யார் இந்த நிலவு-24
ஆதிரா, அழுது புலம்பிய அந்த முதல் நாளுக்குப் பிறகு, தன் பாபாவோடு ராசியான போதும், முன்பு போல் அவளால் இயல்பாகப் பழக இயலவில்லை. எங்கே தன்னை மறந்து, கைலாஷ் தான் தன் பயாலிஜிக்கல் பாதர் என்பதை, தன்னையறியாமலும் வெளிப்படுத்தி விடுவோமோ, என எச்சரிக்கையாக இருந்ததில் தன் இயல்பைத் தொலைத்திருந்தாள்.
தாத்தா, ஆத்தாவிடமும் சற்று விலகளோடே நடந்து கொள்ளவும், பெரியவர்கள் அவளைச் சரிப்படுத்த முயன்றனர்.
" ஏன்கண்ணு, அது தான் உன் சித்தியம்மா வந்திருச்சில்ல, எதுக்கு இப்படி முகத்தைத் தூக்கி வச்சிக்கிட்டு இருக்க. எப்பவும் போல இரு" என்ற சௌந்தரி, " உன்ர பாபாவுக்குப் பொண்ணு பார்க்கனுமின்னு சொன்னமே, அந்தச் சின்னப் பொபெட்டில பார்க்கலாமாம், சத்தியன் சொன்னான். ஆத்தாவுக்குப் போட்டுக் காட்டு கண்ணு" எனப் பேச்சில் இழுத்தார். இது எதற்குத் தேவையில்லாத வேலை, தன் ஆயியை இங்கு அழைத்து வந்து விடலாம். கைலாஷ் பெயரை பப்ளிக்காகப் போட்டாலும் பிரச்சினை, அவருக்குப் பிடிக்காதே என யோசித்தாள்.
" அதெல்லாம், இந்தப் பொண்ணுக்குத் தெரியுமோ என்னமோ. அபு கண்ணா வரட்டும், போட்டுக் காட்டச் சொல்லு, இல்லையினாக்கும் ரஞ்சி வரச் சொன்னையினா, அவளே அவ மாமனுக்கு ஏத்த ஜோடியா தேடி எடுத்துக் கொடுத்திடப் போறா" என நாயகம், அபிராம், ரஞ்சனியை உயர்வாகச் சொல்ல, " எனக்கும் தெரியும்" என ரோசமாக, இதன் மூலம் தன் ஆயியின் பொறாமையையும் தூண்டலாம், அவரைச் சீக்கிரம் பாபாவோடு சேர்த்து வைக்கலாம் என்ற யோசனையில் மேட்ரிமோனியில் பதிவு செய்தாள். ஆனால் கைலாஷ் பெயரைப் போடாமல், பொதுவாக மட்டுமே போட்டு வைத்தாள்.
சௌந்தரி விவரம் கேட்கவும், " பாபா போட்டோவை போட்டம்னா, அவுங்களுக்கு ரொம்பப் பிரச்சினை ஆகிடும் ஆத்தா. அவங்கள்ட்டையே நேரா போன் போட்டு கேட்டுருவாங்க. முக்கியமா அவங்க சொத்துக்காகத் தான் வருவாங்க. அதுனால பொதுவா போடுவோம் ஆத்தா " என விளக்கம் தர, நாயகமும் மனதில் ஆதிராவின் யோசனையை மெச்சி கொண்டார்.
அபிராமும், ஆதிராவுடன் வேலை செய்யும் போது, வீடு வரை துணைக்கு வரும் போது, எனப் பேச்சுக் கொடுத்துப் பார்த்தான். " குச் நஹி ராம் சாப், எனக்குக் கில்டியா இருக்கு" என அவள் வருத்தப்பட, "இதெல்லாம் எதுவுமே யோசிக்காத ஆரா பேபி. உன் ஆயியை, பாபாவோட எப்படிச் சேர்த்து வைக்கலாம்னு மட்டும் யோசி" என்றவன்,
" அன்னைக்கு ஒரு நாள் பேசினாங்கல்ல, அதே மாதிரி தினமும் பேச வை" என ஐடியா கொடுத்தான்,
அவனை முறைத்தவள் " நீங்க ரொம்ப லேட். அதெல்லாம் இரண்டு பேரும், நைட்ல பேசிட்டு தான் இருக்காங்க. பாபா, எப்படிச் சிரிச்சு பேசுறார் தெரியுமா. இந்த ஆயியும், என்கிட்ட தான் முறைக்கிறது, பாபாட்ட ஹஸ்திஹுயி போல்தி ஹை" என முகத்தை உம்மென வைக்கவும்.
" மாம்ஸ் திறமையே திறமை தான். பக்கத்தில இருக்கிற பொண்ணை என்னால சிரிக்க வைக்க முடியலை. போன்லையே அவர் ஆளைச் சிரிக்க வைக்கிறாரே, இரண்டு பேருக்கும் இடையில, கெமிஸ்ட்ரி, நல்லா இருக்கு. " என்றவன், " நம்ம கெமிஸ்ட்ரியும் அதே மாதிரி இருந்தா, நல்லா இருக்கும் பேபி . ட்ரை பண்ணுவோமா" என அவளை நெருங்கவும், " பிச்சு போடுவேன்" எனக் கேஆர் ஸ்டைலிலேயே அவள் சொல்லவும், " நீ என்ற மாமன் மகள் தான் சந்தேகமே இல்லை. ம்கூம் " என இடைவெளியை அவன் அதிகப்படுத்த, ஆதிரா சிரித்தாள்.
சௌந்தரி, மகனிடம், தங்கள் பழைய வீட்டுக்குச் சென்று வருவதாகவும் ஆதிரா , கௌரியையும் அழைத்துச் செல்வதாகக் கேட்டார். முதலில் ஆதிராவின் பாதுகாப்பு என யோசித்தவர், அடுத்து வந்த சனி ஞாயிற்றை, ராம் நகர் வீட்டில் எல்லாருமாகக் கழிக்கலாம், அவளுக்கும் ஓர் மாற்றமாக இருக்கும், தானும் வருகிறேன், என்று சொல்லவும், பெற்றவர்களுக்கு அளவில்லாத மகிழ்ச்சி. நாயகம், பல வருடங்களுக்கு முன் வீட்டை விட்டு வெளியேற்றிய பின், ராஜன் அந்த வீட்டுக்கு வருவதே இல்லை.
இரண்டு கார்கள் பின் தொடர, ஆதிராவை அருகே அமர்த்திக் கொண்டு தானே காரை செலுத்த,. " இந்த வீடு உங்களுக்கு ரொம்பப் பிடிச்ச வீடா பாபா" என அவள் கேட்கவும். " நான் சின்னதிலிருந்து வளர்ந்த வீடு கண்ணு. பிடிக்காமல் எப்படிப் போகும். " என்றவர், தன் சிறு வயது கதைகளைப் பேசியவாறே உற்சாகமாக வர அவரை அதிசயமாகவே பார்த்த ஆதிராவிடமும் அதே உற்சாகம், தொற்றியது.
முதலில் சென்ற காரில், சௌந்தரி, நாயகம், கௌரியை அழைத்துக் கொண்டு சென்றுவிட, அப்பாவும் மகளுமாக வந்து சேர்ந்தனர். சௌந்தரி தயாராக வைத்திருந்த ஆரத்தியை, மகனுக்கும், பேத்திக்குமாகச் சுற்றி வரவேற்றார்.
" எதுக்கும்மா, இதெல்லாம்" என்றவரிடம்,
" நீ இல்லாமல், இந்த வூட்டில ஒரு நாள் கூட, நானும், உங்க அப்பாவும் நிம்மதியா இருந்ததில்லை ராஜா. நீ இந்த வீட்டுக்கு வந்திட்டேயில்ல, இனிமே பார், நம்மளை விட்டுப் போன சந்தோஷமெல்லாம் திரும்ப வந்துரும்" எனச் சௌந்தரி வாக்குச் சொல்ல, " அப்படியே ஆகட்டுங்கம்மா" என்றவர், ஆதிராவை தனது அறையைக் காட்ட அழைத்துச் சென்றார்.
இரண்டாவது மாடியில், தனி ரூமும், மொட்டை மாடியுமாக இருந்தது. ஊஞ்சல், ஷோபா எல்லாம் போட்டிருந்தனர். அதை ஒவ்வொன்றையும் காட்டி, தன் நினைவுகளைப் பகிர்ந்தார் ராஜன்.
மாலை சிற்றுண்டியோடு, விஜயன் குடும்பமும் பக்கத்து வீட்டிலிருந்தே, கீழே பெரியவர்களைக் கண்டு விட்டு, மாடிக்கு வந்து சேர்ந்தனர். இதே போன்ற அறையில் தான் முன்பு விஜயனும் இருந்தார். அந்தப் பக்கமே,ஒரு மாடிப்படி இறங்கி விஜயன் வீட்டு காம்பவுண்டுக்குள் செல்லும். அதையும் காட்டி எல்லாருமாகக் கதைத்துக் கொண்டிருந்தனர்.
ஆதிரா, ரஞ்சியிடம் ஓரிரு வார்த்தை அளவளாவி விட்டு, கஸ்தூரியிடம் வந்து, " சாரி ஆண்டி, நீங்க அன்னைக்கு வந்தப்ப, என்னால சரியாகவே பேசமுடியலை. " எனத் தன் செய்கைக்கு வருந்தவும்,
" ஏன் கண்ணு, நீ அன்னைக்கு இருந்த நிலைமை எங்களுக்குத் தெரியாதா. இந்தச் சின்ன வயசிலையே இவ்வளவு சோதனையான்னு, வூட்டில போய்ப் புலம்பிக்கிட்டே இருந்தேன் கண்ணு. ரஞ்சி காலேஜ் போயிட்டு வர லேட்டாச்சுனாலே, போனை போட்டுக்கிட்டே இருப்பேன். உங்க அம்மாளும், மகளைப் பக்கத்தில வச்சுக்க, பார்த்துக்க முடியாத, அப்படித் தான கண்ணு துடிப்பாங்க. பாவம்" எனக் கஸ்தூரி கேட்கவும், ஆதிரா தலை குனிந்து அமைதி காக்க, காபியோடு வந்த கௌரி தான் பதில் தந்தார்.
" என் தீதி, ஆதிரா முலேவுக்காகப் பதறருதும், துடிக்கிறதும் பார்த்தா, அந்த ஆயி பவானிமேல நமக்கே கோபம் வருங்க. தன்னை மறந்து தூங்குற பொழுதைத் தவிர, என் தீதி அவங்க வாழ்க்கையில் நிம்மதியா தூங்கினதே இல்லை. நான் ஆதிராவோடையே இருப்பேன். தீதி தான் மகளைப் பிரிஞ்சு இருப்பாங்க. தன் நிழல் மகள் மேல விழுந்தா கூட, அதுக்கு ஆபத்துன்னு ரொம்பக் கவனமா இருபாங்க. அந்த நிலமை எல்லாம் எந்தத் தாய்க்கும் வரக் கூடாது" எனக் கௌரி கண்ணைத் துடைக்கவும், ஆதிராவுக்கு, தன் ஆயியைப் பற்றிய வேறு ஒரு கோணத்தைக் காட்டியது.
கைலாஷ்,”இதுக்கெல்லாம் காரணமான , ரஜ்ஜுமாவோட அப்பனை தான் சொல்லோணும். மகளை காப்பாற்ற வக்கில்லாதவன் எதுக்கு பெத்துக்கோணும் “ என கோபப பட, கஸ்தூரி மட்டும், “ம்க்கும்ங்கண்ணா ‘ என அவர் பேச்சை ஆதரிக்க, மற்றவர்கள் நோ கமெண்ட்ஸ் என்பது போல், அமைதி காத்தனர். விஷயம் தெரிந்த பின் இருக்கிறது கைலாஷின் ருத்ர ஆட்டம் என நினைத்துக் கொண்டனர்.
" ஆண்டி, இது எல்லாமே கூடிய சீக்கிரத்தில் ஒரு முடிவுக்கு வந்துடும் கவலைப் படாதீங்க. " என நம்பிக்கை தந்து பேசிய அபிராம்,
கஸ்தூரி , கௌரியும் ,இரண்டு அம்மாக்கள் சேர்ந்தால், பிள்ளைகளைப் பற்றித் தான் பேசுவார்கள், என்பது போல், அபிராம், ஆதிராவைப் பற்றியே பேசியபடி சௌந்தரியிடம் சென்றனர்.
ஆபிராம், ஆதிராவிடம், "ரஞ்சி, உன்கிட்ட ஒரு கேள்வி கேட்கனுமாம்" என்றான். " க்யா" என வந்தவளிடம், " நான் கேட்டுருவேன், அப்புறம் நீங்க வருத்தப்படக் கூடாது" என ரஞ்சி பீடிகை போட்டாள்.
சற்று நேரம் முன், தங்கை தன்னிடம், " அப்படி அந்த ஆதிராகிட்ட என்ன இருக்கு, மாமனும், மருமகனும் ஒரேதா கவுந்து கிடக்குறீங்க" என வம்பிழுந்திருந்தாள், அதையே கேட்பாள் என ஆதிராவிடம் கோர்த்து விட," அப்படி இதுக்கிட்ட என்ன இருக்குனு, எங்க அண்ணன் மங்கிக்கு போய், ஓகே சொன்னீங்க " எனக் கேட்கவும், ஆதிரா பட்டெனச் சிரித்து விட,
" அடியே, மங்கியோட தங்கச்சியும் மங்கித் தான். குட்டி மங்கி, குண்டு மங்கி, உன்னை விட்டேனா பாரு " என அபி அவளைத் துரத்த ரஞ்சனியை ஓட என வம்பு ஆரம்பமானது.
ரஞ்சி, தன் அப்பாவையும், மாமாவையும் சுற்றிக் கொண்டு, " வேண்டாம், வந்திருடி. என் இமேஜை ஸ்பாயில் பண்ணிக்கிட்டு இருக்க. விட்டேனா பாரு" எனச் சுற்றி வர, ஆதிரா அவர்களைப் புன்னகையோடு பார்த்திருந்தாள்.
பஞ்சாயத்து, ராஜன், விஜயன் வரை போக, " மாமா, நீங்களே சொல்லுங்க" என இருவருமே, ராஜனிடம் முறையிட, " அண்ணங்காரனைக் கிண்டலடிக்கிற கூட உரிமை ஒரு தங்கச்சிக்கு , இல்லிங்களா" என மாமனைப் பஞ்சாயத்துத் தலைவராக்க
" நல்ல ஆளைப் பார்த்திங்க. அவனே, சங்கீதா, கீதாலை இதுக்கு மேல வம்பிழுப்பான்" என விஜயன் மலரும் நினைவுகளுக்குச் செல்ல, “அவங்க யார் “ என ஆதிரா கேட்டாள்.
"அவிக என்ர தங்கச்சிங்க, உனக்கு அத்தையாகுது கண்ணு, இரண்டு பேரும் ஸ்டேட்ஸ்ல இருக்கிறாளுங்க. ஆளுக்கு ஒரு பையனும், புள்ளையும் இருக்குதுங்க. உன்னை விடச் சின்னதுக தான்" என ராஜன் சொல்லவும்,
" அப்ப எனக்கு, இன்னும் இரண்டு புவாஸ், கசின்ஸ் எல்லாருமே இருக்காங்களா. அவுங்களை வரச் சொல்லுங்க பாபா. முஜே தேக்னீ ஹை." என ஆசையாகக் கேட்டவள், " சிப்லிங்க்ஸ் இருந்தா, நல்லா ஜாலியா பொழுது போகும்" என ஏக்கமாகக் கேட்கவும்.
" பொழுது தான நல்லாவே போகுங்க. உடன்பிறப்பு செய்யற லோலாயி தனத்துக்கெல்லாம், பெத்த தெய்வங்க, நம்மளை தான் பேசுவாங்க" என ரஞ்சனி சொன்ன விதத்தில், " உன்னை அப்பா ஏதாவது சொல்லி இருக்கேனா கண்ணு " என்றார் விஜயன்.
”நீங்க, உங்க மகளை விட்டுக்கொடுப்பீங்களாக்கும்” என ஆதர்ஷ் கேட்க,
“எந்த அப்பனும்,மகளை வீட்டுக் கொடுக்க மாட்டான் கண்ணு ,நாளைக்கு உனக்கே மகள் பொறந்தாலும், நீங்களும் அப்படி தானுங்க மாப்பிள்ளை இருப்பீங்க” என்றார் ராஜன். மகள்கள் ,அப்பாவிடம் ஹை பை கொடுத்துக் கொண்டனர். ஆதிராவுக்குப் பொழுது சுவாரஸ்யமாகப் போனது.
நாயகமும், சௌந்தரியும் குன்னூருக்கு போன் போட்டு, ராஜன் ராம் நகர் வீட்டுக்கு வந்ததைச் சொல்லிக் கொண்டிருக்க, " நிஜமாவாடா, ராஜனைக் காட்டு" என வம்பிழுத்துக் கொண்டிருந்தனர், பன்னீர், " இன்னைக்குத் தாண்டா, என் மனசு நிம்மதியா இருக்கு. இன்னும் ராஜாவுக்கு, ஒரு வாழ்க்கைத் துணையும், அமைஞ்சிருச்சுன்னா, நான் நிம்மதியா கண்ணை மூடுவேன்" என அந்தப் பக்கம் சொல்லிக் கொண்டிருக்க, " அப்பா" என ஆட்சேபித்துச் சென்றார் பவானி. நாயகம் பவானியிடமும் போனைக் கொடுக்கச் சொன்னவர், " நீ சொன்ன மாதிரியே, என் மகன்கிட்ட ராசியாயிட்டேன் மா. ஆனால் அவன் மனசை தான் திறக்க மாட்டேங்கிறான்" என நாயகம் குறை பட,
" அதுக்கும் ஒரு நேரம் வரும் மாமா. நீங்க பொறுமையா இருங்க. அவசரமா, இங்க வரனும்னு வரவேண்டாம். நீங்க ஆசை தீர இருந்துட்டு வாங்க" எனப் பவானிச் சொல்லவும்,
" ஆமாம்டா, நீ இல்லாமல், நாங்க ஜாலியா என்ஜாய் பண்றோம்." என வம்பிழுத்து பேசிக் கொண்டிருக்க, பாலநாயகத்தின் சிரிப்பு மொட்டை மாடி வரை கேட்டது.
சௌந்தரி, " இவிகளோட, இந்தச் சிரிப்பைக் கேட்டு எத்தனை வருஷம் ஆச்சுது. எல்லாம் என் பேத்தி வந்த ராசி தான்" என கௌரியிடம் சொல்லிக்கொண்டிருக்க, கஸ்தூரியும் ஆமோதித்தார்.பிள்ளைகளை பற்றி சௌந்தரிகேட்கவும்,
" அபியும், ரஞ்சியும் கூட்டிட்டு போயிருக்காங்க.” என்றார் கஸ்தூரி.
அபிராம், ஆதிராவை தன் வீட்டுக்கு அழைத்துச் சென்றவன், " ரஞ்சி, ஆரா , முதல் தடவையா நம்ம வீட்டுக்கு வந்திருக்கா, ஏதாவது ஸ்வீட் எடுத்துட்டு வாடி" என விரட்ட, " இந்தா" என ஒரு சாக்லேட் பாரை நீட்டினாள் ரஞ்சி. ஆதிரா பட்டெனச் சிரித்து விட,
" மரியாதையா, ப்ளீசிங்கா கேளு, போனா போகுதுன்னு உங்களுக்குத் தனிமை கொடுக்குறேன்" என்றவள், இது தான் சாக்கு எனப் பல உறுதி மொழிகளை வாங்கிக் கொண்டு, கத்தை பணத்தை லஞ்சமாகவும் பெற்றுக் கொண்டு, "வாட்ச் உமன் வேலைக்கு , இதெல்லாம் ரொம்பக் கம்மி.சரி அண்ணியை ஐஸ் வச்சுக்கிட்டா, நாளைக்கு நமக்கு உதவியா இருக்குமேன்னுட்டு தான்,,ஒரு தொலைநோக்கு பார்வையோட இதெல்லாம் செய்யிறேனாக்கும் ,மைண்ட்ல வச்சுக்கங்க,சொல்லிப்போட்டேன் ஆமா " என்று விட்டு அவள் கீழே இறங்க,
" ராம் சார், ரஞ்சி, ஹமாரே பாரே மே க்யா கஹ்த்தீகை " எனக் கேட்கவும்,"உனக்கு புரியலையா விட்டுங்க அம்மணி " என்றான்,அவள் "கத்தியே நா" சிணுங்கவும், " ஐயோ இந்தக் கொஞ்சலுக்கே சொல்லலாமே," என அவள்கண்ணத்தை வழித்துகொஞ்சியவன், அவள்விளையாட்டாககையிலடிக்கவும்,பொய்யாய்முறைத்து, "இன்னைக்கு நம்ம காதலை வளர்த்தா தான், நாளைக்கு, அவளோட காதலை வளர்த்திக்க ஹெல் பண்ணுவோம்ன்னு சொல்றா " என்றவன்,
அவள் கைகளைப் பற்றிக் கொண்டு, " ஆரா பேபி, நம்ம காதலை வளர்ப்போமா,நீ என் ரூம்பில நிற்கிற. இது இவ்வளவு சீக்கிரம் நடக்கும்னு நான் நினைச்சே பார்க்கலைடா " என அவளிடம் நெருங்கியவன், " மாமாவும், அத்தையும் சேர்ந்த உடனே, நம்ம கல்யாணத்தை வச்சுக்குவோம் சரியா . " என அவன் ஒரு திட்டத்தைப் போட்டான்.
" ம்கூம், நான் ஆயி பாபாவோட, என் கஸின்ஸோட, அஜ்ஜோ, ஆத்தா எல்லாரோடையும் ஆசை தீர இருக்கனும். இன்னும் ஒரு தீன் சால் கே பாத் ஷாதி கரேங்கே" என்றாள்.
" த்ரீ மந்த்ஸ் நோ ப்ராப்ளம் டியர். நான் அட்ஜஸ்ட் பண்ணிக்கிறேன்" என அவன் பெருந்தன்மையாகச் சொல்லவும். அவனைமுறைத்தவள்,
" தீன் மஹினே, நஹி. சால் தட் மீன்ஸ் த்ரி இயர்ஸ்" என்றாள்.
"ஏய் போங்க அம்மணி, இதெல்லாம் போங்கு ஆட்டம். நான் ஒத்துக்க மாட்டேன். இப்பையே, டிஸ்டன்ஸ் கீப் பண்றது எவ்வளவு கஷ்டம் தெரியுமா" என அவளை நெருங்க. " ராம் சார் நோ" என்றாள் அவள்.
" ராம்…. சாரா, இதுக்கே நோ,எஸ்க்யூஸ். " என மேலும் அவளை நோக்கி, " சாரி, சார் சொல்லலை, சாரி" எனக் கண்ணை மூடியவளை, " அப்படி என்ன செஞ்சுடு வேணாம், இப்படிக் கண்ணை முடிகிற, என்னைப் பார்க்க புடிக்கலையாக்கும் " எனச் சுவற்றோடு ஒட்டி நிற்க வைத்து, அவன் எதிரே மூச்சுக் காற்றுப் படும் அளவில் நின்று கேட்கவும், சட்டெனக் கண்ணைத் திறந்தவள் முகம் , அவன் பார்வை வீச்சிலேயே குப்பெனச் சிவந்தது, வேர்த்தது, அவளது அகண்ட கண்களுக்குள் தொலைந்தவன், சிரமப்பட்டுப் பார்வையை மேலே உயர்த்த, நெற்றியில் பூத்த அவள் வியர்வை துளிகள் , அவனை அழைத்தன.
வல்லவன் போல் ராம்,வாயால் ஊதி ,அந்தத் துளிகளை மறைய வைக்க முயற்சி செய்ய, அவை அவனை இளக்காரமாகப் பார்த்து மேலும் நான்கு பூத்தன.
" ஆரா பேபி, இதுகளுக்கு எவ்வளவு ஏத்தம் பார்த்தியாடா" என ,அவள்கண்களில் ஊடுருவி கேள்விக்கணையைத் தொடுத்தவன்,அவள் என்னவென்று திகைக்கும்போது, தன் இதழ் கொண்டே, முத்துகளாய் பூத்த வியர்வை துளிகளோடு அவன் சண்டையிட, மைவிழியாள் மயங்கி நின்றாள்.
" ராம், நோ" என அவள் சொல்வதாக, நினைத்துக் காற்றை மட்டுமே கடத்த, கண்களில் சிரிப்போடு, தன் இதழ்களை அவள் இமைகளுக்கு இறக்கியிருந்தான் ஆதிராவின் அபிராம். அவள் உடலெங்கும் உணர்வுகள் உயிர்த்து, சிலிர்தோட பெண்ணவள் மேனி துவண்டது. அதைத் தன்னில் தாங்கிக் கொண்டவன், அவள் மறுப்புக்கெல்லாம் இடம் கொடுக்காமல் , சட்டென வாட்ரோப் மறைவிற்கு இட்டுச் சென்று, கண்டா நாள் முதல்.அவன் மூளை செய்யச் சொன்ன செய்கையை, அவள் முகத்தைக் கையிலேந்தி தன் முதல் முத்திரையையும் அவள் இதழ்களில் பதித்து விட ஆதிராவின் கண்கள் விரிந்து சிலிர்த்து நின்றன. கைகள் அவன் சட்டையைப் பின்புறமாகக் கொத்தாய்ப் பிடித்தது.
" அபி" என்ற அவன் அம்மாவின் சத்தத்தில், சட்டென அவளைத் தள்ளி விட்டவள் அவன் வழியை அடைத்து நிற்கவும், தாண்டி செல்லவும் முடியாமல், அவன் முகம் காணாமல் கண்ணைப் பொற்றிக் கொண்டு திரும்பி நின்றாள்.
அவள், வெட்கப் புன்னகையை, கண்ணாடியில் கண்டவனுக்கு, உன்மத்தம் பிடிக்க, மீண்டும் பின்னோடு சென்று அணைத்து, " ஐ லவ் யூ பேபி" என அவள் காதுகளில் கிசுகிசுக்க, ராம் ப்ளீஸ்." என்றவளின் வார்த்தைகள் அன்னத்தை விட்டு வெளியே வர மறுத்தன. அவன் அவள் மொழியைத் தனதாக்கி,
" ஆரா பேபி மஸ்து ஹை. படியா மஸ்து. அதுவும் இப்படிச் சிரிக்கும் போது, யே சீஸ் படியாஹை மஸ்து" எனப் பின்னிருந்தே அணைத்து, அவள் முகத்தைக் கண்ணாடியில் உயர்த்திக் காட்டவும், அவனணைப்பில் அவள், தங்களது பிரதி பிம்பம் என்ற போதும், ஒருவர் கண்களில் மற்றவருக்கான நேசத்தை முழுதாக உணர்ந்தார்கள்.
இரவு உணவை இரண்டு குடும்பங்களும் சேர்ந்து சாப்பிட, எல்லாருடைய முகத்திலுமே மகிழ்ச்சி. பழங் கதைகள் பேசி கதைக்க, ராஜன் சந்தடி சாக்கில் அவருடைய ஹிட்லர் லுக்கை பற்றியும் கிண்டலடிக்க, நாயகம் வெளியே விரைப்பை காட்டினாலும், உள்ளே மகிழ்ந்து இருந்தார்.
அவரவர் செட்டு மக்கள், சேர்ந்து கதைக்க, விளையாட என இருக்க, ராஜன், விஜயனைத் தனது பேச்சுலர் அறைக்குத் தனியாக அழைத்துச் சென்றார்.
" ராஜா, வேணாம்டா, நீ லிமிட்ல இருக்க மாட்ட, மாமா அத்தை, எல்லாரும் இருக்காங்க. கஸ்தூரிக்கு தெரிஞ்சது பத்து நாளைக்குப் பட்டினி தான். எனக்குக் கல்யாண நாள் வேற வருது. குடும்பத்தில கலகத்தைத் தூண்டி விட்டுறாத சாமி" எனப் பதட்டமடைய.
" டேய், இன்னைக்கு லிமிட்லாம் தாண்ட மாட்டனாகும், உன் மேல சத்தியம். ஒரு பெக் மட்டும். இந்த வீட்டுக்கு வரவுமே, பழைய சந்தோஷம் வந்த மாதிரி இருக்குது. சும்மா பழசை பேசிட்டு இரு, போதும்" எனக் கைலாஷ் க்ளாஸ் டம்ளரோடும், விஜயன் வேடிக்கையும் பார்த்திருக்க, ராஜன் கனவுலகில் மிதந்தவர், சந்தன் கட்டில் பாருவுடனான இனிமையான நேரங்களை, மனம் திறந்து பகிர ஆரம்பித்தார்.
" முன்னையெல்லாம் , பாருவை நினைச்சவுடனே முதல்ல சந்தோஷம், அப்புறம் அவளை மிஸ் பண்ணதை நினைச்சு சோகமாவேன், பயங்கரமா துக்கம் ,கோபம் எல்லாமே வரும்டா. நான் அது பாருவை இழந்ததுன்னு நினைச்சிருந்தேன். ஆனால் அது பாரு மட்டும் இல்லை, அப்பா, அம்மா, நீ, உங்கள் பாசத்தை எல்லாம் இழந்தது தாண்டா" எனப் பேசிக் கொண்டே செல்ல, விஜயனுக்குத் தான் மனச்சுமை ஏறியது. தான் பெற்றவர்களைச் சமாதானப்படுத்துவதை இன்னும் கொஞ்சம் முயன்று இருக்கலாமோ என்றும். அட்லீஸ் பைரவியை இரு ஆண்டுகளுக்கு முன் பெங்களூருவில் வைத்து சந்தித்தையாவது சொல்லி இருக்கலாம் எனக் குற்றவுணர்வு தோன்ற, வரிசையாக மதுவை உள்ளே தள்ளிவிட்டார்.
" ராஜா, என்னை மன்னிச்சிடுடா, நான் தாண்டா உனக்குத் துரோகம் பண்ணிட்டேன்" என வழக்கமாக ராஜன் சொல்லும் குற்றச்சாட்டுகளைத் தானே சொல்லி உளறவும், "அதுவும், நான் குடும்பமா இருக்கும் போது, நீ தனியா நிற்கிறியேன்னு அவ்வளவு அழுதிருக்கேன்டா. அதுனால தான், வெட்டிங் ஆன்வர்ஸரி கூடக் கொண்டாட மாட்டேன்" எனக் கண்ணீர் விட,
" இது என்ரா வம்பா போச்சு, ஓவரா போறானே, கஸ்தூரிக்கு தெரிஞ்சது, என்னைப் பிச்சு போடும், ஒழுக்கமானவனாட்டம் அத்தனை பேசினான். சான்ஸ் கிடைக்காத தான் பய வாலை சுருட்டிக்கிட்டு இருந்திருப்பானாட்டத்துக்கு" என்றவர் , தனது அறையிலேயே நண்பனைப் படுக்க வைத்து, விளக்கை ஆப் செய்து, கதவை மூட, அப்போதும், " நான் உனக்குத் துரோகம், பண்ணிட்டேன்டா. தங்கச்சிமா" என ஆரம்பிக்க, இவர் கதவைச் சாத்திவிட்டு வெளியே மொட்டை மாடிக்கு வந்தார்.
, ராஜனின் தங்கச்சிமா என்ற புலம்பலும் , பிறையாய் வளர்ந்து நின்ற நிலவும்,பாருவின் நெற்றித் திலகத்தை நினைவு படுத்த, இன்று மனைவியை நினைத்த மாத்திரத்தில், உதட்டில் தவழ்ந்த புன்னகையோடு, நிலவை பார்த்தபடி நாற்காலியில் சாய்ந்திருந்தார்.
அபிராம், தனது அப்பாவைத் தேடி வர, "தூங்குறான்டா, மாமாவோட பேசிட்டு இருக்கான்னு அம்மாட்ட சொல்லிப்போடு " என மீண்டும் அவர் நிலவில் லயிக்க, அபிராம் அமைதியாக ஓர் மென்னகையோடு இறங்கிவிட்டான்.
ஆதிராவிடம், " உங்கப்பு, செம ரொமான்டிக் மூட்ல இருக்கார்" எனக் காட்டியவன், " ஆண்டியை போன் போட சொல்லு" என்றான்.
" அவங்களுக்கே மணி அடிச்சிடும்" என ஆதிரா சொல்லவும், அவளது போனில் பைரவி அழைக்கவும் சரியாக இருந்தது.
" ஆயி, உங்களுக்குச் சௌ உமர். இப்ப தான் உங்களை நினைச்சேன்" என்றவள், இருங்க எனக் கைலாஷை ஒரு போட்டோ எடுத்து அனுப்ப, " அடி, வாலு" என்றார். " என்ஜாய் ஆயி, உங்க ஆளுக்குப் போன் போடுங்க, ஷாயாரி கூடச் சொல்லுவார் " எனக் கிண்டலடித்து விட்டு ஒரு ஸ்டிக்கரையும் அனுப்பி விட்டாள்.
"ஆரா பேபி, நான் வேணா, ஒரு ஷாயாரி சொல்லவா, பாதியில் விட்ட இதழ் கவிதை" என அவன் விஷமமகாகக் கேட்கவும், "க்யா" என்றால், அவன் அவள் இதழை பார்க்கவும், சட்டென அவளுக்குப் புரிந்தது, "பிச்சு போடுவேன்" எனக் கேஆர் பாணியிலேயே, ,அவனை விரட்டியவள், பெரியவர்களோடு சேர்ந்து கதைக்கச் சென்றாள் . சௌந்தரியும், நாயகமும் கவுண்ட்டர் கொடுத்துக் கொண்டே, பழைய நிகழ்வுகளைச் சொல்லும் போது ஆதிரா ரசித்துக் கேட்பாள். அதுவே அவர்களுக்கு அவளைப் பிடிக்கக் காரணமானது.
பைரவி, மகள் சொன்னதிலேயே, கணவரோடு பேச, ஆசை வர, பேச்சை எப்படி ஆரம்பிப்பது எனத் தெரியாமல், " படே அச்சே" பாடலை, கைலாஷ்க்கு அனுப்பி விட்டார். மொபைல், ஆதிரா கீ ஆயி… என ஒளிர்ந்து அனைய, ஆவலாகவே எடுத்துப் பார்த்துப் பாடலை ஓட விட்டவர், கண்ணை மூடி அதில் லயித்திருந்தவர், அது முடியவும், " ஆதிரா கி ஆயி" என அழைத்து விட்டார். "கியா ஜி" என அவர் முதலில் புரியாதது போலக்கேட்க, "படே அச்சே லக்ட் ஹைங் " என்று மட்டும் சொல்ல,மீண்டும் "க்யா" என அவர் கோபமாகக் கேட்டார்.
" ஆதிரா கி ஆயி, எதுக்கு இவ்வளவு கோபம், நீங்க அனுப்பி விட்ட பாட்டைச் சொன்னேனுங்க, படே ஆச்சே ஹை" என அவர் மிதமான போதையில் லயிக்க, "ஜி, ஜி" என இருமுறை அழைத்தவர், பதில் வராததால், குழறிய பேச்சிலிருந்தே யுகித்தவர், "ராஜ்" என்று அழைக்க, கைலாஷ் சுதாரித்தார்.
மீண்டும், "ராஜ் கேட்கிறிங்கள்ல, ராஜ் லிமிட் தாண்ட மாட்டேன்னு சத்தியம் பண்றது, அடுத்தத் தடவை அது காத்துல தான்.இனி ட்ரின்க் பண்ணா போன் பண்ண மாட்டேன்.என் கூடப் பேசவே ட்ரின்க் பண்றிங்க... "ராஜ், சுன்தே ஹை நா " எனப் பைரவி கேட்கவும்,
"ஹாங் பாரு " என அவர் குளறலாகப் பேச, "பாரு தான்,உங்க பாரு தான் , பேசாமல் போய்ப் படுங்க "எனக் கட்டளையிட்டார். சரியாக ராஜனுக்கு அப்பத்து தான் மது வேலையைச் செய்ய ஆரம்பித்து இருக்க, பேச்சு, பாதி நினைவிலும், பாதிக் கனவிலுமாகத் தோன்றியது. தலையைத் தட்டி யோசித்தும் புரியாதவராக,மீண்டும் பாடலை ஒலிக்கவிட்டு கனவுலகிலே சந்தன் கட் பறந்தார்.
அடுத்த நாள்,உணவின் போது, "விஜயா ,அது யாருடா இந்த புது தங்கச்சிமா " என் கேட்கவும்,விஜயனுக்கு சாப்பிட்டது புரை ஏறியது. அவர் தலையில் தட்டி, தண்ணீர் கொடுத்த கஸ்தூரி, "அவிகள்ட்ட தான் அண்ணன், கதவை அடைச்சுப்போட்டுட்டு , போன்ல பேசுவாங்க, கேட்ட தங்கச்சிக்கிறது, நீங்களே என்னனு விசாரிங்க " எனக் கஸ்தூரி கோர்த்துவிட, விஜயன் வசமாக மாட்டினார்.
ராஜன், விஜயனை முறைத்துக்கொண்டு, அவர் போனை வலுக்கட்டாயமாக வாங்கி, தங்கச்சிமா எனச் சேமித்த வைத்த எண்ணிற்கே , அவர் டேய , டேய " என ஆட்சேபித்ததை கண்டுக் கொள்ளாமல் அழைத்தார். அழைப்பில் யாரென அறியாமல் அந்த முனையில் பைரவி, "பாய் சாப் " என விழித்தார்.
விஜயன் மாட்டிக்கொண்டாரா ...பார்ப்போம்.
நிலவு வளரும்.
No comments:
Post a Comment