யார் இந்த நிலவு-22
இருபது வருடங்களுக்கு முன்பான நிகழ்வு, கைலாஷ் கையில் காயம் குணமாகியிருந்த சமயம். இடை விடாத அடைமழை நடுவில் இரண்டு நாட்கள் ஓய்ந்திருந்தது. பத்து நாட்களில், அந்த வீட்டுக்குள் அடைந்து கிடந்த ராஜன், வெளியுலகைக் காணப் பிடிவாதம் பிடிக்கவும் பைரலி, " என்ன ராஜ்" என நொடித்துக் கொண்டு பார்வையாலே இறைஞ்சி வேண்டாம் என மறுத்தார். பாருவின் கோபத்தையும், ஆட்சேபனை, அதிகாரத்தைக் கூடப் புறக்கணிக்கும் ராஜனுக்கு, அவரின் இறைஞ்சலைக் காண மனம் பொறுப்பதே இல்லை. சமாதானமாகி அமைதியாக இருந்து விடுவார்.
அன்று,காலையிலேயே பைரவி கேட்டிருந்த சாமான்களை வாங்கிக் கொண்டு வந்து கொடுத்து விட்டு ஏதோ ரகசியம் சொல்லவும், பைரவியின் முகம் கலக்கமடைந்தது. அந்த வேலையாளிடம் சில கட்டளைகளை இட்டவர், அன்றைய காலைப் பொழுதில் சில பதார்த்தங்களைத் தயார் செய்து ராஜிடமும் அவர்களுடைய மாற்றுடையை எடுத்துக் கொடுத்து, ரஜாயில் வைத்துச் சுற்றி பேக்கிங் செய்யச் சொன்னார்.
ராஜ் விவரம் கேட்ட போது, " இன்னும் இரண்டு நாளைக்கு மழை இருக்காதாம். நீங்க தான் பொழுது போகலைனு சொல்றீங்களே. மலை மேல இருக்கக் கூஃபாக்கு (குகை) போயிட்டு வருவோம். உங்களுக்கும் ஒரு சேஞ்சா இருக்கும். " எனவும், ராஜன் உற்சாகமாகக் கிளம்பினார்.
" ஆமாம் அந்த இடத்தில என்ன ஸ்பெஷல்" என வினவியரிடம், மெழுகு திரி, தீப்பட்டி, டீ தூள், வெல்லம், மேலும் சில சமையல் பொருட்களையும் ஓரிடத்தில் சேகரித்து வைத்து, அதையும் பேக் செய்யச் சொல்ல, " அங்கயே செட்டில் ஆகப் போறமாங்க அம்மணி" என்றவரிடம். ஓர் நமுட்டு சிரிப்போடு,
" ஆமாம் உங்க மாமனார், வசந்த கால மண்டபம் கட்டி வச்சிருக்கார். தாமாத்ஜிக்கு அங்க விருந்து" எனக் கேலியாகச் சொல்லவும். கண்கள் பளபளக்க, " அப்ப சரிங்க அம்மணி, மாப்பிள்ளை ரெடி" எனத் தன்னைச் சீர் படுத்திக் கொண்டு, கண்ணாடியிலும் பார்த்துக் கொண்டார். பைரவிக்குத் தான் வெட்கம் தாழ வில்லை.
" அரே பாபா ஏ க்யா. நிஜமாவே ரெடியாகுறீங்க" என்றவர், துக்காராமிடம் சில சாமிக்கிரிகளைக் கொடுத்து விட்டு, கையில் இரண்டு பைகளோடு, தாங்கள் அங்குக் குடும்பம் நடத்திய சுவடே தெரியாமல் செய்தவர், கணவனோடு வனவாசம் செல்லும் ரிஷி பத்தினி போல் கிளம்பினாலும் , பயம் ஒருபுறம் கவ்வியிருந்த போதும், எதையோ நினைத்து முகம் சோபையோடு ஒளிர்ந்தது. சற்று தாமதமாகவே மனைவி முகத்தை நோக்கிய ராஜனுக்கு, வானத்துத் தேவதை தான் தரையிறங்கி தன்னுடன் நடக்கிறதோ எனும் ஐயம் வந்தது.
பைரவி அணைக்கட்டு பகுதியின் மற்றொரு குன்று பகுதிக்கு ராஜனை அழைத்துச் சென்றார்.
கைலாஷ்க்குச் சந்தோஷம் பிடிபடவில்லை, பசுமை எழில் கொஞ்சும் இயற்கையையும், தன்னோடு கொஞ்சி மகிழ ஒயிலாக உடன் வந்த மனைவியையும் ஒரு சேர ரசித்து வந்தார். அதிலும் மழை பொழிவின் விளைவாக நிறைய இடங்களில் வழுக்கும் பாறையாக இருந்தது. ஒருவர் கைப்பிடியில் ஒருவர், கை கோர்த்தும், பிடித்தும், தாங்கியும் அணைத்தும் செல்ல, அவரது ஆனந்தத்துக்கு அளவில்லை. பைரவி எச்சரிக்கையோடு மட்டுமே வந்தவர், மலைகளின் உள்ளூடே சென்ற பின் தான், கணவரின் பார்வை மாற்றத்தைக் கவனித்தார்.
" சோடியே, மை ஆவுங்கி" என அவருக்கும் புரிய வேண்டும் என ஹிந்தியில் மொழிந்து அணைத்த அவரது கரத்திலிருந்து விடுபட முனைய, பாருவின் முகச் சிவப்பைப் பார்த்தவர், " டீக்ஹை , புரிஞ்சகிட்டேன்" என மேலும் அவரை அணைத்தபடி கூட்டிச் சென்றார்.
" கயா ஜீ, இது தான் நீங்க புரிஞ்சுக்கிட்ட இலட்சணமா" என அவர் பொய்யாக முறைக்க,
" என் பொண்டாட்டி, வெக்கப்படயில தான், ஹிந்தியில் பேசுதுன்னு, புரிஞ்சுக்கிட்டேன் அம்மணி. " என அவர் நகைக்கவும்
" பஸ் கீஜியேஜீ" எனத் தன்னை மறந்து, அவர் கை வளைவிலேயே தன் முகத்தை மறைக்க, கைலாஷின் புன்னகை விரிந்து சிரித்ததில், அந்த மலை முழுவதும் எதிரொலித்தது. சட்டென அவர் வாயைப் பொத்தியவர், " நாம யாருக்கும் தெரியாமல் தலை மறைவாயிருக்க இங்க வந்திருக்கோம். அதைத் தெரிஞ்சுக்குங்க" எனப் பைரவி சொல்லவும்,
" நான் கூட என்னன்னமோ கற்பனை பண்ணிட்டேன், இது தான் விசயமாக்கும். வா திரும்பப் போகலாம். அவிகளை நேருக்கு நேர் ஒரு கை பார்க்கலாம்" என வந்த வழியே கைலாஷ் திரும்ப முயல,
" ராஜ், வேண்டாம். எனக்காக ப்ளீஸ். நான் சந்தோஷமா உங்களோட என் வாழ்க்கையை ஆரம்பிக்கனும்னு நினைக்கிறேன். இப்ப தான் காயம் ஆறியிருக்க ப்ளீஸ்" என மன்றாடினார்.
" இப்படி நீ, கெஞ்சறது நல்லாவே இல்லை பாரு. தைரியமா, தெனவட்டா ஒரு லுக் விடுவ பாரு , அந்தப் பாரு தான் எனக்கு வேணும்" என அவர் முகத்தில் கோபத்தைக் காட்டவும்.
" எனக்கு மட்டும், இப்படி ஓடி ஒளியனும்னா ஆசை. என்னை முதல்ல உங்க முழுச் சொந்தமாக்கிகிங்க. அப்புறம் என்ன ஆனாலும் சரி தான்" என அவர் கோபத்துக்கு இணையாக, வேகமாக ஆரம்பித்தவர், ஸ்ருதி குறைத்து அவர் பார்வையைத் தவிர்த்து மெல்ல முணுமுணுக்கவும்,
" க்யா ஜீ" எனப் பாருவின் முகத்தை, நிமிர்த்திக் கைலாஷ் ஆசையாகப் பார்க்க, இமைகளை மூடிக் கொண்டவர், " ஔர் குச் தூர் ஔர் தேர் " என்றபடி ஆக்கப் பொறுத்தவரை, ஆறப் பொறுக்கச் சொல்லி, இன்னும் கொஞ்சம் நேரமும், தூரமும் இருப்பதாகச் சொல்லி அதே பாதையில் அவரை விடுத்து வேக நடை நடக்க, " பாரு, பார்த்து" எனத் தான் சுமந்து வந்த பொருட்களை எடுத்துக் கொண்டு மனைவியைப் பின் தொடர்ந்தார் ராஜ்.
அடர்ந்த மரங்களின் வழியே சிறிது தூரம் சென்றவர்கள், ஒரு பாறைக்கு முன் நின்று ஓர் விசையை அழுத்த, ஒரு பாறை அகன்று வழி தந்தது. ராஜன் " என்னடா, திறந்திடு சீஸே, அலிபாபா குகை ,சினிமால பார்த்த மாதிரி இருக்கு" என வியந்துப் பார்க்க,
" உங்க மாமனார் கட்டி வச்ச, வசந்தகால மண்டபம் வாங்க" என உள்ளே கூட்டிச் சென்றார் பாரு.
" அப்ப உங்க ஆளுக, புருஷன், பெண்சாதியைச் சேரவே விடமாட்டாங்க. அதுக்குத் தான் இந்த இடமெல்லாமா" என வினையமாகக் கேட்கவும்.
" இந்த இடம் உங்களுக்குப் பிடிக்கலைனா சொல்லுங்க திரும்பப் போயிடுவோம்" எனப் பைரவி கோவித்தார். அதற்குள் உள்ளே வந்து, சுற்றிப் பார்த்திருந்தவர், சிலுசிலு வென்ற காற்றை அனுபவித்தபடி, " ஏன் பிடிக்காமல். ஸோ ரொமான்டிக்" என மனைவியையும் ஓர் பார்வை பார்த்தார். பைரவி அதைக் காணாதவராக,
"எங்கள் முன்னோர்கள், முக்கால் வாசி இப்படி வாழ்ந்தவர்கள் தானே. சில நூறு வருஷங்களுக்கு முன் உபயோகிச்சது. வாங்க" என மீண்டும் ஓர் விசையை அழுத்தி பாறையை மூடி விட்டு வர, அங்கே மயனின் அற்புத படைப்பாக இயற்கையில் அமைந்த குகையும், கல் மேடைகளும், அதன் பிறகு, ஓர் காட்டு அருவி ஓடை, மரங்கள், பூக்களின் நறுமணம் சூழ தேனிலவு கொண்டாட ஏற்ற இடமாக இருந்தது.
" காட்டில வாழ்ந்தாலும், ராஜ வாழ்க்கை தான்" என ராஜன் மெச்சி கொள்ள, பைரவி ஒரு சிரிப்போடு, தாம் சுமந்து வந்த பொருட்களையும், ஏற்கனவே துக்காராம் கொண்டு வந்து சேர்ப்பித்த பொருட்களையும் வைத்து, வாழுமிடமாக அதனை மாற்றினார்.
ஆங்காங்கே இருந்த தீப்பந்தங்களைச் சரி பார்த்து வைத்தார். " அனிமல்ஸ், பூச்சிப் பொட்டு வராதா" என்ற கைலாஷின் கேள்விக்கு, அனிமல்ஸ்... சம் டைம்ஸ் பந்தர் வரும். துவாங்… அது தான் சாம்பிராணி புகை போட்டா, பூச்சி எதுவும் வராது. " என விவரம் சொன்னவர், மதிய உணவாக, தான் கொண்டு வந்திருந்த, பாஸ்மதி அரிசியில், தேங்காய்ப் பால் சேர்த்து, ஏலம் கிராம்பு மணக்க, நெய்யில் வறுத்த முந்திரி சேர்த்த புலாவும், ஒரு கிரேவியுமாக அவருக்குப் பரிமாற " இது ஏது" என ஆச்சரியப் பட்டார் ராஜன்.
" ரொட்டியைப் பார்த்த உடனே, உங்க முகத்தைப் பார்க்கனுமே. அதுக்காத் தான் இன்னைக்கு அரிசி வாங்கச் சொன்னேன்" எனவும், "எப்படி இருக்குதாம்" எனப் புருவத்தை உயர்த்தினார். " குச் தேர் மே ஆயேகா, தபி தேக்லீஜியே" என அவர் குரங்கு போல் வாயைக் குவித்துக் காட்டவும், " மறுபடியும் ஹிந்தி, அதிலையும் குரங்குன்னு வேறச் சொல்ற, மை சோடுங்கா நஹி" எனக் கைலாஷ், பருவைச் சேர்த்து அணைக்க, அவர் இழுப்புக்குச் சென்றவர். முதல்ல சாப்பிடுங்க" என ஊட்டி விட்டார்.
பகல் பொழுதை, சுனை அருவி , ஓடை, குரங்கு, பறவைகள், பூச்சிகள் என இயற்கையோடு இயைந்து , சுவாரஸ்யமான பேச்சிலும் , தொடுகைகள், வம்பு, வழக்கு, சண்டை சமாதானம் , கொஞ்சல், கெஞ்சல் எனக் கழித்தவர்கள், இருள் பரவும் முன்னே, தீப்பந்தங்களை ஏற்றி, தங்கள் குடிலை மன்மத வனமாகச் சிருஷ்டித்தனர்.
பைரவி, காட்டு மலர்களைச் சூடியே தன்னை அலங்கரித்துக் கொண்டு வந்தார். ராஜ் தங்கள் மஞ்சத்தை அதே காட்டுப் பூக்களால் தயார் செய்ய, அதன் நறுமணமும், அகிற் புகையும் , தென்றலோடு சேர்ந்து வீச, அந்த இடமே வசந்தகால வாசஸ்தலமாக்க மணந்தது. தீப்பந்தங்களை ஏற்றி இருளை விரட்டினர். சலசலத்து ஓடும் ஓடை சத்தம் , வண்டுகளின் ரீங்காரம், மரங்கள் அசையும் ஓசையென நிசப்தத்திலும் ஓர் இனிமை இருந்தது. நேரம் போகப் போக, குளிர் உடலைத் துளைத்தது. ஆனால் அதனோடு போட்டியாக அவர்களுள் வெப்பம் தகிக்க, இருவரும் இனிமையான இல்லறத்துக்குத் தயாராகினர்.
கைலாஷ், "பாரு" என அவரை நெருங்க, " நான் கலங்கி நின்னப்ப ஆயி பவானி, உங்களை என் துணையா காட்டினாள். அன்னைக்கே உங்களை மனசில் என் கணவரா வரிச்சிட்டேன் ராஜ் . இன்னைக்கு இந்தத் தாம்பத்தியம் அதற்கான சாட்சி மட்டும் தான் ராஜ்" என அவர் மார்பில் சாய,
" நானும் அன்னைக்கே உன்னை என் மனைவியா மனசில நினைச்சிட்டேன் பாரு . எத்தனை சோதனை வந்தாலும் உன்னைக் கை விட மாட்டேன். வேற யாருக்கும் , என் வாழ்க்கையைப் பங்கு போடுற உரிமையும் கிடையாது. இது நீ வணங்குகிற ஆயிபவானி மேல சத்தியம் பாரு" என அவரை அணைத்து, நெற்றியில் முத்தமிட்டார்.
" குளிர் கூடிட்டே போகுது. ஒரு கட்டா சாய் மட்டும்" எனக் கம்பளிக்குள் இருந்த ப்ளாஸ்கிலிருந்து அவருக்குச் சிறிது ஊற்றி கொடுக்க. " பாதாம் பால் குடிக்க வேண்டிய இடத்தில் கட்டா சாய்" எனக் கேலி செய்தபடி, அவரையே பார்த்துக் கொண்டு குடித்து முடிக்க, தீப்பந்த ஒளிக்குச் சிறு பூச்சிகள் வட்டமிட, ஓரிரண்டு வண்டுகள் அவர் பருவைக் கழுத்தில் தீண்டியும் சென்றது.
" ஆ" என அவர் கத்த, அதில் கோபமுற்ற ராஜ், "பாரு, இந்த இடம் எவ்வளவு வேணாலும் ரொமான்டிக் கா இருக்கட்டும். ஆனால் இனிமே இது போல விஷ பரிட்சை எல்லாம் வேண்டாம். ஓடி ஒளியவும் வேண்டாம். நேரா ஒத்தைக்கு ஒத்தை பார்ப்போம். " என வண்டு தீண்டிய அவர் பாருவின் கழுத்துப் பகுதியை வருடிய படிச் சொன்னார். அவர் காது மடலுக்குப் பின்னால் ஓர் மச்சம் இருந்தது. வண்டோ, என அவர் எடுத்துப் போட முயல, பைரவி வெள்ளி சலங்கைகளைச் சிதற விட்டார் போல் சிரித்தார்.
" இது வண்டு இல்லையா" எனச் சந்தேகமாய் ஆராய்ந்து , மச்சம் என உணர்ந்தவர் , " என் பாரு இவ்வளவு அழகுன்னு கடவுளுக்கே தெரிஞ்சிருக்கு. திருஷ்டி பொட்டோட அனுப்பி இருக்கார். நீங்க இப்படித் தான காலாடீக்கா வைப்பீங்க" என வினவவும், ஆம் எனத் தலையாட்டினார். பைரவிக்கு வண்டு கடித்ததில் சிறு எரிச்சல் இருந்த போதும் கணவனின் கரிசனையிலேயே உருகிப் போனார்.
மீண்டும் வண்டுகள் அவர்களை வட்டமிட, " மூடையே ஸ்பாயில் பண்ணுதுமா. வா வீட்டுக்குப் போவோம்" என முகத்தைச் சுழித்தார் ராஜ்.
" இன்னைக்கு ஒரு நாள் பொறுத்துக்குங்க ராஜ். துக்காராம் ஆளுங்களை இன்னைக்குக் கீழே வழி அனுப்பிடுவார். " எனச் சமாதானம் சொல்லவும், அவர் எரிச்சலாக உச் கொட்ட" என் சாசுமாக்கிட்ட, என் புருஷனை ஒப்படைக்கிற வரைக்கும், இப்படித் தான். கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்குங்க. அதுக்கப்புறம் தமிழ் நாட்டு மருமகளா, மில்ஸ் , சொத்து எல்லாத்தையும் தூக்கிப் போட்டுட்டு, உங்க பின்னாடியே இந்த ராஜுக்கு, ராணியா வந்துடுவேன். " என அவர் முகத்தைப் பார்த்தபடி மெய் மறந்து அவர் இருக்க, ராஜும் தன் மனைவியின் அன்பில் உருகியிருந்தார். இருவரும் மோன நிலையில் ஒருவரில் மற்றொருவர் லயித்திருக்க, மீண்டும் வண்டு பாருவிடம் தன் வேலையைக் காட்டியது.
" அடச் சை, காலையிலிருந்து, குரங்கு, குட்டினு ஒண்ணொன்னையா தாட்டி விட்டு, ஆசையா என் பொண்டாட்டியை நெருங்குனா, உங்களுக்கு ஏண்டா பொறுக்கலை" என வண்டுகளோடு சண்டை கட்டியவர், கவனமாகப் பாருவை ஆராய்ந்து,
" பாரு உன் பூவுக்குத் தான் வருது. தூக்கித் தூர எறி. எனக்கு எம்படப் பொண்டாட்டி வாசமே போதும் என்றவர். வேலை மெனக்கெட்டுச் செய்த அத்தனை பூ அலங்காரத்தையும் வலித்து அள்ளி, ஓடையில் போட, வண்டுகள் அதன் பின்னே பறந்தன.
" வெளிச்சம் இருந்தா தானடா வருவீங்க" என வீரா வேசமாகத் தூரத்தே ஒரு பந்தத்தை மட்டும் ஒளிர விட்டு, மற்றவற்றை அணைக்க,
பைரவி வண்டினங்களோடு சண்டைக் கட்டும் தன் மனம் கவர்ந்தவரையே தன் கரு வண்டு விழிகளால் பார்த்திருந்தவர், சிரித்து அவர் பின் சென்று அவரை அணைத்துக் கொண்டு, " ஆயியே ஜீ" என அழைப்பு விட்டார்.
" இதுக்கு மேல என்னங்க அம்மணி வேணும்" என அவரை அள்ளியவர், ஆகி வந்த அந்தக் கல் மேடையை நோக்கி நடந்தார். அதன் பிறகு வந்த ஒவ்வொரு நாட்களும், கைலாஷ், பாருவுக்குள் அன்னியோனத்தையும், அன்பையும், காதலையும் அதீதமாகப் பெருக்கியது. அந்த அதீத காதலே, பருவை அவர் இயல்பிலிருந்து மாற்றி , கணவனைப் பிரிந்து விடுவோமோ என்ற பயத்தில் அவரை இறுக பற்றி வைக்கத் தூண்டியது.
கைலாஷின், விட்டத்தை நோக்கி வெறித்த கண்களில் மகிழ்ச்சியும், அதைத் தொடர்ந்த சோகமுமாகக் கலங்கி இருந்தது.
" நான் தான், நீ வீணா பயப்படுறியின்னு, அசட்டையா இருந்திட்டேன் போலப் பாரும்மா, நீ உன் பயத்தையும் மீறி, என்ற குடும்பத்துக்காக, என்னை அனுப்பி வச்சியே, உன்னையும் கையோட கூட்டிட்டு வந்திருக்கோணும். உன்னை மொத்தமா தொலைப்பேன்னு நினைக்கலையே " என எப்போதும் மனதில் புலம்பும், அதே புலம்பலை இன்று வாய்விட்டே புலம்பினார் . இமைகளை மூடி கண்ணீரை உகுத்தவரின் நெஞ்சத்தை, அவரது இயலாமை எனும் ரணம் கூறுப்போட்டது. தன் நெஞ்சையே குத்திக் கொண்டார். சாதாரணமாக இந்த நேரம் தனது இணையின் பிரிவைத் தாங்க இயலாதவராக, மதுவை நாடுவார்.
அதே போல், இன்றும் வேகமாக எழுந்தவருக்கு, எதிரே அவர் பாருவின் அம்சமாகவே துயில் கொண்டிருந்த ,ஆதிரா அசைந்து புலம்பவும் , வேகமாக விரைந்து " ரஜ்ஜும்மா" என மகளின் அருகில் செல்ல,
" பாபா, மை ஆஃபத் " என்ற புலம்பலே குழறலாகக் கேட்டது. அரை மயக்கத்திலேயே அவளை எழுப்பி, காலையில் அவருக்கு மகள் ஊட்டியதைப் போல, தான் மகளுக்குப் பாலை புகட்டினார்.
பாலை குடித்த போதும், ஆதிரா கண்களிலிருந்து கண்ணீர் வழிய " இல்லைடா ரஜ்ஜும்மா, ஒண்ணும் இல்லை தூங்கு" எனத் தட்டிக் கொடுத்துத் தூங்க வைத்த பிறகு மணியைப் பார்த்தார் பதினொன்று.
மோடா மீது ஆதிராவின் போன் ஒளிர, " ஓ மறந்தே போயிட்டேன்" என அவசரமாகப் போனை எடுத்தார். அதற்குள் அது அடித்து ஓய்ந்து இருந்தது. டிஸ்ப்ளேவில் பார்க்க, பத்து முறை தவறிய அழைப்பு ஆதிராசாவின் ஆயியிடமிருந்து , பதட்டமாகக் கைலாஷ் அடுத்து அழைப்பதற்குள், மீண்டும் பைரவியே அழைத்தார்.
" ஆஜ், ரஜ்ஜும்மா நல்லா இருக்கால்ல. உங்கள்ட்ட தானே இருக்கா" எனப் போனை எடுக்கும் முன்பே, அவர் பேச ஆரம்பித்ததிருந்ததால், தன்னை மறந்த பைரவியின் ராஜ் என்ற அழைப்பில் ஜ் மட்டுமே ராஜனுக்குக் கேட்டது. ,
" நல்லா இருக்காம்மா, என்கிட்ட தான் இருக்கா. தூங்கிட்டு தான் இருக்காளுங்க" என்றார்.
" ஆயி துல்ஜா பவானி கி ஜய். மை டரி கை(நான் பயந்துட்டேன் ) எத்தனை தடவை போன் அடிக்கிறது. ஏக் மா கி, தர்த் (அம்மாவுடைய தவிப்பு ) உங்களுக்குப் புரியாதா" என அவர் எடுத்தவுடன் கைலாஷ் மீது பாய்ந்தார்.
" ரஜ்ஜும்மா தூங்குறாளேன்னு, போனை சைலண்ட் ல போட்டுருந்தேனுங்க. ஏதோ நினைப்பு, கண் அசந்திட்டேன். கவனிக்கலைங்க, இப்ப பார்த்தவுடனே எடுத்துட்டேனுங்க " எனக் கைலாஷ் , தன் இயல்புக்கு மாறாக விளக்க உரைத் தந்தார்.
" நான் எவ்வளவு பதறிட்டேன் தெரியுமா. என் பொண்ணு, அவ அப்பா மாதிரியே ரொம்ப எமோஷனல். உங்ககிட்டையும் சொல்லாமல் போயிட்டாளோ, அது தான் போன் எடுக்கலையோன்னு அவ்ளோ டென்ஷன். நீங்க என்னன்னா ரிலாக்ஸ்டா தூங்கிட்டேன்னு சொல்றீங்க" என எதிர்முனையில் கோபப் படவும்.
" உங்கள் பயம் எனக்குப் புரியுதுங்க" எனக் கைலாஷ் சமாதானமாகவே பேச முயல. " க்யா ஜான்தே ஹை ஆப். பல் பல் பர் , அவள் உயிருக்கு ஆபத்து இருக்கு" எனக் கைலாஷ் பேச்சை இடைமறித்தார் பைரவி. ‘அட விட்ட, இந்த அம்மணி பேசிக்கிட்டே போகுமாட்டத்துக்கு ‘ எனத் தனது வழக்கமான இயல்போடு," உங்கள் மகள் உயிருக்கு அவ்வளவு ஆபத்துன்னா, அவளைத் தனியா விட்டுட்டு, நீங்களும், உங்க புருஷனும் என்ன செய்றீங்க. பிள்ளையைப் பெத்துட்டா மட்டும் போதுங்களா , பாதுகாப்பை வளர்க்காத தெரியோனும் " எனக் கைலாஷ் பதிலுக்குக் கோபமாகப் பேசினார்.
" அது தான் எங்க லிபி. நான் அவளோட சேர்ந்து இருந்தாலே ஆபத்து தான். ஒரு வேளை என் பொண்ணு, அவள் பாபாட்ட வளர்ந்திருந்தா, நிம்மதியா வளர்ந்திருப்பா. என் மகளா போயிட்டாளே, அது தான் அவள் செஞ்ச பாவம்" எனப் பைரவி நா தழுதழுக்கவும் , இங்கே கைலாஷ்க்கு மனம் கலங்கியது.
தெரியாமல் பேசிபுட்டோமோ, என யோசித்தவர் " அம்மா, அழாதீங்க. அதுனால என்ன ஆகப் போகுது. தைரியமா இருங்க. நான் பார்த்துக்குறேன்" என மீண்டும் தணிந்து ஆறுதல் சொன்னார்.
" உங்கள்ட்ட இருக்கான்னு தான் நிம்மதியா இருந்தேன். இந்த ஜித்தி முல்கி (பிடிவாதக்காரப் பொண்ணு) அதுவும் இருக்க மாட்டா போலிருக்கே" எனப் புலம்பவும்.
" உங்க பொண்ணே தனியா போகணும்னு பிடிவாதம் பிடிச்சாலும் , அப்படி எல்லாம் தனியா விடமாட்டேன். பயப்படாதீங்க. இவ்வளவே ஏன் நீங்களே நேர்ல வந்து கூப்பிட்டாலும், ரஜ்ஜும்மாவுக்குச் சம்மதம்னா,அவள் உயிருக்கு எதுவும் ஆபத்து இல்லைனு எனக்கு மனசுக்கு ஒப்புனா மட்டும் தான் அனுப்புவேன்" என அவர் கறாராகப் பேசினார்.
அவரது பேச்சில், பைரவிக்கே மகளின் மேல் பொறாமை தோன்றியது, "தேகோஜி, நான் கூப்பிட்டாலும் அவள் இஷ்டமிருந்தால் தான் அனுப்புவிங்களோ . பெரிசா இவர் தான், ரஜ்ஜும்மாவை பிறந்ததிலிருந்து வளர்த்த மாதிரி '" எனப் பைரவி கைலாஷையே சாடவும்.
" நீங்கள் நிஜமாவே ரஜ்ஜும்மா வோட அம்மா தானா" எனத் தேவையை விட அதிகமாகவே அவர் வியப்பைக் காட்டிக் கேட்டார்.
" க்யூங் ஜி, அதில உங்களுக்கு என்ன சந்தேகம்" எனப் பைரவி சற்று கோபமாகவே பதிலுக்குக் கேட்க.
" நீங்க பேச ஆரம்பிக்கும் போதே, ரஜ்ஜும்மாவை பார்த்துக்கிறதுக்கு, எனக்கு நன்றி எல்லாம் சொல்லி, பவ்யமா பேச்சை ஆரம்பிப்பிங்கன்னு ஒரு கற்பனையில் இருந்தேனுங்க. அதென்னுங்க அம்மணி, ரொம்ப நாள் பழகின மாதிரி எடுத்தோடனே வார் டிக்ளேர் பண்றீங்களே" என்றார்.
" அது தான் , என் பொண்ணை , உங்க பொண்ணா அடாப்ட் செய்துக்கிறேன்னு சொல்லியிருக்கீங்களே, உங்க பொண்ணு, உங்க உரிமை. மே க்யூங் சுக்ரியா ஆதா கரூங்" என அதையுமே அவர் கோபமாகக் கேட்க, கைலாஷ்க்கு அதிர்ச்சி தான்.
" பை த வே , மிஸஸ். " என அவர் பெயரைக் கேட்க, " ஆதிரா கீ ஆயி, யஹி டீக் ஹை, அப்படியே கூப்பிடுங்க " எனக் கட் அண்ட் ரைட்டாகச் சொன்னார் பைரவி.
" ஒவ்வொரு தரவையும், இப்படியே, ஆதிரா கீ ஆயி, ஆதிரா கீ ஆயின்னு நீட்டிக் கூப்பிட முடியுங்களா" எனக் கைலாஷ் விடாமல் கேட்க,
" நீங்க தினமுமா, என் கூடப் பேசப் போறீங்க. எதுவுமே கூப்பிட வேண்டாம். சும்மா பேசுங்க போதும்" என்றார்.
" ஆயி, ஏன் இவ்வளவு டென்ஷன்" எனக் கைலாஷ் சிரிக்கவும்.
" கௌன் ஆயி. நான் உங்களுக்கு அம்மாவா. " எனச் சீறினார் பைரவி.
" சும்மா ஒரு பேச்சுக்கு, மரியாதைக்குச் சொல்றது தான். " என்றவர்.
" உங்கள் குரலை, இதுக்கு முன்ன நான் கேட்ட மாதிரி இருக்கே. எனக்கு உங்களைத் தெரியுங்களா" என வில்லங்கமாகவே கேட்டார். ஐயோ மாட்டிக்கொண்டோமே எனப் பயந்த பைரவி, அதை மறைத்து,
" இது மாதிரி உலகத்தில் யாருமே ,இப்படி ஒரு லாஜிக்கான கேள்வி கேட்டதில்லை" எனப் பைரவி நொடித்தார்.
" என்ன செய்யட்டும், ஆதிரா கீ ஆயி, ரஜ்ஜும்மாவை பார்க்கும் போதே, என் சொந்த மகளாட்டம் ஒரு பாசம். அவள் அழுதாளுன்னா, எனக்கு நெஞ்சு துடிக்குதுங்க. இன்னைக்கெல்லாம், ரொம்ப அழுகை,அழுது போடிச்சுங்க. எனக்கு முகம் தெரியாத உங்க மேலையும், உங்கள் ஊட்டு காரர் மேலையும், அவ்வளவு கோவம் வந்தது. ஆனால் நீங்க சாய்ந்திரம், அழுகங்காட்டியுமே மனசு கேக்கலைங்க. அதுக்குத் தான், ஏதோ விட்ட குறை, தொட்ட குறை இருக்குமோன்னு கேட்டேனுங்க" எனக் கைலாஷ் நீளமாகப் பேசினார்
பைரவிக்கு மீண்டும் கண்களில் காற்றற்று வெள்ளம் தான். அவரது அழகை ஒலி கைலாஷ் செவிகளைச் சென்றடையவும், அவரும் அப்படியே அமைதியானார்.
சற்று நேரம் பேச்சே இல்லாத நிசப்தம், அதுவே இருவருக்குள்ளும் தங்கள் துக்கங்களைச் சொல்லி ஆட்ரிக் கொண்டது போல் ஓர் அனுபவத்தைத் தர, கைலாஷ் தான் மீண்டும் பேசினார்.
“ ராஜூம்மாவோட , மாஸி நாளைக்கு வர்றேன்னு சொல்லியிருக்காங்க, அவிக உங்க நம்பிக்கைக்கு உகந்தவங்க தானே, அவிக இங்க நம்ம பாப்பாவோட தங்கி இருக்கட்டுங்களா” என வினவவும்.
“ கௌரி தான், ரஜ்ஜும்மாவை முக்கால்வாசி நாள் வளர்த்தது, அவளை நம்பலாம். நான் ஒரு இக்கட்டில் இருக்கேன், கூடிய சீக்கிரம் வர்றேன். “ என்றவர், “ ராஜூம்மா, என் உயிர், ப்ளீஸ் ரொம்பக் கவனமா வச்சுக்குங்க, உங்க மகள் தான். உங்களுக்கே கூடக் கொடுத்துடுறேன், என் வாழ்க்கைக்கு, எங்க காதலுக்கான அடையாளம் அவள் தான்” என மேலே சொல்ல முடியாமல் அவர் விசும்பவும், கைலாஷின் கண்களிலும் கண்ணீர்.
“அழாதீங்க அம்மணி, இனிமே ரஜ்ஜும்மா எனக்கும் உயிர் தான். நீங்களும் பத்திரமா இருங்க. எந்த நேரம், என்ன உதவினாலும், என்னைத் தயங்காமல் கூப்பிடுங்க. என் போன் நம்பரையும் அனுப்பி வைக்கிறேன்.” என்றவர், தயங்கியபடி, “ இதைச் சொல்றதுக்கு எனக்கு உரிமை இல்லைங்க, அதிகமா பேசுறதா நினைச்சாலும் பரவாயில்லிங்க, உங்க குடும்ப வாழ்க்கை பத்தியும் எனக்கு எதுவும் தெரியாதுங்க, பத்து நாளா,
உங்க பொண்ணைக் கவினிச்சது வச்சு சொல்றேனுங்க, உங்க கணவரும், நீங்களுமா சேர்ந்து பேசி, அப்பா, அம்மா, மகள்னு ,ரஜ்ஜும்மாவுக்கு ஒரு குடும்பத்தைக் குடுங்க. நம்ம துணை, நம்மள விட்டு , திரும்பி வர முடியாத தூரம் போனால், விதியை நொந்துக்கிட்டு இருந்துக்க வேண்டியது தான். உங்களுக்கு உங்க கணவரோட சேர்ந்து வாழ வாய்பிருந்தா, உங்க கோபம், ஈகோ, பயம் எதுவா இருந்தாலும் தூக்கிப் போடுங்க. இன்னும் எத்தனை வருசத்துக்கு வாழப் போறோம், சரி பண்ண முடியாததுன்னு எதுவுமே இல்லைங்க. நான் உங்க மனசுக்குப் பிடிக்காமல் சொல்லியிருந்தாலும் கேட்டுக்குங்க. தப்பில்லை. “ என ஆறுதலும் சொல்லி, கடைசியில் , யாரிந்த தெரியாத போதே , பைரவிக்கு ஒரு குட்டும் வைத்துப் போனை வைத்தார் ராஜன். அந்த முனையில் பைரவி, பேச்சற்று விக்கித்து நின்றார்.
கைலாஷின் பேச்சு, பைரவிக்கு நம்பிக்கையைத் தருமா, அவரின் தயக்கம் தீர்ந்து கணவரை நாடி வருவாரா…
நிலவு வளரும்.
No comments:
Post a Comment