Friday, 21 May 2021

ஹாசினி சந்திரா-7

 ஹாசினி சந்திரா-7

       ஹாசினி சந்திராவைக் காணவில்லை எனவும், ப்ரீத்தி முதல் கேள்வியாக, "பாயி இங்க அனிமல்ஸ், இன்ஸெக்ட்ஸ் எதுவும் டேஞ்சரஸ்ஸா இருக்கா" எனப் பதட்டமாகக் கேட்டாள்.

        " அனிமெல்ஸ் இருக்காதுமா, ஏதாவது இன்ஸெக்ட்ஸ் இருக்கும். பயப்படாத ஒன்னும் ஆகாது. நீ இங்கயே இரு, பவன் யூ கோ தட் ஸைட். " என்று விட்டுச் சாதாரணமாகத் தான் இவளோடு ஒரே தொல்லை என்ற சலிப்போடு முதலில் கிளம்பினான் அவன் . ஓடைக்கு முன்னால் அவளது கொலுசு கிடைத்தது. அதைக் கொண்டு அந்தத் திசையில் வேகமாகக் குரல் கொடுத்துக் கொண்டே நடக்க ஆரம்பித்தான்.

       அவன் வேக நடைக்கே ஒரு மைல் தூரம் வந்திருப்பான். இவ்வளவு தூரமா வந்திருப்பாள் என யோசித்தவன் , " ஹாசினி, ஹாசினி சந்திரா" என நீட்டி முழங்கிக் கொண்டே தான் வந்தான். மேடும் பள்ளமுமாக , தான்தோன்றித் தனமாக வளர்ந்த காட்டுச் செடிகள். இங்கே யார் பாதையைப் போட்டு வைத்திருப்பார்கள், அவனே சிரமப்பட்டுத் தான் வந்தான். ஹாசினி எப்படி இதனைக் கடந்தால் என்ற யோசனை ஓடியது. இதற்கு மேல் இன்னும் அடர் மரங்கள் தான்.

      எங்கிருந்தோ அவளது சத்தம் கேட்டது, ஒளிந்து மறைந்து விளையாடுகிறாள், வேண்டுமென்றே தன்னைப் பழி தீர்க்கிறாள் என எண்ணியவன், "ஹேய், லூக் மரியாதையா வந்துடு. இல்லைனா, எப்படியோ தொலைன்னு போயிட்டே இருப்பேன். அனிமல்ஸ் வராதே தவிரப் பாம்பு எல்லாம் இருக்கும்" எனக் கத்தினான்.

        " ஹேய், ஹெல்ப் மீ, ப்ரீத்தி, பவன்" என அவள் தனியாகக் கத்திக் கொண்டிருந்தாள். இவன் தனியாகக் கத்திக் கொண்டிருந்தான். பின்னர் அவன் தான் சுதாரித்துத் தன் குரலை நிறுத்தவும், " டேய் ஆறடி அரக்கா காப்பாத்துடா. கடத்தினது தான் கடத்தின , வீடு ஹோட்டல் எதுவுமே கிடைக்கலையா. தீவுக்குக் கடத்திட்டு வந்திருக்க" எனக் கத்தலே புலம்பலாக வந்தது.

      அக்கம் பக்கம் பக்கவாட்டில் தேடினான். ஆள் நடமாட்டம் இல்லாத காடு என்பதால் எல்லா இடத்திலும் சத்தம் எதிரொலித்தது. மீண்டும் அவன் " மது "எனக் குரல் கொடுத்தான். அவளுக்கு அது எங்கிருந்தோ தனது அப்பாவோ, அம்மாவோ அழைப்பது போல் இருந்தது.

       " அம்மா, அப்பா உங்களைக் காப்பாற்ற முடியாம போயிடும் போலையே. அரக்கன் ஒன்னும் செய்யலனாலும் இந்தத் தீவு பலி வாங்கிடும் போல. ஹாசினி செத்தடி. உன் சந்திராவைப் பார்க்காமலே செத்துப் போகப் போற. " எனப் புலம்பியவள்,

      " டேய் அரக்கா, ப்ரீத்தி, பவன்" எனக் கத்தினாள். இந்த முறை கீழே இருந்து சத்தம் வருவதைக் கண்டு பிடித்தவன், கீழே கவனமாகத் தேடினான். காய்ந்த இலைகள் கொட்டிக் கிடந்தன. இரண்டு மூன்று அடி சுதாரித்துக் காலை வைத்து நடந்தவன் அங்கிருந்த மரக்கம்பை எடுத்துக் கொண்டான். அதை ஊண்டி ஒவ்வொரு அடியாக முன்னே வைக்கச் சில அடிகள் தொலைவில் கம்பு உள்ளே இறங்கியது. அதே இடத்தில் வைத்துக் குத்தவும் இரண்டு ஆள் புகும் அளவு இருந்த குழி பெரிதானது.

       " அடேய், நான் உள்ள இருக்கேன். யாரது குழியை மூடி சமாதி வச்சிராதீங்க. ஏதாவது அனிமல்ஸ்ஸா ஹெல்ப், ஹெல்ப் " எனக் கத்தினாள்.

        " மது , இதுக்குள்ளையா இருக்க" என அவன் குனிந்து பதட்டத்தோடு குரல் கொடுக்கவும். தன் தலையில் விழுந்த இலை தூசிகளைத் தட்டி விட்டுக் கொண்டே. " டேய் அரக்கா. தூக்கி விடு" என முகத்தைச் சோகமாக வைத்துக் கொண்டு உதவிக் கேட்டாள். அவன் மண்டியிட்டு உள்ளே பார்த்தான். முகம் எல்லாம் மண்ணும் தூசியும், இலையுமாக அடையாளம் தெரியாத படி இருந்தாள். அவள் தோற்றத்தில் அவனுக்கு முதலில் சிரிப்பு வந்தது. பின் இது புதைகுழியோ எனப் பதட்டம் வந்தது.

      " ஹாசினி , புதை குழி இல்லைல " என்றான். அவளுக்குப் புரியவில்லை, "புதைஞ்சு தான் இருக்கேன், எங்க அப்பா, அம்மாட்ட கூட்டிட்டுப் போறேன்னு சொன்ன. அதுக்கு முன்ன சமாதி கட்டிடாத. இங்கே வந்து யாரும் மலர் வளையம் கூட வைக்க முடியாது" என்றாள்.

      " ஓ ஷிட்" என்றான். 'ஹோய் என்னா ஷிட், இடியட்" எனக் கையில் கொஞ்சம் மண்ணை அள்ளி அவன் மீது எறிந்தாள். " அவன் கண்ணை மூடிக் கொள்ள, மண் உதிரியாக அவன் முகத்தில் பட்டு உதிர்ந்தது. அவன் கேள்விக்குப் பதில் கிடைத்து விட்டது. ஹேய் இடியட், முட்டாள் கூஸ்" எனத் திட்டினான், அந்த வார்த்தை தந்த அதிர்ச்சியில் அவள் அவனையே பார்த்திருந்தாள்.

       பதினைந்தடி ஆழத்திலிருந்தாள் ஹாசினி. இவன் கை கொடுத்தாலும் எட்டாது. அவன் அவ்விடத்தை விட்டு நகர முற்படவும், சுதாரித்தவள், " சாரி, சாரி,சாரி. என்னைக் காப்பாத்துங்க. ப்ளீஸ் அரக்கன் ஸார்" என்றாள். அவனுக்குச் சிரிப்பு வந்தது , இருந்தாலும் சமாளித்து அவளை முறைத்தான். இரண்டு கையாளும் காதை பிடித்துக் கொண்டு, "சாரி, அரக்கன் சார் ,ப்ளீஸ் காப்பாத்துங்க" என்றாள் ."உன்னை யாரு இவளவு தூரம் வர சொன்னது " எனச் சிடுசிடுத்தான்.

     " தயவு செஞ்சு மேல ஏத்தி விட்டுட்டு ,எவ்வளவு வேணும்னாலும் திட்டு" எனக் காய் எடுத்து கும்பிட்டாள் . "அது' என்றவன், அவளை,"ரொம்ப படுத்துற" என  முறைத்து விட்டு, " கொஞ்சம் வெயிட் பண்ணு. இதோ வந்திடுறேன்" எனச் சுற்றி பார்த்தான்.

      " அரக்கன் ஸார் என்னை விட்டுவிட்டுப் போகாதே. எனக்குப் பயமா இருக்கு" என்றாள் ஹாசினி. அவளைப் பார்த்த பார்வை மாறியது,

     " குச்சி எடுத்துட்டு வர்றேன். தைரியமா இரு, உன்னைப் பிடிக்க இந்த அரக்கன் எவ்வளவு கஷ்டப் பட்டிருக்கேன், அப்படி ஈசியா விட்டுருவேனா " எனப் பக்கத்தில் பார்த்தவன், பாக்கெட்டில் உறையோடு வைத்திருந்த கத்தியை எடுத்து. நீண்டு வளர்ந்து சென்ற கனமான கொடிகளை வெட்டினான். இரண்டு மூன்றை வெட்டிக் கொண்டு அவளிருக்கும் இடத்தின் அருகில் வந்தவன் அவளோடு பேச்சுக் கொடுத்துக் கொண்டே, அதனை ஒன்று சேர்த்து, மற்றொரு மெல்லிய கொடியைக் கொண்டு கட்டி நீளமாக்கினான்.

     "எதுக்கு இந்தப் பக்கம் வந்த, இந்தப் பக்கம் தப்பிக்கிற வழி எல்லாம் இல்லை " என்றான். " எனக்கும் தெரியும். சும்மா தான் வந்தேன். " எனத் தன் பயத்தை மறைத்துப் பேசியவள்,

     " மிஸ்டர். அரக்கன், சீக்கிரம் கட்டேன். " என்றாள். அவன் என்ன என்பது போல அவளைப் பார்க்கவும், " ஏதேதோ பூச்சி மேல ஊறுது. ஐ ஃபீல் அன்ஈஸி " எனச் சொல்லி முகத்தைக் குனியவும், அவனுக்கு அவளது அவஸ்தை புரிந்தது. " இதோ ஆயிடுச்சு " என்றவன், அந்தத் தடிமனான கொடியின் ஒரு முனையை ஒரு மரத்தில் கட்டினான். அந்தக் குழியின் அருகே வந்து உட்கார்ந்து அதனை விட்டான். அவள் இடுப்பு வரை வந்துவிட்டது ."அதை பிடிச்சுக்கிட்டு மேலே ஏறு. நான் இழுத்துத் தூக்கிக்கிறேன் " என்றான்.

       ஆனால் அவள் கையில் சிராய்ப்பு இருந்தது. அவளால் அதனைப் பிடிக்க முடியவில்லை. முயன்று விட்டு " கை வலிக்குது" எனச் சிறுபிள்ளையாகக் கூறினாள். " கையில் என்ன" என்றான். " மரம் குத்திடுச்சு " என உலகத்தில் இருக்கும் பெரிய சோகமே அது தான் என்பது போல் உதட்டை பிதுக்கினாள்.

        அவனுக்குத் தலையில் அடித்துக் கொள்ளலாம் போல இருந்தது. 'இனிமே எக்காரணம் கொண்டும் பெரிய இடத்து பேபி டால்களைக் கடத்தக் கூடாது ' என மனதில் முடிவெடுத்தான். அவன் மனசாட்சியே அவனைப் பார்த்துச் சிரித்தது. அதனைப் புறம் தள்ளியவன், அவளைப் பற்றி யோசித்து, " இங்க பாரு, உன் சேரி முந்தானையை மட்டும் எடுத்து கொடியோட உடம்பில் சேர்த்துக் கட்டிக்கோ" என்றான் , அவள் முறைத்தாள். 

      "நீ பார்க்க , நான் எல்லாத்தையும் செய்யணும்' என நெற்றிக் கண்ணைத் திறந்தாள். அவன் ஓர் தோள் குலுக்களோடு, "இதை விடப் பெட்டரா ஐடியா இருந்தா சொல்லு. நீ பெரிய அப்சரஸ், உன்னையைப் போய் ஜொள்ளு விட்டு பார்ப்பானுங்க, ஐயம் நாட் இன்டெரெஸ்ட்டேட் வித் யு " என்றான் மிகவும் அசட்டையாக. நியாயப் படி இதற்க்கு ஹாசினி மகிழ்ந்திருக்க வேண்டும், ஆனால் அவன் தன்  அழகை குறைத்து சொன்னதுக்காகக் கோபம் வந்தது, "கழுதைக்குத் தெரியுமா கற்பூர வாசனை. வாட் எவர், எனக்கும் உன்னை மாதிரி அரக்கன் என்னைப் பார்க்கிறத வேருக்குறேன்" எனப் பதிலடிக் கொடுத்தாள் .

      " நேத்து, டேக் மீ ன்னு சொன்ன" என விடாமல் வம்பிழுத்தான். " அது தான் , நீ டீலை ரிஜெக்ட் பண்ணிடேல்ல, அங்குட்டுத் திரும்பு" என ஆணையிட்டாள் , அவனும் கண்ணியமான அரக்கனாகத் திரும்பிக் கொண்டான். அவன் கொடுத்த யோசனைப் படி முந்தியை மட்டும் கழட்டி கொடியை தன் மார்போடு சேர்த்து வைத்து, இரண்டு மூன்று சுற்றிக் கட்டிக் கொண்டாள்.

        " குட்" என அவளைச் சொன்ன வேலையைச் சரியாகச் செய்த பணியாள் போல் தான் பார்த்தான். கொடியை இழுத்துப் பார்த்து விட்டு அவளைப் பிடித்து இழுத்தான். முதலில் இழுக்கச் சிரமமாக இருந்தது.

       " ஆள் பார்க்க ஒல்லியா இருக்க, ஆனால் சரியான குண்டு கோஸ்" என்றான். இது இரண்டாவது வார்த்தை அவள் அதிசயமாகப் பார்த்தாள். சற்றுப் பலமாகப் பிடித்து இழுக்கவும் கொடி பிய்ந்து விடும் போல் இருந்தது. அவன் நினைத்தது போல் காய்ந்த மண்ணாக இல்லாமல் முழங்கால் அளவு சகதி இருந்தது. மேலே படுத்தபடி சமயோசிதமாகக் கொடி அறுந்து விழும் நிலை இருந்ததால், வேகமாகக் கொடியை இழுத்து அவள் கையைப் பற்றிக் கொண்டான். அறுந்து போக இருந்த கொடி சற்றுப் பொருந்தியிருந்தது. ஆனால் அவன் பற்றிய கரமும் அவளுக்கு வலிக்கத்தான் செய்தது. அவள் முகம் சுழித்தாலும் வேறு வழியின்றித் தூக்கினான்.

        " மது , என் கையை விடாமல் பிடிச்சுக்கோடி" எனக் கத்தியவன், அவளை மேலே இழுத்தான். அவளது அகன்ற விழிகள், மேலும் விரிந்தது. அவளை இழுக்கும் போதே எழுந்து விட்டான். அதனால் அவளை இழுத்துத் தரையில் போட அவள் குப்புற விழுந்து இருந்தாள். சேலை கீழே சகதியாக அவன் இழுத்ததில் கொஞ்சம் ஏறியுமிருந்தது. காலில் ஸேண்டல் ஹூ பக்கில்ஸ் வைத்து காலை கவ்வி இருந்ததால் அதவும் கழண்டு விழாமல் பத்திரமாக இருந்தது. அவன் திரும்பி நின்று கொண்டான்.

     அவள் எழுந்து ஆசுவாசப்படுத்திக் கொள்ளட்டும் எனத் திரும்பியிருந்தவன், அவள் பேசாமடந்தையாகி இருக்கவும், மயக்கமடைந்து விட்டாலோ எனப் பயந்தவனாக, தலையை லேசாகத் தோள் பக்கம் திருப்பி, " ஆர்யூ ஓகே" என்றான்.

      அவளது , " ஸ்ஸ் ஆ" என்ற சத்தத்தில் தன்னிச்சையாகத் திரும்பியவன், அவளைத் தொட்டுத் திருப்பினான். கண்களைத் தழைத்துக் கொண்டு, அவள் மீது இருந்த கொடியை உருவி விட்டவன், மீண்டும் திரும்பி நின்று கொண்டான். அவன் செய்கைகளைப் பார்த்திருந்தவள், " யார் நீ" என்றாள்.

      " சேரியை ஒழுங்கா கட்டிட்டு வா. எவ்வளவு சகதி. ஏதோ ஊருதுன்னு சொன்னியே" என ஞாபகப்படுத்தினான். அவள் தன் சேலையை மட்டும் சரியாகப் போட்டவள், தன் கையை நீட்டி, " குண்டு கோஸா இருந்தாலும் பரவாயில்லை தூக்கி விடு" என்றாள்.

       " ஓஹோ, நீ வச்ச ஆளாக்கும். தன்னால எந்திரிச்சு வர்றதுன்னா வா. இவ்லைனா இங்கேயே கிட. " என இரண்டடி வைத்தான்.

       அவள் எழுந்து வருவதாக இல்லை. " ம்ப்ச். சீக்கிரம் எழுந்திரு. உன்னை அருவியில் விட்டுட்டு, ப்ரீத்தியை அனுப்பி விடுறேன்" என்றான்.

     " நான் கேட்டதுக்கு நீ இன்னும் பதிலே சொல்லலை" என அப்படியே அமர்ந்திருந்தாள். " நான் யாருன்னா, கடத்துறவன் அட்ரெஸ் எல்லாமா சொல்லுவேன். அது தான் சொல்லுவியே அரக்கன். அவன் தான் நான்" என்றான்.

    " அது நான் வச்ச பெயர். நான் உங்க பெத்தவங்க வச்ச பெயரைக் கேட்டேன்" என்றாள். அவன் நிற்காமல் நடக்கவும், " நான் திரும்ப அந்தக் குழிக்குள்ள குதிப்பேன்" என்றாள்.

     " தாராளமா குதிச்சுக்கோ எனக்கு ஒன்னும் பிரச்சனை இல்லை. ஆனால் திருப்பிக் காப்பாற்ற மாட்டேன்" என மேலும் இரண்டடி வைத்தான். தொப்பெனக் குதிக்கும் சத்தம் கேட்டது. "மது" அவன் திரும்பிப் பார்க்க, அவள் ஒரு கல்லைத் தள்ளிவிட்டு அதே இடத்தில் அசையாமல் நின்றாள். ஒன்றும் பேசாமல் அவளை நோக்கி நடந்தவன், அவள் உள்ளங்கையைப் பற்றாமல் முன்னங்கையைப் பிடித்து இழுத்து வந்தான்.

    "என் பேரு உனக்கு எப்படித் தெரியும். நீ யாரு உண்மையைச் சொல்லு" என்றாள். " நீ தான் கேஜேபார்ட்டியோட கொள்கை பரப்பு செயலாளர், தி க்ரேட் எஸ். ஆர். சந்திராவோட மகள். உன்னை யாருன்னா தெரியாமலா கடத்தியிருக்கேன். " என்றவன் மறந்தும் அவள் பக்கம் திரும்பாமல் பாதையில்லாத இடத்தில் பாதையை உருவாக்கிக் கொண்டே நடந்தான்.

       " ஹாசினி சந்திராவை எல்லாருக்கும் தெரியும். ஆனால் நீ மதுன்னு கூப்பிட்ட. எங்க வீட்டு ஆளுங்கள் மட்டும் தான் இந்தப் பெயர் சொல்லுவாங்க" என்றாள்.

       " ஸோ வாட், ப்ரீத்தி பவன், உங்க வீட்டில் தானே இருந்தாங்க. அவங்க சொன்னது தான்" என அவசரமாக அவளை அழைத்துச் செல்லவும், "கொஞ்சம் மெதுவாதான் போயேன். சேலை தடுக்குது " என்றாள். அப்போது தான் திரும்பிப் பார்த்தான் இடுப்புக்குக் கீழே சேரும், சகதியுமாக இருந்தது. சற்றே வேகத்தைக் குறைத்தான்.

     " இந்தத் தீவில் நிறையப் புதைகுழி இருக்கும். இனிமே தனியா போகாத. ப்ரீத்தியையாவது கூட்டிட்டு போ. " என்றான். அவள் சிரித்தாள். அவன் முறைக்கவும்,

      " நீ என்னைக் கடத்திட்டு தானே வந்த. பிக்னிக் வந்த மாதிரி யோசனை சொல்ற. கடத்தல்காரன் இப்படிப் பேசமாட்டான் பாஸ். " என்றாள்.

    " பொம்பளைப் புள்ளையாச்சேன்னு பார்த்தது தப்பா போச்சு. இரு காட்டேஜ்ல போயி கையையும் காலையும் கட்டிப் போடுறேன்" என்றான்.

   " கால்கட்டு போடறதுன்னு பசங்களுக்குத் தான் சொல்லுவாங்க. பொண்ணுங்களுக்கு இல்லை" என்றாள். " யூ ஆர் க்ராசிங் யுவர் லிமிட். பேசாமல் வா" என ருத்ரமூர்த்தி அவதாரமெடுத்தவன் அவளுக்குப் பேச வாய்ப்புத் தராமல் அருவிக் கரைக்குக் கூட்டிச் சென்றான்.

        சட்டென மாறிய வான்நிலை போல், செங்குத்தான மலையிலிருந்து ஓர் அருவி விழுந்தது. பெரிய ஆர்ப்பாட்டம் இல்லாமல் அளவாக விழுந்தது. விழுந்த இடத்தில் பாறையும் அதன் கீழே குளம் போல இருந்தது, அதிலிருந்து இரண்டு புறம் பிரிந்து ஓடையாக ஓடியது.

     அவளைக் கைப்பிடித்துச் சென்றவன், ஓடை போலிருந்த பகுதி ஆரம்பிக்கும் இடத்தின் விளிம்பில் உடையைச் சுத்தப்படுத்தச் சொன்னான். ஹாசினிக்கு அந்த அருவியில் குளிக்கும் ஆசை வந்தது.

" அந்தத் தண்ணீர் விழற இடத்துக்குக் கூட்டிட்டு போயேன். நல்லா இருக்கும். " என்றாள். " நோ" என்றவன். " அங்க போய் ரிஸ்க் எடுக்க முடியாது" என்றவன் ஓடையில் கால் வைத்துப் பார்க்க இரண்டடி தான் இருந்தது. உட்கார்ந்து குளித்தால் நன்றாகக் குளிக்கலாம்.

     ஹாசினி ஆசை நிறைவேறாத குழந்தையாக முகத்தைத் தூக்கி வைத்துக் கொண்டு ஓடைக் கரையில் அமர்ந்து காலை உள்ளே விட்டாள். அவளது கெண்டைக்காலில் ஏதோ அட்டைப் பூச்சி ஒட்டியிருந்தது. அதைப் பார்க்கவும், வீல் எனக் கத்தினாள். கிளம்பப் போனவன் என்ன வெனப் பார்க்க அவளது காலை அட்டைப் பூச்சி உறிஞ்சிக் கொண்டிருந்தது.

       " இடியட், இவ்வளவு நேரம் இது கூடவா சொரணை இல்லை. எவ்வளவு இரத்தத்தை உறிஞ்சினதோ. " எனத் திட்டிக் கொண்டே ஓடையில் குதித்தவன், அவள் வாழை தண்டு காலை பற்றி , அட்டை பூச்சி இருந்த இடத்தை , காலின் அடியில் கை  கொடுத்து ஏந்தி கொண்டு ஓடையில் கிடந்த கல்லை வைத்து அதனை அழுத்தமாகத் துடைத்து தட்டி விட்டான். அதன் பின் இரண்டு கால்களையும் ஆராய்ந்தவன். தண்ணீர் கொண்டு சுத்தம் செய்தான். அவள் அவனையே கண் எடுக்காமல் பார்த்திருந்தாள். 

      அவளை ஏறிட்டுப் பார்த்தவன், " கீழே இறங்கு. சேரிக்குள்ள வேற எங்கையாவது இருக்கான்னு செக் பண்ணு" என்றான். அவன் சொல்லுக்கு முதன் முறையாக வாக்குவாதமின்றிக் கீழ்ப்படிந்தால் ஹாசினி சந்திரா. அவன் திரும்பி நின்று கொண்டான். சிறிது நேர மௌனமே நிலவியது. முகத்தை லேசாகத் திருப்பி " ஆர் யூ ஓகே" என்றான்.

        " இன்னோன்னு இருக்கு " என முகத்தைச் சுருக்கிக் கொண்டு அலறினாள். ஒரு கல்லை எடுத்துக் கொடுத்து, " இதை வச்சு எடு " என்றான். "ம்  என சிறிது நேரம் தாமதப் படுத்தியவள், அவனின் உருட்டலில் சற்றே தணிந்து, அவன் சொன்னபடி செய்தாள்  "எடுத்துட்டேன்" என்றாள்.

       " ஓகே குட், இங்கே நம்மளை தவிர யாரும் இல்லை, குளிச்சிட்டு இரு. அருவிகிட்ட போகக் கூடாது, ப்ரிதியை அனுப்பி விடுறேன் " எனக் கண்டிப்பாகச் சொல்லி விட்டு அவன் செல்ல முற்பட, "ஹலோ அரக்கன் ஸார். நீ யாருன்னு சொல்லவே இல்லையே" என்றாள். அவளைத் திரும்பி பார்த்தவன் 

" ஆறடி அரக்கன்" எனப் பதிலிருத்தி விட்டுச் சென்றான்.

பெங்களூரு நஞ்சப்பா இல்லம், சிவராஜ் சந்திர பவனத்துக்குக் கிளம்பிக் கொண்டிருந்தார். யுவராஜ், " அப்பா இன்னும் எத்தனை நாளைக்கு இப்படியே கூஜா தூக்குறது" என்றான் எரிச்சலாக.

       " யுவன், உன்னை எஸ். ஆர். சந்திரா மருமகனாக்கிட்டா, கட்சியும், ஆட்சியும் நம்மகிட்ட வந்திடுமென்று கணக்குப் போட்டேன். அநியாயமா சிக்கம்மாவை  எவனோ கொன்னுபுட்டானே" என நிஜமாகவே வருந்தினார் சிவராஜ் நஞ்சப்பா.

        அவர் வருந்துவது யுவராஜின் எரிச்சலை மேலும் தூண்டியது, "அப்பா, அவ எல்லாம் ஒரு பொம்பளையா, ஆள் அழகா இருந்தா மட்டும் போதாது, கொஞ்சமாவது அடக்கம் ஒடுக்கம் வேணும். அவளைப் போய் என் தலையில் கட்டப் பார்த்தியே. எங்க அம்மா கும்பிட்ட சாமி புண்ணியம் நான் தப்பிச்சேன். அந்தப் பிடாரி போய்த் தொலைஞ்சிடுச்சு. விட்டுது தொல்லை" என நிம்மதி பெருமூச்சு விட்டான்.

           " கழுதைக்குத் தெரியுமா கற்பூர வாசனை ன்னு சொல்லுவாங்க.(ஆகா சிவராஜும்  சொல்றார். ஹாசினிக்கு வாச்சதெல்லாம் கழுதை  தான் போல)  என்னத்தைச் சொல்லு நீ கழுதை தான். பொம்பளை புள்ளைங்க தாலி ஏறமுன்ன தாண்டா எல்லா ஆட்டமும். தாலி ஏறிடுச்சு புருஷனுக்காக எதையும் செய்யுங்க. இது புரியாமல் பொன் முட்டை இடுற வாத்தை தொலைச்சிட்டு அந்த வருத்தம் கூட இல்லாமல் இருக்க. வெளியே போய் வாய் விட்டுறாதே. உன்னைச் சந்தேகப்படுவாங்க" என முறைத்தவர், மகனை மேலும் பல வசவுகளைத் தந்து தன்னோடு ஹாசினி வீட்டுக்கு வருமாறு கட்டாயப்படுத்தி அழைத்துச் சென்றார். 

        அங்கே விசாரணைக்காக நியமிக்கப்பட்ட போலீஸ் உயரதிகாரியைப் பார்க்கவும், சிவராஜுக்கு அப்பட்டமான அதிர்ச்சி. 'இந்தத் திமிர் பிடிச்ச தமிழ் ஆளா. நீதி நேர்மைன்னு டயலாக் அடிச்சாலும் பரவாயில்லை, அதையும் செய்யாமல் போட்டு தள்ளிட்டு போயிட்டே இருப்பானே. ஸ்டேட்டு சென்டர்னு எல்லா பக்கமும் செல்வாக்கு.  சொந்தக்காரன் மினிஸ்டர், பொண்டாட்டி கலெக்டருன்னு எங்குட்டும் கை வைக்க முடியாதே' என ஒரு மீசைக்கார மறத்தமிழனைப் பார்த்து விக்கித்து நின்றார்.  ஆனால் பிரச்சனை சிவராஜுக்கு மட்டுமில்லை, தீவுக்குக் கடத்தி இராஜாங்கம் செய்யும் அரக்கனுக்கும் தான்.

      ஹாசினியும், ப்ரீத்தியுமாகக் கட்டோடு குழலாட ஆட பாட்டுப் பாடாதது தான் குறை, ஏனெனில் அது ஒரு தமிழ்ப் பாடல், அதுவும் எம்ஜிஆர் காலத்துத் தமிழ்ப் பாடல் அதனால் அதைப் பாடவில்லை. ஆனால் அதே போல் எஸ்ஆர்சி யும் மேனகாவும் இணைந்து நடித்த ஒரு கன்னடப் படத்தின் பாடலை ஹம்மிங்க் செய்தபடி நீராடினாள் இந்த மேனகை பெற்ற மகள்.

" மேம் பாட்டெல்லாம் தூள் பறக்குது. எனிதிங் ஸ்பெஷல்" என்றாள் ப்ரீத்தி  "யெஸ், அது ஸ்பெஷலா இல்லையான்னு நீதான் சொல்லனும். " எனப் பீடிகை போட்டாள் ஹாசினி.

        " மேடம், அப்பா, அம்மாவுக்கு எந்த ஆபத்தும் இருக்காது பயப்படாதீங்க. உங்களைப் பற்றின நியுஸ் கேட்டுட்டு உங்க பெத்த" என ஆரம்பித்தவள் நொடியில் சமாளித்து " பெத்த மனுசங்கள், தொண்டர்கள் கொந்தளிப்பாங்க. அதனால் அப்பா, அம்மாவை நஞ்சப்பா நல்லாவே பார்த்துக்குவார்" என்றாள் ப்ரீத்தி.

      " ம்கூம்" என்ற ஹாசினி ப்ரீத்தியை குறுகுறுவெனப் பார்க்கவும், அவளுக்குச் சங்கடமாகிப் போனது. " ஏன் மேடம், நான் சொன்னதில் நம்பிக்கை இல்லையா" எனத் தயங்கியபடி கேட்டாள்.

      " நான் ஹேப்பியா இருக்கேன்னா, அப்பா, அம்மா சேஃபா இருப்பாங்கங்கிற நம்பிக்கை தான். ஆனால் நீ சொல்லவந்தது வேற, இப்ப சொன்னது வேற. ஆமாம் நீ மஸ்கட்லையே தான் பிறந்து வளர்ந்தியா " எனக் கேட்டு ப்ரீத்தியை அதிர விட்டாள் ஹாசினி. " மேம்" என அதிர்ந்து நின்றவளை, " நான் சரியாகத்தானே கேட்டேன்" என்றாள்.

       " இல்லை மேம். " எனச் சொல்ல வரும் போதே, " நீ அந்த அரக்கனுக்கு வேலை செய்யிற ஓகே. அவன் உன்னை ஒரு வார்த்தை சொல்ல விடமாட்டேங்குறான். உன்னைத் திட்டுனேன்னு என் கழுத்தை நெறிக்க வர்றான். அவ்வளவு ஸ்பெஷலா நீ" என அடுத்த அஸ்திரத்தைத் தொடுத்தாள்.

       " மேம் நீங்க நினைக்கிற மாதிரி, தப்பான ரிலேசன்சிப்லாம் இல்லை" என அவள் முகம் வாடிப் போய்ச் சொல்லவும், ஹாசினி அவசரமாகக் குறுக்கிட்டு, " தப்பான ரிலேசன்சிப்னு நான் எப்ப சொன்னேன், அந்த அரக்கனுக்குக் கூட உன் மேல அதிகமான பாசம் இருக்குன்னு சொல்றேன்" என்றாள்.

      " மேம், பாயி ஒன்னும் அரக்கன் இல்லை. நீங்க அந்த வார்த்தையைச் சொல்லாதீங்க" என்றாள் ப்ரீத்தி. " ஓஹோ, அரக்கன்னு சொல்லக் கூடாதா. அப்ப அவன் பேர் என்னன்னு சொல்லு. " எனக் கிடுக்கிப்பிடி போட்டாள் ஹாசினி. ப்ரீத்திக்கு வாயைக் கொடுத்துத் தான் மாட்டிக் கொண்டது புரிந்தது. மௌனமாகி விட்டாள்.

       இவர்கள் இருவருமாகக் குளித்து உடை மாற்றி, தலைமுடியை விரித்து உதறிக் கொண்டே வந்தனர். கையில் ஈர உடை அதையும் அலசி இருந்தனர்.

         காட்டேஜ் அருகே வரவும், அவன் வெகு தொலைவிலிருந்தே தன்னையே பார்ப்பதை உணர்வால் உணர்ந்தவள், வேறு எங்கோ வேடிக்கை பார்ப்பது போல் வந்தாள். ஆனால் காட்டேஜ் அருகில் வரவும் ஹாசினி சத்தமாக, " ப்ரீத்தி உன் பாயியை அரக்கன்னு சொல்லக்கூடாதுன்னா வேற எப்படிச் சொல்றது. கிட்னாப்பர், கடத்தல்காரன், கொள்ளைக்காரன் இது மாதிரி சொல்லவா இல்லை உன்னை மாதிரி அரக்கன் ஸாருக்கு ராக்கி கட்டி விட்டுட்டு பாயி ன்னு சொல்லவா" என்று வினவினாள்.

        அவனது கண்கள் சிவப்பை அதிகம் காட்டியது. பவன் சட்டெனச் சிரித்து விட்டான். ஹாசினி பவனைப் பார்த்து, " அரக்கனா இருந்தாலும் அண்ணன்னு சொல்லிட்டா, பாசக்காரனா ஆகிடுவானில்லை, பிரிதிக்கே அவ்வளவு புரிஞ்சிட்டு வந்தான் உன் பாஸ். அதுக்குத் தான் , ஒரு தற்பாதுகாப்புக்குக் கேட்டேன்" என்றாள் ஹாசினி.

       "உங்களுக்கு அறிவோ, அறிவு . நீங்க அப்படியே கூப்புடுங்க, பாஸுக்கு சிஸ்டர்ஸ்னா ரொம்பப் பிடிக்கும்." என இளித்து வைத்தான்.

      ப்ரீத்தி, " ஏன் மேம் உங்களுக்குத் தான் இரண்டு அண்ணன் இருக்காங்க இல்லை. ஏன் எனக்குப் போட்டிக்கு வர்றீங்க" எனச் சமாளித்தாள் .

      ஆனால் அரக்கன் பவனிடம் தன் முறைப்பை இன்னும் அதிகமாகக் காட்டிய படி , "நீ சாப்பிட்டு , அந்த ரூம்ல சாக்கில் கட்டி வச்சிருக்கச் சாமானத்தை எடுத்திட்ட என் கூட வா. உனக்கு ஒரு முக்கியமான வேலை இருக்கு" எனக் கடுமையாகச் சொன்னவன். ப்ரீத்தியை அழைத்து மீதி சப்பாத்தியைப் போட சொன்னான்.

           சுற்றிலும் பச்சை வண்ணத்தில் இயற்கை எழில் நிறைந்திருக்க, முழங்காலுக்குச் சற்று கீழே வரை வெள்ளையில் கருப்பு பூ போட்ட போட் நெக் ப்ராக் போட்டுக் கொண்டு, ஈரமான விரிந்த தலைமுடியில் சிடுக்கெடுப்பது போல், தன் விரலால் கோதிக் கொண்டே வந்தவளைத் தூரத்தில் பார்க்கும் போதே அவன் மனம் விம்மியது. அவளது தோற்றத்தை விட்டு விழி எடுக்க முடியாமல் சிக்கியிருந்தவன், அவள் அருகில் வரவர தான் சுதாரித்தான்.

       ஆனால் அதற்குள் அவள் அவனை, கடத்தல்காரன், கிட்னாப்பர், கொள்ளைக்காரன் என்று சொன்னதுக்கெல்லாம் பெருமையாகப் பேசாமல் இருந்தவன், அரக்கன் என்ற போது கூட அலட்டிக் கொள்ளாமல் இருந்தவன், அவள் பாயி- அண்ணா என அழைக்கட்டுமா எனக் கேட்கவும் நெருப்பாக உள்ளே கனன்று கொண்டிருந்தான். அதிலும் பவன் சிரித்தது மேலும் அதில் நெய் வார்க்க, அவனே பலிகடாவாக மாறினான்.

    "சாப்பிட்டு" எனச் சொன்னதைக் காதில் வாங்காமல் பவன் உடனே போய்ச் சாக்கைத் தூக்கி வந்தான். ப்ரீத்தி சப்பாத்தி சுடச் சென்று விட்டாள். மூன்று கல்லை வைத்து தீ மூட்டி சப்பாத்திக் கல்லை வைத்துப் போட்டுக் கொண்டிருந்தனர். எல்லாம் செட்டப்பா இருக்கே என வியந்தபடி வந்த ஹாசினி காட்டேஜ் வாசலில் உட்கார்ந்து அவர்களை வேடிக்கை பார்த்தாள். காற்று சிலுசிலுவென அடித்து அவளது முடி அடங்க மறுத்துப் பறந்து கொண்டிருக்க, அங்கே அரக்கனின் மனமும் அதே போல் அடங்க மறுத்து அவளையே நோட்டமிட்டது.

      ஒரு நிமிடம் இருவர் பார்வையும் சந்தித்து விட ஹாசினி என்ன எனக் கண்களால் வினவினாள். அவன் வேறு புறம் திரும்பிக் கொண்டான். " பாஸ் என்னா இது" என அலறினான் பவன். மண் வெட்டி, கடப்பாரை, அருவாள் எனக் கொத்தனார் சாமான்களாக இருந்தது.

        " ஏன்டா கத்தற. சாப்பிட்டு வா போகலாம்" என்றவன். தனக்கு ஒரு தட்டில் சப்பாத்தி சப்ஜியை வைத்துக் கொண்டு அமர்ந்தான்.

     " பாஸ், என்னா பாஸ் கொத்தனார் வேலை எல்லாம் பார்க்கச் சொல்றீங்க. போங்க பாஸ் நான் வேலையை ரிசைன் பண்றேன்" என்றான்.

       அவனை முறைத்த ஆறடி அரக்கன் ப்ரீத்தியிடம் திரும்பி, "ப்ரீத்தி என்கிட்ட வேலை செய்யறவங்களுக்கு மட்டும் தான் சாப்பாடு தங்குற இடம், இங்கிருந்து போறதுக்கு வசதி எல்லாம் செஞ்சு கொடுக்க முடியும். பவன் ரிஸைன் பண்றான் மா. அதுனால அவனுக்கு நம்ம சப்பாத்தி தரவேண்டியது இல்லை. பத்திரமா எடுத்து வை. மதியம் சாப்பிட்டுக்கலாம். " என்றான்.

        பவன் அதிர்ந்தவனாக, " பாஸ் இதெல்லாம் ஞாயமே இல்லை. " என முகத்தைத் தூக்கி வைத்துக் கொண்டு போய் உட்கார்ந்து விட்டான். ப்ரிதியிடம், "உன்னை நினைச்சதுக்கு, என்னவெல்லாம் அனுபவிக்கிறேன்" எனச் சண்டையிட்டான். "பவன், ஏதா இருந்தாலும், இங்கே என்கிட்டே காட்டு, ப்ரீத்தியை எதுக்கு முறைகிற" எனத் திட்டினான் பாஸ்.

       "பாஸ், உலகத்துல ஆம்பளையா பிறக்க கூடாது, பிறந்தாலும் அழகான பொண்ணை நினைக்கக் கூடாது" எனத் தத்துவம் பேசினான் பவன் . "அது சரி, அழகான பொண்ணு யாரு, ஒன்னு அட்டை பிகருன்னு , இன்னொன்னு அழகான ராட்சசின்னு நேத்து சொன்ன' எனப் பாஸ் இரண்டு பெண்களின் மத்தியிலும் பவனைக் கோர்த்து விட்டான். இருவரும் அவனை முறைத்தனர். "நான் உனக்கு அட்டை பிகரா" என ப்ரீத்தி அவனோடு சண்டையிட்டால் , "இல்லை பேபி, உன்னை அப்படிச் சொல்லுவேனா, நீ தான் அழகான ராட்சசி" என்றான் .

         "அப்ப உன் மேம் தான், அட்டை பிகரு, சரி தானே, கொஞ்சம் உன் மேடத்துக்கு விளங்குற மாதிரி நல்லா சொல்லு, அம்மணிக்கு, அது ஏதோ உலக அழகின்னு நினைப்பு" எனக் கூட இரண்டு பிட்டை சேர்த்துப் போட்டான் பாஸ்.

            "பாஸ், உங்களுக்கு ஏதாவது சொல்லனும்னா, தைரியமா எங்க மேடத்துகிட்டையே நேரா சொல்லுங்க. அவங்களைப் பாருங்க, எவ்வளவு கெத்தா, உங்க முன்னாடியே உங்களை அரக்கன் அப்டின்னு கெத்தா சொல்றாங்க" எனப் பேச்சை திருப்பிப் பாஸையே மாட்டி விட்டான்.

      "எனக்கெனப் பயம், இது ஒரு அட்டை பிகரு, காசு தரேன்னு சொன்னானுங்க, அதனால கடத்தினேன்" எனத் தனது பழுப்புக் கண்களில் நக்கலைக் காட்டி சொன்னான் பாஸ்.

         "ஆமா ஆமாம், அட்டை பிகருக்கே, வாயில கொசு போறது தெரியாம பார்த்துட்டு இருந்ததை நானும் பார்த்தேன். பை த பை, எந்த அடிமை அரக்கனும், அவனோட வேலைக்கார அரக்கனும் என்னைப் பார்க்க வேண்டாம் , போங்கடா " என எள்ளும் கொள்ளும் வெடிக்கக் காட்டேஜ்க்குள் சென்றாள் .

         ப்ரீத்தி கெஞ்சி கூத்தாடி சாப்பிட அழைத்து வந்தாள் , ஆனால் சப்பாத்தியை பிய்த்து சாப்பிட முடியாமல் அவதி படவும், அரக்கன் அவளுக்குச் சப்பாத்தியை சபிஜி வைத்து ரோலாகச் சுத்திக்குக் கொடுத்தான், வேண்டா வெறுப்பாகவே அதையும் முழுங்கினாள் ஹாசினி சந்திரா.

      அரக்கன் தன்னால் சாப்பிட்டு விட்டு, அதே சாக்குப் பையைத் தான் தூக்கிக் கொண்டு கிளம்பினான். அவனைப் பார்த்த ஹாசினி " நான் வரவா. நான் வந்து ஹெல் பண்ணவா" எனக் கேட்டாள் . அவள் குரலில் திரும்பியவன் அவளை ஆச்சரியமாகப் பார்க்கவும்.

      " லுக், இந்தத் தீவைச் சுத்த படுத்தினா நோபல் ப்ரைசா தரப் போறாங்க. நிச்சயமா இல்லை. அதனால் அதைச் செய்யமாட்ட. இதுக்கு வேற சாலிட் ரீசன் இருக்கும். நான் என்சிசி ல இருந்திருக்கேன். ஐ கேன் டூ" என்றாள்.

     " இது ஒருநாளில் முடியாது. நீ நாளைக்கு வா. உன் காலில் பூச்சி கடிச்சிருக்கு அப்படி யே உட்கார்ந்து இரு. நான் மருந்தோட வர்றேன்" என அவன் கிளம்ப

       " பாஸ், இருங்க நானும் வர்றேன்" என்றான் பவன். அவனைச் சாப்பிடச் சொல்லி விட்டு, அவனுடைய பாஸ் மட்டும் சென்று சில பச்சை இலைகளை எடுத்து வந்தான்.

        ஒரு பாறை கல்லைச் சுத்தம் செய்து அங்கு அந்த இலையை வைத்து மற்றொரு கல்லால் அதனை அரைத்தவன் அதனை எடுத்துக் கொண்டு ப்ரீத்தியிடம் சென்று ஹாசினிக்குப் பூச்சி கடித்த இடத்தில் வைத்துக் கட்டிவிடச் சொன்னான்.

      ஹாசினி மீண்டும் அவன் யாரெனக் கேட்கையில் பதில் சொல்லாதவன், அன்று இரவு அவள் சுர வேகத்தில் தன்நிலை மறநத மயக்கத்தில் இருக்கும் போது தான் யாரெனச் சொன்னான்.



No comments:

Post a Comment