யார் இந்த நிலவு-26
கே ஆர் கோட்டையை முற்றுகையிட்டு, மந்திர வார்த்தையாய், ஒரு சொல்லைப் பயன்படுத்தி, கைலாஷ் ராஜனின் மனக்கதவையும் திறந்து அதிரடியாய் , கொங்கு நாட்டுக்குள் உள்ளே நுழைந்தான், கொங்கணி மண்ணில் பிறந்த பிறந்த போஸ்லே குடும்பப் பெயரைத் தாங்கி நிற்கும் ஆதர்ஷ் ராஜ்.
ஆம் , கே ஆர் கோட்டையின் வாசலில், இவரின் உதவியாளர் சம்பத் , சற்று பவ்யமாகவே சென்று, ஐம்பது கார்களின் அணிவகுப்பில் நடுநாயகமாக இருந்த விலையுயர்ந்த வெளிநாட்டுக் காரில் , காதில் ப்ளு டூத் இயர் போன் மாட்டியபடி, இதழில் தவழும் இளமுறுவளோடு , இவ்வளவு பெரிய அமளியை ஏற்படுத்தியிருக்கிறோமே என்ற பதட்டம் சிறிதுமின்றி, ரிலாஸ்டாக இளம் ராஜகுமாரனை போல் அமர்ந்திருந்தான் ஆதர்ஷ் ராஜ்.
எந்தக் கணமும், கே ஆர் அழைப்பார் என எதிர் பார்த்திருக்க, அவர் அவனுக்குத் தகப்பன் சாமி கைலாஷ் எனக் காட்டி, அவரும், " வெயிட் பண்ணட்டும், நாமளும் யாருன்னு காட்டுவோம்" என வைத்து விடநடுவிலிருந்தவர்களுக்குத் தான் பதட்டம்.
ஆதர்ஷின் காரியதரிசியிடம், தன் முதலாளி சொன்ன தகவலைக் கடத்தினார். ' இரண்டு பேரும் ஒருத்தருக்கு, ஒருத்தர் சளைச்சவிக இல்லை போல" என அந்த இளைஞனும் புலம்பி விட்டுச் செல்ல, மில் தொழிலாளர்கள், அடுத்த ஷிப்டுக்கு, வருவோர் , போவர் என அது ஒரு கூட்டம் சேர்ந்தது.
ஆதர்ஷின் அஸிடென்ட் விசயத்தைச் சொல்லவும்" ஓகே, என்ன இருந்தாலும் பெரியவர், கைலாஷ் ராஜ், நெற்றிக் கண்ணைத் திறக்கும் முன்ன, நானே கூப்பிடுறேன்." என்றவன், அவருடைய பர்சனல் நம்பருக்கு அழைத்து விட்டான்.
சற்று நேரம் அடித்த பின், போனை எடுத்தவர், " ஒரு பிஸ்னஸ் மேனுக்கு, அப்பாயிண்மென்ட் இல்லாமல், இப்படி வர்றது அழகில்லை மிஸ்டர் போஸ்லே. பிஸ்னஸ் எதிக்ஸ்க்கு எதிரானது. இது ஒண்ணு உங்களுக்கு எதிரான இம்பிரஷனை உருவாக்கும் " என்றார் கறாராக.
" நமஸ்கார் பாஸ், நான் பிஸ்னஸ் மேன் கே ஆரையே பார்க்கவே வரலையே . நோ பிஸ்னஸ் டாக்ஸ். உங்க ஸாஸுமா, ரமாபாய் போஸ்லேக்கிட்ட இருந்து செய்தி கொண்டு வந்திருக்கேன். என்னைச் சந்திக்கிறதுல உங்களுக்கு நிறைய லாபம் இருக்கு. இது நாள் வரை உண்மை நினைச்சது, பொய் ஆகலாம். தி கிரேட் கே ஆர்கிட்ட சொல்லப் பயந்துகிட்டு மறைச்சு வச்சிருக்க உண்மையை உடைச்சு சொல்ற ஒரே தைரியசாலி ஆதர்ஷ் ராஜ் ஆக இருக்கலாம். உங்க பாருவுக்கு என்ன ஆச்சுன்னு கூடத் தெரிஞ்சுக்க நீங்க விரும்பலையா" என்ற கடைசி அஸ்திரத்தில் கே ஆர் தாக்கப் பட்டார். அவர் அதிர்ந்து பேச்சிழந்து நின்ற நேரத்தைச் சரியாகப் பயன்படுத்திக் கொண்ட ஆதர்ஷ், " தமிழர்கள், விருந்தோம்பலில் சிறந்தவங்கன்னு சொன்னாங்க. உங்க குடும்பத்து வாரிசையே வெளியே நிறுத்தி வச்சிருக்கீங்களே" என அவன் அடுத்த அம்பையும் விடவும், அது சரியான இலக்கை அடைந்து, " சரி வாங்க . " என மட்டும் அழைப்பு விடுத்தவர், சம்பத்துக்கும் கட்டளையைப் பிறப்பித்து இருந்தார்.
சம்பத் ஆதர்ஷை பேட்டிக் கண்டு, " சார், எல்லாக் காரும் உள்ள போகனுமா. எங்க செக்யூரிட்டி அமைப்பையும் நீங்க மதிக்கனும்" எனவும். ஆதர்ஷ், தன் உதவியாளரைப் பார்க்க,
" சார் காரைத் தவிர, இன்னும் இரண்டு கார் இங்க இருக்கும், மற்றது, உள்ளே ட்ராப் பண்ணிட்டு, வெளியே வந்துரும். நீங்கள் செக் பண்ணிக்கலாம்" எனப் பேச, பத்து காரை மட்டும் அனுப்புவதாக, சம்பத் பேரம் பேசினார். மனதிற்குள், என்ட்ரியே, இப்படியா, என அதிர்ந்தார். அவர்கள் அனுமதித்தபடியே ஆதர்ஷ் உள்ளே வர ஒப்புக் கொண்டான்.
கே ஆர் மாளிகையில், அரை வட்டமாகப் போடப்பட்டிருந்த ஷோபாவில், கே ஆர் நடுநாயகமாக அமர்ந்திருக்க, ஒரு புறம் தாத்தா, ஆத்தா ஜோடியாகவும், மறுபுறம், விஜயன், அபிராம், அப்பா, மகன் ஜோடியும் அமர்ந்திருந்தனர். ஆதிரா, ரஞ்சனியை மாடிக்கு அனுப்பி விட்டனர். கௌரி ஓர் மென்னகையோடே, ப்ருந்தாவனக் கண்ணனைக் கண்டு ரசிக்கும் யசோதையாக நின்றிருக்க, இது யாரு புதுசா என்பது போல் கஸ்தூரி பயந்திருந்தார்.
சத்தியன் தான் ஓட்டும் கே ஆரின் வாகனத்தை, செட்டில் நிறுத்தி விட்டு, வாசலில் தயாராக நின்றான்.
இந்தக் கேப்பில் விஜயனின் பைரவிக்கு அழைத்து விவரத்தைச் சொல்ல, " பாய்சாப், ஒரு ஹெல்ப், நான் அந்த முல்காவை பார்த்ததே இல்லை. வீடியோ கால் போடுறீங்களா. " எனவும் சரி என ஒத்துக் கொண்டவர், தன் மொபைல் வழியாக, பைரவிக்கு லைவ் ரிலே காட்டிக் கொண்டிருந்தார். பைரவி யாரவன் எனும் கேள்வியோடு உன்னிப்பாகப் பார்த்துக் கொண்டிருந்தார்.
கே ஆர் மாளிகை வாசலில் வரிசையாக முதலில் மூன்று வாகனங்கள், கடந்து போக, நான்காவது வாகனமும், அதைத் தொடர்ந்த இரண்டு வாகனங்களும் கேஆர் வீட்டு வாசலில் நின்றது, அதைப் பின் தொடர்ந்து, ஒரு வண்டி மட்டும் நிற்க, மற்றவை சொன்னது போலவே வெளியே கிளம்பி விட்டன.
கருப்புச் சீருடை ஆட்கள், முன், பின் வாகனங்களிலிருந்து, இறங்கிப் பாதுகாப்பை உறுதி செய்ய, நடுவிலிருந்து காரிலிருந்து ஆதர்ஷ் இறங்கினான். கறுயானை வண்ணத்தில் கோர்ட், சூட், உள்ளே வெள்ளைச் சட்டை, கூலர்ஸ் சகிதமாய், ஆறடி உயரமும், எக்ஸர்ஸைஸ் பாடியும் இருந்த போதும், முகம் இளங்குருத்தாகத் தான் இருந்தது. அதுவும் இன்று அவன் முகத்தில் குடி கொண்டிருந்த கனிவு, அவன் அழகையும் கம்பீரத்தையும், இன்னும் அதிகப்படியாகக் காட்டியது.
மாடி பால்கனியிலிருந்து, பார்த்த ரஞ்சனி, " அண்ணி, இங்க வந்து பாருங்க, என் ஷாகித் பேபி மாதிரியே செம டக்கரா இருக்கானுங்க" எனக் குதிக்க, " சும்மா இரு, ரஞ்சி, மை தோ, டரி ஹுயி ஹூம்" என ஆதிரா அவனை மிரட்சியாகவே பார்த்துக் கொண்டிருந்தாள்.
காரிலிருந்து இறங்கியவன், பேச்சுக் குரல் கேட்டு மேலே பார்த்தவன், நொடி நேரத்தில் ஓர் வசீகரச் சிரிப்பையும் உதிர்த்து விட்டு, வீட்டை நோக்கி நடக்க, இருவர் மட்டுமே அவனோடு உள்ளே வந்தனர். அவன் பார்வையில் ரஞ்சி," ஹாய், ஹாய்" என நெஞ்சில் கை வைக்க, ஆதிரா சட்டெனத் தன் முகத்தை, அவனுக்குக் காட்டாமல் மறைத்தாள்.
சத்தியன், கையை நீட்ட, " பேமலியை மீட் பண்ணும் போது, ஸ்மைஸ் மட்டும் தான் ஆயுதம் " எனச் சத்தியனையும் ஓர் புன்னகையில் ஆஃப் செய்து விட்டு , வீட்டுக்குள் நுழையும் முன், நிலைப்படியைத் தொட்டு வணங்கி முன்னேறியவன், கே ஆரை விடுத்து, தாத்தா, ஆத்தா காலில் விழுந்து வணங்கி, " என்னை ஆசீர்வாதம் பண்ணுங்க, தாத்தா, ஆத்தா" எனப் பாசமாக அழகு தமிழில் அவன் குரல் கேட்கவுமே , ' யாரோ, எவனோ, என்ன மொழி பேசுவானோ, என யோசித்துக் கொண்டிருந்தவர்கள், " நல்லா மகராசனா இரு கண்ணு" என நாயகம், சௌந்தரி அவன் தலையில் கை வைத்து ஆசிர் வாதம் செய்தனர்.
அப்படியே ஷோபாவின் கீழ் ஒரு கால் மடக்கி மண்டியிட்டு குனிந்தவன், தாத்தா, ஆத்தாவை இரு கைகளாலும் அணைத்துக் கொண்டு, " பெரியவங்க ஆசீர்வாதம் , அதை விட என்ன வேணும்" என்றவன், எழுந்து, உதவியாளரிடமிருந்து அலங்கரிக்கப்பட்ட பழக்கூடையை, வாங்கி அவர்களிடம் கொடுத்தவன் , " என் நானிமா, பெரியவங்களையும்,குழந்தைகளையும் பார்க்கப் போகும் போது, வெறுங் கையோடு போகக் கூடாதுன்னு சொல்லுவாங்க. " எனப் புன்னகையோடு நீட்டியவன், அவர்கள் கை வைக்கவுமே, பின்னால் நின்ற கௌரி மாஸியிடம் அதை வாங்கப் பணித்தான். 'ரொம்ப ஓவரா பண்றானே ' என மனதில் பொருமினான் அபிராம்.
அதன் பிறகே கே ஆரிடம் வந்தவன், மற்றொரு ரிப்பன் சுத்தப்பட்ட பரிசை, " பாஸ், இது உங்களுக்கு, உங்கள் ஸாஸும்மா, ஐ மீன் மாமியார், ரமாபாய் கணபத்ராய் போஸ்லே, தன் தாமாஜ்ஜிக்குக் கொடுக்கச் சொன்ன அன்பளிப்பு." என அவரிடம் நீட்டவும், கைலாஷை பெற்றவர்கள் இருவரும் அதிர்ந்து பார்த்தனர்.
கைலாஷ், ஆதர்ஷை பார்த்த கணம் முதல் நெகிழ்ந்து இருந்தவர், ஆதர்ஷ் சொன்ன, மாமியார் என்ற வார்த்தையில் உணர்ச்சி வயப்பட்டவராக, " அவங்க மகளே இல்லைனாலும், என்னை அவங்க மருமகனா நினைக்கிறாங்களே. என் நன்றியும், வணக்கத்தையும் சொல்லிடுங்க" என்றவர், அதை வாங்கிக் கொண்டு தன் அருகில் அமரச் சொல்லி, விஜயனையும், அபிராமையும் அறிமுகப் படுத்தவும்,
" உங்களைப் பற்றியும் நானிமா நிறையச் சொல்லியிருக்காங்க மாமாஜி . நீங்க பைரவி பாய்க்கு படே பய்யாவா இருந்து, நிறைய உதவி செய்திங்கன்னு. நானிமா சார்பா, உங்களுக்கும் சுக்ரியா " என நெஞ்சில் கைவைத்து , தலை வணங்கியவன். " ப்ரோவை தான், பெங்களூர்லையே பார்த்துட்டேனே. நைஸ் டூ மீட் யூ அகைன்" என்றான்.
கஸ்தூரி முதலில் பயந்தவர், பால்வடியும் முகத்தோடு, மகனை விடவும் வயதில் இளையவனாக வந்தவன், தன் கணவரை மாமாஜி என்று அழைத்திலேயே, வீட்டுக்கு வந்த பிள்ளை எனத் தண்ணீர் கொடுத்து உபசரித்தவர், பழங்கள், சில மராட்டிய பதார்த்தங்களையும் கௌரி எடுத்துத் தர, நன்றி நவின்ற படி, ஒரு ஸ்வீட்டை மட்டும் எடுத்துக் கொண்டான்.
ஆதர்ஷ் கடந்தகால நிகழ்வுகளை, ஒவ்வொன்றாகக் கொளுத்திப் போட்டான்.
" நீங்க பைரவிபாயை, எவ்வளவு ஆபத்துகளுக்கு இடையில், தைரியமா, ரிஸ்க் எடுத்து ஷாதி பண்ணிக்கிட்டிங்கன்னு, உங்களை என் நானிமா, பெருமையா பேசுவாங்க" என ஆதர்ஷ் அடுக்கிக் கொண்டே போனான்.
காணொளி வழியாக, ஆதர்ஷை உன்னிப்பாகக் கவனித்த பைரவிக்கு நெஞ்சில் ஏதோ செய்தது. தனக்குக் கொடிபிடிக்கும் யாரிவன், இவன் நிச்சயமா ராதா மகன் இல்லை. இதில ஆயியோட சூழ்ச்சி என்னமோ இருக்கு" என யோசித்தவர், தன் பிரசவ காலத்தை யோசித்தும் சரியாக நினைவில் வரவே இல்லை. ஆதிராவையே, அவள் முகம் பார்த்துச் சிரிக்க ஆரம்பித்த பிறகு தான் அவருக்கு நினைவிலிருந்தது. ஜெயந்தின் சூழ்ச்சியால், உடல் நொந்துபோயிருந்தவருக்கு, கைலாஷ் பற்றிய அதிர்ச்சியில் மனமும் பேதலிக்க, அவரைப் பாதுகாத்துப் பிரசவம் பார்க்கும் முன், ரமாபாய் படாத பாடு பட்டுப் போனார்.
ராஜன், " சாஸும்மா, என்னைப் பத்தி பெருமையா பேசறது இருக்கட்டும். இப்ப என்கிட்ட இருந்து என்ன எதிர் பார்க்கிறாங்க. பாருவுக்கு என்ன நடந்ததுன்னு சொல்றேன்னு சொன்னிங்களே அதைச் சொல்லுங்க " என அவர் இறுகிய முகத்தோடு கேட்கவும், "அதைச் சொல்லத்தான் வந்தேன்,அவங்களோட சுவடே இங்க இல்லையே " என ஆதர்ஷ் வருத்தப்படவும், "நீங்க என்ன சொல்ல வரீங்க" என்றவரின் குரலில் சுருதி கூடியிருந்தது.
" ராஜா, அன்னைக்கு நீ சொன்ன அந்தப் பாருவும், இந்தப் பைரவியும் ஒரே பொண்ணா. இல்லை வேறவேற பொண்ணுங்களா. இதுனால தான் ராஜியை மறுத்தியா. விஜயா நீயும் மறச்சிட்டியே" எனப் பாலநாயகம் அடுக்கடுக்காகக் கேள்வி கேட்க,
நாரதர் வேலையை நன்றாகப் பார்த்திருந்த, ஆதர்ஷ், " சாரி பாஸ், பெரியவங்களுக்கு விசயமே தெரியாதோ. நான் தான் உளறிட்டனோ." என வினையமாகவே கேட்டான். கண்களில் ஓர் எள்ளலும் இருந்தது. இத்தனை நாள் தான் பாருவில் நினைவுகளிலேயே உருகி , மனைவி இடத்தை வேறு ஒருவருக்குத் தர முடியாது எனத் தனிமையில் கரைந்திருக்க, தான் பாரு மேல்வைத்திருந்த காதலையே ஒரு பால் டப்பா, கேள்வி எழுப்புகிறான் என ராஜனுக்குக் கோபம் வந்தது.
" என்னுடைய பர்சனலை, யார்க்கிட்டையும் பகிர்ந்துக்க வேண்டிய அவசியம் எனக்கு இல்லை. " என அன்று ஆதிராவிடம் காட்டிய அதே கண்டிப்பைக் காட்டியவர், " பை த வே, மிஸ்டர். போஸ்லே" எனவும் இடைமறித்த ஆதர்ஷ், " யூ கேன் கால் மீ ஆதர்ஷ், ஆதர்ஷ் ராஜ் தான், என் பெயர், போஸ்லே பீபீ மில்ஸ்காகச் சேர்த்துக்கிட்டது" என அவன் சொல்லவும்,
" ஆதர்ஷ் ராஜ்னு ஏன் சொல்றான். ராதா மகன்னா, ஆதர்ஷ் ராவ்ல சொல்லனும்" எனச் சிந்தித்த பைரவி, அவன் சாயல் யாரை ஒத்திருக்கிறது என ஆராய்ந்தார்.
அதே போல் அவனையே உறுத்துப் பார்த்த கைலாஷ், சற்று எரிச்சலாகவே, " நீங்க யாராவேனா இருந்துக்குங்க. நான் இன்னைக்கு உனக்கு அப்பாயிண்மெண்டே கொடுக்கலை. இவ்வளவு பிடிவாதமா மீட் பண்ணது , என்னோட பர்சனாலிக்குள்ள தலையை நுழைக்கத்தான், இது தான் உன் பிஸ்னஸ் டெக்டிஸ்னா, ஐயம் நாட் இன்டரெஸ்டேட், ப்ளீஸ் அவுட், இது என்னோட ஃபேமலி டைம்" எனக் கைலாஷ் ,இழுத்துப் பிடித்த பொறுமையோடு வாசலைக்கட்டி விரைப்பாகவே சொன்னார். விஜயன் தான் அமைதியாகப் பேசும்படி நாபனைகேட்டுக்கொண்டார்.
அவன், பிஸ்னஸ் பேச, இப்படி முறையைக் கையாண்டு வந்திருக்கிறானோ என மற்றவர்களும் சந்தேகமாகப் பார்க்க , ஆதர்ஷ், "என் பிஸ்னஸ் மட்டும் பார்க்கணும்னா, அதுக்கு நிறைய வழி இருக்கு, உங்ககிட்ட வரணும்னு அவசியமே இல்லை. , நானும் உங்க பேமலில ஒருத்தன், அதுனால தான் உங்க ஃபேமலி டைம்ல வந்தேன்" எனப் பதிலுக்கு,பதில் மனதில்பட்டதைப் பயமின்றிப் பேசினான்.
" நீ எப்போதிலிருந்து, என் ஃபேமலி ஆன" என்றதற்கு, ஒரு மர்மப் புன்னகையைச் சிந்தியவன்,
" உங்கள் அப்பாவும், அம்மாவும் என்னைப் பேரனை தத்தெடுத்தா, உங்களுக்கு நான் உறவு முறை, பேமலி இல்லையா" எனக் கேள்வி எழுப்ப,
" ஆமாம், கரெக்ட் தானே, இப்ப ஆதிராவை ராஜா, மகளா தத்தெடுத்துக்கிட்டா, நமக்கும் பேத்தியாகிறா இல்ல" என நாயகம் லாஜிக்காக ஒரு உதாரணத்தை வைத்து, ஆதர்ஷை ஆதரித்தார்.
" எக்ஷாக்ட்லி, அதே தான் தாத்தா. நீங்க தான் ப்ரில்லியண்ட். கேட்ச த பாயிண்ட் இமீடியட்லி. " எனத் தாத்தாவுக்கு ஐஸ் வைத்தவன்,
" அதே மாதிரி, பாஸோட மாமியார் என்னைப் பேரனா தத்தெடுத்தா, நம்ம பாஸ்க்கு நான் என்ன முறையாகுறேன். " என ஆதர்ஷ் வினவவும், " புடலங்கா ஆகுற. விசயத்து வா மேன்" எனக் கடுப்படித்தான் அபிராம். விஜயன் மகனை அடக்கினார்.
" கூல் ப்ரோ. பேசிட்டு இருக்கேன்ல, ரமாபாய் பேரனா தான், இங்க பாஸை பார்க்க வந்தேன். ஆனால் அவர், இந்த ஊரில் இன்னுமும் எலிஜிபில் பேச்சலரா, அவங்க ஆயி அவருக்குக் கல்யாணத்துக்குப் பொண்ணு எல்லாம் பார்த்திட்டு, பைரவிபாயோட ஷாதி ஆனதைக் கூட மறைச்சு ஒரு வாழ்க்கை தான் வாழறார்ங்கிறது, உண்மையில் எனக்கு ஷாக். ஏன் பாஸ், பைரவிபாயோட கணவர்ங்கிறதை, நீங்க ஏன் மறைச்சு இருக்கீங்க. உங்க கிட்டப் போயி, பைரவி பாய் பற்றி எதுக்குச் சொல்லனும்னு தோனுது. உங்கள் பெத்தவங்களுக்குக் கூட அவங்க மருமகளைப் பற்றித் தெரியலையே. அப்படி நீங்க சொல்லிக்கிற அளவு, அந்த மேரஜ், லீகலானது, உண்மையானது இல்லையா" எனக் கைலாஷின் பொறுமை எல்லை கடக்கும் கேள்வியை ஆதர்ஷ் கேட்டு விட்டான். அவன் அப்படிக் கேட்கவும் தான், ஆதிராவுக்குமே அதே கேள்வி மனதில் தோன்றியது. கைலாஷின் பதிலை அவளும் எதிர் நோக்கியிருந்தாள் .
ஆனால் ராஜனின் பொறுமை எல்லைத் தாண்டியது," ஷட் அப், யூ ப்ளடி. நீ யார்ரா என்னைக் கேள்வி கேட்க, என்னையும், என் பாருவையும் பத்தி என்ன தெரியும் உனக்கு. ஆமாம் இந்த ஊர்ல நான் , என் அப்பா,அம்மாட்ட, என்னைச் சுத்தி இருக்கவங்கள்ட்ட, எனக்குக் கல்யாணம் ஆனதைச் சொல்லவும் இல்லை, மறைக்கவும் இல்லை. ஆனால் அதுக்கு அர்த்தம், எங்க கல்யாணம் பொய்ங்கிறது இல்லை. எங்கள் காதல் தெய்வீகம், கல்யாணம் சத்தியமானது, சட்டப்பூர்வமானது." என்ற கைலாஷின் வார்த்தைகளில் பைரவிக்குக் கண்ணீர் பெருகியது. " ஐ லவ் யூ ராஜ்" என்றார்.
" இன்னைக்கும் பீபீ மில்ஸ்ல பைரவியோட புருஷனா, எனக்கு உரிமையுண்டு. அதுக்காகத் தான இரண்டு பக்கமும் போஸ்லேஸ் படை எடுக்குறீங்க.
என் பாருவே, போனதுக்கப்புறம், மற்றதெல்லாம் எதுக்குன்னு விட்டுட்டேன். பாருவை கல்யாணம் பண்ணதை சொல்ல வந்தப்ப, ராஜியோட எனக்குக் கல்யாணம் நிச்சியம் பண்ணியிருந்தாங்க. ராஜிக்கிட்ட, அவ்வளவு பக்குவமா, பருவைக் கல்யாணம் பண்ணதை எடுத்துச் சொன்னேன். சரிசரின்னு போயிட்டு, அவள் தன் வாழ்க்கையை முடிச்சுக்கிட்டா. எல்லாரும் என்னைக் குற்றம் சொன்னாங்க. சரி கட்டினவளுக்காவது உண்மையா இருப்போம்னு வந்தா, பாரு மட்டுமில்லை, அவங்க அம்மாவும் உயிரோட இல்லைனு தெரிஞ்சது. உலகமே வெறுத்துப் போச்சு. யாருக்காக வாழப்போறோம்னு, அவனுங்க அடிச்ச அத்தனை அடியும் , என் பாருவை நிராதரவா விட்டுட்டு வந்த எனக்கான தண்டனையா ஏத்துக்கிட்டேன். " என ராஜன் ஆக்ரோஷமாகப் பேசியவர்.
" கடவுள் அருளாள என் சாஸும்மா நல்லா இருக்காங்க. அதை என்கிட்டச் சொல்லவும், அவங்களுக்கு இருபது வருஷம் தேவைப்பட்டதா" என ராஜன், ஆதர்ஷ் மீது பாய்ந்தார். "ராஜா டென்ஷன் ஆகாத" என விஜயன் நண்பனைச் சமாதானப்படுத்திக் கொண்டே இருந்தார். ஆனாலும் அவர் கண்கள் சிவந்து கோபத்தைக் கொப்பளிக்க, இருபது வருட ஏமாற்றத்தில் ,பொங்கும் அவர் கோபத்தை, உணர்ந்த சௌந்தரி, " அதை ஏங்கண்ணு, அம்மாகிட்ட முதவே சொல்லலை" என மகனின் தோளைத் தொட்டார்.அந்த நொடியில், கோபம் உடைந்து
" எப்படிங்கமா சொல்றது. ஏற்கனவே ,ராஜியோட உசிரு என்னால தான் போச்சுன்னு, எல்லாரும் நினைக்கும் போது, பாருவோட மறைவைச் சொல்லி, உங்க இரண்டு பேருக்கும் மனகஷ்டத்தைக் கொடுக்க விரும்பலைங்கமா" எனக் கண்ணில் விரல்களை வைத்துக் கொண்டு, அவர் குலுங்க. பைரவிக்கு அங்கு ஆவி துடித்தது. இங்குச் சௌந்தரி மகனை அனைத்துக் கொண்டார்.
" இல்லைடா கண்ணு" எனச் சௌந்தரி ஒரு பக்கம் ராஜனை அணைத்துக் கொள்ள, எதற்கும் கலங்காத நாயகத்தின் கண்களிலேயே அன்று கண்ணீர். ராஜன் டென்ஷனாகவுமே, விஜயன் ஆதர்ஷின் இடத்தில் வந்து அமர்ந்து கொண்டார்.
" மிஸ்டர் போஸ்லே" என அபிராம் அவனை ஓரம் கட்ட, " கால் ஆதர்ஷ்" என மறுபடியும் சொன்னான். " எதோ ஒண்ணு இருந்துட்டு போ. இப்போ வேற எதுவும் பேசாத. மாமா .ஹெல்த்துக்கு நல்லதில்லை" என மரியாதையை விட்டு ஆதர்ஷை அபிராம் எச்சரிக்க,
" தெரியட்டும் ப்ரோ. எல்லா உண்மையும் தெரியட்டும். , நான் எல்லாத்துக்கும் ரெடியா தான் வந்திருக்கேன்" என அவனும் அதே போல் பதிலளித்தான்.
" ராஜா, கண்ட்ரோல் யுவர் செல்ஃப்" என விஜயன் ராஜனை உணர்ச்சி வயப்படாமலிருக்கச் சொல்வி தட்டிக் கொடுக்க,
" எதுவுமே இல்லாமல் போச்சுடா விஜயா. நான் வாழ்ந்த வாழ்க்கைக்கே அர்த்தம் இல்லையே. தலைமறைவா இருந்தாலும், எவ்வளவு ஆசையா இரண்டு மாசம், எவ்வளவு நிறைவா, சந்தன்கட் ல என் பாருவோட வாழ்ந்தேன். அதுக்கான அடையாளம் கூட எதுவுமே இல்லாமல் போச்சுடா" என ராஜன் கண்ணீர் விடவும்.
" ராஜ், நம்ம வாழ்க்கைக்கு அடையாளம் இருக்கு ராஜ்" என மற்றொரு புறம் கதறினார் பைரவி. இப்போதே கணவனிடம் சென்று விட மாட்டோமா' என ஏங்கியது அவர் உள்ளம்.
" ஹே, ஆயி பவானி, என் குடும்பத்தை, இந்த இழப்பும் இல்லாமல் ஒண்ணு சேர்த்து வை. என் உயிரைக் கூடப் பலிதான் கொடுக்குறேன்" எனக் கைகளைக் கூப்பி அவர் மன்றாட, ஆயி பவானிக்கு, பைரவியின் குரல் கேட்டது போலும்,
" பாபா" என அழுதபடி, மாடிப்படிகளில் இறங்கி ஆதிரா ஓடி வந்தாள். இவ்வளவு நேரம் பொறுத்தவளால் தன் காதலுக்கான அடையாளம் கூட இல்லாமல் போனதாகப் புலம்பியது, அவளைக் கடுமையாகத் தாக்கியது. அவளும் இப்போது தானே காதலை உணர்ந்து இருக்கிறாள்.
அந்தக் கவலையிலும் " ரஜ்ஜும்மா, பார்த்துடா" என்றார் கைலாஷ். தாய்மடி தேடி ஓடி வரும் கன்றாக அவரை நோக்கி ஓடி வந்தவள், ஷோபாவில் அமர்ந்திருந்தவரின் முன் முழங்காலிட்டு அமர்ந்து, " நான் இருக்கேன்ல பாபா, உங்க பாருவோட அம்சமா" என அவர் முகத்துக்கு நேரே கேள்வி கேட்க,
" ஆமாம்டா ரஜ்ஜும்மா, நீ என் பாரு மாதிரி யே தான் இருக்க" எனப் பதில் தந்தார்.
" இல்லை பாபா, பாரு மாதிரி இல்லை, உங்க பாருவோட அம்சம் தான். உங்கள் காதலுக்கான சாட்சி தான். உங்க முல்கி தான். உங்க ரஜ்ஜும்மா, ராஜ்ஜோட முல்கி, பாபா வோட லாட்லி. ஆதிரா பிகே, பி ஃபார் பைரவி, கே ஃபார் கைலாஷ் ராஜ் . நான் உங்க மகள் தான் பாபா" என அவள் ஒவ்வொரு வார்த்தையும் சொல்லச் சொல்ல, " என்னடா சொல்ற, பாபா மனசு உடைஞ்சு போயிடுவேணோன்னு சமாதானம் சொல்றியா " என அப்போதும் நம்ப மாட்டாதவராகக் கேட்க, " நான் உங்க பொண்ணு தான் பாபா , பைரவிபாயி என்னோட ஆயி. " என மீண்டும், மீண்டும் சொல்ல,
இதைத் தான் சொல்ல வந்தியா என்பதைப் போல் ஆரதர்ஷை தேடினார்.
" பாஸ், அவள் சொல்றது உண்மை தான். ஆதிரா உங்க பொண்ணு, ஆயி பவானி, சொந்த பாபா கிட்டையே, அவருடைய முல்கியை ரொம்பக் காலம் முன்னாடியே சேர்த்துட்டாங்க" எனவும்,
"ரஜ்ஜும்மாவாடா, என் பொண்ணு. " எனக் கட்டிக் கொண்டவர், " அம்மா, என் மகள் தான்மா. இங்க பாருங்க, உங்க பேத்தி. அப்பா, உங்க பேத்தி தான் பா" என மகளை மீண்டும் அணைத்து உச்சி முகர்ந்தவர்.
திடீரெனப் புத்தியில் உரைக்க, " அப்ப உன் ஆயி. என் பாரு. என் பாரு உயிரோட தான் இருக்காளா. போன்ல பேசுற ஆதிரா கி ஆயி, பாருவா, பைரவியா " எனவும் அவள் தலையாட்ட, கௌரியைத் திரும்பிப் பார்த்து, ராஜன் கேட்க, அவரும் ஆம் என உறுதிப் படுத்தினார்.
மகளை, அணைத்து, ஆசை தீர உச்சி முகர்ந்து கொஞ்சியவர்,எழுப்பித் தன்னோடு ஷோபாவில் அமர்த்திக் கொண்டு, உன் ஆயி, இப்ப எங்க இருக்கா" என வினவினார்.
" ஆயி எங்க இருக்காங்கன்னு எல்லாம் எனக்கு எக்சாக்டா தெரியாது. ஒரு அனுமானம் தான்" என அவள் சொல்லவும்.
" இரு, நானே கண்டு பிடிக்கிறேன். உயிரோட இருந்துக்கிட்டு இருபது வருஷமா என்கிட்ட விளையாடுறாளா. " எனக் கோபமானவர் தன் போனிலிருந்து, ஆதிரா கி ஆயிக்கு போன் அடிக்க, எங்கேஜ்ட் டோண் கேட்டது.
ஆனால் அதே நேரம், குன்னூரிலிருந்து, ராமசாமி பதறியபடி, அபிராமுக்கு போன் அடித்தார்.
யாருக்கு என்ன ஆனது.
நிலவு வளரும்.
No comments:
Post a Comment