கே ஆர் மாளிகை , அதிகாலையிலேயே விருந்தினர் வருகையால் , மேலும் களை கட்டியது. தனது உடன் பிறந்தவர்களை அழைத்து வருவதற்காக, தனது ஆஸ்தான ஓட்டுநர் சத்தியனை அனுப்பியிருந்தார் கைலாஷ் ராஜன்.
அவரது தங்கைகளான, சங்கீதா, மற்றும் கீதா லண்டனிலும், அமெரிக்காவிலிருந்து வருகின்றனர். முதல் தங்கை சங்கீதா, அவள் கணவர் சந்திரமோகன் ,மகள்,மகன் சகிதமாகவும், இரண்டாம் தங்கை கவிதா ,கணவர் சரவணன் மற்றும் ஒரே மகளோடும் , அமெரிக்காவிலிருந்து கிளம்பி லண்டனிலிருக்கும் அக்கா வீட்டுக்கு வந்து இந்தியா வருகின்றனர்.
சௌந்தரி, தான் அழைப்பின் பேரில் தான் வருகின்றனர் என நினைத்தார், ஆனால் இவர்களது பயணம் திட்டமிடப்பட்டது. ஒரு மாதம் முன்பு பைரவியைப் பற்றி அறியவுமே , இந்தியா கிளம்ப உத்தேசித்தவர்கள்,தங்கள் பணிகளை ஒதுக்கி வைத்து விட்டு இப்போது வருகிறார்கள். கைலாஷின் தொழிலிலும், வியாபாரத்திலும் இவர்களுக்கு நேரடி பங்கு கிடையாது, ஆனால் அவர்களுடைய தொழில்களில் இவரின் முதலீடு இருந்தது.
சங்கீதாவை, பன்னீரின் மகனுக்கு முடிப்பதாகத் தான் பேச்சு, ராஜியின் முடிவு, இவர்கள் வாழ்வைத் திசை திருப்ப,சங்கீதாவுக்குத் தன் சேமிப்பை எல்லாம் போட்டு.பாலநாயகம் மணமுடித்து வைத்தார். கைலாஷ் தலையெடுத்து பின்னர், கவிதாவுக்குத் திருமணம் நடக்கும் பொது, மகனிடம் உதவி கேட்கக் கூடாது என்ற பாலநாயகத்தின் பிடிவாதத்தையும் மீறி, அவர் அறியாமலே தங்கை மாப்பிள்ளையின் அமெரிக்கக் கனவைப் பூர்த்தியாக்கி , தூரத்திலிருந்தே திருமணத்தை நடத்தினார் கைலாஷ். தனது தொழில் அசுரர் வளர்ச்சி கண்டபோது,அவர்களுக்கும், வருட வருடம் லாபத்தின் ஒரு பங்கைத் தங்கைகளுக்குச் சீதனமாகவே கொடுத்தார்.
கைலாஷ் ஒண்டிக்கட்டையாகவே நின்று விட்ட பிறகு தான், அவர்களுக்கும் போனில் பேசிய பெண்ணை அண்ணன் எவ்வளவு தூரம் விரும்பியிருப்பார் எனப் புரிந்தது.ஆனால் பெண் இறந்து விட்டதாக அண்ணன் செயல்களிருந்து உணர்ந்தவர்களுக்கு, நேரடியாகக் கேட்கும் தைரியம் வரவில்லை.
இத்தனை வருடம் கழித்து, பைரவியும், அவர் மகள் இருப்பதும் தெரிய வந்தது. அதோடு ஜெயந்த் கெய்க்வாட் கைலாஷின் மச்சின்னங்கள் காதில், ரமாபாய் வாரிசைப் பற்றியும், அதே வாரிசு உங்கள் சொத்துக்கும் போட்டி என்பதையும் காற்று வாக்கில் போட்டு வைத்தார். அதோடு ரமாபாய் , சொத்தை அபகரிக்க எந்த எல்லைக்கும் செல்வார் என்றும் கூறப் பட்டிருந்தது. அந்த ஆபத்து அண்ணனை அடைந்து விட்டது என்று, தங்களுக்கு ஆதரவாக ஆதர்ஷ் பற்றிய சில தகவல் ஆதாரங்களைத் திரட்டிக் கொண்டே வந்திருந்தனர். அவர்களுடைய சந்தேகம் பைரவி மீது இல்லாமல் ரமாபாய் மீதே இருந்தது.
கோவை வந்து இறங்கியவர்களை , சத்தியன் மேலும் இரண்டு வண்டிகளை எடுத்துச் சென்று அழைத்து வர, பெரியவர்கள் சௌந்தரி,பாலா இருவரும் மகள்களுக்காகக் காத்திருந்தனர். நல விசாரிப்பகளுக்குப் பிறகு அவர்களை , பைரவியின் உடல் நலத்தைக் காரணம் காட்டி ,காலை உணவின் போது கைலாஷ் குடும்பத்தை ஓய்வெடுக்க அனுப்பி வைத்தனர்.
கைலாஷ் காலையில் கண் விழித்தவர் , அயர்ந்து தூங்கும் மனைவியை எழுப்ப மனமில்லாமல், ஆக வேண்டிய வேலைகள் உள்ளதே, எனத் தான் எழுந்து, சத்தியனின் குறுஞ்செய்தியைப் பார்த்து, தங்கைகள் வந்ததை அறிந்து கொண்டவர், “ஆண்டவா, எந்தப் பிரச்சினையும் இல்லத என்ர குடும்பத்தைக் காப்பது” என வேண்டிக் கொண்டு குளித்துத் தயாராகினார்
கைலாஷ் தயாரான பின் தான் பைரவி பதட்டமாக ,”குட் மார்னிங் ராஜ், நான் தான் லேட்டா” என எழுந்தார். “மெல்ல எந்திரிச்சு வா அம்மணி, நம்ம சௌகரியம் தான் முக்கியம், நாம போறது தான் டைம்” என மனைவியைச் செல்லமாகக் கடிந்து கொண்டவர், அவரும் குளித்து வரவும், கையோடு அழைத்துச் சென்று, ரகசிய அறையின் பெட்டகத்துக்கு முன் நிறுத்தினார்.
“ அரே பாபா, என்ன செய்யறீங்க” எனக் கணவரோடு நடந்தவர், கண் முன் விரிந்த,நகை அணிவகுப்பு முன் அதிசயித்து நின்றார். ஒவ்வொன்றாய் எடுத்துப் பார்த்தவர், “நானே இல்லை, இதெல்லாம் எப்ப கலெக்ட் பண்ணீங்க, உங்க தங்கச்சிகளுக்காக வாங்கினதா ” என வினவவும், அவரை முறைத்தவர், “உனக்காக வாங்கினது தான் அம்மணி, வருஷம் வருஷம் உன்ர பிறந்த நாள் , நம்ம கல்யாண நாளுக்கு வாங்கிடுவேன், பிடிச்சிருக்குதா ” என ஒரு வைர அட்டிகையை எடுத்து அவர் கழுத்தில் வைத்துப் பார்த்துக் கேட்க, இப்போது , கணவரையே பார்த்துக் கொண்டிருந்த பைரவி, எட்டி அவர் கன்னத்தில் முத்தமிட்டு விட்டு, “உங்களோட, இவ்வளவு அன்புக்கும் நான் எப்படி ஈடு செய்வேன் ராஜ் “என உணர்ச்சி வயப்பட்டு நின்றார்.
“மீதி இருக்க வாழ்க்கைக்கு என்ர கூடவே இரு, போதுங்க அம்மணி “ என முத்தமிட்டவர், ‘என்ர மகள் இருக்கிறது தெரிஞ்சிருந்தா, அவளுக்குச் சேர்த்து வங்கியிருப்பேன்.” என அவர் கலவை பட, “இப்ப என்ன, இத்தனை நகையையும் நானா மாட்டிட்டு அலைய போறேன், எனக்கு இந்த மங்கள் சூத்ரம், உங்க பெயர் போட்ட செயின் இதுவே போதும் . ரஜ்ஜுமாவுக்குப் போட்டு விடுறேன்” என்றார்.
“அது , ஆயியம், பொன்னும் ஏதோ செய்ங்க, ஆனால் இன்னைக்கு இரண்டு நகையாவது எடுத்துப் போட்டுக்கோ பாரு, உங்க ஆயி, உன்னைக் கூட்டிட்டுப் போக வருவாங்கல்ல , நீ என்ர பரிசோட தான் போகணும்” என்றவரைப் பார்த்துச் சிரித்த பைரவி, “சாசுமாவும், தாமாத்ஜியும் , எனக்கு நகையை மாட்டி விட்டே மூச்சை அடைக்க வச்சுடுவீங்க , ஆயி என்ன செய்யக் காத்திருக்கங்களோ” எனப் புலம்பினார்.
“அதே தான், பரம்பரை நகை இல்லைனாலும், கைலாஷ் பெண்சாதி , வசதியில் கொறஞ்சவ இல்லைனுக்கு உன்ர ராஜ வம்சத்துக்குக் காட்ட வேண்டாமாக்கும். மாஷிமாவை அனுப்பி விடுறேன், கல்யாண பொண்ணாட்டமா சிகாரிச்சிட்டு வா அம்மணி” என வேண்டுகோள் வைக்க, “அச்சா, டிக் ஹை, இப்போவே பார்த்துக்கங்க எனக்குத் தெரிஞ்சு ஆயி மூணு நாளைக்கு நம்மாளைப் பார்க்க விட மாட்டாங்க” எனச் சிரிக்கவும்,
“அதுக்கு எதுக்கு உனக்குச் சிரிப்பு வருதுங்குறேன் “ எனக் கோபப் பட்டவர், மனைவியை இருக்க அணைத்து , அவர் ஆட்சேபனையைப் பொருட்படுத்தாமல் முரட்டுத்தனமாக அன்பைக் காட்டியே விடுவித்தார். “ இவ்வளவு வன்முறை ஆகாது பாபா, நடுவில இருபது வருஷம்ன்னு சொல்றது பொய்” என வரிசையாக வசை பாடி கணவரின் ஆசை,காதல், வலிமையை வஞ்சப் புகழ்ச்சியாகப் புகழ்ந்தே அனுப்ப, ராஜன் புன்னகையோடே இரங்கி வந்து,மகளையும் ,கௌரியையும் பைரவிக்கு உதவிக்கு அனுப்பினார்.
ஹாலில் வந்தமர்ந்தவர், வரிசையாகப் போனில் பிஸியாகப் பல கட்டளைகளைப் பிறப்பித்துக் கொண்டிருந்தார். சௌந்தரி, நாயகம் வந்து சேர, தங்கைகள் இருவரும் “அண்ணா” எனப் பாசமான விளிப்போடு வர, “ வாங்க கண்ணுங்களா” என ராஜன் இருவரையும் இரண்டு பக்கமும் அணைத்துக் கொள்ள,
“உங்களை, இப்படிப் பார்க்கவே சந்தோசமா இருக்குதுங்க அண்ணா, அண்ணி எங்ககிங்க” எனக் கவிதா ஆசையாகக் கேட்க, மலர்ந்து சிரித்தவர், “ரெடியாயிட்டு இருக்காளுங்கமா, இதோ வந்துடுவா” என்றவர், அவர்கள் நலத்தையும் மாப்பிள்ளைகளையும் விசாரிக்க, சங்கீதா , “உங்க புண்ணியத்தில் எல்லாரும் நல்லா இருக்கோமுன்கண்ணா, உங்க குடும்பம் வந்திருச்சுன்னு, பொறந்தவளுங்களை மறந்து போடாதீங்க” என இடை சொருக, சௌந்தரி மகளை அடக்கினார்.
“தாய் மாதா , என்ர தங்கச்சிகளுக்கு இல்லாத உரிமையா, கேட்டுட்டு போகுது விடுங்கங்க “ என்ற ராஜன் , “எத்தனை சொந்தம் வந்தாலும், நீங்க தான கண்ணுங்களா என்ற உடன் பொறந்தவளுங்க, அது மாறுமா. உன்ர அண்ணியோட பழகி பாருங்க, பொறகு , அப்பாவாட்டம், அவள் தான் உசத்தின்னு ,நீங்களும் பாருவுக்குக் குடை பிடிப்பிங்க” எனச் சிலாகிக்க,
“உள்ளதை தான சொல்லமுடியும், உன்ர அண்ணனை விட, என்ர மருமகள் உசத்தி தான் , தங்கமான குணம்” என நாயகமும் மருமகளுக்குக் கோடி பிடிக்க, பன்னீரும் வந்து சேர்ந்தார். பேச்சு ஓடிக்கொண்டே இருக்க, ஜெட் லாக்கையும் சமாளித்துக் கொண்டு , அவரது தங்கை குடும்பத்தினர் ஒவ்வொருவராய் இறங்கி வந்தனர்.
தங்கை பிள்ளைகளை, வாஞ்சையாய் அணைத்துக் கொண்டார் கைலாஷ்,மாமா, மாமாவென அவர்களுக்கும் மாமாவிடம் பேச நிறைய இருந்தது.
சௌந்தரி, “எங்க ராஜா, பவானி இன்னும் இறங்கக் காணோம்” எனவும், “வருவாமா, அவங்க ஆயி காலையிலே வந்து கூட்டிட்டு போறேன்னாங்க , அது தான் ரெடியாகி வர சொன்னேன் “ என்றார்
“ராணியம்மா வச்சது தான் சட்டமாக்கும். நடக்கட்டும் எவ்வளவு தூரம் போகுதுன்னு பார்ப்போம்” என நொடித்தவர்,பேச்சு மகனின் பார்வையில் நின்று தானும் மாடிப்படியை நோக்க, பைரவியை மணப்பெண் போல் சிங்காரித்து, தானும் அவ்விதமே தயாராகி, ஆதிரா ஆயியோடு இறங்கி வர, கௌரி பின்னால் வந்தார்.
கைலாஷின் பார்வை, மனைவியிடம் ஒட்டிக்கொண்டது என்று தான் சொல்ல வேண்டும். சுற்றம் மறந்து சிலையாகி மனைவியை நோக்கிச் சென்றவர், அவர் கடைசிப் படியில் இறங்கும் முன் தான் இரண்டு படி ஏறி, காய் பிடித்து அழைத்து வந்தவர், “ரஜ்ஜூம்மா, உன் ஆயி எங்கடா, இது யாரு உன்ர அக்காவா “ எனச் செந்தூர் விளம்பர பாணியில் கேட்க,
“பரவாயில்லை பாபா, உங்களுக்கு ரஜ்ஜுமாவாவது ஞாபகம் இருக்கேனே, உங்க பாருவை பார்த்துட்டு என்னை யாருன்னு கேட்கலை, பச்கை “ என்றவள், ஆத்தா, அஜ்ஜோ எனப் பெரியவர்களிடம் செல்ல, “ஆதி கண்ணு,இங்க வாடா” என அழைத்து , மகள்கள் குடும்பத்தினரிடம் அறிமுகம் செய்து வைத்தனர்.
இன்னும் ராஜ், தன பாருவிடமிருந்து மீளாமல், “ பாரு, அன்னைக்குப் பார்த்த மாதிரியே இருக்க அம்மணி, நடுவில இருபது வருஷம் போனது பொய்யோ” என வழக்கமான தங்கள் கேள்வியைக் கேட்க, “ சுப் ரஹியே ராஜ், ஆயி வந்துடுவாங்க, எனக்கு டென்ஷனா இருக்கு” என நாத்திகளைப் பார்த்து மென்னகை புரிந்தபடி கணவரின் காதை கடிக்க, அவரை அணைத்தபடி அழைத்து வந்தவர்,
“ அமைதியா இருங்க அம்மணி,உன்னைப் பார்த்துத் தான் மத்தவிங்க பயப்படானோம் “ என அவர் வேடிக்கையாகச் சொல்ல, நிஜமாகவே, பைரவியின் நாத்திகளுக்கு, இத்தனை வருடங்கள் பிரிந்திருந்த பின்பும், அண்ணன் , அண்ணியிடம் காட்டும் பாசமும், நேசமும் வயிற்றில் புளியை கரைத்தது” ஆனாலும் சமாளித்துக் கொண்டு நின்றனர்,
கைலாஷ் , மனைவியை உரிமையாக அணைத்தபடி அழைத்து வந்தவர், தங்கைகள், அவர் கணவர்களிடம், “இவிக, என்ர மனைவி, பைரவி ராஜ் போஸ்லே . இருபத்தி இரண்டு வருஷம் முன்னாடியே ,முறைப் படி கல்யாணம் கட்டிகிட்டேன்.ஏதேதோ நடந்து போச்சு, என் பாருவை இழந்துட்டேன்னு நினைச்சு, வாழ்க்கையை ஓட்டிக்கிட்டு இருந்தேன், எங்களைச் சேர்த்து வச்ச ஆயி துல்ஜா பவானி, வாழ்ந்தே பாருடான்னு,பாருவை என் முன்ன கொண்டு வந்து சேர்த்துட்டா. இது என் மகள் ஆதிரா “ என அறிமுகப் படுத்தினார்.
கைலாஷின் தங்கைகள் தாய்பகி நிற்க, சௌந்தரியும் பாலநாயகமும் பேசி சரிக்கட்ட முயன்றனர், அதற்குள் நேற்றைய மாமியாரின் வார்த்தைகள் பைரவியின் செவியில் எதிரொலிக்க, சட்டெனத் தன் தயக்கம் விட்டு, பழைய பைரவியாக, அவர்களது அண்ணி ஸ்தானத்தில், ஆளுமையாகவே பேச ஆரம்பித்தார்.
“சங்கீதா, கவிதா ரைட், அத்தை உங்கள் இரண்டுபேரையும் பத்தியும் சொல்லியிருக்காங்க , முக்கால் வாசி நேரம், அவங்க மகன் புராணம் தான் ஓடும், மீதி இருக்க நேரத்திலுங்களையும் சொல்லியிருக்காங்க” என மாமியாரையும் அவரது மகள்களிடம் கோர்த்து விட்டவர், நாத்தனார் கணவர்க்ள, சந்திரமோஹன், சரவணனிடமும் அறிமுகமாகி, அவர்களைச் சந்தித்ததில் மகிழ்ச்சியைத் தெரிவித்து, இவ்வளவு தூரம் வந்ததற்கு நன்றியும் தெரிவிக்க, அவர்களும் போஸ்லே குடும்பப் பெருமையை எண்ணி வியந்தனர்.
ஆதிரா அத்தை மக்களிடம் பேசிக் கொண்டிருக்க, பைரவி பிள்ளைகளிடமும் ஓரிரு வார்த்தை பேச, கைலாஷுக்கும், பெரியவர்களுக்கும் , பழைய பவானி, பைரவி திரும்புகிறார் என ஏகத்துக்கும் பெருமை தான்.
பைரவி, அந்த வீட்டின் தலைவியாகி காலை உணவுக்கும் உபச்சாரமாக அழைத்தார்.
“ஏனுங்க அண்ணி, எங்க வீட்டில எங்களையே உறமுறையாட்டமா கூப்பிடுறீங்க, முந்தியெல்லாம் நாங்க தாங்க, எங்க அண்ணனையே வற்புறுத்திக் கூப்பிடுவோம், இல்லையின்னா சாப்பிடாமலே மீட்டிங் இருக்கும் ஓடிடுவாங்க” என மூத்தவள் தன் உரிமையை நிலை நாட்ட , “அது தான் சொல்லிட்டீங்களே முன்னமேன்னு,இனிமே உங்க அண்ணன் அப்படிப் போகமாட்டார்” எனக் கணவரை ஓர் பார்வை பார்த்தவர், “ உங்க அம்மாவுக்கு அப்புறம்,நான் தான் உங்க அம்மா ஸ்தானம்,அதுனால அம்மா பொண்ணுங்களைச் சாப்பிடக் கூப்பிடலாம் இல்லைங்களா அத்தை “ எனச் சௌந்தரியையும் துணைக்கு அழைத்துப் பைரவி பேச,
“ ஆமாம், இல்லையா பின்ன, உன்ர கொழுந்தியாளுகை கூட்டிட்டு வா கண்ணு” ,என்ற சௌந்தரி, “ஆதர்ஸையும் போன் போட்டு வராகிச் சொல்லு பவானி, இன்னைக்கு, நம்ம குடும்பமே ஒண்ணா உட்கார்ந்து சாப்பிடுவோம். “ என ஆசையாகக் கேட்க,
“ஆதிரா நான் போன் பண்றேன்” எனப் போனை கையில் எடுத்தாள். கைலாஷும் வீட்டு மாப்பிள்ளைகளை, பேசி அழைத்து வர,ஆதர்ஷ் வீட்டுக்குள் வந்தான். சங்கீதா, கவிதாவின் பதின்ம வயது பெண்கள், அவனை ஆர்வமாகப் பார்த்தனர்.
“நல்ல சமயத்துக்கு வந்த, வா கண்ணு சாப்பிடலாம்” என நாயகம் அழைக்க, அவன் பதில் சொல்லும் முன், அடுத்து வந்த ரமாபாய் , “நீங்க உனக்குக் குடும்பத்தோட சாப்பிடுங்க பாயிஸாப். என் மக்களும்,பேரன், பேத்தியும் இன்னும் போஸ்லே குடும்ப வாரிசா தான் இருக்காங்க, நான் அழைச்சுட்டு போறேன்” என அமர்த்தலாகப் பேசியபடி வந்தார்.
சௌந்தரிக்குத் தான் தாங்க முடியவில்லை பாலநாயகம் ,”சம்பந்தியம்மா, நீங்களும் வாங்க, சாப்பிட்டுப் போகலாம்” என வரவேற்றார்.
“ நன்றி பாய் சாப், ஆனால் நாங்க பொண்ணு கொடுத்த வீட்டில் கை நனைக்க மாட்டோம் “ என்றார், பாலா சமாதானம் சொல்ல வர,நேற்றும் ரமாபாய் வேறு ஏதோகாரணம் சொல்லி சாப்பிடாதது நினைவுக்கு வந்து, பன்னீர், “அவிக பழக்க வழக்கத்தை நாம மாத்தக் கூடாது பாலா” என மத்தியஸ்தம் பேசினார்.
கைலாஷ், “சாஸுமா, உட்காருங்க. பாருவும், ரஜ்ஜுமாவும் சாப்பிட்ட பிறகு கூட்டிட்டு போங்க” எனத் தழைந்து பேசவும், “ இன்னைக்கிலிருந்தே, பைரவி கௌரி விரதம் இருக்கா , காலையில் சாப்பிடமாட்டா” எனத் தான் பிடித்த பிடியில் இருக்க, கைலாஷ், பதட்டமாக மனைவியைப் பார்த்தார், “ பூஜைக்கு வச்சதை சாப்பிடலாம், நாங்க ஆயி கூடக் கிளம்பவா”என அவரைக் கேட்டு நிற்க,
“நேரத்துக்குச் சாப்பிடு அம்மணி, எனக்காக எந்த விரதமும் இருக்க வேண்டாம்.”என மனைவியின் கையைப் பிடித்தவர், ஆதிராவையும் தலையைத் தடவி உச்சி முகர்ந்து, மாமியார் கைகளில் கொடுத்தவர், “கூட்டிட்டு போங்க சாஸுமா, நான் உரிமையோடு வந்து கூப்பிடுகிறேன்” எனவும், பைரவி முறையாக வந்து,மாமன் மாமி, பன்னீர் கால்களில் விழுந்து வணங்கி எழுந்து, தாய் வீடாக மாறிய விருந்தினர் மாளிகையை நோக்கி கிளம்ப, ஆதிராவும் அதே போல் விடை பெற்றாள்.
கைலாஷ், ஆதரசிடம், “கவனமா இரு கண்ணு, உன் பாதுகாப்பும் ரொம்ப முக்கியம் தான்” எனத் தோளோடு அணைக்க, எதுவும் சொல்லாமல், தலையை மட்டும் அசைத்தான்.
“என் கண்ணு, பாஸ் கூடச் சொல்ல மாட்டியா” என்றவரை, “ நான் முறை சொல்லி ,கூப்பிடுறதாலையோ, கூப்பிடாததாலையோ , ஏதாவது மாறிடுமா” என விரக்தியாய் சிரித்தவன், யாரிடமும் பேசாமலே வெளியேறி விட்டான்.
போஸ்லே குடும்பம் சென்ற பிறகு, கைலாஷும் சாப்பிட்டதாகப் பெயர் செய்து விட்டு, தங்கை குடும்பங்களிடம் விடை பெற்று அலுவலகம் கிளம்பி விட, மகள்கள் அம்மாவிடம் விவரம் கேட்டனர்.
ரமாபாய் , கணபதி பூஜை,கௌரி பூஜை, மெஹந்தி, ஹல்தி சங்கீத் எனப் பெண் வீட்டாருக்கு மட்டுமாக நிகழ்ச்சிகளை வடிவமைத்தவர், சௌந்தரியிடம் உங்க முறைப் படி நீங்க எல்லாமே செஞ்சுக்குங்க, ஐந்தாம் நாள் அதிகாலையில் கல்யாணத்தை வச்சுக்குவோம், “என முடித்து விட,சௌந்தரிக்குப் புலம்புவதைத் தவிர வேறெதுவும் வலி இன்றிப் போனது. விஜயன் குடும்பமும்,வழக்கம் போல் வந்து ,கலந்துரையாடல்களில் பங்கேற்க,வீடு கல்யாண கலை கட்டியது. சங்கீதா, கஸ்தூரியிடமும்தான் முக மூடியை கழட்டி, உலகை ரூபத்தைக் காட்டினாள்.
இன்று முதல் ஐந்து நாட்களுக்குப் பருவைப் பார்க்கக் கூடாது என , ரமாபாய் கைலானுக்குக் கட்டுப்பாடு விதித்து விட, சொத்துக்களை மாற்றும் முயற்சியில் அவர் அலைந்ததில், பெரிதாகக் கண்டு கொள்ளாமல் விட்டார்.
அன்று மாலையில், மாமன் முன் வந்து நின்ற அபிராம் , தங்கள் வைத்திருந்த இடத்திலிருந்து மஹந் தப்பி விட்டான் எனச் செய்தி சொன்னான்.உறவுச் சிக்கலும், பாதுகாப்பு சிக்கலும் அதிகம் உள்ள நிலையில்,கைலாஷ்-பாரு திருமணம் எப்படி நடக்கும்.
பொறுத்திருந்து பார்ப்போம்.
நிலவு வளரும்.
No comments:
Post a Comment