Tuesday, 29 June 2021

18. ஹாசினி சந்திரா.

18. ஹாசினி சந்திரா.


       சாந்த் தேவ் மஹால், வெள்ளியும் தங்கமும் சேர்த்து இழைத்து தான் இதனைக் கட்டினார்களோ என ஐயப்படும் அளவுக்கு அதன் தரை , சுற்றுச் சுவர், விதானம், மாடிப்படிகள், சாண்டிலியர், திரைசீலை என அத்தனையிலும் ஒரு செல்வ வளம் மின்னும். கட்டிடக்கலையை கரைத்துக் குடித்து அதனையே தொழிலாகச் செய்யும் இவர்களிடம்த் தான் கட்டுமானத்துறையின் ஒவ்வொரு புது யுக்தியும், டிசைன்களும், பொருள்களும் பயன்பாட்டிற்கு வரும். பெங்களூரின் சந்திரபவன் ராஜமாளிகை எனில், இது நவீன உலகின் உதாரணமாக காட்டக்கூடிய ஆடம்பர மாளிகை. 

       அத்தனை சந்திராக்களுமே கூடத்தில் கூடியிருந்தனர். ஆனால் அத்தனை பேரும் சந்திர பிரகாஷ் சிம்ம தேவனின் விளக்கத்துக்காகக் கவலையோடும், ஒருவித பதட்டத்தோடும் காத்திருந்தனர். பேச்சை எப்படி ஆரம்பிப்பது என அறியாமல் தவிக்கும் போது , ரத்தின தேவ் தான் விசயத்தைப் பட்டெனப் போட்டு உடைத்தார்.

       " யுவராஜ் நஞ்சப்பாவை ஹாசினி கேஸ்ல அரஸ்ட் பண்ணிட்டோம்னு காவல்துறை பிரஸ்க்கு பேட்டிக் கொடுத்த நியுசை பார்த்திட்டு தான் மச்சான் மயங்கி விழுந்தார் " எனச் சந்திர தேவைப் பார்த்து ரத்தன் கோபக்கனையைத் தொடுக்கவும், சந்திரா நெற்றியைத் தேய்த்தான். சந்திரதேவ் தனக்காகத் திட்டு வாங்குவதாக நினைத்த ஹாசினி அவனுக்குப் பரிந்து ,

       " என்னை யுவராஜ் கிட்னாப் பண்ணதா நினைச்சிட்டாங்களா. ஆனால் அவனெல்லாம் ஜெயிலுக்குப் போகவேண்டியவன் தான் அங்கிள். மூணு தடவை என்னைக் கொல்ல ட்ரை பண்ணியிருக்கான். பவன் ப்ரீத்தியை வச்சுச் சந்திரா தான் என்னைக் காப்பாற்றினார்." என ஹாசினி விளக்கம் தரவும், குடும்பமே அவளைப் பாவமாகப் பார்த்தது. யாருக்குமே அவள் படுகொலை செய்யப்பட்டதாக வந்த தகவலைச் சொல்ல மனம் வரவில்லை.

      சந்திரதேவ் , ஹாசினி அருகிலிருந்ததால் அந்தப் பகுதியை மட்டும் மறைத்தவன் , தனது கதையைச் சொல்ல ஆரம்பித்தான். "நம்ம கன்ஸ்ட்ரக்ஸன்ஸ் பிஸ்னஸை யுஎஸ்லையும் விரிவுபடுத்த ஆரம்பிச்ச நேரம் ,ஒன்றறை வருஷத்துக்கு முன்னாடி நடந்தது. ,சந்திரா மாமா ஆபரேஷனுக்கு முன்னாடி, என்னை இந்தியாவுக்கு வரச்சொன்னார். மதுவோட பேர்ல இன்வெஸ்ட்மென்ட் பண்றதை டிஸ்கஸ் பண்ணனும்னு கூப்டாங்க. " எனவும் ஹாசினி ஆச்சரியமாக அவனைப் பார்த்தாள்.

         "மச்சான் விவரம் தான். அவருகிட்ட இல்லாத ஆட்களா, உன்னை நோட்டம் விட்டுருப்பார்" என்றார் ரத்தன தேவ். "நானும் அப்படித்தான் கேட்டேன். அதுக்கு, மாமா சொன்னார்" என அன்று இவர்கள் இருவருக்குமிடையே நடந்த உரையாடலைச் சொன்னான்.

         " வீரா போனதே எனக்கு மனசளவுல பெரிய பாதிப்பு தான். இப்ப ரீசன்டா ஹெல்த் இஸ்யூஸ்ம் இருக்கு. பானுவையும் ப்ரதி, அதியையும் உங்க அப்பா பார்த்துக்கிட்டான். அவங்க செட்டில் ஆகிட்டாங்க. நான் இருக்கிறதோ , இல்லாததோ அவங்க வாழ்க்கையில பெரிய மாற்றத்தை ஏற்படுத்தாது. " என அவர் சொல்லவும் " அத்தையும், அத்தான் இரண்டு பேரும் இன்னைக்கும் உங்களை மிஸ் பண்றாங்க. நீங்க இப்படிச் சொல்லக் கூடாது" என்றான் தேவ். அவர் சிரித்து விட்டு,

       "நான் அப்படிச் சொல்லலை மாப்பிள்ளை, பைனான்ஸியலாவோ, பிசிக்கலாவோ அவங்க என்னைச் சார்ந்து இருக்க வேண்டிய அவசியமில்லைனு சொல்றேன். ஆனால் மேனகா, மது இரண்டு பேருக்கும் என்னைத் தவிர வேற உலகமே தெரியாது. வெளி உலகம் தெரிஞ்சுக்கட்டும்னு தான் மதுவை யூ எஸ் அனுப்பியிருக்கேன். அவளையும் செட்டில் பண்ணனும்.

         இதுக்கு என் மகனுங்களை விட்டுட்டு உன்னை ஏன் கூப்பிட்டேன்னு தோணும். " என அவர் கேள்வி எழுப்பவும், " பேஸ் ரீடிங் படிச்சிருக்கீங்களா மாமா" எனத் தேவ் வியந்தான்.

        " மாப்பிள்ளை, உன் வயசை விட என் அனுபவம் ஜாஸ்தி. எவ்வளவு ஜனங்களைச் சந்திச்சு இருப்பேன்" என விளக்கியவர்

       " நேராவே சொல்லிடுறேன் மாப்பிள்ளை, மதுவை உனக்குக் கல்யாணம் பண்ணி வைக்கனும்னு எனக்கு ஆசை. எனக்குப் பின்னாடி அவளுக்கு இங்க பாதுகாப்புக் கிடையாது. இப்ப செய்யப் போற சர்ஜரி பத்தி எனக்கு ஒண்ணும் நல்லதா தோணலை. ஆனால் செஞ்சு தான் ஆகனும். அது எப்படி வேணா இருந்துட்டுப் போகட்டும் அதைப் பற்றிக் கவலை இல்லை.

        நீ மதுவை சின்னவயசில பார்த்தது தானே மாப்பிள்ளை, இப்ப யு எஸ் ல இருக்கா. நீ போய்ப் பாரு. இரண்டு பேருக்கும் பிடிச்சா ஒத்துப் போகும்னா நான் உங்க வீட்டில் பேசுறேன். உங்க அப்பா இருந்திருந்தா உரிமையாவே கேட்டிருப்பேன். மதுவுக்கு எனக்குத் தெரிஞ்சு வேற அபேர்ஸ் கிடையாது." என்றவர் அவன் பார்வையில், சிரித்துக் கொண்டே ,

       "நாங்க அப்பா மகள் எல்லாமே ஓபனா பேசுவோம், இன்னும் சொல்லப் போனால், உன் மேல அவளுக்கு ஒரு க்ரஷ் இருக்கு. உங்கம்மாவுக்காகப் பயப்படுறா. நான் கோடு போடுறேன். நீ ரோடு போட்டுக்கோ " என்றவர் தொடர்ந்து,

       " அடுத்த முக்கியமான விசயம் பிஸ்னஸ் பேசுவோம், உங்க பிஸ்னஸ் யு எஸ்ல எக்ஸ்பேண்ட் பண்றீங்கன்னு கேள்வி பட்டேன். எனக்குத் தெரிஞ்ச மில்லினர் ரிச்சர்ட் வில்லியம்சன் நியுயார்க்ல இருக்கார். இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்.ஆனால் அவங்க தாத்தா காலத்துலையே அமெரிக்காலச் செட்டில் ஆகிட்டாங்க. எனக்கு நல்லா பழக்கம்.

       நாங்க இரண்டு பேரும் உங்க ப்ராஜெக்டல இன்வெஸ்ட் பண்ண ரெடி. ஆனால் மது பேர்ல போடுறது வெளியே தெரியக்கூடாது. உன்னால சமாளிக்க முடியுமான்னு சொல்லு." என அவன் பதிலுக்காகக் காத்திருந்தார்.

      " மாமா, பொண்ணையும் கொடுத்து, பிஸ்னஸும் தரேங்கிறீங்க. பத்து வருஷம் முன்னாடி சொன்ன ஜாக்பாட் இது தானா " என இவன் கேட்கவும்,

       " கண்டுபிடிச்சிட்டியா. நம்மகிட்ட இருக்க மிகச்சிறந்த பொக்கிசத்தை, நமக்குப் பிடிச்சவங்களுக்குத் தானே தருவோம். என்னோட பொக்கிசம் என் மகள். எனக்குப் பிடிச்சவன் வீரா, நீ அவனோட மகன். அது தான் இந்த ஜாக்பாட் . நீ மதுவை இப்ப பார்க்கலையே , பார்த்திருந்த இவ்வளவு கேள்வியே கேட்க மாட்ட " என அவர் விஷமமாகச் சிரிக்கவும், " மாமா" என இவன் ஆட்சேபனை செய்தான். மகளின் போட்டோவை காட்டினார். சந்திரதேவ் அதையே பார்த்திருந்தவன்,

    "மாமா ,நீங்க இந்தப் படத்தைக் காட்ட வேண்டிய அவசியமே இல்லை, அவள் என் மனசில இருக்கா. ஆனால் நான் மதுவைப் பார்த்த பிறகு தான் அவளைக் கல்யாணம் செய்கிறதைப் பத்தி உறுதி தர முடியும், அவள் மனசில யும் நான் இருந்தா , இந்த உலகமே எதிர்த்தாலும் நான் அவளைக் கல்யாணம் செஞ்சுக்குவேன். ஒரு வேளை அவளுக்கு வேற நோக்கம் இருந்தால், அவள் என்னோட பொறுப்பு. நீங்க அவளைப் பத்தி கவலைப்படாமல் இருங்க. " என வாக்கு தந்தான். 

"நான் அவளைப் பார்த்துக்குறேன்னு, ஓகே சொல்லித் தான் ஸ்டேட்ஸ் போனேன்" எனச் சந்திரதேவ் எஸ்ஆர்சியுடனான சந்திப்பிலிருந்து அதற்குப் பிறகான தங்களது கதையை ஆரம்பித்தான்.

      " அதுனால தான் நீ அமெரிக்கன் இன்வெஸ்டர் யாருன்னு சொல்லலையா. இருந்தாலும், அப்பா எங்களை நம்பலைப்  பாரு" என ப்ரதிபன் வருத்தப்படவும். ஆராதனா இடைப்புகுந்தாள்,

     " ப்ரதி , மாமா தன் சொத்தை காப்பாற்ற ஆள் தேடலை. மகளைப் புரொக்ட் பண்ண மருமகன் தேடியிருக்கார். அதுக்குத் தான் இந்தத் தூண்டில்" என அவள் சொல்லவும்.

      " மச்சானுக்கு, யாரை எப்படிப் பிடிக்கனும்னு தெரியும். சந்துவை பத்தி வீரா அண்ணன் நிச்சயம் புலம்பி இருப்பார். அதுனால தான் பழைய காலத்து ராஜாக்கள், மகளைக் கட்டிக் கொடுத்து நாட்டையும் கொடுப்பாங்களே , அப்படி ஆசை காட்டியிருக்கார். இவனுக்கு எல்லாமே பிஸ்னஸ் தானே" என ரத்தின தேவ் சந்துவின் குணாதிசயத்தை உடைத்துப் பேசவும்.

       " அப்ப பிஸ்னஸ் மோடிவ்ல தான் யு எஸ் க்கு ,என்னைத் தேடி வந்தியா. பெரிசா லவ் கிவ்வுனு பீலா விட்ட" என ஹாசினி தன்னை மறந்து சநாதிரதேவிடம் அனைவர் முன்னும் சண்டைக் கட்டினாள். சந்து அவளை ஆட்சேபனையாகப் பார்த்தான்.

          " என்னது லவ்வா, டேய் கேட்க ஆள் இல்லைனு எங்க தங்கச்சி வாழ்க்கையில் விளையாடுறியா, அப்படின்னா அப்பவே கல்யாணம் பண்ணியிருக்கலாம்ல " என அதிபன் கோபத்தைக் காட்டினான். ஹாசினி படுகொலை என நாடகமாடியதன் கோபம் இருந்தது.

       "அத்தான், ரொம்பப் பாசமலரா பொங்காதீங்க. உங்க தங்கச்சி, இந்தப் பேபிடால்க்காக எங்க அண்ணன், என்ன என்ன செஞ்சார் தெரியுமா" என நிருபன் எடுத்துச் சொல்லச் சாட்சியாக ப்ரீத்தியும் பவனும் அந்தக் கூட்டத்தில் இணைந்தனர்.

       " அதியண்ணா, நாங்க இரண்டு பேரும் ஆறுமாசமா மேடம் கூடத் தான் இருக்கோம்" என ப்ரீத்தி சந்திரதேவ் ஹாசினியை பாதுகாகக்கவே தங்களைப் பணித்ததைச் சொன்னாள். நர்ஸ் வந்து மேனகா முழித்து விட்டதாகவும், மகளை அழைப்பதாகவும் சொல்லவும், ஹாசினி அழைத்துக் கொண்டு சந்திர தேவ் மட்டும் உள்ளே சென்றான்.

      "மது" எனக் கண்ணீர் மல்கியவரிடம் சந்திரதேவ் , "அத்தை, என்னை மீறித் தான் யாரா இருந்தாலும் உங்க மகளை நெருங்க முடியும். நீங்க மனசைப் போட்டு அலட்டிக்காதீங்க. உங்களுக்கு ஒண்ணுன்னா, பெரிய அரசியல்வாதிங்க பில்டப் குடுத்த அப்பாவும் மகளும் சின்னப் பிள்ளையாட்டம் அழறாங்க" எனக் கேலியோடு மேலும் இரண்டு வார்த்தை பேசியவன்.

       ஹாசினியிடம், " உணர்ச்சி வசப்படாம உங்க அம்மாட்ட செல்லம் கொஞ்சிக்கோ. ஆனால் அத்தையைப் பேச வைக்கக் கூடாது" என அவளுக்கும் உரிமையாகக் கட்டளையிட்டுச் சென்றான். அறைக் கதவைச் சாத்திவிட்டே ஹாலுக்கு வந்தான். சந்திரதேவ் இப்போது சுதந்திரமாக வீட்டினரின் கேள்விகளுக்கு விடையளிக்கத் தயாரானான்.

      " சந்துண்ணா, யூ எஸ் போனீங்களே , அந்தக் கதையைக் கன்டினியு பண்ணுங்க " என்றாள் மயூரா " ஏண்டி எங்க மகன் என்ன படமா ஓட்டுறான். கதை கேட்கிற' என நிரஞ்சனா அக்காள் மகளைத் திட்டவும்.

       " அவன் தான்,ட்ராஜிட்டியா ஒரு சஸ்பென்ஸ் நாடகத்தை நடத்திட்டு இருக்கான. இதில பாதிக்கபட்டவங்களுக்கு, நீ என்ன நியாயம் செய்யப் போற சந்து " எனச் சரியான பாயிண்டை பிடித்தான் பிரதிபன்.

    " என் மேல நம்பிக்கை இல்லையா அத்தான், நான் எல்லாத்தையும் மேனேஜ் பண்ணிடுவேன். ட்ரெஸ்ட் மீ" என்றான் சந்திரதேவ்.

       " சந்து இத்தனை நாள் நீ ரிஸ்க் எடுத்து ஆடினது எல்லாம் பிஸ்னஸ்ல. அதுல லாபமோ நட்ஷடம்னாலும் பணம் தான் . இப்ப நீ என்ன செஞ்ச காரியத்தில் என்ன என்ன இழக்கப் போறமோ. " என ப்ரதிபன் கோபத்தோடு சொல்லவும்

        " அத்தான், ஆறு மாசமா ஹாசினி சந்திராவை காப்பாத்துற வேலையைத் தான் பார்த்தோம். கடைசி நாள் அன் எக்ஸ்பெக்டட். யுவராஜ் மூணு தடவை அவளைக் கொல்ல ட்ரை பண்ணான். ஒவ்வொரு தடவையும் மயிரிழையில் உயிர் தப்பிச்சா. அதனால தான், அதிரடியா மதுவோட சேஃப்டி ஆஸ்பெக்ட் யோசிச்சு, என் கஷ்டடியில் எடுத்துக்கிட்டேன். வேற யாரை நம்பியும் அவளை அங்க விட்டு வைக்க முடியலை. அந்த நேரம் அவளோட உயிரை விட எதுவுமே எனக்குப் பெரிசா தெரியலை. எது வந்தாலும் நான் ஹேண்டில் பண்ணிக்கிறேன். இனி அவள் என்னோட பொறுப்பு " என்றான் சந்திரதேவ். அதன் பின்னர் மேத்யு வில்லியம்சன் பற்றி, ஹாசினியின் நண்பன், சந்திராவுக்கும் குடும்ப நண்பர் எனச் சொன்னவன், தான் சந்தேகப்பட்டதை மறைத்து விட்டான்.

    ஹாசினி இந்தியா சென்றது. இவன் பின் தொடர்ந்தது எல்லாம் சொன்னவன், " பாம் ப்ளாஸ்ட் ஆன அன்னைக்கு மேத்யு ,மதுவை தன்கிட்ட ஒப்படைக்கனும்னும், அவள் அப்பா அம்மாவையும் அமெரிக்க வரவழைச்சு தான் பார்த்துகிறதா சொன்னான். எனக்கும் இவள் ஏன் அரசியலுக்குப் போனா, நஞ்சப்பா எதை வச்சு மிரட்டுறான்னு தெரியலை. சந்திரா மாமாவை இந்தியாவிலிருந்து வெளியேற்ற, நஞ்சப்பாவுக்குக் குழி தோண்டனும்னு முடிவு பண்ணித் தான் மதுவை மாறுவேடத்தில் கிட்னாப் பண்ணேன்" என்றவன்.

       " சுஹானா தீவில் ஏதேச்சியா , அரை மயக்கத்தில் என் பெயரைத் தான் சொன்னா. அதுவும் , என்கிட்ட வராதா சந்திரா, நீயாவது நல்லா இருன்னு புலம்பினா. அப்போ தான், என்னை மாதிரியே அவளும் என்னை நினைக்கிறான்னு தெரிஞ்சது. அதுக்கப்புறம் மேத்யூகிட்ட ஒப்படைக்கிற யோசனையை மாத்திக்கிட்டேன்" என்றான்.

      " இந்திய போலீஸ், அவ்வளவு ஏமாளி இல்லை. தங்கப்பாண்டியனை நேரில் பார்த்ததை வச்சு சொல்றேன். அவர் உன்னைத் தேடி வருவார் " என்றான் அதிபன்.

      " பாஸ் , அதெல்லாம் வந்துட்டார். நம்ம பாஸ் கண்ணுளையே விரலை விட்டு ஆட்டிட்டு தான் போனார்" என்ற பவன், அந்த விவரத்தையும் சொன்னான்.

" எல்லாம் சரி. இப்ப மதுவோட ஐடென்டிடி " என அதிபன் கேள்வி எழுப்பினான்.

    " யாரோட சம்மதம் இருந்தாலும், இல்லைனாலும். மதுரஹாசினி சந்திரா இனிமே திருமதி சுஹாசினி சந்திர பிரகாஷ் சிம்ம தேவா என்கூடத் தான் இருப்பா. சட்டப்படியும், சம்பிரதாயப்படியும் அவள் என் மனைவியாகிட்டா. உங்க எல்லாருக்காகவும் வேணும்னா வீட்டில சிம்பிளா மேரேஜ் அரேஞ்ச் பண்ணுங்க. எல்லார் முன்னாடியும் அவள் கழுத்தில் தாலி கட்டுறேன்" எனப் பெரிய குண்டைத் தூக்கிப் போட்டான் சந்திரதேவ்.

         " அண்ணா, ஆனா அம்மா சம்மதிக்கனுமே" என ஆராதனா கேள்வி எழுப்பவும், " அவங்க மறுத்தால், அவங்க மகன் ஜெயில்ல கலி திங்கனும் .அவங்களுக்கு எது சம்மதமோ, அது எனக்கும் சம்மதம் " என்றான்.

         " சந்து உன் அட்டகாசம் தாங்கலைடா . நீ எப்போ தான் மாறப் போற. நீ செஞ்ச எல்லாத்திலும் பெரிய விசயம் , ஹாசினியோட படுகொலை ட்ராமா. " என ரத்தின சிம்மன் புலம்பவும்.

     " அவள் இன்னும் உன்னை நம்புறா. உலகத்தைப் பொறுத்தவரை ஹாசினி சந்திரா இறந்திட்டாங்கிறதே அவளுக்குத் தெரியலையே.இதை எப்படிச் சமாளிப்ப " என அதிபன் கேள்வி எழுப்பினான்.

 " நானே சொல்லிக்கிறேன். வேற யாரும் சொல்ல வேண்டாம்" என்றவன், அதோடு விளக்கவுரை முடிந்தது என்பது போல், மேனகா இருந்த அறைக்குள் சென்றான்.

      ஹாசினி  அம்மாவின் கையைப் பிடித்தபடி அருகிலிருந்த சேரில் அமர்ந்து பெட்டில் தலை வைத்துத் தூங்கியிருந்தவளை, பார்த்தவன் , அங்கிருந்த நர்சிடம் அவசர தேவையெனில் இன்டர்காமில் காட்டி ஒன்றாம் எண் நம்பரில் அழைக்கச் சொன்னவன், அவளை எழுப்பித் தன்னுடன் வருமாறு அழைத்தான். 

        சைகையில் அவள் அம்மாவைக் காட்டவும், அவனும் சைகையில் பதில் தந்து அவளை வெளியே அழைத்துச் சென்றவன், எல்லாரும் பார்க்கவே தங்களது அறைக்குச் செல்லும் லிப்டை நோக்கிச் சென்றான்.

   ரத்தின சிம்மன், நிரஞ்சனாவைப் பார்க்கவும், மற்றவர் ஆட்சேபிக்கும் முன், "சந்து, மது என் கூடத் தங்கிக்கட்டும்" என்றார் நிரஞ்சனா. அவர்களை நோக்கித் திரும்பியவன்,

      " ஏன் சித்தி, இப்ப தானே சொன்னேன், சட்டப்படியும், சம்பிரதாயப்படியும் மது என்னோட மனைவி . அவள் என்கூடத் தான் இருப்பா" என்றான்.

     " அதுசரிப்பா, ஆனால் அக்கா இருக்காங்க, அண்ணேன் அண்ணிகள் இருக்காங்க " என அவர் இழுக்கும் போதே, ஹாசினி அவனிடமிருந்து விலக முயன்று. " நான் அம்மா ரூம்லையே இருந்துக்குறேன். எனக்கு ஒண்ணும் பிரச்சனை இல்லை" என  சொல்லவும், அவளை முறைத்தவன், முகத்தை இன்னும் கடுமையாக வைத்துக் கொண்டு, மற்றவர்களை நோக்கி,

      " உங்கள் எல்லார் முன்னாடியும் நான் தாலி கட்டளைனா, இவள் என் மனைவி இல்லைனு ஆயிடுமா. நிரு அந்தச் சர்டிவிகேட் காட்டு" என்றான் தேவ். நிருபன் அதனைத் தேடி எடுக்கும் போதே, ரத்தன தேவ்,

           " போங்கடா, பெரிசா சர்டிபிகேட் காட்ட வர்றானுங்க. நீ உன் பொண்டாட்டியைக் கூட்டிட்டு போடா ராசா " என அவரே அண்ணன் மகனைப் பார்த்துச் சொன்னவர். " நல்லா சேனைத் தொட்டு வச்சாரு. அவர் போகாம வந்திருக்கான்" என மச்சினனையும் மகனையும் இரண்டு சந்திரர் பெயரில் இருக்கும் சூரிய ஆளுமைகளையும் ஒரு சேரத் திட்டிவிட்டு, மற்றவரை அவரவர் அறைக்குச் செல்லப் பணித்தார்.

 சந்திரதேவ் தனது மனைவியான சுஹாசினி சந்திரதேவை ,அவளது அண்ணன்கள் ,அண்ணிகள் ,தனது சித்தப்பா குடும்பம் தங்களையே பார்ப்பதை உணர்ந்து , வேண்டுமென்றே அவளை இடையோடு இறுக்கமாக அணைத்து தனது அறைக்கு அழைத்து சென்றான். 


ஹாசினி சந்திரா- 18 part-2


பதின்ம வயதிலேயே 

தனது மனதில் நுழைந்து 

அவனது இதய சிம்மாசனத்தில் 

ராணியாக அமர்ந்தவளை, 

காதலாகி, கடத்தி 

கசிந்துருகி, 

கைத்தலம் பற்றி, 

காந்தர்வ விவாகம் முடித்து,  

கற்பியல் தவராமல் கலவி, 

காமுற்று களித்து 

காந்தவிழியாளை 

கவர்ந்த கள்வனவன். 


      உற்றாரும், உறவினரும் சுற்றி நிற்க, அவள் இடையை இவன் இரும்புகரத்தால் இறுக்கி, இருவருக்கும் இடையில் இடைவெளியின்றி , இழுத்துச் சென்றான். இடையில் தவழ்ந்த அவன்கரம் இம்சையைக் கூட்ட, பிறர் பார்க்கிறார்களே என லஜ்ஜையுற்று அவன் பிடியிலிருந்து நழுவ முயல, இன்னும் இறுகியது அரக்கனவனின் கரம். அதோடு, " நெளியாமா வாடி லங்கினி. இல்லைனா கண்ணாடி லிப்ட், எல்லாரும் பார்க்கும் போதே, வாயோடு வாய் பதிப்பேன்" என தனது விஷமரூபத்தைக் காட்டினான் அவன். 


        அரக்கன் சொல்லாததையும் சேர்த்து செய்பவன், சொன்னதை செய்யாமலா விடுவான், அதற்கு பயந்தே அவனோடு அவளும் நன்றாக ஒண்டிக் கொண்டாள். அவள் செயலில் திருப்தியுற்றவனாக, லிப்டில் ஏற்றி, கரிசனமாய் அவளைப் பார்த்துக் கொள்வது போல் நெற்றியில் விழுந்த அவளது கற்றை முடி எல்லாம் எடுத்து விட்டு, ரொமான்டிக் லுக் கொடுத்து, மற்றொரு லிப்டில் ஏறி அறைக்குச் சென்று விட்ட மூத்த தம்பதியைத் தவிர மற்ற அனைவருக்கும் தரமான ரொமான்டிக் ட்ரைலர் காட்டியே சென்றான். 


      நிருபன் தேவைத் தவிர மற்றவர் ஜோடியாக நின்று நெஞ்சில் கை வைத்தபடி பார்க்க, ப்ரதிபன் ஆராதனாவை முறைத்தான். அதன் அர்த்தம் புரிந்து, "என்னைய முறைச்சா, உங்க தங்கச்சியும் தானே போறா" என  நொடிக்க, அந்த ஜோடி சண்டையிட்டுக் கொண்டே சென்றது. 


      " திமிரெடுத்தவன், தீவிலதான் அவன் ராஜ்ஜியம், இங்க பெரியவங்க இருக்காங்கன்னாவது மரியாதை குடுக்குறானா பாரு" என அதிபன் திட்டவும், "  ஒரு முத்தம் குடுக்கவே ரூல்ஸ் பேசின ஆளுக்கு, இதெல்லாம் பார்த்தா அதிர்ச்சியாத் தான் இருக்கும். ஆனால் சந்து அண்ணா ரொமான்டிக் தான். நிரு நீயெல்லாம் வேஸ்ட்டா" என மயூரா கணவனையும் தம்பியையும் ஒரே நேரம் உபயோகமற்றவர்களாக்கி, அவர்களின் ஆட்சேபனை பார்வையில் ,திடிரென மகளின் நினைவு வந்தவளாக, " சுபி எந்திருச்சுடும்" என ஓடினாள். 


        " ப்ரியு, அன்னைக்கு சொன்னது தாண்டி, அண்ணனுங்க முன்னாடியே ஃப்ரி ஷோ காட்டிட்டு தள்ளிட்டு போறார் பாரு. இந்த தைரியம் யாருக்கு வரும். பாஸ், பாஸ் தான்" என ப்ரீத்தியும் பவனும்  மெச்சிக் கொண்டு, அவர்களும் அவுட்ஹவுஸுக்குச் சென்றனர். 


        தனித்து விடப்பட்ட நிருபன், " டேய் அண்ணா, ஒரு கன்னிப் பையனை வச்சுகிட்டு உனக்கே ஓவராத் தெரியலையா. என் பேபிடால்கிட்ட ஒரு வார்த்தை கூட நான் பேசலை. வரும் போதே அண்ணியாக்கி கூட்டிட்டு வந்திருக்கான். எவனையுமே நம்ப முடியலை" என புலம்பியபடி மாடிப்படியில் ஏறினான். 



         சந்திரதேவ், ஹாசினியை அழைத்துச் சென்றவன், தனது ராயல் சூட் அறையைத் திறந்து அவளோடு உள்ளே நுழைந்தவன், அவள் முன்னே மண்டியிட்டு அமர்ந்து, " வெல்கம் டூ அவர் பேரடைஸ், மை ப்யூட்டி குயின்" என்றான். கன்னத்தில் ரோசாப்பூ பூக்க, கன்னக்குழி விழ கண்கள் சுருக்கி விகசித்து சிரித்தவள், அவன் கையைப் பிடித்துக் கொண்டு, " யெஸ் மை டியர் ஹேண்ட்ஸம் பீஸ்ட்" என குனிந்து அவனது கன்னத்தில் முத்தமிட்டாள். 


     " ஹேண்ட்ஸம் சொன்னதோட நிறுத்தி இருக்கலாம். ஏண்டி பீஸ்ட்டுன்னு சொன்ன" என அவன் செல்லமாக கோபிக்கவும். 

" உள்ளதை தானே சொல்ல முடியும் ஆறடி அரக்கா. " என அவனைக் கட்டிக் கொண்டவள் அப்போது தான் அவனைத் தாண்டி அந்த அறையைப் பார்த்தாள். 


     " சந்திரா, இது என்ன பெட்ரூமா, ராயல் சூட் மாதிரி இருக்கு" என மான் விழியாள் இன்னும் அகலமாய் தன் கண்களை விரித்து அந்த அறையைப் பார்த்து வியந்து கேட்டாள். அவள் அறையை ரசிக்க அவன் அவளை ரசித்தபடி மீண்டும் இடையை அணைத்தபடி 

" நம்ம ரூம் தான். இத்தனை நாள் என் ப்யூட்டி இல்லாமல் டல்லடிச்சது.  இப்ப என் ப்யூட்டி குயின் வந்தவுடனே டாலடிக்குது " என அவளை அணைத்தபடி அந்த அறையைக் காட்டினான். 


         ஓக் மரத்தாலான அலங்கார வேலைப்பாடோடு கூடிய அந்தப் பெரிய கட்டிலில் , உட்கார்ந்தால் புதையுமளவு மென்மையான பத்து இன்ச் மெத்தை இவையாவும் பழுப்பும் தங்கமும் கலந்த நிறமாக காட்சியளிக்க, அதன் மேல் மட்டும் பாரசீக கட்டிட அமைப்பு போன்று டூம் வளைவும் அதில் அழகிய கிரிஷ்டல் சாண்டிலியரும் மிளிர்ந்தது. 

கட்டிலின் இரண்டு புறமும் என்கிரேவிங் வேலைப்பாடோடு கூடிய ஆள் உயர அகலமான பெல்ஜியம் கண்ணாடிகள்.  அதனைக் காட்டி அவள் காதில் அவன் ஏதோ கிசுகிசுக்க, அவனுக்கு அன்புப் பரிசாக இரண்டு அடியைக் கொடுத்துவிட்டு, " இப்படி பேசினா, எனக்கு ஒண்ணுமே பார்க்க வேணாம்" என கோபித்து அதன் முன் போடப்பட்டிருந்த பளிங்கு மோடாவில் அமர்ந்தாள். அவன் வெடிச் சிரிப்புச் சிரித்தவன், 


        " ஹசி பேபி, பெட்ரூம்க்கு வந்துட்டு இதெல்லாம் பேசாதன்னா எப்படி. சரி வா , இன்ட்ரஸ்டிங்கா இன்னோன்னு காட்டுறேன். " என்றவன் அவள் முறைக்கவும், " சீரியஸ்லி, நீ பார்த்தேனா. மச்சான் மேல மையலாயிடுவ" என்றான். அவள் " வாட் கம்அகெயின் " எனவும். 


       " ஐயோ, தெரியாம சொல்லிட்டேன். இதுக்குத் தான் மறத்தமிழச்சியா கட்டனும்கிறது" என்ற அவனது கமெண்ட்டுக்கும், முறைத்து நின்று அவனை கெஞ்ச விட்டு கட்டிலைத் தாண்டி இருந்த திரைச்சீலையை திறந்து விட அந்த பக்கம் முழுவதும் ஸீத்ரு கண்ணாடி, அதில் ஒரு ஸ்லைடிங் டோர் திறப்பு வழியே சென்றால் அகலமான பால்கனி அங்கும் உட்கார ஏதுவாக ஷோபாக்கள் இருந்தது. அதன் கூரையும் க்ளாஸ் ரூப் டாப். இடுப்பு உயர சுவற்றின் ஓரம் நின்று பார்த்தால் கண்ணுக்கு எட்டிய தூரம், நீலவானமும் கடலுமாக இருந்தது. இன்டோர் பாளான், செடி கொடிகள் என காற்றும் நன்றாக வீச ஹாசினி அத்தனையும் ரசித்தாள். 


         அடுத்து உள்ளே அழைத்து வந்து வார்ட்ரோப் அறைக்கு அவன் அழைக்கவும். " இங்க எல்லாம் நானே பார்த்துக்குறேன். நீ ஒண்ணும் சொல்ல வேண்டாம்" என அவள் கவனமாக பின் வாங்கவும், அவன் சிரித்துக் கொண்டே, "பயப்படாம வா, இது வேற" என அழைத்து வந்தான்.


      அலமாரிக்குள் அலமாரியைத் திறந்துக் காட்ட, அதில் குண்டு கண்ணங்களோடு, மிரட்சியில் மானுடனும், வெக்கத்தில் பன்னீர் ரோஜாக்களுடனும் , மஞ்சள் அப்பிய முகத்தோடு புதுபருவ மலராக மதுரஹாசினியும் அவளுக்கு மாலை அணிவிக்கும், அரும்பு மீசை பருவ பருக்களோடு சந்திரதேவும் நிழற்படமாக இருந்தனர். அதன் கீழே ஹாசினி அமெரிக்காவில் அங்கங்கு நின்று எடுக்கப்பட்ட புகைப்படங்களின் கொலாஜ். அதனைப் பார்த்தவள், சிலையென சமைந்து நிற்க , பின்னின்று, முன்னாக  அவள் முன்னங் கழுத்தில் இதழ் பதித்தவன், " ஐ லவ் யூ ஹசி " என்றான். 

   

        அவள் கண்களில் ஆனந்தக் கண்ணீர் பெருக்கோடு அவன் புறம் திரும்பியவள், "இவ்வளவு லவ்வை வச்சிட்டு, ஏண்டா ஒரு தடவைக் கூட நேரா வந்துப் பார்க்கலை. நான் இவ்வளவு கஷ்டப் பட்டுருக்கமாட்டேன்ல" என்றபடி அவன் கழுத்தைக் கட்டிக்கொண்டு அழவும், அடாதடியாக எதிலும் இறங்கும் அவனுமே நெகிழ்ந்துதான் போனான். 

  

     அவள் முகமெங்கும் இதழ் பதித்தவன், "அது தான் வந்துட்டேன்ல, இனிமே நீ கஷ்டப்படவே விடமாட்டேன். உன் கண்ணிலிருந்து கண்ணீரே வரக்கூடாதுடி " என உருகி நின்றான். ஆனால் வரும் நாட்கள் சந்திரதேவுக்கு பாடம் புகட்ட ஹாசினியை பகடைக் காயாக உருட்டும் என அவன் கனவிலும் நினைத்தான் இல்லை. 

 

        எதையும் சாதிக்கும் வல்லமையுண்டு எனும் இறுமாப்பிலிருப்பவனுக்கு சோதனை காலம் ஆரம்பிப்பதை அறியாதவன், அதே இறுமாப்போடு. "என் மேல நம்பிக்கை வைடி குண்டு கோஸ், எல்லாம் சரியாகிடும்" என்றவன், இன்னொரு லாக்கரைத் திறந்து அவளது நினைவாக அவன் வைத்திருந்த ஹேர்கிளிப், ப்ரேஸ்லெட் உடைந்த ஜிமிக்கி என இத்யாதி பொருட்கள், ஒவ்வொரு சம்பவத்தின் கதை பேசின. அதை காட்டி மீண்டும் பத்திரப்படுத்தி விட்டு தங்களது மெத்தைக்கு அவளை அழைத்து வந்தான்.


         மேனகா இருந்த அறைக்கு இன்டர்காமில் அழைத்து அவரது நலம் விசாரித்துக் கொண்டான். பிறகு பால்கனி சென்று யாருடனோ போன் பேசிவிட்டு வந்தான். அவள் அங்கே கிடந்த ஹோபாவில் தான் அமர்ந்திருந்தாள். 


" ஏண்டி, படுக்க வேண்டியது தானே" என்றான். " அங்க இருக்கும் போது ஒண்ணும் தெரியலை. இப்போ அன்கம்ஃபர்டபிலா இருக்கு" என்றாள். 


        " கீழே டயலாக் எல்லாம் அடிச்சனே. அது எல்லாம் நிஜம். யு ஆர் மை ஃபைவ் " என்றவன் " உனக்கு சந்தேகமோ, கில்டினெஸோ வேண்டியது இல்லை. மிஸஸ் சந்திரதேவ்னு கர்வமாவே சொல்லலாம். " என்றவன் அவளை அள்ளி மெத்தையில் கிடத்தினான். 


"சந்திரா, வேண்டாம் ப்ளீஸ். நான் அம்மா ரூம்க்கு போறேனே" என அவள் பாவமாகக் கேட்கவும், முதலில் அவனுக்கு கோபம் தான் வந்தது. " நீயே நம்ம உறவை குறைச்சலா நினைச்சா எப்படி. மேரேஜ் ரிஜிஸ்டர் சர்டிவிகேட் காட்டவா" என்றான். 


       " நான் கையெழுத்து போடாமல் எப்படி கல்யாணம் ரிஜிஸ்டர் ஆச்சு" என முதல் முறையாக புத்திசாலித்தனமான கேள்வி கேட்டாள். 


" இன்னைக்கு இமிகிரேசன்ல எப்படி கையெழுத்துப் போட்ட " எனக் கேட்டான். " நீதான் சுஹாசினி சந்திரதேவ்னு லெப்ட் ஹாண்ட்ல போடச் சொன்ன. அங்க நிண்ணுட்டு ட்ரஸ்ட் மீ, ட்ரெஸ்ட் மீ ன்னு சொன்ன, அது தான் போட்டேன். அதுக்குள்ள அப்பாக்கு முடியலைனு நியூஸ் வந்துடுச்சே"  என்றாள். 


" ஓகே இந்த அளவு அறிவாளியா இருக்க. மரவீட்டில போன் பேசப் போனமே , அதுக்கு முன்னாடியே நான் யாருன்னு தெரியவும், இதே மாதிரி டிஜிட்டல் சைன் போடச் சொன்னேன். " என்றான். " அன்னைக்கும் இதுமாதிரி, ஏதேதோ பேசிதான் போட வச்ச. " என அவள் குறைப்பட்டாள். 


" உன்னை கிட்னாப் பண்ணிட்டு வந்திருக்கேன். அதே பேர்ல ட்ராவல் பண்ண முடியுமா. அந்த போலீஸ் ஆபீஸர் , இங்கையும் துரத்திட்டு வந்திடுவார்" என்றான். 


" ஆனால் அதுக்காக ஃபோர்ஜரி பண்றது தப்பில்லையா. அப்புறம் நமக்கும், சிவராஜ்க்கும் என்ன வித்தியாசம்" எனக் கேட்டாள். 


" அப்ப நானும், சிவராஜூம் ஒண்ணுங்கிறாயா, அப்படின்னா சொல்லு, இப்பவே போய் தங்கப்பாண்டியன்கிட்ட சரண்டர் ஆகுறேன்" என வேகமாக எழுந்தான். 


       அவனைப் பிடித்து இழுத்தவள், " அதுக்குத் தான் அன்னைக்கு மூச்சடக்கி அங்க மறைஞ்சி இருந்தனாக்கும். அந்த ஆபீஸர், அப்பாவுக்கு நல்லா தெரிஞ்சவர். என் மேல இருக்க அக்கறைல தான் வந்திருப்பார். ஆனால் அவர்கிட்ட இருந்தே உனக்காகத் தான் மறைஞ்சிருந்தேன்" என இவர்கள் இங்கே மஸ்கட்டில் தங்கப்பாண்டியன் ஐபிஎஸை பற்றிப் பேசிக் கொண்டிருக்கும் போது கடல் தாண்டி இந்தியாவில் பெங்களூரில் அவரும் தன் மனைவியிடம் இவர்களைப் பற்றி தான் பேசிக் கொண்டிருந்தார். 


சுஹானா தீவிற்குச் சென்ற தங்கப் பாண்டியன் , ஹாசினியை பார்த்தாரா, மனைவியிடம் காதல் கதையைச் சொல்வதாகச் சொல்லிச் சென்றார், அவருக்கு எது வரை உண்மை தெரியும் . கடமை தவறாத காவல் அதிகாரியை சந்திரதேவ் எப்படிச் சமாளித்தான். ஆபீசர்  ஜோடிகளின் படுக்கையறையில் நுழைந்து நாளை ஒட்டுக் கேட்போம். அதுவரை ஹாசினி சந்திராவின் இனிமையில் இணைந்திருங்கள். 



No comments:

Post a Comment