சிந்தா- ஜீவநதியவள் -18
ஊருக்கு மேற்கே காணி நிலமாம்.
நண்டா உழுது, நரியா வடம்
கொக்கா நட்டு, திரியா
எடுத்து எழுத முடியாமல்
ஏலம் பத்தி
என
ஆண்கள் வெள்ளை வேட்டியும், வேர்கள் அமைப்பின்
மகாலிங்கம் அய்யாவும், ராஜேஸ்வரி அம்மாளுமாக தங்கள் குலதெய்வத்தை வேண்டி, பிள்ளையார், பெருமாள்,
இருளி கிழவி
செங்கல் எடுப்பாகலாம்,
சிறுவீடு
சேவிக்கும் மக்களை
உள்ள
வெளியே எடுப்பாக!
தானங்கள்
மேலோகம் போகையிலே !
மேகங்கள் ஓடி
பொழுதை
காசுக்கு நூறு கரும்பை வாங்கி!
நட்டு, பயிராக்கி !
காலாங்கரை மடைத் திறந்து
பாலாப் பெருக
என அந்த ஊரின் பெண் தெய்வமான
" அம்மையே, அப்பனே ஒப்பிலா மணியே" என
நாடு செழிக்க
பெய்ய
பெய்ய
ஏற்ற
எடுத்த வேலை முடிய
ஆக்க
விதைநெல்லை ஊறப்போட்டு ,
தட்டிக் கொட்டி,
அள்ளி
அடி
புலி
நான் மாட்டேன் என்றாக!
நானூறு
முடியாது என்றாக!
முடிகள்
மச்சை திறக்கும்
கண்ணை
செல்வம்
என
ராஜேஸ்வரிக்குக் குனிய இயலாததால் அவர் தொட்டு முத்துவின் கையில் கொடுத்து நடச்சொன்னார். அவள் நானா எனத் தயங்கவும், " கன்னிப் பொண்ணு கை பட்ட வேகமா வளரும் பாக வையி " எனவும், அய்யனாரிடம் மண் வெட்டியை வாங்கிக் குமரன் குழியைத் தோண்டினான். " ஐயா, இதெல்லாம் செய்வீகளா" என அய்யனார் ஆச்சரியமாகக் கேட்கவும், அவன் சிரிக்க, " இந்தப் படிப்பைத் தான் இவுங்க ஐஞ்சு பேரும், ஐஞ்சு வருஷமா படிச்சாங்க " என்றார் நீரஜ். " பயிர் குழி தோண்டக் கூடவா படிப்பிருக்கு" என ஆண்டிச்சி இடக்கு பேசவும், "ஆமாம், இந்தச் செடிக்கு இம்புட்டு அகலம் வேணும்னு ,இவ்வளவு ஆழம் வேணும், இத்தனை நாளுல முளைக்கும், வளரும் அப்படின்னு, நெல்லுல புது ரகம் வருதில்ல, அது எல்லாம் இவுகளை மாதிரி படிச்சவுக ஆராய்ச்சி பண்ணிக் கண்டு பிடிச்சது தான் " எனச் சிவநேசன் அவர்கள் சந்தேகத்தைத் தீர்த்து வைக்க, குமரன் தோண்டிய குழியில், முத்துமணி செடியை நட, குமரன் அதற்கு அழகாகப் பாத்தி கட்டினான். அதுவும் முத்துவை வேலை வாங்கி அவன் பதமாகச் செடியை நட்ட பாங்கில், அய்யனாரே அசந்து தான் போனார். " ஆத்தி, ஐயா அவுகளை என்னமோன்டு நினைச்சேன். இம்புட்டுத் தெளிவா செடி நடுறீகளே" என அவர் பாராட்டவும். " அப்ப, என்னையும் உங்க இனம்னு ஒத்துக்குவீகளா, நான் பாஸாயிட்டேனா" என வினயமாக முத்துவைப் பார்த்தும் பார்க்காமலும் குமரன் கேட்கவும் , " அய்யா என்ன சொல்றீக" என அய்யனார் பதறினார். குமரன் நண்பர்கள், “சைக்கிள் கேப்புல ஆட்டோ ஓட்டுறான் பாரு” எனத் தங்களுக்குள் கமெண்ட் அடித்துக் கொண்டனர். " அது தான் விவசாயின்னு ஒத்துக்கிறீகளான்னு கேட்டேன்" எனக் குமரன் சமாளிக்கவும் , " அது தான் பட்டமே வாங்கி இருக்கீகளாமே, பண்ணைக்காரன் நான் ஒத்துக்கிட்டு என்ன ஆகப் போகுது" என்றார் அய்யனார். “அட, நல்ல விவசாயின்னு தான் பாராட்டி விட்டேன், வீட்டுக்கும், நாட்டுக்கும் நல்லது தானே “ என்றார் மகாலிங்கம். “என்னங்கய்யா நான் போயி என்ன சொல்ல” என அய்யனார் பெரியவரிடம் மட்டையாய் மடக்கினார். இந்த வேட்டி சட்டையை அவரைப் போட வைக்கவே குமரன் போராட வேண்டியிருந்தது, “ஐயோ, பெரிய ஆயாவும் போட்டு, நானு அதே மாதிரி உடுப்பு போடுறதா, அது மருவாதி இல்லை “ எனவும் ,”கிழவா சுத்தம்” என அமிர்தா அவனுக்கு மட்டும் கேட்கும் படி கமெண்ட் அடித்தாள். அவளை ஒரு பார்வை பார்த்து விட்டு, பிறகு குமரன், வேர்கள் அமைப்பு என ஒரு பிரசங்கமே நடத்தி, இதைக் கம்பியூட்டரில் போடுவோம் என ஆயிரம் கதை சொல்லி, சிவநேசன் சொல்லவும், அரை மனதாக ஒத்துக் கொண்டார். " இதில படிச்சவன், பண்ணைக்காரன் எல்லாம் கிடையாது, தொழில் சுத்தமா இருக்கான்னு தான் பார்க்கனும். என்ன வேலு ப்ரோ என்ன சொல்றீங்க " என வேலுவையும் அழைத்துக் குமரன் கருத்துக் கேட்கவும், " யார் சர்டிவிகேட் குடுத்தா என்ன, குடுக்கலைனா என்னா. அது தான் நினைச்சதை சாதிக்கிறீகளே" என முத்துவையும் பார்த்தபடி சொல்லவும், 'உங்க ஆதரவு இல்லாமலா நடந்துருச்சு " என்றான் குமரன். அமிர்தா குனிய வேண்டாம் என நீரஜே செடியை நட, அவர்களுக்கும், குமரன், முத்து உதவி செய்தனர். " சிந்தா அக்கா , வேலு ப்ரோ வாங்க" எனவும், " இருக்கட்டும் சார், நாங்க தானே எல்லாத்தையும் நடப் போறோம். உங்க கூட்டாளிகளை நடச் சொல்லுங்க" என வேலு சொல்லவும். " எங்க முன்னாடியும் ஒண்ணு நடுங்க" எனச் சிவநேசன் வலியுறுத்தவும், வேலு எல்லா வேலையையும் செய்ய, மகன், மகளோடு, சிந்தாவும் ஒரு கை மண்ணை அள்ளிப் போட்டாள். அவள் மண்ணைத் தள்ளும் போது, நிலத்தில் கிடந்து கருவை முள் அவள் விரலில் கீச்சி விட, குபு குபுவென இரத்தம் வந்தது. " சிந்தாமணி பார்த்து புள்ளை " என அவள் விரலை வேகமாகத் தண்ணீர் ஊற்றி அலசியவன், அவள் விரலை, தன் வாயில் வைத்துக் கொண்டான். இது தான் அவளறிந்த வேலு, சிந்தாவுக்குக் கண்ணைக் கரித்துக் கொண்டு வந்தது , " போதும், விடு. இந்தக் காயம் என்ன செய்யப் போகுது" எனக் கையை உருவியபடி மகளோடு எழுந்து கொண்டாள். அதன் பிறகு ஒவ்வொருவராய் நாற்றை நட, வந்திருந்தவர்களுக்கு வயலில் வைத்தே காலை உணவைப் பரிமாறினர். ராஜேஸ்வரி அம்மாளை கை தாங்கலாகச் சிந்தா தான் , தன் வீட்டுக்கு அழைத்து வந்தாள். வேப்ப மரத்தடியில் சேர் போட்டு அமரவைத்தாள், சுற்றி அவளது வீட்டைப் பார்வையால் அளந்த ராஜியம்மாள், " சிந்தா, உங்க அம்மா ராக்கு போகையில உனக்கு, பதினாலு வயசு இருக்குமா, அவளை மாதிரியே வீட்டை வச்சிருக்கடி. நல்லா லட்சுமி கடாட்சமா, உன் வீடு நிறைஞ்ச வீடு தாண்டி. எதுக்கும் கவலைப் படாத" என்றவரின் கையைப் பிடித்துக் கொண்டு, அவள் கண் கலங்கவும், " எதுக்குடி கண்ணில தண்ணீர்" எனச் சிந்தாவை மிரட்டினாலும், அவர் கண்களும் பனித்துத் தான் இருந்தது. " நீங்க இன்னைக்கு வரவும், எங்க அம்மாளே வந்த மாதிரி மனசு நிறைஞ்சு கிடக்கும்மா" எனவும், "அது என்ன அம்மா மாதிரி, நான் தாண்டி உன் அம்மா." என்றவர் அங்கே வந்த வேலுவை அழைத்து, " என் அம்மாவா பார்க்குறேங்கிறாளே, ஐஞ்சு வருசமா என் கூடப் பேசாமல் , நல்லாத் தான் இருந்தா, ஆனால் பத்து நாள் நீ முகத்தைத் திருப்பவும், என் மகள் பாதியா போயிட்டா பாரு. எதுவா இருந்தாலும், அவளோட மனசு விட்டுப் பேசு, சரியாகிடும். இப்படி முறைச்சுகிட்டு இருந்தா என்ன அர்த்தம்" என உரிமையாக அவனைக் கோவிக்கவும், " இல்லம்மா, அதெல்லாம் ஒண்ணும் இல்லை. அது தான் நீங்க சொல்லிட்டிங்கல்ல, இனிமே எல்லாம் சரியா போயிடும்" என்றான் வேலு. " அம்மாளுக்கு வாக்குக் கொடுத்தா காப்பாத்தனும், சிந்தா முகத்தை வாட விடாத. உண்மையில அவ கிடைக்கத் தக்கன பொண்ணு இல்லை, நீ போன பிறவில செஞ்சப் புண்ணியம். வைரம், வைடூரியம் தான் பத்திரமா வச்சுக்க" எனவும், சிந்தா, " இதோ வாரேன்" என உள்ளே ஓடிவிட, வேற யாரும் இல்லாததால் வேலு, ரகசிய குரலில் , " அரிய பொக்கிசம் தான் அதுனால தான் வீட்டுக்குள்ள பாதுகாப்பா வச்சு, சூனியக்கார கிழவியைப் பாதுகாப்புக்கு வச்சிருக்கேன். இன்னும் பத்து நாள் பாதுகாக்கனும், அவகிட்ட சொல்லிப் புடாதீக" என்றான் , " நீ ஏதோ திருட்டுத்தனம் பண்றேன்னு நினைச்சேன். சரியாத்தான் போச்சு, நேசன்கிட்ட சொன்னதுக்கு, புருஷன் பொண்டாட்டி விவகாரமுன்னு சொன்னானே, எல்லாரும் கூட்டுக் களவாணிகள் தானா" எனவும் ,"ஆமாம்மா, அவ பாதுகாப்புக்காகத் தான், அவகிட்ட சொல்லிப்புடாதீக " என வேலு கேட்டுக் கொண்டான் ."அவளை ரொம்ப அழுக விடாத. " என்ற ராஜியம்மா, குமரன் வண்டியோடு வந்து அழைக்கவும், " அடியே, சிந்தா, நான் கிளம்புறேன், ரொம்ப நேரம் நட்டமே நிற்க முடியலை" என்றார். அவளும் வேகமாக ஓடி வந்தவள், ஒரு தட்டில் புடவை ரவிக்கை, மஞ்சள் குங்குமம், பூ என வைத்துக் கொண்டு வந்தவள், " நீங்க சொல்லிக் கொடுத்தது தான். எங்க அம்மாளுக்கு வச்சுக் கும்பிட்டேன். நீங்க வாங்கிக்குவீகளா" எனச் சந்தேகமாகக் கேட்கவும் " குடுடி" எனக் கை நீட்டி வாங்கிக் கொண்டார். சிந்தா வேலுவை ஒரு பார்வை பார்த்து விட்டு, அவர் காலில் விழ, வேலுவும் சேர்ந்து விழுந்து வணங்கினான். " நல்லா, மகராசனா, மகராசியா நீண்ட காலத்துக்கு, ஒத்துமையா, நல்லா இருங்க" எனக் குங்குமம் வைத்து விட்டவர், அங்கே வந்த முத்துவுக்கும் பொட்டு வைத்து விட, அவள் விழுந்து வணங்கும் போதே, "பெரியம்மா என்னையும் ஆசிர்வாதம் பண்ணுங்க" எனக் குமரனும் விழுந்தான். அவனைச் சந்தேகமாகப் பார்த்தார் ராஜி, ஆனாலும் "நல்லா இருடா " என வாழ்த்தவும்,"இப்படியா வாழ்த்துவாங்க, மனசுக்கு புடிச்ச பொண்ணைக் கல்யாணம் பண்ணி சந்தோசமா இருடான்னு வாழ்த்துங்க " எனப் பெரியம்மாவுக்கே சொல்லிக் கொடுக்கவும், "அடேய் பெரியம்மாளை எங்கயும் மாட்டிவிட்டுடாத , உங்க பெரியப்பா என்னைக் கொன்னு போட்டுருவாரு" எனக் கலவரமாகவே சொல்லவும். "சிந்தாக்கா, நீங்களே சொல்லுங்க, பெரியம்மாவைப் பார்த்துப் பெரியப்பா பயப்புடுறாரா, இல்லை பெரியப்பாவைப் பார்த்துப் பெரியம்மா பயப்புடுறாங்களா " எனக் கேட்டுக் கொண்டே நடக்கவும், மற்ற மூவருமே வாய்ப் பூட்டுப் போட்டது போல் அமைதியாக வர, "இதில என்னடா சந்தேகம், உங்க பெரியம்மாளைப் பார்த்துத் தான் நான் பயந்து இருக்கேன், வயசான காலத்தில பொண்டாட்டியை கோவிச்சுக்க முடியுமா" என அங்கே வந்த மகாலிங்கம் அய்யாவே கேட்கவும், "அப்ப, வயசு காலத்தில பொண்டாட்டியை கோவிச்சுக்கலாம், ஆம்பளைக வைக்கிறது தான் சட்டம் , அப்படித்தானே ஐயா சொல்றீக " எனச் சிந்தா தன் மனக்குறையைக் கேள்வியாகக் கேட்கவும், "வேலு உன்கிட்ட கோவிக்கிறானா, அம்புட்டு தைரியமா வந்துருச்சு " எனக் கேலி பேசியவர், "உன்னைக் கோவிச்சுக்கிட்டு அவன் எங்க போகப்போறான். எல்லாம் சரியாகிடும்.ஒரே இனிப்பா இருந்தாலும் வாழ்க்கை திகட்டிடும், சண்டை சச்சரவுன்னு இருக்கணும் " எனச் சிரித்து விட்டு நடக்க முற்பட, "நான் இறக்கி விடுறேன் அய்யா " என வேலு மகாலிங்கத்தை வண்டியில் ஏற்றுக் கொள்ள , "நல்லாத் தான் சொல்லி குடுக்குறீக போங்க " எனக் கணவனைக் கடிந்த ராஜியம்மா, பெண்கள் கைதாங்கலாகப் பிடித்துவர, குமரன் வண்டியில் பிரம்ம பிரத்தனப்பட்டு ஏறி அமர்ந்தார். இன்று மாலையில் குதிரை எடுப்புக்குக் காப்புக் கட்டுகிறார்கள் அதனால் அதற்குப் பிறகு ஊரிலிருந்து யாரும் வெளியே போகக் கூடாது எனும் கட்டுப்பாட்டை மதித்து, வேர்கள் குழு குமரனைத் தவிர மற்றவர்கள் மதிய உணவுக்குப் பின் கிளம்புகின்றனர். இன்றைய தினத்தை மேலும் சிறப்பாக ஆக்க விரும்பிய ராஜேஸ்வரி அம்மாள். தங்கள் ஊருக்கு நல்லது செய்ய வேண்டும் என வயிற்றுப் பிள்ளையோடு வந்திருக்கும் அமிர்தாவுக்கு வளைகாப்பு பூட்டி அழகு பார்க்க ஆசைப்பட்டார். ஏனெனில் இன்னும் நீரஜ், அமிர்தா வீடுகள் அவர்களை அங்கீகரிக்கவில்லை. தென்வயலில் வேலைகளை ஆரம்பித்து வைத்து, ஆண்கள் , வேலையாட்களோடு அங்கேயே நிற்க, பெண்கள் மட்டும் சிந்தாவின் வீட்டுக்கு வந்தனர். ராக்காயி கிழவி இவர்கள் ஆர்ப்பாட்டத்தைக் காணச் சகிக்காமல் நேற்றே மகள் வீடு வரை சென்றிருந்தது. அதனால் பெண்கள் சுதந்திரமாகவே இருந்தனர். பாட்டுப் பாட வந்த கிழவிகள் இரண்டும், " உன் மாமியாக்காரி, திரும்ப வந்தானா வீட்டுக்குள்ள சேர்க்காத" எனச் சிந்தாவுக்குச் சொல்லிக் கொடுத்துச் சென்றனர் . அமிர்தா மற்றும் அவள் தோழிகள் இருவர், வேர்கள் பண்ணையில் ஒரு வீட்டில் வசிப்பவர்கள், முத்துவோடு நல்ல பழக்கம் இருந்தது. மூவருமாகச் சேர்ந்து சிந்தாவிடம் குமரனுக்காகப் பேசினர். " சிந்தாக்கா, எங்க பிரண்டுங்கிறதுக்காகக் சொல்லலை, குமரன் ரொம்ப நல்லவன். பெண்களை மதிக்கத் தெரிஞ்சவன்.நீங்கத் தைரியமா முத்துவை அவனுக்குக் கொடுக்கலாம்" என அமிர்தா நேராக உடைத்தே பேசினாள். " எனக்கு அவுக குணத்தைப் பத்தியெல்லாம் சந்தேகம் இல்லை . இத்தனை நாள் பழக்கத்தில் தெரியாதா. சாதரணம இவுக இரண்டு பேர் மட்டும்னா கூடச் சரின்னு, மத்தவுகளை எதுத்துக்கிட்டு கூட அனுப்பிடுவேன். இந்த விவசாயம், பெரிய வீட்டு ஆளுங்க, ஊர் மக்கள்னு இத்தனை பேர் வாழ்க்கை இதில சுத்தியிருக்கு. அதையும் யோசிக்கனுமுல்ல" என்றாள் சிந்தா. " நீங்க சொல்றதெல்லாம் சரி தான். நானும் நாளைக்கே கல்யாணம் பண்ணனும்னு சொல்லலை, அது தான் முத்துவோட படிப்பு முடிய இரண்டு வருஷம் ஆகுமே. அது முடியவும் செய்வோம். நீங்க இது நடக்கும்னு மனசில நினைங்க " என வலியுறுத்தினாள். முத்து அமைதியாகவே உட்கார்ந்து இருக்கவும், அமிர்தா அவளிடம், " நான் உனக்காக இவ்வளவு பேசுறேன். நீ எதுவும் பேசமாட்டேங்கிற" எனக் கேட்கவும். " அக்கா சொன்ன அதே காரணம் தான் அமிர்தாக்கா. இந்த ஜென்மத்துக்கு அவுகளை நினைச்ச மனசில வேற யாருக்கும் இடமில்லை. எங்க அக்காவையும், குடும்பத்தையும் என்னால மீற முடியாது. " என உறுதியாகப் பேசவும். சிரித்த அமிர்தா, "இப்போதைக்கு ஓகே. ஆனால் உன் கிழவன் ரொம்ப நாள் விடமாட்டான். இந்தக் குதிரையெடுப்புச் சொல்றீங்களே, அந்த மண்குதிரையிலேயே வச்சுக் கடத்தினாலும் கடத்துவான். அப்ப என்ன செய்வேன்னு பார்ப்போம்" எனக் கேலியாகவே சொல்லவும், அக்காளும் தங்கையுமே அதிர்ச்சியாகப் பார்த்தனர்.
மற்ற இரு பெண்களுமே சிந்தாவிடம், இனிமே முத்துவைப் பற்றிக் கவலைப் பட வேண்டாம், தங்கள் பொறுப்பு என்றவர்கள். " இந்த ஊர், குமரன் சொந்தக்காரங்க ஒத்துக்கலைனா, நீங்களும் குடும்பத்தோட வேர்கள்ல ஐக்கியமாயிடுங்க. " என மற்றொரு யோசனையும் சொல்லிச் சென்றனர். முத்து, அமிர்தாவோடே சத்யாவையும் தூக்கிக் கொண்டு பெரிய வீட்டுக்குச் சென்று அவளை வளைகாப்புக்குத் தயார் செய்யச் சென்றாள். அமிர்தா ஊருக்குக் கிளம்புவதால், அவளுக்கு நினைவுப் பரிசாக ஏதாவது கொடுக்க விரும்பிய சிந்தாவுக்கு , தங்களறையில் பரன் மேலிருந்த பித்தளை முளைப்பாரி சட்டி நினைவில் வந்தது. அதே போன்ற சட்டியில் பூக்கள் மிதக்கவிட்டுப் பார்வையாக எங்கோ வைத்திருந்ததைப் பார்த்த ஞாபகம், எனவே அதையே கொடுக்கலாம் என யோசனை வர, முத்துவை முன்னே அனுப்பிவிட்டு இவள் அதை எடுக்கச் சென்றாள். காலை எட்டி துணி சுற்றி வைத்திருந்த சட்டியை எடுக்க முனைய, பரனுக்கும் அவள் கைக்குமே ஒன்றரையடி தூரம் இருந்தது. வெளியே வந்து சேர், ஸ்டூளைத் தேட, சுப்பு இருந்த ஒரு சேரையும் சற்று முன் வந்து வயலுக்கு எடுத்துச் சென்றிருந்தான்.
தலையணைகளை அடுக்கி அது மேல் ஏறி, எட்டிப் பிடிக்க முயற்சிக்க, தலையணை சறுக்கி கீழே விழப் போனாள். எதேச்சையாக உள்ளே வந்த வேலு, " சிந்தாமணி " எனப் பதட்டத்தோடு அவளைப் பிடித்தவன். " அறிவு இருக்கா புள்ளை உனக்கு, இந்நேரம் நான் பிடிக்கலைனா, நெத்தி பொட்டு, பீரோல்ல முட்டியிருக்கோம். என்கிட்டச் சொன்னா எடுத்துத் தரமாட்டேன். என்னாத்துக்குத் தவ்விக்கிட்டு இருக்கவ" என அவன் கடிந்து கொள்ளவும், இத்தனை நாள் கழித்துக் கணவன் தன்னோடு பேசியதால், உணர்ச்சி வயப்பட்டவளாக, கோபமும் கூடவே வந்தது. " நான் எப்படிப் போனா உனக்கென்ன, என்னை எதுவும் கேக்கிற நிலைமையிலையா வச்சிருக்க. " என முகத்தைத் தூக்கி வைத்துக் கொண்டவள், மீண்டும் தலையணையை அடுக்கி ஏறப் போகவும். " இந்தா புள்ளை, என்னா ரொம்ப ஓவராப் பண்ற" எனத் தலையணை உதைத்து தள்ளியவன், " என்னா புள்ளை குறையா வச்சேன். என் பாடு எனக்குத் தான் தெரியும்" எனச் சத்தமாக ஆரம்பித்து, வார்த்தைகளை முணுமுணுக்கவும். " உனக்கு உன் ஆத்தா பேச்சு தானே உண்மையா போச்சு, உனக்குத் தெரியாமல் நான் என்னா செஞ்சிருக்கேன். அதுங்க ஒண்ணை ஒண்ணு விரும்புனா, அதுவும் என் குத்தம் தானா. உங்க எல்லாருக்கும் பழி போட நான் ஒருத்தி கிடைச்சிருக்கேன். " என அவள் அழவும். " ஏய் அழுகாத புள்ளை . கண்ணைத் தொடை. " என வேலு, பல்லைக் கடித்து வீராப்பாகவே சொன்னான். ஆனால் அவன் சொல்லச் சொல்ல அவளுக்கு அழுகை பொங்கி வந்தது. உன் கண்ணில் நீர் வழிந்தால் , என் நெஞ்சில் உதிரம் கொட்டுதடி எனப் பாடத் தெரியவிட்டாலும், தன் வேஷம், கலைந்துவிடும். மனைவியிடம் மாட்டிக் கொள்வோம் என்ற பயம் வந்தது வேலுவுக்கு.
No comments:
Post a Comment