யார் இந்த நிலவு- 45
“மூஷிக வாகன மோதக ஹஸ்த
வாமன ரூப மகேஸ்வர புத்திர
விக்ந விநாயக பாத நமஸ்தே !” , எனத் தடைகளைத் தகர்த்து,எண்ணிய செயல்கள் யாவையும், வெற்றிகரமாக நடத்திக் கொடுக்க வேண்டி, விநாயகரை வேண்டி, பைரவி பாய் , தனது கணவரை, சொந்த பந்தங்கள் சூழ மீண்டும் கை பிடிக்கும் நாளுக்காக விசேஷமாகப் பூஜையுடன் ஒருபுறம் நிகழ்ச்சிகளை ஆரம்பிக்க, மறுபுறம் தமிழர் முறைப் படி, கைலாஷை நடுநாயகமாக வைத்து, அவரது தங்கைகள், தங்கை மகள்கள்,அபரஞ்சி, சாரதா, ஆதிரா, ரஞ்சனி ஆகியோர் உடன் பிடிக்கப் பந்தற்காலை ஊன்றினர்.
இரண்டு குடும்பங்களுக்கும் பொதுவாக, திருமணம் நடக்க இருந்த அரங்கையே இரண்டாக மெல்லிய திரை கொண்டு தடுத்து, ஒரு புறம் மாப்பிள்ளை வீட்டார் சடங்கும்,மறு புறம் பெண் வீட்டுச் சடங்கும், அவரவர் குடும்ப முறைப் படி நடந்தது. கைலாஷின், தாய் மாதா சௌந்தரி, பைரவியின் ராஜமாதா ரமாபாய் இருவரின் பிடிவாதங்களுக்கும் ஈடுகொடுக்க, நடுவில் இருக்கும் வசந்த விலாசப் பெரியவர்கள் செய்த ஏற்பாடு தான் இது.
முன் தினம் காலையில், பைரவி, ஆதிரா இருவரையும் ரமாபாய் அழைத்துச் செல்லவுமே , தன் வீட்டின் களை இழந்து போனதாகச் சௌந்தரி புலம்ப, மகள்கள் அம்மாவிடம் சண்டை கட்டினார். “ஏனுங்கம்மா பெத்த பொண்ணுங்க , இத்தனை நாள்கழிச்சு வந்திருக்கோமில்லைங்க, எங்களைக் கண்ணனுக்குத் தெரியலைங்களா. புதுசா வந்த மருமகளையும், பேத்தியையும் பிரியிறோம்னு, புலம்புறீங்க” என மூத்தமகள் குறை பட,
“என்ன இருந்தாலும் ,நீங்க இரண்டுபேரும், அடுத்த வீட்டுக்கு போனவிக தானே, உங்க கூட்டம் வேற எங்க கூட்டம் வேற, என்ர மருமகள் ,எனக்கு அப்புறம் என்ர குடும்பத்தைக் கட்டி காக்குமில்ல “ என மருமகளைத் தாங்கி பேசினார்.
“ஏதேது , இதே அண்ணி இருபது வருஷம் முன்னையே வந்திருந்தாகன்னா, எங்களையே , மறந்துட்டு நீங்க யாருன்னு கேட்பிங்களாட்டத்துக்கு” என இளையவளும் சண்டைக்கு வர,
“என்ர மருமகளைப் பத்தி உங்களுக்கு என்ன தெரியும், அது இருக்கிற இடமே மகாலட்சுமி வாசம் தான், அது போகங்காட்டி , என்ர ராஜா முகமே வாடிப் போச்சு, பையன் பொக்குனு போயி இரெண்டு இட்டிலியோட எந்திரிச்சிட்டான்” என நொந்துக் கொண்டவர், கல்யாண வேலைகள், ரமாபாய் அதிகாரத்தைப் பற்றியும் மகள்களிடம் புலம்பித் தள்ளினார்.
அதனைப் பெரிதாகக் காட்டிக் கொள்ளாதது போல் “அம்மா, கொஞ்ச நேரம் தூங்கி எந்திரிச்சி வரோமுங்க, அப்புறம் சொல்லுங்க” என மாடி ஏறிவிட்டனர். அதிலும், அண்ணன் அறைக்கு அடுத்த ஆதிராவின் அறையைத் தங்களுக்கு ஒதுக்காததில் சிறு குறை இருந்தது.
சங்கீதா, கீதா இருவரும், ரமாபாயின், சொத்துச் சம்மந்தமான கண்டிஷனை கேட்டுக் கொதித்துப் போனார்கள். சாப்பிட்டவுடன் ஜெட்லாக் எனக் காரணம் சொல்லி தங்கள் அறையில், புகுந்து கொண்டவர்கள், ரமாபாயின் நோக்கத்தைப் புரிந்தவர்களாக, “எல்லாச் சொத்தையும் அடிக்கணும்ன்னு அந்தக் கிழவி, இதே அண்ணா ஏழையா இருந்தா வந்திருக்குமாக்கும்.” என யோசித்தவர்கள் , நேரிடையாக ராஜனிடம் சொல்லவும் முடியாது, அதை ராணியம்மா காயைத் திருப்பி விடும் எனச் சரியான தருணத்துக்காகக் காத்திருந்தனர்.ஆனால் கைலாஷின் மாப்பிள்ளைகள், சொத்தை உடனடியாக மாற்ற இயலாதவாறு செய்ய, சட்டப்படி எதுவும் செய்ய முடியுமா என வக்கீல்களைக் கலந்து ஆலோசித்தனர்.
சௌந்தரி, அடுத்து வந்த ராமசாமி, சுப்புத் தம்பதியிடம், ரமாபாய் சொன்னதையும் சொல்லி, “ நாளைக்குக் காலையில் ஒன்பதரை மணிக்கு, நாம பந்தக்கால் ஊனிடுவோமுங்க அண்ணா “ எனத் தகவல் சொல்ல,
,அபரஞ்சி,” அண்ணி ,அதே முகூர்த்தத்துக்குத் தானுங்க, உங்க சமந்தியம்மா ,கணபதி பூஜைன்னு அழைச்சாங்க , உங்க அண்ணனும்,ஒத்துக்கிட்டாருங்க, இரண்டு பேரும் ஒரே நேரம் வச்சீங்கன்னா , எதில கலந்துகிறதுங்க” எனக் குழப்பமடைய,
“இதில, குழப்பத்துக்கு என்ன இருக்குதுங்க அண்ணி. நேரா இங்க வந்து போடுங்க, இங்க முடிச்சு போட்டு, அங்க தலையைக் காட்டுங்க” எனச் சௌந்தரி முடிக்கவும், ராமாசாமி முழித்தார்.
அபரஞ்சி, நமட்டுச்சிரிப்பு சிரிக்கவும், மனைவியை முறைத்த ராமு, “அது இல்லை தங்கச்சி, பவானிக்குத் தாய், தகப்பன் ஸ்தானத்திலிருந்து ஜோடியா செய்யோணும்னு கூப்பிட்டாங்கங்களா , அது தான் தட்ட முடியலைக் கண்ணு “ என நயந்து பேச, “ஆமாம், மா , என்ர கிட்டையும் சொல்லிப்போட்டு போனாங்க “ எனப் பன்னீர் ஒத்து ஊதினார்.
“அண்ணி , இவனுங்க இரண்டு பேரையும்,ராணியம்மா ஜிலேபின்னு கூப்புடுறாங்கள்ல , அது தான் துள்ளிக்கிட்டு போறானுங்க” எனச் சுப்பு கோர்த்து விட, “ என்ர அண்ணனுங்க ரெண்டு பேரும்,இனிக்க, இனிக்க ஞாயம் பேசுறங்கலிங்க , அதுனால செல்லப்பேர் வச்சு கூப்பிடுறாங்களோ, என்னவோ ”எனச் சாரதா தன பங்குக்கு ஒரு பிட்டை போட, சௌந்தரி கொதி நிலைக்குச் செல்ல , பாலா நகைசுவை காட்சி காண்பது போல் சிரித்தார்.
விஜயனுக்கு இதே பிரச்சனை இருக்க, அவர் தான் அரங்கத்தில் சடங்கு, சாங்கியங்களைச் செய்யலாம் என யோசனை சொல்லி, அதற்கான ஏற்பாடுகளைச் செய்ய ,மனைவி மகளோடு விருந்தினர் இல்லம் சென்றார். கஸ்தூரி, பைரவியோடு கலந்து ஆலோசிக்க, நடைமுறை சிக்கலைப் புரிந்து அவர் தான் இந்த ஆலோசனையைச் சொன்னார். அதன்படியே அரங்கம் அமைக்கப் பட்டது.
கைலாஷ், அன்று முழுதும், தன் வக்கீல்களோடு கலந்து ஆலோசித்துக் கொண்டிருந்தவர் மாலையில் ஆதரஸை அழைத்தார். அவன் வரவும், " உட்கார் கண்ணு " என்றவர், " என்ர சொத்தை எல்லாம் இரண்டா பிரிக்கிறேன் கண்ணு, சொத்தோட மதிப்பு, இதில இருக்கு, உனக்கு எதெல்லாம் வேணும்னு சொல்லு, உன்ர பேர்ல எழுதி போடுவோம்" என அவர் சொல்லவும் ,
" எந்த நம்பிக்கையில, என் பேர்ல சொத்தை எழுதி வைக்கிறேன்னு சொல்றீங்க. எனக்கே நான் யாருன்னு தெரியாது. ஆயிக்கே நான் அவங்க மகனான்னு சந்தேகம். மற்றவங்க யோசிக்கிற மாதிரி, நானிமா எதாவது கேம் ப்ளான் பண்ணியிருந்தா" என அவருக்குச் சந்தேகத்தைக் கிளப்பும் விதமாகக் கேட்டான்.
“ஏன் கண்ணு ,ஆயி அப்படிச் சொல்லிப்போட்டானு வருத்தமா. அவள் உன்னை வேணாம்னு ஒதுக்கலை கண்ணு. மகன் பிறந்ததும் தெரிஞ்சிருந்தா, சித்தம் தெளியவுமே , உங்க கிட்ட வந்திருப்பேன்னு என்ர கிட்ட அழுதா , புள்ளை பெற்றதே நினைப்புல இல்லாத இருந்திருக்கா. உன்ர ஆயி மாதிரி, தகிரியமான பொம்பளையையும் பார்க்கமுடியாது, அதே நேரம் மனசில வச்சிட்டாள்னா, அவிகளுக்காக உருகி , தன்னையே வருத்திக்கிறவளையும் பார்க்க முடியாது கண்ணு. என்னைப் பிரிஞ்சு பைத்தியகாரியா ஆனால்னா , உன்னைப் பிரிஞ்சது தெரிஞ்சு , உசிரை விடத் தயாராகிட்டல்ல , நீ அன்னைக்குச் சமயத்தில காப்பாத்தலைனா, இன்னைக்கு அவளே இல்லை. அவ பேச்சைப் பெரிசா எடுத்துக்காத கண்ணு” என மகனுக்கு அவனது தாயின் ஒரு பக்கத்தைப் புரிய வைக்க முயன்றார்.
“ஆனாலும் , நேத்து நானிமாட்ட கூட்டிட்டு போங்கன்னு சொல்லிட்டாங்களே” என அவன் குறை பட, “குடும்பம் சிதறினதுக்குக் காரணமே, என்னைச் சந்தேகப் பட்டது தான கண்ணு. சூழ்நிலை அப்படி இருந்திருக்கும்,அதையவே பிடிச்சிக்கிட்டு நின்னோம்னா , இழப்பு நமக்குத் தான்.” எனப் புரிய வைத்தவர் , "ஒரு மனுசனுக்கு மகன் எதுக்குக் கண்ணு வேணும்" எனக் கேள்வி கேட்கவும், முதலில் முழித்த ஆதர்ஷ் பின் வியப்பு மாறாமல், " சொத்துக்கு வாரிசு, பெத்தவங்களைக் கேர் பண்ணிக்கிறது, உரிமை எல்லாமே இருக்கே" என அவன் அடுக்கவும், "இப்படிச் சொல்லித் தான் வளர்த்து வச்சிருக்காங்க" என வெற்றுச் சிரிப்பை உதிர்த்தார் .
" நம்ம முதல் முதலா சந்திச்சது ஞாபகம் இருக்குதா கண்ணு" எனவும், அவன் உணர்வு குவியலாக ஆம் எனத் தலையாட்ட, "அதுக்குக் கொஞ்சம் நேரம் முன்ன தான், ரஜ்ஜும்மாவை,வீடியோ காலில் பார்த்தேன், பாரு மாதிரியே இருக்காலேன்னு , வரச் சொல்லிட்டு ஆர்வமா காத்திருந்தேன், அவள் வரலை. சரி பார்ட்டிக்கு வந்து, ஜெயந்த் பங்காளியையாவது பார்த்துப் போட்டு போவோம்னு தான் வந்தேன். " எனவும் ஆதர்ஷ் ஏன் என்பது போல் பார்க்க,
" அந்தாளைப் பார்த்தா, என்ர ரணத்தைக் கீறிக்கிட்ட மாதிரி இருக்கும். உன்ர ஆயியையே நினைச்சுகிட்டு ஒரு மாசத்தை ஓட்டிப் போடுவேன். ஒருத்தவிகளை நெம்பப் பிடிச்சு போச்சுனாக்கும் , மனசு வலிக்க வலிக்கவாவது, அவிக நினைவுகளை நினைப்போம். அதுக்குத்தான்" எனச் சிரிக்கவும்,”இதுக்காகவே வா, பார்ட்டிக்கு வருவீங்க” எனத் தகப்பனைப் பார்த்து வியந்தான் ஆதர்ஷ்.
“அதுவும் ஒரு விதமான போதை தான் கண்ணு , நாம நெம்பக் காதலிச்சவிகளை ,மறுக்கா ,மறுக்கா நினைக்கிற நினைச்சு வேதனை படுற சுகம்” என்ற போது அவர் கண்களில் தெரிந்த காதலில், ‘இந்த மனிதனின் காதலை அடைய , தன் ஆயி மிகவும் கொடுத்து வைத்தவள் தான். இவருக்கு மகன் எனில்,என்னிலும் இந்தக் குணம் இருக்குமா’என ஆதர்ஸக்கும் சிந்தை வேகமெடுத்தது. சட்டெனத் தலையை உலுக்கிக் கொண்டவன், தகப்பனையும் நிகழ்வுக்குக்கொண்டு வர, “எங்க விட்டேன்”என நினைவுகளைத் தொடர்ந்தவர், அவன் கையைப் பற்றிக்கொண்டு,
" நீ தான் கண்ணு , அன்னைக்குப் பார்ட்டிக்கு வந்த. உன்னைத் தான் சந்திச்சேன். அந்த நாளுக்காகக் கடவுளுக்கு நான் நன்றி சொல்லோனும், ஒரே நாளில் என்ர மகனையும், மகளையும் கண்ணுல காட்டியிருக்குல்ல. மகளைக் கண்ணலைத் தான் பார்த்தேன். ஆனால் மகனை தான முதல்ல தொட்டு உண்ர்ந்தேன். நீ என்ர மகனா இருப்பியோன்னு ஒரு சின்ன ஆசை. ஊருக்கு வந்த பிறகு, விஜயனை கேட்டா, அவனுக்கும் தெரியலை. டிடக்டிவ் வச்சு விசாரிச்சாலும் கண்டு பிடிக்க முடியலை. இன்ன வரைக்கும் ,உன்ர ஆயியை முறைச் சொல்லி கூப்பிடுறவன், முன்னையாவது பாஸ்னு சொன்ன, இப்ப அதுவும் இல்லை. என்ர கூடக் கண்ணாமூச்சி ஆட்டம் தான் ஆடிகிட்டு இருக்க. " எனக் குறையாகக் கேள்வி எழுப்பவும்,
‘ நான் கூப்பிட்ட தான் உறவா’ என்பது போல் அவரைப்பார்த்தவன், தந்தையின் பார்வை வீச்சுத் தாங்காமல் " அதைப் பத்தி இப்ப பேசவேண்டாமே" எனக் கண்களால் இறைஞ்சினான்.
" சொத்தை எழுதி வச்சா பேசலாமாக்கும். சரி விடு, உன்ர நானிமா ஒரு கணக்குப் போட்டு ஆடுறாங்கன்னா . நாமளும் ஒரு கணக்குப் போட்டு ஆடுவோம்" என்றவர்,
" மனசில எத்தனை வேதனை இருந்தாலும், உன்ர ஆயிக்கும், நானிமாவுக்கும் கடமையைச் செய்யறீயில்ல அது போதும். உனக்கு எப்ப, என்ன வேணும்னாலும், . கேளு கண்ணு. அப்பன் நானிருக்கேன். அப்பா, மகன்கிறது உறவு,உரிமை மட்டுமில்ல உணர்வு கண்ணு. எனக்கு எதுனாலும் தைரியம் கொடுத்துக் கூட நிற்க, ஒருத்தன் இருப்பான்கிற உணர்வு. எனக்கு ஒண்ணுனா நீ வந்து நிற்க மாட்டியா, இங்க முடுச்சுக்கிட்டு உன்ர கிட்ட தான் வரப் போறேன் " என அவர் பேசப் பேச ஆதர்ஷ் கண்கள் கலங்கியது. தன் இருக்கையிலிருந்து வந்து அவன் சிகையைக் கோதி விட, எழுந்து அவரைக் கட்டிக் கொண்டவன், அவர் தோளில் முகம் புதைத்து, நடுங்கும் கரங்களோடு அவரை அணைத்து நிற்க, கைலாஷ் மகனை இறுக்கக் கட்டிக் கொண்டார்.
சற்று நேரம் பொறுத்து, விலகியவன், " எனக்கு இந்த உணர்வு போதும், உறவு கொண்டாட என் லிபில எழுதியிருந்தா கொண்டாடிக்கிறேன்" என மொழிந்தவன், அந்த ஃபைலை அவரிடமே நீட்டி , " இங்கிருக்கிற மில்ஸ், அதோட ஓனர்ஷிப் எல்லாமே, ஆதிராவுக்கே எழுதுங்க. அபிராம் பார்த்துக்கட்டும். இரண்டு புள்ளைங்க பேரில் எழுதனுங்கிறது தான் கண்டிசன். மற்றது உங்கள் விருப்பப்படி செங்க" என்றான்.
அதே நேரம் உள்ளே வந்த அபிராம் , “மாமா, நம்ம வச்சிருந்த இடத்தில மஹந்த் இல்லையிங்க, தப்பிச்சிட்டானாட்டத்துக்கு “எனச் செய்தி சொல்ல, “சரி விடு மாப்பிள்ளை , எங்க போயிடப் போறான், பார்த்துக்குவோம்” எனக் கைலாஷ் சாதாரணமாகச் சொல்ல, ஆதர்ஷ் மென்னகை புரிந்தான்.
அதிலேயே சந்தேகம் வந்து , “ஏனுங்க மாமா, என்ன விளையாடுறிங்களா, ஆரா பேபியை இவன் தூக்கங்காட்டி தானுங்க பிரச்சனையாச்சு. இல்லையினா பொட்டாடமா யாருக்கும் தெரியாம போயிட்டு, திரும்பி வந்திருப்போமுங்க. இதுக்குக் கோபப்பட்டுத் தானுங்களே , தண்டனை எல்லாம் கொடுத்தீங்க, இந்த ரியாக்ஷனை உங்கள்ட்ட இருந்து எதிரிபார்க்கலைங்க மாமா” என அபிராம் பொரிந்து தள்ள,
“அவன், உன்ர பாதுகாப்பில் தான இருந்தான், அவனையே தப்பிக்க விட்டுப் போட்டு வந்திருக்க, அதையே கேள்வி கேட்காத, போகட்டும் விடு மாப்பிள்ளைன்னு, பெருந்தன்மையான உனக்கு ஆதரவா தான சொன்னேன், அப்புறம் என்ன, உன்ர தண்டனையை அதிகப் படுத்தோணுங்கிறியா “ எனக் கைலாஷ் குரலை உசத்தினார்.
“உங்க பேச்சைப் பார்த்தா,நீங்களே தப்பிக்க வச்ச மாதிரி இருக்குதுங்களே , என்னமோ செய்ங்க போங்க,நான் வூட்டுக்கு போறேன்” என அவன் முகம் திருப்ப, “உன்ர குடும்பமே,இங்க டேரா போட்டுருக்கு நீ எங்க போற” என அதற்கும் கடிந்தார்.
“இங்க உட்கார்ந்து, உங்க மூஞ்சியைப் பார்க்கிறதுங்களா, அதுக்கு எங்கூட்டுல போயி, விட்டத்தைப் பார்த்திட்டு படுத்துக்குவேனுங்க” என அவன் வாயை விட, கைலாஷ் முறைக்க, ஆதர்ஷ் சிரித்தான்.
“மச்சி, உங்க மாமா முகத்தைப் பார்க்க வேணாம், கெஸ்ட்ஹவுஸ் வாங்க, மாமா மகள் முகத்தைப் பார்க்கலாம்” என அழைப்பு விடுக்க,
“நாளைக்கு வரேன் மச்சி, அதுக்கும் தான், உன்ர அப்பு ஆப்பு வச்சிருக்காரு, உன்ர தங்கச்சி, தந்தை சொல் தட்டாதவ, மூணு மாசம் பாசத்துக்கே இந்தப் பாடு” என அவன் தனியாகப் புலம்புவதைப் போல், அப்பா மகன் காது படவே புலம்ப,
“மாப்பிள்ளைங்க ,மைண்ட் வாய்ஸ் னு நினைச்சுச் சத்தமா பேசுறீங்க” என மரியாதை மிகுதியில் மருமகனை கைலாஷ் கேலி பேச, “கேக்கட்டும்னு தான் சத்தமா பேசறதுங்க” என்றவன், சட்டென ஓர் சிரிப்பை உதிர்த்து, “ஏனுங்க மாமா, உங்களையே விட வில்லங்கமா, உங்க மாமியார், அத்தையை நேரா பார்க்கக்கூடாதுனு அஞ்சு நாளைக்குத் தடா போட்டுட்டாங்களாம்.” என நக்கலாகக் கேட்க, “லொள்ளு! மாப்பிள்ளைங்க, இதே கதி தான், நாளைக்கு உனக்குக் கண்ணாலம் நடக்கும் போதும், அப்ப வசிக்கிறேன் இருடி ” எனக் கைலாஷ் கருவ,
“மாமா மன்னிச்சு, மூணு நாள் தண்டனையே தாங்க முடியலை ,உங்க கல்யாணத்தில்,நான் உதவிப் பண்றேன். என்ர கல்யாணத்தில் நீங்க மனசு வைச்சு, பொழைச்சு போடான்னு கருணை காட்டுங்க” எனக் கைலாஷ் காலில் விழ , “அது “ என மருமகனை எழுப்பி ஆலிங்கனம் செய்து கொண்டார்.
இவர்கள் சம்பாஷணையை ரசித்த ஆதர்ஷ் , அவனுக்கு வந்த அலைபேசி அழைப்பின் படி, இருவரையுமே விருந்தினர் மாளிகைகளுக்கு அழைத்துச் சென்றான்.
விருந்தினர் மாளிகையில் ஏற்கனவே, ரமாபாயோடு ,விஜயன் மற்றும் பாலாஜி ராவ் அமர்ந்திருக்க, இவர்கள் மூவரும் இணைந்தனர். கூடம் , இரண்டு பகுதியாகப் பிரிக்கப் பட்டு , நடுவில் மெல்லிய திரை போட்டிருந்தனர்.அதனால் வெளி ஆட்களையும் , மணப்பெண் பைரவியைப் பார்க்கக் கூடாது எனக் கைலாஷுக்காகவே தான் முக்கியமாக இந்தக் கட்டுப் பாடு. அதனைப் பார்க்கவுமே , மாமியாரின் யோசனையை மெச்சி கொண்டார் கைலாஷ். ஆனால் ஒளிவு மறைவாகக் கூட, ஆரா பேபியை பார்க்க முடியாத , அபி தான் மிகவும் நொந்து போனான்.
ஆதரசை முறைத்தவன், “ இதுக்குத் தான் கூட்டிட்டு வந்தியாக்கும், மாமன் மகளைக் காட்டுறேன்னு சொன்னியே, எங்க மச்சி” என அவன் காதை கடிக்க, அவன் புன்னகை முகமாக, “ ஆரா பேபி வரும் மச்சி” என்று மட்டும் சொல்லி அமர்ந்தான்.
ரமாபாய் , மாப்பிள்ளையை முறையாக வரவேற்றவர், இருக்கையில் அமர்த்தி உபச்சாரமும் செய்தார், கௌரியைக் காபி கொண்டு வராகிச் சொல்லிப் பணிக்க, “குடிச்சு போட்டுத் தான் வந்தேன், வேண்டாமுங்க” என மறுத்தவர், விஜயனிடம் விஷயத்தைக் கேட்க, அவர் ஏற்பாடுகளைப் பற்றிச் சொன்னார். “இரண்டு மாதாக்களும் ஒத்துக்கிட்டா சரி தான், எனக்கு ஒன்னும் பிரச்சினை இல்லை” என்றவர், கண்கள் நாலா பக்கமும் துழாவ , “பைரவி, நாலு நாள் உங்க கண்ணு முன்னாடி வரமாட்டா “என ரமாபாய் விவரம் சொல்ல, “நான், என்ர மகளை , ரஜ்ஜுமாவை தேடுனேனுங்க” எனச் சமாளித்தார் ராஜன்.
அபிராம் , கண்கள் இப்போது சுவரசமாய், அவனின் ஆராவின் வரவை எதிர்பார்த்தது. இந்த மாமன் மருமகன் ஜோடியைப் பார்த்து, விஜயன், ஆதர்ஷ் மாமன் மருமகன் ஜோடி சிரித்துக் கொண்டனர்.
போஸ்லே ஆட்கள் வரவை பற்றியும் , மஹந்த்தை விடுவித்தது பற்றியும் ரமாபாய் கேள்வி எழுப்ப, கைலாஷ் இப்போதும் சற்று அசட்டையாகவே பதில் தந்தார்.
“மஹந்த் போஸ்லேவை, நீங்க அனுப்பியிருக்கக் கூடாது” எனப் பாலாஜி ராவ் ஆட்சேபனை சொல்ல, “என்ர பொண்டாட்டி ,அவன் அண்ணன் மகனை விடுங்கன்னு சொன்ன பிறகு, மறுவார்த்தை ஏதுங்க” எனக் கண்கள் நகைக்கச் சொன்ன கைலாஷின் குரலைக் கேட்டு, மானசீகமாகப் பார்த்து , வெட்கப் புன்னகை சிந்திக் கொண்டார் , அவரின் பாரு.
ஆனால் , “ஏனுங்க மாமா, நீங்க அத்தை ஒரு வார்த்தை சொல்லிப்போட்டாங்கன்னு, உங்க மகளைக் கடத்துணுவனையே தப்பிக்க விடுவீங்க, நான் கோவிலுக்குக் கூட்டிட்டுப் போனது தப்புங்களா” எனக் கிடைத்த சந்தர்ப்பத்தை விடாமல் அபிராம் கேள்வி எழுப்ப, “எனக்குத் தெரியாமல் உன்ர அத்தையை வேற, கோவிலுக்குக் கூட்டிட்டு போனியா, விஜயா உன்ர மகனை பாருடா” எனக் கைலாஷ் சூழலைச் சகஜமாக்கக் கேலி பேச,"அதையும் உன்றகிட்ட இருந்து தான் கத்துக்கிட்டு இருப்பான்,என்ர்கிட்டா எதுக்குச் சொல்றியாமாம்" என விஜயன் பதில்சொல்ல, ஆதர்ஷ் தவிர மற்ற மூவருக்குமே உவப்பாக இல்லை.
கைலாஷ், “ சாஸுமா, நான் கிளம்புறேனுங்க, தங்கச்சியெல்லாம் வந்துருக்காங்க, அவிகளோடவும் நேரம் செலவழி கோணுமே”என்ற படி கிளம்ப, திரை மறைவில் அவசரமான அரவம் கேட்டது.
“ஆயி, அவரைச் சாப்பிட்டுப் போகச் சொல்லுங்க”எனப் பைரவி உள்ளேயிருந்து குரல் கொடுக்க, ஒரு கணம் தயங்கி நின்று, “அவிக கேட்டதே, மனசு நிறைச்சுடுச்சு, நான் கிளம்புறேனுங்க” என அவர் எழவும்,ராதா பாய் மகள் ஆராதானா,, “படே பாபு ருகியே “ என வேகமாக ஓடி வர, ஆதர்ஷ் ஒரு நிமிடம், தன் ஆரவோ என ஏமாந்து போனான்.
“ஆதிரா தீதி உங்களைப் பார்க்க வரணுமாம், ஜீஜு இருக்கிறதால வரமாட்டேங்கிறா” எனக் கைலாஷின் காதுகளில் ரகசியம் பேச, சிரித்தபடி, “ரஜ்ஜுமா , பாபா கிளம்பறேன், உன்ர முகத்தைக் காட்டிட்டு போ கண்ணு” என அழைக்க, அவள் உணவு பரிமாறப்பட்ட தட்டோடு தான் வெளியே வந்தாள் .
“பாபா, உங்களோட சேர்ந்து சாப்பிடாம,மதியமே சாப்பாடு இறங்கலை , எனக்காகக் கொஞ்சம் சாப்பிடுங்க” எனக் கொஞ்சிப்பேசி உட்கார வைக்க, மற்றவர்களுக்கும் அதேபோல் மராத்திய உணவு நிறைந்த தட்டு பரிமாறப் பட்டது. மகள் அழைக்கவும்,மறுக்காமல் அமர்ந்து, அவளுக்கும் ஊட்டி விட்டு,தானும் ஒரு வாய் சாப்பிட, ஆதர்ஷும் பேச்சுக் கொடுத்துக் கொண்டே அருகில் அமர, கைலாஷ், அபிராம், ஆராதனா என நால்வரையும் அழைத்து , ஆளுக்கு ஒரு வாய் ஊட்டி விட்டார்.
“பாபா, உங்களைச் சாப்பிடச் சொன்ன, எல்லாருக்கும் ஊட்டி விடுறீங்களே”எனச் சிணுங்கிய மக்களிடம், “அங்க சாப்பிடலைனா, என்ர தாய் மாதா பிச்சு போடுவாங்க கண்ணு, அதுவும் இன்னைக்கு எல்லாம் உன்ர அத்தைங்களும் சேர்ந்து உட்கார்ந்து இருக்குங்க ”என்றவர், கையைக் கழுவும் சாக்கில் வெளியே வந்து பக்கவாட்டுக்குக் குழாயை நோக்கிச் செல்ல, இவர் எதிர் பார்த்தது போலவே பைரவி , மறைவில் வந்து நின்றார்.
“என்னங்க அம்மணி வேணும், தயங்காமல் கேளுங்க” என மனைவியின் புறம் திரும்பாமலே இவர் கேட்க, தான் வந்ததை எப்படி அறிந்தார் என வியந்தவர்,”நாளையிலிருந்து கௌரி விரதம் இருக்கப்போறேன், நீங்களே உங்க கையால் கண்ணாடி வளையல் வாங்கிக் கொடுங்க ராஜ்” எனக் கேட்கவும், முதல்நாள் பார்த்த நினைவு வந்தவராக, மதிமயங்கி நின்றவரை நோக்கி ஒரு அளவு வளையல் தாங்கிய வளை கரம் நீண்டது.
கைலாஷ், “பாரு, உனக்கு வேணும்னா, நீ தான் வளையலையும் நீட்டோணும், அதை விட்டுப்போட்டு, மாசிமா, உன்ர தங்கச்சி இவிகளை வச்செல்லாம் , எனக்கு டெஸ்ட் வைக்காத அம்மணி , நீ அளவே கொடுக்க வேண்டாம் , நானே வாங்கிட்டு வந்து போவேன்” என அவர் படபடக்க,
“ஜீஜாஜி, உண்மையில் நீங்க, தீதி மேல வச்சிருக்க நேசம் பெரிசு தான்.ஒரு கையை வச்சே அடையாளம் கண்டு பிடிச்சிட்டீங்களே”என் ராதா பாய் சிலாகிக்க, மற்ற இளையவர்களுக்கு ஆங்காங்கே மறைவிலிருந்து வெளிப்பட்டு, கைலாஷை நோக்கி வர, ஆதிரா தான், “பாபா,மஸ்து ,படியா மஸ்து , ஆயி உங்களை ரொம்ப மிஸ் பண்ணியிருக்காங்க” எனத் தகப்பனைக் கட்டிக்கொண்டு அவர் கன்னத்தில் முத்தமிட, அவரும் ஹாஹாவென்ற சிரிப்போடு மகளை வாஞ்சையாய் அணைத்து , நெற்றில் முத்தமிட்டுக் கொஞ்சினார்.
“பாஸ் , ரெண்டு இடத்திலிருந்து புகை வருது” என ஆதர்ஷ்,தன் ஆயியையும் , அபிராமையும் குறிப்பிட்டுச் சொல்ல, “மச்சி, மூணு இடம்னு திருத்திச் சொல்லு, உன்ரகிட்ட இருந்து தான், நிறையப் புகை வருது, ஊர்ல இருக்கவங்கல்லாம் , அவரை அப்பான்னு உரிமை கொண்டாடுங்க,உடைமைப்பட்டவன் ,நீயும் அப்பான்னு போயி அவரைக் கட்டிக்கவேன், மாம்ஸ் நல்லா அகலமா தான் இருக்காரு” என அபிராம் ஆதரஷை சொல்ல, அவன் மையமாகப் பார்த்து வைத்தான்.ராதா பாய், ஆதரஷையே, உருத்துப் பார்த்துக் கொண்டிருந்தார்,
அவர்களின் ரியாக்சனை கைலாஷ் மனதில் குறித்துக் கொண்டவர், “ மாப்பிள்ளைங்க, உன்ர மாமன் அவ்வளவு அகலமாவா இருக்கேன், பிச்சு போடுவேன். மாமனோ பிட்னஸ் பத்தி தெரியாம வாய் விடாதே, பிறகு மாட்டிக்குவ” எனக் கேலியாகவே பேசி சூழலைச் சமாளித்தவர், நேராகக் கிளம்பியது கண்ணாடி வளையல் கடைக்குத் தான்.
இன்று, இப்போது கணபதி பூஜை முடியவும், ஒரு தட்டு நிறைய, வண்ண வண்ண கண்ணாடி வளையல்கள் நிறைந்த பெட்டியைத் திரைக்கு மறுபுறமிருந்தே,மனைவிக்குப் பரிசளித்தார் கைலாஷ் ராஜன்.அவரின் அன்பைப் பார்த்த இளைய தலைமுறை, தாங்களும் இவர்களைப்போல் இருக்க வேண்டும் என ஆசைப் பட, பெரியவர்கள் பாலநாயகத்தை , “உன்ர மகனா இருந்தும் மாப்பிள்ளை காதல் மன்னனா இருக்காரே எப்படி ” எனக் கேலி பேச,சிலரின் கண்களில் அது பொறாமையையும் தூண்டியது.
அதன் விளைவு எவ்விதம் இருக்கும் பார்ப்போம்.
நிலவு வளரும்.
மக்களே, யார் இந்த நிலவு - அத்தியாயங்களைக் கேட்டு அவசர படுத்தாதீங்க, பொறுமையாக வந்தால் தான், சிறப்பான அத்யாயம் வரும்.தாமதம் ஆனாலும் பொறுத்துக் கொள்ளுங்கள். நமக்குக் கதை சிறப்பாக அமைவதே முக்கியம். தினம் ஒரு பதிவாக,ஹாசினி சந்திரா வருகிறது , அது இதை விடவும் விறுவிறுப்பான கதை, அதற்க்கு ஆதரவு கொடுங்கள்.
No comments:
Post a Comment