யார் இந்த நிலவு-25
ராஜன் , விஜயன் போனிலிருந்து தங்கச்சிமா, என்ற எண்ணிற்கு அழைக்கவும் , பைரவி தா போனை எடுத்து, “பாய் சாப் “ என அழைத்தார். விஜயனை,பாரு ,பாய்சாப் எனத் தான் அழைப்பார், அதனால் சந்தேகமுற்ற ராஜன், அவர்களாகவே பேசட்டுமென அமைதி காக்கவும்,
“ பாய் சாப் லைன் ல இருக்கீங்களா, ஆதிரா உங்க வீட்டுக்குத் தான் வைத்திருக்கலாம், நேற்றே சொல்லிட்டா, கேயார் சாப் கூடத் தானே வந்திருக்கா, உங்க வீட்டுக்கு தானே, அதுனால, எனக்கு நிம்மதி தான். கொஞ்சம் வேலையா இருக்கேன், அப்புறம் கூப்பிடவா பாய் சாப். பாபியையும் கேட்டேன்னு சொல்லுங்க” என இயல்பாகப் பேசவும், சரிங்க மா,இதைச் சொல்லத் தான் போன் போட்டேன். வேற ஒண்ணுமில்லை” எனப் போனை அனைத்தவ்ர்,
“ம் ஹும் ,கட்டின பொண்டாட்டிக்கும் நம்பிக்கை இல்லை, கூட வளர்ந்தவனுக்கு நம்பிக்கை இல்லை. அன்னைக்கு உன் வூட்டுல போன் பேசினேன்ல, அதிலிருந்து, அப்ப அப்ப மகளைப் பார்த்துக்கச் சொல்லி போன் போடுவாங்க.” எனப் பாதி உணவில் எழுந்து கைகழுவி விட்டு ,கோபமாக முறைத்துச் செல்ல, கஸ்தூரி “அண்ணா,நான் தான்ங்க அவசர பட்டுட்டேன், பாபினா,அண்ணி தானுங்களே. ஆதிரா அம்மா தான பேசுறாங்க, அபிக்காக அவிகளோட பேசியிருப்பாங்களா இருக்குங்க. நான் ஒரு மட்டி” எனத் தன்னையே நொந்து கொண்டு கஸ்தூரி கணவனைச் சமாதானப்படுத்த செல்ல,
“என்ர கிட்டையே நாடகமா,பார்த்துகுறேண்டா “ என்றவர், நண்பனைச் சமாதானம் செய்யும் விதமாக, அவர்களது திருமண நாளை,தானே சிறப்பாக நடத்துவது என முடிவோடு, குடும்பத்தோடு மீண்டும் கேஆர்மில் வந்தார்.
சோலாப்பூர் பீபீ மில்ஸ் ன் போட் மீட்டிங்கில், அன்று ரமாபாயை எல்லாரும் எதிர் நோக்கியிருக்க, ஆதர்ஷ் மட்டுமே தரை இறங்கினான். ஜெயந்த் கெய்க்வாட் , ஆனந்த், முகுந்த் போஸ்லேக்களும் அன்று கணபத்ராய் போஸ்லேயின் இளைய ராணியை வரவேற்க தயாராகவே வந்தனர். எத்தனை பகை இருந்த போதும், உறவுகளுக்குள் அதனை நேராகக் காட்டிக் கொள்ள முடியாதே. அதுவும் இப்போது இருப்பதில் அவர் தான் முந்தைய தலைமுறை, அனைவருக்கும். மூத்தவர்.
ஆதர்ஷ், ஒரு எஸ்க்யூஸுடன், " இன்று நானிமா, என்னோட வர்றதா தான் இருந்தாங்க. திடீரென உடல்நிலை சரியில்லாததால் பயணம் செய்ய முடியவில்லை. வீடியோ கான்ப்ரன்ஸ் ல பேசுவாங்க" என்ற அறிவிப்போடு, அங்கிருந்த டீவி ஸ்கிரீனை உயிர்ப்பித்து, அவரை நேரடியாகக் காட்டினான்.
நேரலையிலிருந்தாலும், நேரடியாகப் பேசுவது போல், மச்சின் மகன்கள், பேரன்களிடம் உரிமை பாராட்டியவர், தனது கணவர் மற்றும் மூத்தவரின் ஒற்றுமையைப் புகழ்ந்து பேசி, தனது வாரிசான தத்துப் பிள்ளை, ஆதர்ஷ் ராஜே போஸ்லேக்கு, ஆதரவைத் தருமாறு கேட்டுக் கொண்டு, சட்டப்படியான வாரிசாகவும் அறிவித்தார்.
காணொளி முடியும் வரை, சம்பிரதாயமாக யாரும் எதுவும் பேசவில்லை. ஆனால் அதன் பிறகு, மூத்த மருமகனான பாவானிபாயின் கணவன் ஜெயந்த் கெய்க்வாட் முதல் ஆட்சேபனையைத் தெரிவிக்க, பேச்சு வளர்ந்தது. அவர் தான், பைரவியுடைய புருஷன் இருக்கார் கைலாஷ் ராஜனைக் குறிப்பிட்டுச் சொல்லி, அவருடைய ஒப்புதலும் வேண்டும் என ஒரு கண்டிசனை வைக்க, ஆதர்ஷ் ஓர் மர்மப் புன்னகையையும், மற்றவர் அதிர்ச்சியையும் காட்டினர்.
நான் கைலாஷ் ராஜனையே கூட்டிட்டு வர்றேன், என்ற ஆதர்ஷ் அதுவரை தங்கள் ஒப்புதல் இன்றி மில் சம்பந்தப்பட்ட முடிவுகள் எடுக்கக் கூடாது எனக் கண்டிசனோடு கூட்டத்தைக் கலைத்தான்.
கூட்டம் முடியவும், கைலாஷை வேற எதுக்கு இதில் இழுக்கிறீங்க என மற்ற போஸ்லேக்கள் ஜெயந்த் மீது பாய்ந்தனர்.
" இல்லைனா, இன்னைக்கே ஆதர்ஷ் மொத்த சொத்துக்கும் உரிமையா உட்கார்ந்திருவான். அரண்மனைக்கும் வருவான். அதுக்குத் தான் மாற்றி விட்டேன். இப்போ இன்னும் மூன்று மாதம் டைம் இருக்கு. அதற்குள் எவ்வளவோ விசயத்தை மாற்றலாம்" எனத் தனது யோசனையைச் சொல்ல, தேவையில்லாத இன்னொரு பிள்ளைப் பூச்சியை இழுத்துவிட்டதாகப் போஸ்லேக்கள் ஜெயந்தை பேசினர்.
எந்தச் சூழலையும் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்த நினைத்த மஹந்த் போஸ்லே, கே ஆரை சந்திக்கும் தனது திட்டத்தைச் சொல்ல, அவனது தந்தை ஆனந்த்தும் அதை வழி மொழிந்து, கே ஆருடன் சம்பந்தம் பேசுவது எனப் பழைய கால,சம்பந்தம் செய்து சொத்தை அடையும் முறையையும் சொன்னார். அதன்படியே மஹந்தை களம் இறக்கினர்.
ஆதர்ஷ் ஒரு பக்கம் கோவையை நோக்கி தனது பார்வையைத் திருப்ப, எந்த முடிவையும் அதிரடியாக எடுக்கும் கைலாஷ் ராஜன், ஆதர்ஷ்க்கு முன் மஹந்தை சந்திக்க அனுமதி கொடுத்தார்.
விஜயன், பைரவியை அழைத்து விசயத்தைக் கேட்க, ஆதர்ஷ் பற்றிய தகவலே தனக்கு இல்லை என அதிர்ந்தவர், தனது ஆயி ரமாபாயிடம் கேள்வி எழுப்பினார்.
" ஆயி, ராதா பாயோட மகனை, நமக்கு ஆதரவா வளர்க்கிறதாகத் தானே பேச்சு. இதென்ன உங்கள் வாரிசா , தத்து எடுத்துக்கிட்டதா அறிவிச்சு இருக்கீங்க. ஏன் நானும், என் மகளும் செத்தா போயிட்டோம்" என ஆக்ரோஷமாகச் சொல் லம்புகளைத் தொடுத்தார்.
" பைரு, கொஞ்சம் பொறுமையா கேளு, உன் ஒருத்தியால, இந்தக் கேங்கை சமாளிக்க முடியாது. ஆதர்ஷ் இதுக்காகவே வளர்க்கப் பட்டவன், சோடே தாமாத்ஜி, பாலாஜி ராவ் சேர்ந்து பார்த்துக்குவாங்க. நீ தான் சொத்துச் சுகம் எதுவும் வேண்டாம்னு சொல்லுவ. உன் புருஷன் வச்சிருக்கச் சொத்தே போதும்னு சொல்லுவ. உன்னை நம்பி பிரயோஜனம் இல்லைனு தான், இன்னொரு சிப்பாயியை இறக்கிட்டேன்" என அவரும் விடாப்பிடியாகவே பேசினார். இருவருக்குமான வாக்குவாதம் வலுத்து, "இதுனால என் மகளுக்கோ, புருஷனுக்கோ ஆபத்து வந்தா, நான் சும்மா இருக்க மாட்டேன்" என மிரட்டினார் பைரவி.
" நீ முதல்ல தாமாத்ஜியோட சேர்ந்து வாழப் பாரு. ஏற்கனவே உன் ஸாஸும்மா, மகனுக்குப் பொண்ணு தேடுறார். கடைசியில் புருஷனையும் கை நழுவ விட்டுட்டு ஏமாந்து நிற்கப் போற. " என ரமாபாய் மகளின் பொறாமையைத் தூண்டி விட்டார்.
பைரவி, மீண்டும் விஜயனுக்கு அழைத்தவர், " பாய்சாப், நான் நம்புனவங்க எல்லாம் என்னை ஏமாத்திட்டாங்க. நீங்கள் சல்றது நிஜம். என் ஆயி, அந்தப் பையனை தன் வாரிசா அறிவிச்சு இருக்காங்க" என மனவேதனையோடு சொன்னார்.
" அடுத்து என்னமா செய்யப் போறீங்க" என விஜயன் வினவவும், " ஆயி, முதலேயே, ராஜ்கிட்ட போகச் சொன்னாங்க. நான் தான் மறுத்தேன். இப்போ இன்னொரு சிப்பாயை ரெடி பண்ணிட்டேன்னு சொல்றாங்க. அவங்க எப்படியோ போறாங்க, எனக்கு ஆதிராவை மட்டும் காப்பாற்றி, ராஜ்கிட்ட ஒப்படைச்சா போதும்" என்றார்.
" தங்கச்சிமா, நான் உங்க சந்திப்புக்கு ஏற்பாடு பண்றேன். இன்னும் பத்து நாள்ல எனக்கும் கஸ்தூரிக்கும் வெட்டிங் டே வருது. ராஜா இப்படி இருக்கானேன்னு, நான் சில்வர் ஜூப்ளி கூடக் கொண்டாடளைங்க. இந்த வருஷம் தான், அவன் பேசிட்டானே, ஏற்கனவே மாமா அத்தை இங்க தான் இருக்காங்க. குன்னூர்ல இருக்கப் பெரியவங்களையும் வரட்டும். நீங்களும் வாங்க. ஒரு சுமூகமான முடிவு வரட்டும். எல்லாருமா, ராஜனையும் சமாளிச்சுக்கலாம். " என அவர் திட்டம் தீட்ட, பைரவியும் அதற்கு ஒப்புக் கொண்டார். ஆனால் இவர்கள் திட்டத்தையெல்லாம் தவிடு பொடியாக்கி , அதிரடியாய் காய்களை நகற்ற ஒருவன் கோவையில் தரை இறங்கி இருந்தான்.
விஜயன் குடும்பம், மீண்டும் கே ஆர் மாளிகை வந்து, தங்கள் மணவிழா பற்றி அறிவிக்கவும், பெரியவர்களுக்கும் ஒரே கொண்டாட்டம்.
" அப்ப, ராமு, பெரிய ரஞ்சி, சுப்பு, சாரதா,பன்னீர் எல்லாரையும் கூட்டிட்டு பவானியையும் வரச் சொல்லுவோங்கிறேன்" எனப் பாலநாயகம் திட்டமிட ஆரம்பிக்க,
" அதே தான் நானும் சொல்லனும்னு இருந்தேனுங்க, கஸ்தூரிக்குப் பிறந்த வூட்டு சீர் நம்பளுது தான்" என்றார் சௌந்தரி.
" அம்மத்தா, ஆனிவர்ஸரி தான கொண்டாடப் போறாங்க, அறுபதாம் கல்யாணமா செய்யிறாங்க" என ரஞ்சி கேள்வி எழுப்பினாள்.
" என்ர தங்கச்சிக்கு, தினம் தினம் சீர் இறக்குவோம் உனக்கென்ன கண்ணு, வேணும்னா உனக்கும் சேர்த்து மாமன் சீர் இறக்குறேன் " என்றார் கே ஆர்.
" வேணும்னா ன்னு, என்னங்க மாமா, இழுக்குறீங்க. எனக்கு எந்த விசேஷம் வச்சாலும் நீங்க தானுங்க செய்யோனும். இல்லையினா இங்கையே வந்து டேரா போட்ற மாட்டேன்" என ரஞ்சி, விடாமல் வம்பிழுக்கவும்.
" இவ்வளவு தானக் கண்ணு, மாமனுக்கு ஒரு மகன் இருந்திருந்தா உன்னைக் கட்டி வச்சிருப்பேன், அது தான் இல்லையே, மாமன் சொத்து பூரா உனக்குத் தான் எடுத்துக்க. " என அவரும் விடாமல் மருமகளோடு வார்த்தையாடினார்.
" உன்ர மாமன் சொல்றதோட, சொத்துப் பத்திரத்தில் கையெழுத்து வாங்கிக்கக் கண்ணு , அவன் சொத்துக்குத் தான் ஹெவி காம்படிசன் நடக்குது. ஒரு மாசம் வளர்த்த புள்ளையையே தத்தெடுக்கப் பேச்சு ஓடுது , சுதாரிச்சுக்கக் கண்ணு " என நாயகம் ஆதிராவை குறித்துச் சொல்லவும்,
" அப்பா, அது என்னமோ, என்ர சொத்துக்காகத் தான் இங்க இருக்கிற மாதிரி பேசுறீங்க. யாரு கண்ணுளையும் படாமல் வளர்க்கையிலேயே தெரியலைங்கிளா, அது எவ்வளவு பெரிய இடம்னு." என ராஜன் ஆதிராவுக்குச் சப்போர்ட் பண்ணி பேசிய நேரம், கௌரி , வீட்டு மனுசியாக வந்தவர்களை வரவேற்று, காபி பலகாரத்துக்குக் கேட்டு, செல்லி கொண்டு வந்ததை வாங்கிப் பரிமாற வந்தார்.
" அடே, நீ சொல்லிட்டா போச்சா, எந்தப் புத்தில, எந்தப் பாம்போ,சம்பந்தப்பட்டவங்கல்ல வாயைத் திறக்கோணும்." என நாயகம், வழக்கம் போலப் பேச்சில் கௌரியைத் தூண்டி விசயத்தை வாங்க முயன்றார்.
" அப்புச்சி, நீங்க பேசறதே புரியலைங்க.” என ரஞ்சனி, “புரிய வேண்டியவைகளைப் புரியும், ஆனால் பொறியில சிக்க மாட்டாங்க “ என்றார் நாயகம்.
கௌரி,கஸ்தூரி விஜயனுக்கு வாழ்த்துச் சொல்லி, இவர்கள் சம்பாஷனை தங்களுக்குச் சம்பந்தம் இல்லை என்பது போல் புன்னகை மாறாமல் நின்றார்.
கௌரி,கஸ்தூரி விஜயனுக்கு வாழ்த்துச் சொல்லி, இவர்கள் சம்பாஷனை தங்களுக்குச் சம்பந்தம் இல்லை என்பது போல் புன்னகை மாறாமல் நின்றார்.
“அட,அது தான் சத்தியத்துக்குக் கட்டுப் பட்டு இருக்கேன்,சொல்ல முடியாதுன்னு சொல்லிப்போடுச்சுல்ல,பேசாத விடுங்க, இன்னைக்கியெல்லாம் இவ்வளவு விசுவாசமா யார் இருக்காங்க.அதுக்கே கௌரியை மெச்சிக்கோணும், குறை சொல்லக் கூடாது”என்றார் சௌந்தரி.
ஆதிரா, ஆபீஸ் வேலை முடிந்து, அபிராமுடன் வீட்டுக்கு வந்தவளை, ரஞ்சி ஆவலாகவே வரவேற்றவள்,” அப்பா, அம்மா வெட்டிங் ஆனிவேர்சரிக்கு பிளான் பண்ணனுமுங்க அண்ணி,உங்க ஹெல்ப் வேணும்” என்றாள்
“கட்டாயம் செய்வோம் ரஞ்சி,அதைவிட நமக்கு என்ன வேலை. நான் ப்ரெண்ட்ஸ் கூடச் சேர்ந்து, இந்த வேலை எல்லாம் பார்த்திருக்கேன்,ஆனால் பங்க்சன் தான் அட்டென்ட் பண்ணதில்லை” என அவள் எதார்த்தமாகச் சொல்ல, கைலாஷ் உருகித்தான் போனார். கௌரியைப் பார்த்தவர், “மாஸிமா , நீங்களும் , உங்க திதியும் என் ரஜ்ஜும்மாவை எப்படியெல்லாம் கொடுமை படுத்தியிருக்கீங்க பாருங்க “ என ஆந்திராவை அழைத்துத் தன பக்கத்தில் உட்கார வைத்துக் கொண்டு சொல்லவும், அதற்கும் அவர் பேசாமல் நின்றார்.
சௌந்தரி தான்,” அது தான் காரணம் சொல்லுச்சுங்கள்ல ராஜா, அவிக கூட்டிட்டு போகலையா என்ன, இனி நம்ம கூட்டிட்டுப் போவோம்”எனச் சமாதானம் சொன்னார்.
" ஓகே கைஸ், எல்லாரும் ரொம்பச் செண்டியா போக வேண்டாம். கொஞ்சம் ரிலாக்ஸ் ஆகுங்க. அப்பா, அம்மா மேரேஜ் ஆன்வர்ஸரியை கிராண்டா செலபரேட் பண்றோம். தீம் ட்ரெஸ், கே கட்டிங், டிஜே வச்சு பாட்டுப் பாடி ஆடுறோம். ஹோட்டல் டின்னர். " என ரஞ்சனி வரிசையாக ப்ளான் போடவும்,
" ரஞ்சி லிஸ்ட் பெரிசாக்கிட்டே போகாத. சிம்பிளா செஞ்சா போதும். அபி கல்யாணத்தைக் கிராண்டா செய்வோம்" என்றார் கஸ்தூரி.
" ஏன் கண்ணு, உன்ர புருஷன் பர்ஸை மிச்சப்படுத்தலாம்னு பார்க்கிறியாக்கும். அதெல்லாம் ஒண்ணும் வேண்டாம். எனக்காகத் தான், இத்தனை வருசமா, உங்க கல்யாண நாளை விமரிசையா கொண்டாடலையின்னு, ஒரு பலியைப் போட்டு புட்டான்ல, பூரா செலவும் என்னது தான். ரஞ்சிக் கண்ணு 7 ஸ்டார் ஹோட்டலை புக் பண்றோம்டா" என்றார் கைலாஷ்.
" மாமா, நம்மூர்ல ஏதுங்க, 7ஸ்டார் ஹோட்டலு, 5 ஸ்டார் தானுங்களே இருக்கு" என அபிராம் இடை மறிக்கவும், " எங்க இருக்கோ, அங்க போவோம். இது ஒரு பிரச்சனையா " என்றார் கைலாஷ்.
இளையவர்கள், பெரியவர்களோடு சேர்ந்து, ப்ளானிங்கில் ஈடுபட, விஜயன், கைலாஷை ஆபீஸ் ரூமுக்கு கடத்தினார்.
" ராஜா, நாளைக்கு மஹந்த் போஸ்லேவுக்கு டைம் கொடுத்திருக்கியாம். ஆதர்ஸை முதல்ல பார்க்க வேண்டியது தானே" என வினவவும், அர்த்தமாகப் புன்னகைத்த கைலாஷ், " முதல்ல சம்பந்த புறத்தைத் தான் கவனிக்கனுமடா. இல்லைனா கோவிச்சுக்குவாங்க. காரணமாத் தான், ஆதர்ஷை அவாய்ட் பண்றேன். அவன் நம்ம பய தான மெல்ல வரட்டும்" என்றார் கைலாஷ்.
இவர்கள், வீட்டில் உள்ள அலுவலக அறைமில் பேசிக் கொண்டிருக்கும் போதே, வீட்டு போனுக்குச் செக்யூரிட்டியும், கைலாஷ்க்கு உதவியாளர் சம்பத்தும், நடு வாசலில் காரை நிறுத்தி விட்டு சத்தியனும் ஓடி வந்து சொன்னது ஒரே விசயத்தைத் தான்.
" அப்பா, அப்பாயிண்மெண்ட், இல்லாதையே ஒருத்தர் உங்களைப் பார்க்க அடம் பிடிக்கிறாருங்க" என ஓடி வந்து சொல்ல, அந்த நேரம் தான் சம்பத் போன் அடித்தார், அதை ஆண் செய்நுக் கொண்டே, " யார்ரா அவன், இப்ப பார்க்க முடியாதுன்னு சொல்லு" எனக் கோபமாக மொழிந்து விட்டு, " சம்பத் சொல்லுங்க" எனவும்.
" ஐயோ, அப்பா, அந்த விசயத்தைத் தான் சொல்ல வந்தேனுங்க. இவ்வளவு நேரம் அந்தச் சார் , வாக்குவாதம் பண்ணி பார்த்துட்டு தான் உங்களைக் கூப்பிடுறாருங்க. நீங்க உடனே என்னோட வாங்க" என அவன் அழைக்கவும், " ஆமாங்க சார்" எனக் கைலாஷ்க்கு சம்பத் விவரத்தைச் சொல்ல,
" அப்பாயிண்மெண்ட் இல்லாதவனைப் பார்க்க, ஓனரே வருவரா. போய் முடியாதுன்னு சொல்லு" என விஜயன் சத்தியனிடம் சொல்ல,,
" ஐயா, சார், அவர், இவராட்டமே நினைச்சதை உடனே சாதிக்கிற ரகமாட்டத்துக்கு, ஐம்பது காரோட, அவினாசி ரோட்டையே மறிச்சுக்கிட்டு நிற்கிறாப்ளையிங்க , இரண்டு பக்கமும், இரண்டு மைல் தொலைவுக்கு , ட்ராபிக் ஜாமாகி நிற்க்குதுங்க" என அவசரமாகச் சொல்லவும்.
இதைக் கேட்டபடி வந்த, அபிராம், " உடனே பேட்டி கொடுக்கிற அளவுக்கு அவனென்ன, இந்த நாட்டுக்கே ப்ரைம் மினிஸ்டரா என்ன" எனக் கோபமாகக் கேட்கவும்,
" அப்படியும் கேட்டுப் பார்த்துட்டோமுங்க. ஆமாம் உங்க எல்லாருக்கும் ராசாவா வரப் போறவர், ராஜகுமாரன்னு நக்கல் விடுறானுங்கய்யா" எனத் தந்தை மகன் இருவரிடமும் சத்தியன், அடுக்கிக் கொண்டிருக்க,
" யார்ரா அவன், நம்ம இடத்தில வந்து நாட்டாமை பண்றது" எனப் பாலநாயகமும் கோபமாகக் கேட்டபடி மகனைத் தேடி வர,
" அவரே, வர்றாரா, இல்லை பேண்ட் வாத்தியம் வச்சு அழைக்கோனுமானு கேளுங்க" எனச் சிரித்தவர், " வீட்டுக்கே அனுப்பி விடுங்க" எனப் புன்னகையோடு போனை வைத்தவர், மற்ற மூவரும் யாரெனக் கேட்க,
" வந்துட்டான்டா, ராஜகுமாரன், பெங்களூர்ல பார்த்தமே, ஆதர்ஷ் ராஜே போஸ்லே" என்றார் கைலாஷ்.
" அவன் எதுக்குங்க மாமா, இங்க வர்றான்" என அதிர்ந்து நின்றான் அபிராம். ' பால் புட்டி, நம்ம மார்க்கெட்டை பூரா காலி பண்ணுவானே. நல்லவேளை ஆராக்கிட்ட ப்ரபோஸ் பண்ணிட்டேன்' என அவன் மனசாட்சி ஆசுவாசமடைய, ஆதிரா" மாஸி இது யாரு" எனக் கலவரமானாள்.
கைலாஷின் சட்டதிட்டங்களுக்கு எல்லாம், தான் அடங்காதவன், நினைத்ததை நடத்தியே முடிப்பவன் நான் எனக் காட்டினான் ஆதர்ஷ். அதிரடியாக நுழைந்தது மட்டுமின்றி, கே ஆரையே ஒரு கலக்கு கலக்கி, ஆதிராவை அலற விட்டான்.
ஆதர்ஷ் ராஜ் போஸ்லே, கேஆர் மில் வாசலில், அவினாசி,கோவை ரோட்டையே கதிகலங்க வைத்துக் கொண்டு, உள்ளே வர கேயார் அனுமதி வேண்டி நின்றான்.
ஆதர்ஷ் வருகை கேஆர் மாளிகையின் அஸ்திவாரத்தையே ஆட்டம் காண வைக்குமா. பொறுத்திருந்து பார்ப்போம்.
நிலவு வளரும்.
No comments:
Post a Comment