யார் இந்த நிலவு-39
அபிராம் சொன்னது போல், ஆதிராவை மருதமலைக்குச் சென்ற மூன்று முறையும் கூட, மில்லில் வேலை செய்யும் பெண்களோடு சேர்த்துத் தான் அழைத்துச் சென்றான். அதுவும் முதல் முறை சென்ற போது, கைலாஷ் மட்டும் இன்றி ஆதர்ஷ் கண்களிலும் மண்ணைத் தூவி அழைத்துச் சென்று, தனது வேண்டுதலை நிறைவேற்றப் படி வழியாகவே அழைத்துச் சென்றான்.
மில்லிலிருந்து மற்றொரு யூனிட்டுக்கு இப்படிப் பெண்கள் வேலைக்குச் சென்று வருவது பழக்கம் ஆதலால், யாரும் கண்டு பிடிக்க வில்லை, ஆனால் இவர்களோடு கடைசி முறை வந்த பெண்கள் சுய தம்பட்டமாக, ஆதிரா அபிராமோடு கோவிலுக்குச் சென்றதைப் பெருமை பேச, சேர்மன் காதுகளுக்குச் சென்றதோ இல்லையோ சேரவேண்டியவர்கள் காதுக்குச் சென்று சேர்ந்தது. அதன் பிறகு, பெண்கள் வேனில் சென்றாலே கண்காணித்துக் கொண்டு தான் இருந்தனர். இந்த முறை வசமாகச் சிக்கினாள் ஆதிரா.
ஆதிராவை கடத்துகின்றனர் எனப் புரியவுமே, அவளுக்கு மயக்க மருந்து கொடுக்க முயன்றவனைச் சங்கீதா தன்னால் இயன்ற வரை அடித்து, குத்தி, கிள்ளி தன் எதிர்ப்பை காட்ட, அவளையும் மயக்க மருந்தை நுகரச் செய்து கைகால்களைச் சேர்த்து கட்டிப் போட்டனர். ஏற்கனவே ஓட்டுனரை கடைசிச் சீட்டில் கைகால்களைக் கட்டி படுக்கப் போட்டிருந்தனர்.
மருத மலை அடிவாரம் தாண்டும் வரை, ஆதிராவை கே ஆர் மில்ஸ் கம்பெனி வேனிலேயே கடத்தியவர்கள். மற்றொரு கேரவேனில், வந்த மஹந்த் ராய் போஸ்லேயிடம் , அவளை ஒப்படைத்தனர். ஆதிராவின் போன், இவர்கள் வேனிலேயே கிடந்தது.
மஹந்த், மயங்கிய நிலையிலிருந்த ஆதிராவை, பூ போல் வாங்கிக் கொண்டான். " சோட்டி ராணியை, ரொம்பக் கஷ்டபடுத்தலையே" என மராத்தியில் கேள்வி வேறு கேட்டுக் கொண்டான். ஆதிரா மயக்க மருந்தைப் பார்க்கவுமே மூச்சை அடக்கியவள், அதிக நேரம் அடக்க மாட்டாமல், கொஞ்சமாகச் சுவாசித்து விட்டாள்.
ஆனால் மயங்கியது போல் நடித்தவள், எப்போதும், தனது டாலர் செயினில் மறைந்திருக்கும் லொகேஷன் ட்ராகிங் பட்டனை ஆன் செய்ய, அது கைலாஷ்க்கும், ஆதர்ஷ்க்கும் அலார்ட் கொடுத்தது. முன்பு இந்தச் செயலி, பைரவியிடம் இருந்தது. அவருக்கு உடம்பு முடியாமல் போகவுமே, அப்பாவும், மகனுமாக, ஆதிராவின் பாதுகாப்பை தங்கள் கையில் எடுத்துக் கொண்டனர்.
கைலாஷ் ,மக்களின் சமயோசிதமாகச் செயலை மெச்சிக்கொண்டவர்,' ரஜ்ஜும்மா , பாபா வரேண்டா, அது வரைக்கும் தைரியமா சமாளி' என மனதில் பேச அது மகளுக்கும் டெலிபதி மூலம் டெலிவரி ஆனது.
கைலாஷ் அடுத்து அபிராமுக்கு போன் அடித்து, ஒரு மில்லின் பழைய குடோன் பெயரைச் சொல்லி, " அங்க வா மாப்பிள்ளை. உன்ர பங்காளி, அங்க தான் இருக்கான்" என்றார்.
" கன்பார்மா தெரியுங்களா மாமா" என அபிராம் சந்தேகம் கேட்டான், ஏனெனில் அவன் விசாரித்து அறிந்ததிலொரு கேரவேன் ,இரண்டு ட்ரக்குகள், மற்றும் ஒரு கார் பாதுகாவலர்களைக் கடந்து இருந்தது.
" என்ர மகளை யாருன்னு நினைச்ச, அதெல்லாம் சிக்னல் கொடுத்திருச்சு, நீ இருக்கிற இடத்திலிருந்து பக்கம் தான். நீ முன்னாடி போ, நானும் பின்னாடியே வந்திடுவேன்" என்றவர் " உன்ர ஹீரோயிசத்தை அவிக கிட்டக் காட்டாத. பாதுகாப்பு டீம் சொல்ற மாதிரி நடந்துக்க" எனக் கடுமையாக அறிவுரை வழங்கியவர், அடுத்து அந்த டீமுக்கும் இருப்பிடத்தை ஷேர் செய்து கட்டளைகளைப் பிறப்பித்தார்.
அபிராம்க்கு ,ஆதிராவை கடத்தியவன் மஹந்தாக இருக்கும் என்ற அனுமானம் இருந்தது, அதே நேரம் ஆதர்ஷிடமிருந்து வந்த போன் காலும் அதனை உறுதி செய்தது.அபிராம் காரை சத்தியன் ஒட்டி வர, இவன் பரபரப்பாகவே இருந்தவன், ஆதரிஷிடமும், தன்னால் தான் இப்படி ஆனது என்ற சுயபட்சாதாபத்தைக் கொட்டிவிட, “மச்சி, எது எதிர்பார்த்தது தான், நீ ஆதியை காப்பாத்துற வழியைப் பார், அப்புறமா புலம்புவ, உன் கோபத்தையெல்லாம் சேர்த்து வச்சு, என் சார்பாவும் அவன் மூஞ்சில இரெண்டு குத்து விடு” என ஆதர்ஷ் , அபிராமின் கோபத்தைத் தூண்டி விட,அதே ஆத்திரத்தோடு சென்றான்.
மஹந் தன்னைத் தொடுவதை விரும்பாத ஆதிரா, அரை மயக்கத்தில் விலகி அமர, " ஓ, ராணி சாயிபா, முழுசா மயங்கலையா. நான் ஒரு முட்டாள், புதுசா கேட்கிறேன். பிறந்ததிலிருந்து வந்த பழக்கம், மூச்சை அடக்கியிருப்பீங்க. ஆனால் நானே கொஞ்சமா தான் உபயோகிக்கச் சொன்னேன். ஷாதி நடக்கும் போது, நினைவு இருக்கனுமே" என அவன் பேசிக் கொண்டே போக, ஒரு இகழ்ச்சியான முறுவலைத் தந்தாள் ஆதிரா.
" என்ன சாயிபா, என்னால முடியாதுங்கிரீங்களா" என்றவன், ஷாதி மண்டபமும், துல்ஹாவும், ஒரு மாசமா உங்களுக்காகச் சிங்காரிச்சு ரெடியா தான் இருக்கோம். போன உடனே முகூர்த்தம் ஆரம்பிச்சிடும். உன் ஆயி, பாபா மேரஜோட சேர்த்து, நம்மதையும் அனோன்ஸ் பண்ணட்டும்" என நிறையத் திட்டங்களை வகுக்க,
" ஷாதி " என அரை மயக்கத்தில் சிரித்தவள், " இப்ப தான் ராம் எனக்கு மாலை போட்டார். ஸோ, நான் அவர் மனைவி. முடிஞ்சா தப்பிச்சுக்கோ. இல்லைனா ரொம்பக் கஷ்டப்படுவ. " என அவள் அவர்கள் மொழியிலேயே எச்சரித்தாள்.
" அதையும், பார்த்திருவோம் ராணி சாய்பா." என அவன் சவால் விட, " நீ, கை வச்சிருக்கிறது, கைலாஷ் ராஜன் மகள் மேல, இது அவருடைய கோட்டை. தேவையில்லாத வேலை செய்யற, மராட்டா லங்கூர். " எனக் கண்கள் சொருகப் பேசியவள், அப்படியே மயங்கிச் சரிய,
" மராட்டா லங்கூர், ஆஹா செல்ல பெயரெல்லாம் வச்சிருக்கியா, ராணி சாய்பா, படியா, பகூத் படியா. " என அவளை ரசனையோடு பார்த்திருந்தவன்,
" கைலாஷ் பாபா, வரட்டும். தாமாத்தை ஆசீர்வாதம் பண்ண வந்து தான ஆகனும். என் அண்ணன்களுக்கு, இரண்டு பங்கு ஷேர் வந்தா, எனக்கு அவங்களை விட, கே ஆர் மில்ஸ் ஷேரும் சேர்ந்து வருமில்லை. நான் வச்சது தான் சட்டம்" என்றவன் போனில் " எல்லாம் ரெடியா" எனக் கேட்டு, தானே ஆதிராவை, அந்த மில்லுக்குள் தூக்கிச் சென்றான்.
'ஷாதி மட்டும் செஞ்சா, தமிழ்நாட்டு பொண்ணு, அதை அத்து எறிஞ்சிட்டு போவ, அந்தக் காதல் மன்னனும் ஏத்துக்குவான்னு தெரியும், ராணி சாய்பா. இங்கிருந்து போகும் போது, போஸ்லே வம்ச வாரிசை வயித்தில சுமந்திட்டு தான் போவ. எல்லா விதமாவும் உன்னை லாக் பண்ணுவேன். நீயே, நான் மஹந்தோட போறேன்னு, உன் பாபாகிட்ட அடம் பிடிச்சு வருவ. அவன் இரண்டு மாச பழக்கம் தான, ராணி சாய்பா. நான் அவனை மறக்கடிச்சு காட்டுறேன்' எனத் தனக்குள் பேசிக் கொண்டு சென்றவன்,
இரண்டு மராத்திய பெண்களிடம் ஒப்படைத்து, " ராணி மாதிரி சிங்காரிச்சு கூட்டிட்டு வாங்க. எதிர்காலப் பீபீ மில்ஸ்க்கு ஒரே ராணி அவள் தான்" எனக் குடும்ப நகைகளையும் கொடுத்துச் சென்றான்.
பண்டிதர், திருமணச் சடங்குகளை நடத்திக் கொண்டிருக்க, பாதுகாப்புக்கு ஆட்களை ஏற்பாடு செய்து விட்டு, மாப்பிள்ளை சடங்குகளுக்காகப் பாரம்பரிய வெளிர் சந்தன வண்ணத்தில் , ராஜ கம்பீரத்தோடு மணவறையில் அமர்ந்தான் மஹந்த் ராய் போஸ்லே.
ஆதர்ஷ், கைலாஷுக்கு மீண்டும் அழைத்து இடத்தை நெருங்கி விட்டீர்களா என விசாரிக்க. " இடத்தைச் சுத்தி வளைச்சிட்டோம் கண்ணு, என்ட்ரி அடிக்கிறது தான் பாக்கி, ஆமாம் அந்த மருமகனுக்கு என்ன பரிசு கொடுக்கிறது" என இவர் மகனைக் கேலியாகக் கேட்க,
" உங்க கல்யாணத்துக்கு, போஸ்லே குடும்பம் சீர் செய்வாங்கல்ல, ஒருவாரம் வச்சிருந்து, அவனையே ரிடர்ன் கிப்ஃடா குடுங்க" என ஆதர்ஷ் எரிச்சலாகப் பதில் சொல்ல,
" சூப்பர் கண்ணு, அப்படியே செஞ்சிட்டா போச்சு" என்றவர், அந்த மில் வளாகத்தில் இறங்க. அபிராமும், அவரது பாதுகாப்புப் படையும், ஏற்கனவே அவர்களைச் சுற்றி வளைத்து இருந்தனர்.
ஆதிராவுக்கு அலங்காரம் செய்து, அரை மயக்கத்திலேயே மணவறை நோக்கி அழைத்து வர, " சோடோ முஜே. " என உடன் வந்தவர்களை எதிர்க முற்பட்டாலும் , அதற்குண்டான பலம் அவளிடம் இல்லை. வலுக்கட்டாயமாக, மேடையில் கொண்டு வந்து உட்கார வைக்க, மயங்கியிருந்தவள், " நீ தாலி கட்டினாலும், மே தோட்கர் ஜாவூங்கி, ராம் கூட என் ஷாதி நடந்திருச்சு, ரிஜிஸ்டர் " என அவள் புலம்பியபடி, அவள் மயங்க, " க்யா, பொய் சொல்ற" என்றவன் மற்ற இரண்டு பெண்களை அழைத்து, அவளை நிமிர்த்தி உட்கார வைக்கச் சொன்னான். பண்டிட் மந்திரம் படிக்க ,மஹந்த் ஆதிராவின் கழுத்தில் தாலி கட்ட தயாரானான்.
கைலாஷ், சொன்ன பழைய மில்லின் கோடோன் இருக்கும் பகுதிக்குப் படையோடு விரைந்த அபிராம், அதிரடியாக உள்ள போகத் துடிக்க, பாதுகாவலர்கள் தான், சற்று நிதானித்து , தொழில் முறையாகக் கையாள, அபிராம், அவர்களையும் மீறி உள்ளே நுழைந்து விட்டான். பதுங்கி, பாய்ந்து சென்றவனை மஹந்தின் ஆட்கள் தாக்க வர, சமயோசிதமாகத் தன்னைத் தற்காத்துத் தப்பிக்க, தாக்க வந்தவர்களைப் பாதுகாவலர் படையினர் பார்த்துக் கொண்டனர்.
மஹந் தாலி கட்ட முயன்ற நேரம், அபிராம் சரியாக உள்ளே நுழைந்தவன் பாய்ந்து சென்று, மங்கள் சூத்திரத்தைப் பறித்து, “ஆரா பேபி,நான் வந்துட்டேண்டா “ என அவள் கன்னத்தைத் தட்டி எழுப்பி அனைத்துக் கொள்ள, “ராம், ஐ லவ் யு “ என அவளும் கட்டிக்கொண்டாள்.
அபிராமை பார்க்கவும் அதிர்ந்த மஹந்த் , தன ஆட்களைப் பெயர் சொல்லி அழைத்து,”இவனைப் பிடிங்க,இவன் கண்ணு முன்னாடியே நான் ராணி சாய்பாவுக்குத் தாலி கட்றேன்”என் மராத்தியில் சொன்ன போதும்,ஆதிராவை அந்தக் கோலத்தில் பார்த்ததிலேயே அபிராமுக்குக் கோபம் கொதி நிலைக்குப் போக, ஆதிராவை ஒரு கையில் தாங்கியபடி, மஹந்த் மூக்கு,புருவ மத்தியில் ஓங்கி ஒரு குத்து விட்டான் அபிராம் , மகத்துக்குப் பொறிக் கலங்கியது, ஆனால் முதலாளியைத் தாக்கவும் அவன் ஆட்கள் அபிராமை சூழ்ந்து கொள்ள, ஆதிராவை அந்தப் பெண்கள் வந்து பற்றிக்கொண்டனர்.
அபிராமை ,சூழ்ந்த ஆட்களை, அவனே தான் கற்ற கலையெல்லாம் பயன்படுத்தித் துவம்சம் செய்து கொண்டிருக்க, சத்தியனும்,பாது காவல் படையினும் களத்தில் குதித்தனர்.
இந்தக் களேபரத்தில்,மஹந்த், ஆதிராவை கைப்பற்றி, அந்த இடத்தை விட்டு, அகல முயன்ற நேரம், கைலாஷ் சரியாக உள்ளே நுழைந்தார், மஹந்த்தின் ஆட்களில் ஒருவன் மறைந்திருந்து அபிராம் மேல் கத்தி எறிய, குறி பார்த்துக் கொண்டு இருக்க, உள்ளே நுழைந்த ராஜன், அதைக் கவனித்துப் பின்னிருந்து அவன் தோள் பட்டையில் தாக்கியவர், அந்தக் கத்தி கீழே சென்று விழ, மேலும் இரண்டு அடிகளில் அவனை மயக்கமடையச் செய்து விட்டு வேகமாக மஹந்த் பிடியிலிருந்த மகளிடம் சென்றார்.
கைலாஷை தொடர்ந்து, அவரது ஆட்களும் அடுத்தடுத்து கோடோனுக்குள் நுழைந்து மஹாந்த்தின் ஆட்களைச் சுற்றி வளைத்தனர்.
மஹந்த் ,கைலாஷை பார்க்கவும் சிலையாகி ஆதிரவை விட, கைலாஷ், அவசரமா ஓடி,மகளைத் தாங்கிக் கொண்டார். அபிராம் ,மஹந்த்தை நெருங்கியவன்,தன கோபத்தையெல்லாம் அவன் மீது காட்டி அடிக்க, அவனும் பதிலுக்குத் தாக்கினான் , இருவருக்கும் துவந்த யுத்தம் நடந்தது. அதே நேரம் , மஹந்த் ஆட்களுக்கும், கைலாஷ் ஆட்களுக்கும் சண்டை நடந்து கொண்டிருந்தது, இருபக்கமும் ஆயுதங்களும் இருந்தது. சண்டை தீவிரமாக நடந்தது.
ஆதிராவை தாங்கிக் கொண்டிருந்த பெண்கள், அவரிடம் விட்டுவிட்டு பின்னடைந்தனர். மகளைத் தூக்கி, “ரஜ்ஜும்மா , பாபா வந்துட்டேண்டா”எனத் தன் மேல் சாய்த்துக் கொள்ள,”பாபா, ஆப் ஆகை “ என இவ்வளவு நேரம் சிரமப் பட்டு விழித்திருந்த கண்களை நிம்மதியாக மூடி,அவரின் தோள்களில் சாய்ந்து கொண்டாள் .
ராஜன் தற்காப்புக்கு என உரிமத்தோடு வைத்திருந்த துப்பாக்கியை மேல்நோக்கி சுட்டு, “ சாமானையெல்லாம் கீழப் போடுங்க, இல்லையினா போஸ்லே சாப் மண்டை தான் முதல்ல தெறிக்கும்” எனக் கர்ஜிக்க, சண்டையிட்டுக் கொண்டிருந்த மஹந்த்தின் ஆட்கள் சிலையாய் நிற்க, ராஜனின் ஆட்கள் அவர்களின் ஆயுதங்களைப் பறிமுதல் செய்து கயிறுகள் கொண்டு கட்டிப் போட்டனர்.
மஹந்த் மட்டும், அபிராம் பிடியிலிருந்தும் விடுவித்துக் கொண்டு,ராஜனை முறைத்துக் கொண்டு நிற்க, ராஜன்,
“ நீ செஞ்சிருக்கிறது முறையில்லை மஹந்த் ராய் போஸ்லே, உன்ர அத்தை புருஷனையும் ஜெயந்தை காட்டியும், கேவலமான வேலை செஞ்சிருக்க “ என அவர் வன்மையாகக் கண்டிக்கவும்,
“ராஜ வம்சத்தில், பெண்ணைத் தூக்கிட்டுப் போய்க் கல்யாணம் பண்றது, நடைமுறையில் இருக்கிறது, பெருமையான விஷயம் தான்.”எனத் திமிராகப் பதில் சொல்ல
“அதுக்கு நீ ,இந்தக் கைலாஷ் ராஜன் மகளை , அதுவும் என்ர பாதுகாப்பில் என்ர மகள் இருக்கும் போது, அவர் கோட்டைகுள்றையே வந்து தூக்கணும்னு ஆசைப் பட்டிருக்கக் கூடாது” என்றவர்,
“ஏன்ரா மாப்பிள்ளை, நம்மூர்ல பொண்ணுங்களை , அவிக சம்மதமில்லாமல் தூக்குறவனுங்களுக்கு என்ன தண்டனை கொடுப்போம்” என அபிராமை பார்த்துக் கேட்கவும்,
“என்ர ஆராவை பார்த்த கண்ணைத் தோண்டி , தொட்ட கையையும் முறிக்கோனுங்க மாமா “என ஆத்திரமாக அபிராம் பதில் தரவும்,
“ஆதிரா எனக்குப் புவாஜி கி முல்கி , எனக்குத்தான் அவளை ஷாதி பண்ணிக்க முதல் உரிமை இருக்கு”என அவன் ரூல்ஸ் பேசவும்,
“அதுக்கு,நீ முறையா ,உங்கப்பன் ஆத்தாளோட வந்து என்ர கிட்ட கேட்டிருக்கோணும், என்ர மகள் மாட்டேன்னு சொல்லுவான்னு தெரிஞ்சு தானே, கேவலமா திட்டம் போட்டு வந்திருக்க, உங்கப்பாரை வரச் சொல்லி பஞ்சாயத்து வச்சுக்குவோம், அது வரைக்கும்,எங்க கெஸ்ட்டா இருங்க” என்றவர்,
“யார்றா அங்க, போஸ்லே ஷாப்பையும் அவர் ஆட்களையும், முறையா கொண்டு போய், நம்ம இடத்தில் வச்சு பார்த்துக்கோங்க” என அவர் கண் காட்ட, “ மாமாஜி , இது சரியில்லை “ என எச்சரித்தவன், நொடியில் அவர்மேல் பாய்ந்து ஆதிராவின் கழுத்தில் கத்தியை வைத்து, “கன்னை கீழ போடுங்க” என மிரட்ட,
“என்ர மகளை ஒன்னும் செஞ்சிடாதா ,துப்பாக்கி தானே கீழ போடுறேன் ” எனவும், அபிராம் பதட்டமாகி மஹந்த்தை தாக்க வந்தான், “ மஹந்த் ஆதிராவின் கழுத்தில் கத்தியை அழுத்தம் கொடுக்க முனைய , “வேண்டாம் மாப்பிள்ளை, என்ர மகள் முக்கியம்” என்ற ராஜன், மகளை ஒரு கையால்
அணைத்தபடி , துப்பாக்கியைக் கீழே வைப்பது போல் நடித்து, அபிராம் கையில் தூக்கிப்போட, அதைப் பிடித்தவன், யோசிக்காமல் மஹந்த்தின் கையில் சுட்டு விட்டான்.
மஹந்த் இடது கையைப் பிடித்துக் கொண்டு விழுந்த நேரம் , ராஜனும் மகளைத் தூக்கி தோளில் போட்டுக் கொண்டவர், அபிராம் மஹந்த் மீது பாய்ந்து அவனைப் புரட்டி எடுத்துக் கொண்டிருக்க, “முடிச்சிட்டு வா மாப்பிள்ளை “ எனக் கட்டளைகளைப் பிறப்பித்து விட்டு,சத்தியனைக் காரை எடுக்கச் சொன்னவர், குடும்ப மருத்துவரிடம் மகளை அழைத்துச் செல்ல, அனஸ்தீசியா தான்,தூங்கி எந்திரிச்சா சரியாகிடும்,கவலை படாதீங்க” என அவர் திருப்திக்கு ஒரு மாற்று ஊசியையும் போட்டு அனுப்பி வைத்தார்,
விஜயன்,கைலாஷுக்கு போன் அடித்து விவரம் கேட்டார். விவரம் சொன்னவர், “ இருபது வருஷம் முன்னை பருவைப் பார்த்த மாதிரியே , இன்னைக்கு என்ர மக்களையும் பார்த்தேண்டா , மனசுக்கு வேதனையா இருக்கு, பொண்ணு மயிலு மயங்கி கிடக்குதுடா “ என வேதனை பட,
“அவிக தலையெழுத்து அப்படி, ஆதிராவுக்கு, அவள் பாபாவோட சப்போர்ட்டும் இருகுல்ல, அது தான் பத்திரமா மீட்டுடியில்ல , அதையே நினைச்சு கவலைப் படாதே” எனத் தேற்றியவர், “உன்ர வளர்ப்பு, உன்னாட்டமே ,பெரிய ஹீரோயிசமெல்லாம் பண்றான் பார், வரட்டும் அவனுக்கு இருக்குது” என் விஜயன் மகனைத் திட்டவும்.
“உனக்கு லவ்வை பத்தி என்னடா தெரியும்,என்ர தங்கச்சி உனக்காக உருகி, உருகி எல்லாம் செய்யறதுனால , உனக்கு அந்த அருமை தெரியலை “ என மருமகனை சப்போர்ட் செய்தவர், “ஆனால், அவன்கிட்ட சொல்லிப் போடாதே, நான் டெரரா லுக் விட்டுட்டு தான் வந்திருக்கேன், பய பம்மிக்கிட்டு தான் இருப்பான்.இன்னைக்கு ராத்திரி,நம்ம கெஸ்டவுஸ்ல தங்கிக்கட்டும்,கஸ்தூரிகிட்ட எதையாவது சொல்லிச் சமாளி “ எனவும்,
“ஏண்ரா,அடி பலமா “ என மகனை விசாரிக்க, ”இனி வந்தான்னா தான் பார்க்கோணும் “ எனப் போனை வைத்தவர், மீண்டும் அபிராம் க்கு அழைத்தவர், மஹந்தை பாதுகாவலரிடம் ஒப்படைத்து விட்டு வீட்டுக்கு வரச் சொன்னார்.
இன்று தன் மாளிகைக்கு, மகளை மணப்பெண் கோலத்தில்,மயங்கிய நிலையில் அழைத்து வந்தவருக்கு, “என்ன பெரிய பிஸ்னஸ் டைக்கூன், கொம்பு முளைச்ச கைலாஷ் ராஜன்,இவ்வளவு செல்வாக்கு இருக்கும் போதே மகளைக் காக்க முடியலை,உன்ர மனைவி,இருபது வருஷம் முன்ன வந்திருந்தா,என்னத்தைக் கிழிச்சிருப்ப’ எனக் குத்திக்காட்ட தன மீதே கோபம் வந்தது.
மனைவியும்,பெற்றவர்களும் உறங்குவதை உறுதி படுத்திக் கொண்டே மாளிகைக்குள் மகளை அழைத்து வந்தார். பாருவுக்கு விஷயம் தெரிய வருமா, எப்படிச் சமாளிப்பார் ராஜன்.
பொறுத்திருந்து பார்ப்போம்
நிலவு வளரும்.
No comments:
Post a Comment