Saturday, 5 March 2022

யார் இந்த நிலவு -29

அடுத்தக் கணம் மறைத்து வைத்திருக்கும் ஆச்சரியம் யாதென அறிந்தவர் யாருமில்லை. இந்தச் சொல்லுக்கான முழு அர்த்தத்தையும் கைலாஷ் ராஜன் அன்று உணர்ந்திருந்தார். பெரிய பிஸ்னஸ் டைக்கூன், ஆயிரமாயிரம் தொழிலாளர்களுக்கு வேலை கொடுப்பவர், கோடிகளில் சொத்துக்கள் இருந்தும், யாரையும் சாராமல்,தனி மரம் போல் ஓர் தனிமை வாழ்க்கை. தாய் தந்தையர் ,சொந்த பந்தம் இருந்தும் தனிமையாய் உணர்ந்தவர், இன்று தன பருவைப் பார்த்த சில மணித்துளிகளில் முழுக் குடும்பஸ்தனாய் மாறியதில் உள்ளத்தில் ஓர் நிறைவு.

நள்ளிரவைத் தாண்டியும், தங்கள் மகள்,மருமகள் என உரிமை கொண்டாடி , பாருவின் நலம் குறித்து அறிய தங்கள் வயதையும் பொருட்படுத்தாமல் அமர்ந்திருக்கும்,தாய் தந்தை, அத்தை மாமாக்களிடம் வந்தார் ராஜன். எல்லாருமே அவரை ஆர்வமாக எதிர்பார்க்க, “ அம்மா, உங்க மருமக நல்லா இருக்காளுங்க, அடையாளம் தெரிஞ்சு பேசிட்டு, மருந்து வீரியத்துக்குத் தான் தூங்குறாளுங்க ,டாக்டர் ஒண்ணும் பயமில்லைனு சொல்லி போட்டாங்க," எனத் தகவலைச் சொல்லவும், பெரியவர்கள் ஆசுவாசம் அடைந்தனர்,இருந்தாலும் பவானியைப் பார்க்காமல் கிளம்பவும் மனமில்லை, ராஜன் "பெரியவிக, வூட்டுல ரெஸ்ட் எடுத்த்துப் போட்டு நாளைக்கு வந்து பார்க்கலாமுங்க “ என வற்புறுத்தி அனைவரையும் அனுப்பி வைத்தார்.

விஜயன் குடும்பம், மூத்த இரண்டு ஜோடிகளைக் கூட்டிக்கொண்டு கிளம்ப, சொந்தரியும் , பாலாவும் பன்னீரைக் கூட்டிக் கொண்டு கே ஆர் மாளிகை கிளம்பினர். ஆதிராவையும் பெரியவர்களோடு அனுப்ப ராஜன் முயன்றும் , அவள் ஆயியை விட்டு அகல மறுத்து விட்டாள். ஆதர்ஷ் தன் ஒரு ஷிப்ட் பாதுகாப்பு ஆட்களுக்கு ஓய்வு கொடுத்து, அடுத்த ஷிப்ட் ஆட்களைப் பணியிலமர்த்தினான்.

மாலையிலிருந்து யாரும்,எதுவும் சாப்பிடாமலிருக்க, ஆதர்ஷ் வாங்கி வந்த உணவை, கௌரி அப்பா, மகளுக்கு வைத்துக் கொடுத்து விட்டு தன தீதி இருக்குமிடம் செல்ல , ஆதிரா உணவை வேண்டாமென மறுத்தாள். ராஜன் தானே மகளுக்கு ஊட்டி விட, மகள் அப்பாவுக்குப் பதிலுக்கு ஊட்டி விட்டாள்.

அவள் முகத்தில் குடி கொண்டிருந்த கவலையைப் பார்க்கவும், “பாபா மேல கோபமா கண்ணு “ எனச் சரியாக நாடி பிடித்தது போல் கேட்க, “நஹி தோ" என அவசரமாக மறுத்தவள் ,"ஆயிக்கு எதாவது ஆகியிருந்தா,டர் லகி, இனி ஒன்னும் ஆகாதில்லை " என்றவளின் உடல் நடுங்கவும், அவளைத் தன் கைவளைவில் அரவணைத்துக் கொண்டு,அவளது சிகையை வாஞ்சையாகத் தடவியவர் , 

"அதெல்லாம் ஒன்னும் ஆகாது கண்ணு, ரஜ்ஜும்மா என் மகள்னு தெரியாத போதே, வெளியே போக விட்டேனா இல்லையில்லை கண்ணு, உன்ர ஆயி மட்டும் போயிடுவாளாக்கும், என்ரகிட்ட திரும்ப வந்திட்டால்லமில்லுக்குள்ள வச்சு பூட்டி வச்சிருவோம் விடு கண்ணு , பாபாவை மீறி எமனும் உள்ள வர முடியாது தெரிஞ்சுக்க, உன்ர அப்பனே கைலாஷ் ராஜனாக்கும் " என மகளைத் தேற்றவும், "ஹாங் பாபா " என அவளும் தகப்பன் மீது நம்பிக்கை வைத்து ஒத்துக்கக் கொண்டாள்.

"இவ்வளவு நல்ல பேரென்ஸ்கிட்ட ,வளர முடியாத வெரி அன்லக்கி முல்கி, நான் தான் இல்ல பாபா ” என அவள் அவள் அடுத்தக் கவலைக்குத் தாவ,

“ போனதைப் பத்தி பேசி,என்ன கண்ணு ஆகப் போகுது, இனி இருக்கக் காலத்தைச் சந்தோசமா வாழ்ந்துட்டு போவோம், உனக்கு என்ன என்ன ஆசைன்னு சொல்லு, அத்தனையும் அப்பா நிறைவேற்றி வைக்கிறேன்.” என அவளை உச்சி முகர்ந்து, ஆசையாய் கொஞ்சினார்.

அவர் மார்பில் சாய்ந்து கொண்டவள், "நீங்க, ஆயி, நான்,பாவு, அஜ்ஜோ ஆத்தா எல்லாரும், சேர்ந்து ஒரே வீட்டுல இருக்கணும், அவளவு தான் " என்றவளிடம் ,

"இருந்திட்டா  போச்சு, ஆனால் உன் ஹிட்லர் தாத்தா, ஜீத்தி ஆயி, இவிக ரெண்டுபேரும் ஒத்து வரணும், நீ , உன் தாத்தன் கிட்டையும் இதே பிட்ட போடு, நானும் உருக்கமா , சென்டிமெண்டா பேசி,அவரை லாக் பண்ணிடுறேன், ஆனால் உன் ஆயிக்கிட்டே கொஞ்சம் கெத்துக் காட்டோனோம்,இல்லையினா பிரிச்சு மேஞ்சுடுவா " என்ற பாபவின் திட்டத்தில் மகிழ்ந்த மகள் 

,"என் அப்பா, பாபா, மை டாட் " என , அவரின் ஒரு நாள் தாடி வளர்ந்த அவரது கன்னத்தில் முத்தம் கொடுக்க, கைலாஷ் மறு கன்னத்தையும் காட்டி மகளின் அன்பை பெற்றுக் கொண்டவர் , உடல் சிலிர்த்து நெகிழ்ந்து தான் போனார்.

'நான் கைலாஷ் ராஜன் பொண்ணு. ஆப் கீ பேட்டி, முல்கின்னு தெரியவும் எவ்வளவு சந்தோஷம் தெரியுமா. பத்து நாளா அதை வெளியே காட்டிக்க முடியாமல், பகூத் முஸ்கில். நீங்க வேற, அடாப்சன் அது இதுன்னு சொன்னா, நான் தான் உங்க பொண்ணுன்னு கத்தனும் போல இருக்கும்' எனவும்,

 "இன்னும் நாலு தரம், அழுத்தி சொல்லியிருந்தா, என் பொண்ணு மயிலு அன்னைக்கே உண்மைய சொல்லியிருக்குமாட்டத்துக்கே " என்றவர், 

" இந்த பொண்ணு மயிலு, நெசமாலுமே, என்ர மகள்" என ,அவள் கன்னத்தை வழித்துக் கொஞ்சியவர், " தங்கம், வைரம், கிளி" என ஒவ்வொன்றாகச் சொல்லி மகளைக் கொஞ்சிக் கொண்டிருக்க , ஆதர்ஷ் அறைக்குள் வந்தான். அப்போதும் கைலாஷ் விடாமல் மகளைக் கொஞ்சிக் கொண்டே இருக்கவும், " பகூத் ஹோகயா" என்றான். 

" உனக்கு ஏன் கண்ணு பொறாமை. நீயும் வா.உன்னையும் கொஞ்சுறேன் " என ஆதர்ஷை கை நீட்டி அழைத்தார். 

" பாபா, எல்லாரும் ஒரே வீட்டில் இருக்கணும் , பாவுகிட்டயும் சொல்லிடுங்க” என ஆதஷிடம் சொல்லச்  சொல்லவும், 

" இவ ஒருத்தி, இருக்கிற பிரச்சினை புரியாமல் பேசுறா" என நொடித்துக் கொண்டு வந்து, அவர்கள் அருகில் வந்து அமர, அவனுக்கு, சாப்பாடை எடுத்துக் கொடுத்துக் கொண்டே " என்னாச்சு கண்ணு " என விசாரித்தார். 

“நீங்க தானே அப்பாயின்மென்ட் கொடுத்தீங்க, மஹந்த் ராய் போஸ்லே வந்து இறங்கிட்டார். “ எனத் தகவல் சொன்னான். 

“அதுக்கு “ என்றவரை, “ பாஸ், புரியாத மாதிரி பேசாதீங்க” என்றான், அவர் ஆட்சேபனையாகப் பார்க்கவும், “ இப்போதைக்கு நீங்க எனக்கு பாஸ் தான்.” என்றவன், “ஆயி வேற ஐ சி யு ல இருக்காங்க “ என அவன் புலம்பவும், “என்ர பொண்டாட்டியை மட்டும் , ஆயின்னு சொல்றீங்க போஸ்லே சாப்” எனச் சிறுவனாக மாறி , அவனுடன் சண்டையிட்டார் கைலாஷ். 

“பாஸ், பீ சீரியஸ். நானே எவ்வளவு கண்ட்ரோலா, பாஸ்னு கூப்பிட்டு  இருக்கேன்” என முகத்தை சுழிக்கவும் , ஆதிராவும், அவனுக்கு ஆதரவாக மண்டையை ஆட்ட, “போச்சுடா, இந்த ராசக் குடும்பத்து ஆளுங்க ,என்ர மக்களை ரொம்பத்தான் கெடுத்து வச்சிருக்காங்க, பாபா இருக்க பயம் ஏன் .எல்லாத்தையும், என்ர தோள்ல இறக்கி வச்சு போட்டு நிம்மதியா தூங்கி எந்திரிங்க, அவிகளை நான் பார்த்துக்கறேன். இருப்பது வருசத்துக்கு முன்னே, இருந்த கைலாஷ் ராஜனில்ல உங்கப்பன், அவிகளை மாதிரியே, எல்லா வில்லத்தனமும் தெரிஞ்சவன். வறட்டும் கண்ணு, மோதி பார்த்துடுவோம்” என்றவர், “இம்புட்டு சீரியஸ் போதுமில்லக்கண்ணு” என ஆதரஸை நக்கல் விட,

ஆதிரா பட்டென சிரித்தவள்  “பாபா, மஸ்து ,படியா மஸ்து “ என கைலாஷின் கழுத்தைக் கட்டிக்கொண்டு மீண்டும் கன்னத்தில் முத்தமிட்டவள், “ பாவு, அப்படியே ஆயியோட ரிப்ளிகா , ஜஸ்ட் என்ஜாய் பாவு  என்றவள்,ஆயியை பார்த்துட்டு வர்றேன் “என காரிடாருக்குச் சென்றாள் 

“இப்போ சொல்லு கண்ணு” என ஆதர்ஷுக்கு மற்றொரு சப்பாத்தியை வைத்துக்கொண்டே கைலாஷ் முகத்தை தீவிரமாகி கேட்கவும், ஆதிராவுக்காக தான் இலகுவாக இருப்பது போல் நடித்தார் எனப் புரிந்து கொண்டவன்,ஆதியோடு அந்தமாக, பீபீ மில்ஸ் பிரச்சினை, கணபதராய் உயில் என , தன்னை தத்து எடுத்தது என அத்தனையும் சொன்னான். கவனமாகக் கேட்டுக்கொண்டார், 

“இன்னும் நாலு  மாசத்துக்கு, ரொம்ப பாதுகாப்பா இருக்கோணும், இப்போ பாருவும், ரஜ்ஜுமாவும், என்ர் கிட்ட இருக்கிறது, அந்த பங்காளி பரதேசிக்கு தெரிஞ்சு போச்சு ,அவ்வளவு தான கண்ணு. அவனுக்கு வேற பக்கம் ஆப்பு வைப்போம், ஆறு மாசத்துக்கு இந்த பக்கம், திரும்பாத பார்த்துக்குவோம், அதுக்குள்ள பாருவும் குணமாயிடுவா, அவளை வச்சே, அந்த நாயை அடிக்கோணும்” என்றவரின் பேச்சைக் கேட்டவன் , ஆயிக்கு ஜெயந்த் செய்த கொடுமைகளை , அவர் வாயால் கேட்டு அறியும் நேரம், கைலாஷ் உண்மையாக தன ருத்ர ஆட்டத்தைக் காட்டுவார் என்பது மட்டும், அவனுக்கு உறுதியாகத் தெரிந்தது.

இரவில் மருத்துவ மனை ஊழியர்கள், கைலாஷின் ஆட்கள், ஆதர்ஷின் பாதுகாப்புப் படை என ஒரு குட்டி ஆர்மியே இருந்தும், கைலாஷ், ஆதர்ஷ், கௌரி யாரவது மாற்றி,மாற்றி பைரவிக்குக் காவலிருந்தனர். கண்ணாடி வழியே மனைவியைப் பார்க்கும் போதெல்லாம், தான் இழந்ததும், தன்னவள் அனுபவித்த இன்னல்களும் பெரிதாகத் தெரிந்தது. கைலாஷின் மூளையில் போஸ்லேக்களுக்கு பாடம் கற்பிக்க வேண்டும் என்ற எண்ணமும் வலு பெற்றது. ஆனால் முதலில் குடும்பத்தை ஒன்றிணைத்து , அவர்களோடு சேர்ந்து வாழ  ஆசைப்பட்டார்.

ஆதிரா இரவில் மருத்துவமனையிலேயே தங்கி விட்டவள், மாற்று உடை கூட இல்லாமல் இருந்தாள். இரவு வீட்டுக்குச் சென்ற பின்பும், காலை எழுந்தவுடனும், அபிராம், ஆதிராவிடம் பைரவியின் உடல் நிலை குறித்து அறிந்தவன், தானே அவளுக்கான மாற்றுடையையும் ரஞ்சனியிடம் சொல்லி ஏற்பாடு செய்து, காலையில் அவளிடம் கொண்டு நீட்டினான். அதைப் பிரித்துப் பார்த்தவள், "தாங்க்ஸ். நானே செல்லியக்காட்ட சொல்லி, சத்தியாண்ணாட்ட கொடுத்து விடச் சொல்லனும்னு நினைச்சேன்" என நன்றி நவின்றவள், " என் சைஸ், உங்களுக்கு எப்படித் தெரியும்" எனக் கொக்கிப் போட்டாள்.

அவனும், " அன்னைக்கு வீட்டுக்கு வந்தியில்ல ஆரா பேபி,என்ர ரூமுக்கு வந்தியில்ல, ரஞ்சியைத் தாட்டிவிட்டுட்டு பேசிட்டு இருந்தோமுல்ல “ என அவன் கேள்விகளாய் அடுக்கி,தான் கே ஆருக்கு சிஸ்யபிள்ளை எனக் காட்டி மெயின் மேட்டருக்கு வர, அதற்குள் சுதாரித்தவள், “சுப் , நோ எக்ல்ஸ்ப்ளனேஷன் , நான் கேட்கவே இல்லை” எனத் தன கன்ன சிகப்பை மறைக்க, திரும்பிக் கொண்டாள். “அப்போ , டெமோ காட்டட்டுங்களா “ என்றவனின் குரல் அவள் காதருகே கேட்கவும், துள்ளிக் குதித்து அவ்விடம் விட்டு நகர்ந்தாள். சரியாக அதே நேரம்,கதவைத் திறந்த ஆதர்ஷ், “ஆது பேபி, உனக்கு டிரஸ் “என ஒரு பையை நீட்டவும், “தாங்க்ஸ் ஆதி”என நேற்றைய ஒப்பந்தப்படி,பெயர் சொல்லியே அழைத்து, பதட்டத்தில் அவன் தந்த பையோடு உள்ளிருந்த அறைக்கு  புகுந்து கொண்டாள்.

அபிராம் ,ஆதர்ஷை முறைத்து நின்றான். “ஓ,ராங் டைமிங்ல வந்துட்டேனோ, ஆனாலும் இது ஹாஸ்பிடல், அவங்க ஆயி முடியாமல் இருக்காங்க, அதையும் மனசில வச்சுக்கலாம் நீங்க”என அவன் வம்பிழுக்கவும், “ எங்களுக்கும் தெரியும், மூடிட்டு போ, பெரிசா வந்துட்டான்” எனக் கோபத்தில் கதவை அடைத்து விட்டு வெளியேற, ஆதர்ஷ் சிரித்துக் கொண்டான்.

கைலாஷ், டாக்டரோடு பேசிவிட்டு,பைரவியை மதியத்துக்கு மேல் அறைக்கு மாற்றலாம் என்றதைச் சொல்ல வந்தவர், எதிரே கோபமாகச் செல்லும் அபிராமை ,அதிசயமாக தான் பார்த்தார்.அதற்குள் அவன் திருப்பத்தில் வளைந்து விடக் கௌரியிடம், “மாஸிமா , உங்க தீதியை , நம்ம இருக்க ரூமுக்கே மாத்த சொல்லிட்டேனுங்க, அந்த ரூம் வசதியா இருக்குமில்லைங்க “ என யோசனை கேட்டார். அவர்கள் இப்போது இருந்த அறை ,நட்சத்திர ஹோட்டல் சூட் போல், வரவேற்பறை, நோயாளி தங்கும் அறை , சின்ன டயனிங், வசதியான பாத் ரூம் என்று இருந்தது. “சரிங்க சாப்” என்றவர், “மயக்கம் தெளியும் போதெல்லாம் ,உங்களைத் தான் தேடுறாங்க “எனத் தகவல் தந்தார்.

“இருபது வருஷம் லேட்டா தேடுறாளுங்க “ எனக் கசந்த முறுவலை வெளியிட்டவர், ஒரு முறை எட்டியாவது பார்ப்பார் என்ற கௌரியின் எதிர்பார்ப்பைப் பொய்யாக்கி ,அங்கிருந்து கடந்து விட்டார்.

கௌரியும், ஆதிராவும் மட்டுமே, நார்மல் அறைக்கு மாற்றிய பின்னர்,பைரவியுடன் இருந்தனர். அபிராம் அவரது தேவைகளைக் கவனித்துக் கொண்டான். ஆதர்ஷ், வெளியே இருந்து மட்டுமே எட்டிப்பார்க்க, கைலாஷ் அதுவும் வரவில்லை. ஆதிராவிடம் பைரவி , வாயைத் திறந்து கேட்டே விட்டார்.

“இவ்வளவு நேரம் இங்க தான் ஆயி இருந்தாங்க, ராத் பர் சோயே நஹி, மில்ஸ்க்குப் போயிருப்பாங்க”எனப் பதில்தர ,பைரவி ஏமாற்றமாக உணர்ந்தார். சட்டென நினைவு வந்தவராக , “ ஓ ,முல்கா”என்றவர் யோசித்து “ஆதர்ஷ் எங்க” என்றார்.


“அது யாரு ஆயி “ என ஆதிரா தெரியாதது போலக் கேட்கவும், “ஆயி,ராதா மகன்னு சொன்னாங்க, ஆனால் அது பொய், அவனைக்கூப்பிடு “ என்றார்.

சற்று நேரத்தில் மருத்துவர்களைக் கலந்து கொண்டு ஆதர்ஷ் பைரவி அறைக்கு வந்தான். “ஆயி”என அவன் அழைக்கவும், பைரவி அவனைக் கவனமாகப் பார்க்கவும், ஓ நோ எனத் தன்னை மற்றவர்களிடம் சொன்னது போலவே அறிமுகப் படுத்திக் கொள்ள, “ நீ எப்படிச் சொல்றியோ அப்படியே இருக்கட்டும், இந்தப் பாவி வயித்தில பிறந்ததுக்கு ,என் ரஜ்ஜும்மா கஷ்டப்படுறது போதும்.” என அவர் ஆயாசமாகக் கண்ணை மூடவும், “அப்படிச் சொல்லாதீங்க ஆயி,நீங்க இழந்த எல்லாத்தையுமே நான் மீட்டுத் தருவேன்.” என அவர் கையைப் பற்றவும், அதைக் கெட்டியாகப் பற்றிக்கொண்டவர், “ என் ஆயியை வரச் சொல்லு பாபா, நான் பார்க்கணும் “ என்றார், “வருவாங்க ஆயி”என அவனும் முடித்தான். பைரவிக்கு ஆஞ்சியோ செய்த பிறகு பேசிய எதுவுமே நினைவிலில்லை.கணவரைப் பார்த்தோமா,இல்லையா எனக் குழம்பிக்கொண்டிருந்தார்.

காலையிலிருந்து,அபிராம் ஆதிராவிடம் முறைத்துக்கொண்டு தான் திரிகிறான், அவள் புரியாமல் என்னவென்று கேட்க, அவன் பார்வை, அவள் போட்டிருந்த ஷிபான் லெஹங்கா மீது படிந்து மீள, “ஓ, இது தான் காரணமா, ஆதி , முதல் தடவை எனக்காக எடுத்துட்டு வந்தது, நாளைக்கு நீங்க எடுத்த டிரஸ் போட்டுக்குறேன்” என அவள் சமாதானம் சொல்லவும்,

‘நானும் முதல் தடவை தான், எடுத்துட்டு வந்திருக்கேன், என்னை விட அவனென்ன ஸ்பெஷல் ‘ என மனதில் மட்டுமே அவனால் குமைய முடிந்தது. ஆதர்ஷ் இதனைச் சுவாரஸ்யமான நாடகமாகப் பார்த்திருக்க, மற்றொரு சீனி பட்டாசிடமிருந்து அதற்காக வாங்கிக் கட்டினான்.

கைலாஷ், மதியத்தில் பைரவியை அறைக்கு மாற்றவும், அபி,ஆதர்ஷ் பொறுப்பில் விட்டு விட்டு வீட்டுக்குச் சென்றார்.பாலாவும், சௌந்தரியும் கவலையோடு கேட்கவும், “இன்னும் முழுசா மயக்கம் தெளியலைங்க, நாளைக்குக் காலையில் போனீங்கன்னா, மதியம் வரைக்கு இருந்துட்டு வாங்க” என யோசனை சொல்ல,அதுவும் அவர்களுக்குச் சரி என்றே பட்டது.

மாலையில் மஹந்த் ராய் போஸ்லே, கேஆரை சந்திக்க வந்தான். பரஸ்பர அறிமுகத்துக்கு பின்,”புவாஜிக்கு முடியலைன்னு கேள்விப்பட்டேன்,வெரி சாரி” எனச் சம்பிரதாயமாக விசாரித்தவன்,பீபீ மில்ஸ் பற்றிப் பேசிவிட்டு,தன் தந்தைக்கு போன் போட்டுக் கொடுக்க, பைரவியின் பெரியப்பா மகன், ஆனந்த ராய் போஸ்லே பேசினார்.

 கைலாஷும் தன் ஆட்டத்தை ஆரம்பிக்க, இது சரியான வழி என யோசித்தவர், அவர்கள் போக்கிலேயே பேசினார். கடைசியாக, தங்கள் தங்கை குணமாகி வந்த பின், அவர்களோடு சம்பந்தம் வைத்துக் கொள்ள விரும்புவதாகச் சூசகமாகச் சொல்லி, தங்கள் சிறிய தாயார், ரமா பாய், தங்கள் மேல் உள்ள கோபத்தில், தன தாய் வழி உறவை வாரிசாக நுழைக்கப் பார்க்கிறார் எனவும்,பைரவியும்,கைலாஷும்  வந்து சொத்து உரிமையை ஏற்க வேண்டும் என்றும் வினையமாகக் கேட்டுக் கொண்டார். 

மஹந்த் , தன் புவாஜியை பார்க்க விருப்பம் தெரிவித்தான், “சிச்சுவேஷன் எப்படின்னு தெரியலிங்க, அங்க போயி பார்க்கமுடியிலையினா கோவிச்சுக்காதீங்க” எனச் சொல்லி  , தனது படை பலத்தைக்  காட்டவே கூடவே அழைத்து வந்தார். ஆதர்ஷுக்கு தகவல் சென்றுவிட, “இது தேவை இல்லாத வேலை” என அவரிடமே கடிந்தவன், தன் தலையை அங்கு காட்டாமல் மறைந்து நின்றான். இவர்கள் ராஜ தந்திரத்தில், ஆதிராவை மறைக்க வேண்டும் என்ற விஷயம் கவனமின்றி போனது. 

தன் ஆயி , பாபாவைத் தேடுவதை உணர்ந்தவள், அவரை எப்படியாவது அவர் அறைக்கு அழைத்துச் செல்ல வேண்டுமென்ற துடிப்பிலிருந்தாள். எப்போதுமெச்சரிக்கை,எச்சரிக்கை என இருப்பவள், இன்று காலை கைலாஷ் தந்த தைரியத்தில், அதனை மறந்து, தன் உற்றவர்கள் அனைவரும் தன்னை சூழ்ந்து இருக்கும் போது , என்ன ஆபத்து வந்து விடும் என இயல்பாக இருந்தாள்.

சிசிடிவி வைத்திருக்கும் அறையிலிருந்து , ஆதர்ஷ் மஹந்தும்,கைலாஷும் வருவது முதல் பார்த்துக் கொண்டு இருந்தவன், நான்காம் தளத்துக்கு வரும் தன் , தகப்பனைக்  காண ஆவலோடு செல்லும் ஆதிராவை கண்டவன், “ இடியட்” என்ற படி, அபிராமுக்கு போன் அடித்தான், அவன் எரிச்சலோடு, “என்னவென்று கேட்க”,

 “ஏய் சாலா, உன் ஆளு ,அவள் பாபாவை பார்க்க ஓடுது பார், கூட வர்றவன் கண்ணில் அவள் படக்கூடாது, அதனால பின் விளைவுகள் ஜாஸ்தி,போய் தூக்கு “ எனக் கட்டளை இட ,”சாலாவா, அப்டின்னா மச்சான், அப்ப நீ ஆராவுக்கு என்ன வேணும்” எனக் குரலில் துள்ளலோடு அபி கேள்வி எழுப்ப, “புடலங்கா “ எனத் திருப்பி தந்தான் ஆதர்ஷ். 

ஆனால் விதி வலியது ,அபிராம் ஆதிராவை நெருங்கும் முன், அவள் தன் பாபாவை அடைந்திருந்தவள், பின்னல் வரும் ஆடவனைக் கவனிக்காமல், கொக்குக்கு மதி மீன் ஒன்றே என்பது போல், “பாபா,நீங்க வருவீங்கன்னு தான் பார்த்துட்டே இருந்தேன், ஆயி உங்களை தேடுறாங்க, வாங்க “எனக் கொஞ்சும் கிளியாய் மொழிய , நிழற்படத்தைக் கண்டே அவள் மீது ஆசை கொண்டிருந்த , அவள் மாமன் மகன்,நேரே பார்க்கவும், அதுவும் அழகு பதுமையாக ஒயிலான லெகங்கா சோளியில் பார்க்கவும், தேன் குடித்த வண்டாக, அவள் அழகில் மயங்கி நின்றான் மஹந்த். 

நிலவு வளரும். 


No comments:

Post a Comment