமல் தான், உங்களை எங்ககிட்ட விட்டார். ஆனால் மேனகா அதே மாதிரி, புகழோடு பிரச்சனைகளையும் சந்திச்ச சமயம், உங்கப்பா அதுக்கு ஆபத்பாந்தவனா இருந்துருக்கார். ஹாசினிக்கு இருந்ததை விட மேனகா பிரச்சனை பெரிசு, உங்கப்பா துணையா இருந்தார் , கடந்து வந்துடுச்சு, மகளுக்கும் முன்னேற்பாடா சந்துக்கிட்ட பொறுப்பை ஒப்படைச்சு இருக்கார் பார். நம்ம நினைக்கிற மாதிரி, சந்துவோட சாமர்த்தியம் மட்டுமில்லை, பெரிய அரசியல் நாடகம் நடக்குது. உங்கப்பா சரியானாதான் எல்லாமே தெரியவரும்” என மருமகன்களைத் தேற்றிக் கொண்டிருந்தார் இரத்தின தேவன்.

அனுசுயா தேவி ஓரகத்தியிடம், " ரஞ்சி, இவ என்னடி இப்படி இருக்கா. பத்திரிக்கையில் பார்க்கும் போது கர்வம் பிடிச்சவளா தெரிஞ்சா. அம்மா, அப்பாவுக்காக உருகுறா. காலைல சின்னப் புள்ளையாட்டம் அடுத்து என்ன செய்யனு கேக்குறா. ஆருகிட்ட, மாமியார் மருமகளுக்கு நடுவில் வராதேங்கிறா. சந்துவை ஒட்டிக்கிட்டே திரியுது. அமெரிக்காகாரன்கிட்ட அம்புட்டு உரிமை. நிருகிட்ட ப்ரெண்டா இருக்கா. இப்ப பாரு உணர்ச்சி வசப்பட்டு மயங்கி விழுறாளே ,இவளை புரிஞ்சுக்கவே முடியலையே" என ரகசியமாகப் புலம்பினார்.

" ம்க்கூம், சந்துவை மட்டும் புரிஞ்சுகிட்டமாக்கும். ஆனால் இரண்டும் குணத்தில் வடக்கும் தெற்குமா இருக்கும் போல. போதாத குறைக்கு இவ்வளவு பிரச்சனை. " என நிரஞ்சனாவும் சேர்ந்து புலம்பினார்.

மாமியார்களைப் புலம்பவிட்ட மருமகள், மயக்கம் தெளிந்து எழுந்தாள். "ஹேய் க்ரானி, ஆர் யு ஓகே" எனக் கவலை தோய்ந்த முகத்தோடு மேத்யு கேட்டான்.

" ஐம் ஓகே." என்றவள், ரெஸ்ட்ரூம் போய்விட்டு வந்து தெளிவாக அமர்ந்தாள் . அனுசுயா தேவி சொன்னது போல் , இவள் இப்படித்தான் என முடிவெடுக்க முடியாமல் , திடீரெனத் தந்தையைப் போன்று நெஞ்சுரம் மிக்கவள் ஆனாள் . ஹாலில் வந்து அமர்ந்தாள். கவலையோடு பின் தொடர்ந்த அம்மாவிடம், “நீ ஒன்னும் கவலைப் படாத, நான் சமாளிச்சுக்குறேன். நீ உன் வயித்துல பிறந்திருக்கக் கூடாதுன்னு எல்லாம் சொல்லாத. அப்பாக்காக என்னவெல்லாம் செய்யற, நீ கிரேட் லேடி தான் “ என மகள் அம்மாவுக்குச் சான்றிதழ் கொடுத்தாள். “போடி கிறுக்கி, உங்க அப்பா வர்றாருன்னு பார்க்கிறேன் “ என லிப்ட்டில் ஏறினார்.

" சந்திரா, நான் என்னவெல்லாம் செய்யலாம், செய்யக்கூடாதன்னு எனக்கு ஒரு லிஸ்ட் போட்டுக் குடு. " என முகத்தை ஒற்றைக் கையால் மூடிக் கொண்டு யோசித்தபடி சொன்னாள் . அதிலேயே அவள் மனம் அவனுக்குப் புரிந்து போனது.

" ஹசி, நீ என்ன வேணும்னாலும் செய். எல்லாத்தையும் நான் சமாளிச்சுக்குவேன். இப்படிச் சோகமா மட்டும் முகத்தை வைக்காத " என்றான் சந்திரதேவ்.

" பேபிடால், எங்க அண்ணன் எவ்வளவு உரிமை தர்றான் பாரு" என நிருபன் தேவ் பெருமையாகப் பேசவும்.

, அதிபன் " மது, ஒரு உருட்டுக் கட்டை எடுத்து தர்றேன், இது மாதிரி இல்லீகல் வேலை செய்யக்கூடாதுன்னு. நாலு அடி போடு. யார் சொன்னாலும் கேக்கமாட்டேன்கிறான் " எனத் தங்கையிடம் மச்சினனைக் குறை சொல்லவும், சரி எனத் தலை ஆட்டினாள் ஹாசினி.

" அதி, மது தலையை ஆட்டுறா. இது தான் சான்ஸ் கட்டை எடுத்துட்டு வா" என்றான் ப்ரதிபன்

" ஹலோ எங்க அண்ணனை அடிக்க ஆள் செட் பண்றீங்களா " என ஆராதனா சண்டைக்கு வந்தாள். பேச்சும் சிரிப்புமாக மீதிப் பொழுதை வலுக்கட்டாயமாகத் தள்ளியவர்கள், எஸ்ஆர்சி கீழே வரவும் அவருக்கும் மேத்யுவே அறிமுகப்படுத்திப் பேசிக் கொண்டிருந்தனர்.

ஹாசினி அப்பாவின் அவர் தோளில் சாய்ந்து கொண்டு அமர்ந்திருந்தாள், " புட்டிமா. என்னடா. ஏன் மாப்பிள்ளை யை உனக்குப் பிடிக்கலையா" என்றார்.

" உங்களை மாதிரி ஒரு அப்பா உலகத்திலேயே இருக்கமாட்டார். கல்யாணம் செய்யறதுக்கு முன்னாடி கேட்க வேண்டியதை இப்பக் கேளுங்க " எனப் பானுமதி கணவரைத் திட்டி விட்டு, மகளிடம், "சந்து, எடுத்த உடனே அதிகாரமா பேசுவான். ஆனால் நல்லவன், உன்னை நல்லா பாத்துக்குவான். அதனால தான் உன்னை அவனுக்குக் கட்டி வைக்கனும்னு நினைச்சேன். பெத்தம்மா தப்பா யோசிப்பனா. உங்க அப்பாவை விட நல்லா பார்த்துக்குவான்" என மருமகனுக்குச் சர்டிவிகேட் தந்தார்.

" பானுமா, நான் நல்ல ஹஸ்பன்ட் இல்லையா. நீயும் இப்படிச் சொல்ற. மேனுவும் சோகமா இருக்கா. நான் என்ன செஞ்சேன்" இதே கேள்வியை எஸ்ஆர்சி வேறு வேறு விதமாகக் கேட்டுவிட்டார். மேனகா அன்று மயங்கி விழுந்த நாளிலிருந்து கேட்டதற்கு மட்டுமே பதில் என மாறியிருந்தார். ஹாசினியை பார்க்கப் பார்க்க தன்னுடைய தவறு பூதாகரமாகத் தெரிந்தது.

" மேனு மகளைக் கட்டிக் கொடுத்தட்டமே, அவளைப் பிரியனுமேன்னு கவலை. " எனப் பானுமதி பாதி உண்மையையும் சொன்னார். சந்திரதேவ், மேத்யுவையும் ஹோட்டல் அறையைக் காலி செய்து விட்டு அவர்கள் வீட்டில் தங்கச் சொல்லிக் கேட்டுக் கொண்டான்.


இரவில் தனியறையில் மனைவியைத் தனிமையில் சந்தித்த போது, அவளது வெறுமையான முகம் அவனுக்கு வேதனையைத் தந்தது.

" ஹசி, என்னை நல்லா திட்டு, நாலு அடி போடு. எதாவது செய். இப்படிப் பேசாம இருக்காதடி " என அவள் கையை எடுத்து அவன் தன் மார்பில் அடித்துக் கொள்ள, அதனை உருவிக் கொண்டவள், "ம்கூம்" எனச் சந்திரப்பிறையில் தலையைச் சாய்த்துக் கொண்டாள்.

" நான் எப்படி இருக்கனும்னு எனக்குப் புரியலை. அது தான். மத்தபடி உன்கூட இருக்கிறது எனக்கு ரொம்பச் சந்தோஷம். நீ அடிக்கடி கேட்பியே, உன் மேல நம்பிக்கை இருக்கான்னு. நான் உன்னைத் தான் முழுசா நம்புறேன். ஐ லவ்யு" என அவன் மார்பில் ஒண்டிக் கொண்டாள்.

" தாங்க்ஸ்டி. இதுக்காக நீ என்னை வெறுத்துடுவியோன்னு பயந்தேன். ஆனா அப்படியாவது என் கூடவே இருக்கட்டும்னு தான், கல்யாணம் செய்யறதுக்குத் தீவிலேயே ஃபோர்ஸ் பண்ணேன்" என்றான்.

" ம் புரியுது. ஆனால் எல்லாமே நீ எனக்காகத் தான் செஞ்ச. நான் உனக்காக என்ன செய்யப் போறேன்னு தெரியலை" என்றாள்.

" நிறைய இருக்குடி. முதல்ல இந்தக் கன்னக்குழி தெரிய சிரிக்கனும். மச்சான் கூட ஹேப்பியா மனசு திறந்து பேசு. அப்புறம் " என அவள் கை விரல்களில் ஒன்று இரண்டு என எண்ணியவன் " ஐஞ்சு புள்ளைகள் பெத்துக்குவோமா " என வினவினான்.

" அது என்ன கணக்கு" என்றாள், " ஒரு கையில் ஐஞ்சு விரல் தான் இருக்கு " என்றான். " அப்ப இன்னொரு கையும் இருக்கே" எனக்காட்டினாள்

" அப்பப் பத்து புள்ளை பெத்துக்குவோமா" என அவன் கேட்கவும் கன்னக்குழி தெரியச் சிரித்தவள், " உன்கிட்ட இரண்டு கை இருக்கு" என்றாள்

" நாலு கை, இருபது விரல் கணக்கு எக்குத் தப்பா போகுது. அதுக்கான முயற்சியை எடுப்போம்" எனத் தன்னில் மனைவியைப் புதைத்துக் கொண்டான்.

அப்பா, அம்மா, மேத்யு , வீட்டினர் எனப் பகல் பொழுதை ஓட்டுபவள், இரவில் அவன் கைகளுக்குள் மகிழ்ச்சியாகவே சரணடைந்தாள். சந்திரதேவும் இதில் முழுத் திருப்தியாக இருந்தான். இந்திய நிலவரம் ஹாசினி கேஸ், நஞ்சப்பாக்கள் எதிலும் தொய்வு வராமல் இவர்களுக்குப் பிரச்சனையும் வராமல் காய்களை நகர்த்தினான்.

எஸ் ஆர் சந்திரா சிகிச்சைக்காக அமேரிக்கா செல்லும் நாள் வந்தது.  இரண்டு மனைவிகள், பவன் ப்ரீத்தியைத் துணைக்கு அமர்த்திக் கொண்டு மேத்யுவோடு அமெரிக்கா கிளம்பினர்.

மேனகா, சம்பந்தியம்மாளிடம் எப்படிச் சொல்வது எனத் தெரியாமல், பானுமதி, நிரஞ்சனா என அத்தனை பேரிடமும் மகளிடம் கடுமை காட்டாமல் இருக்கச் சொல்லுமாறு சிபாரிசு பிடித்தார்.

அதைப் பார்த்துக் கொண்டே இருந்தர், " கவலைப் படாமல் போயிட்டு வா. உன் மகளை ஒண்ணும் கடிச்சு தின்னுட மாட்டேன்" என்ற அனுசுயாவின் அதிகாரமான வார்த்தையே கூட மேனகாவுக்குப் போதுமானதாக இருந்தது.

முதல் நாளிலிருந்து ஹாசினி சோக முகத்தைக் காட்ட ஆரம்பித்துவிட்டாள். மேனகா மகளுக்கு ஆயிரம் அறிவுரைகளைக் கூறினார். " சரிமா, நீ எப்ப திரும்ப வருவ. " என்றவளிடம், " நீ குட்நியூஸ் சொல்லு, அப்பாவை பெத்தம்மாட்ட விட்டுட்டு வந்துடுறேன்" என மேனகாச் சொல்லவும்.

" அப்பா, உன்னை விட்டுவிட்டுத் தான் அடுத்த வேலை பார்பாங்க. " எனச் சலுகை கொஞ்சியவள், பாலைவனத்தில் காங்கை காவிரி எல்லாம் பெருக விட்டுப் பெற்றவர்களுக்குப் பிரியாவிடைக் கொடுத்தாள்.

மனதில் வரித்தவனே கணவனாக காதலை கொட்டிய போதும் ,ஹாசினியின்  மாளிகை சிறைவாசம், என்ன விளைவுகளை ஏற்படுத்தும் பொறுத்திருந்து பாப்போம். 



No comments:

Post a Comment