யார் இந்த நிலவு- 40
கே ஆர் மில்ஸின் சேர்மன் அறை , கைலாஷ் ராஜன் தனது சேரில் முகத்தைக் கடும் கோபமாக வைத்துக் கொண்டு, பொறுமையை இழுத்து பிடித்து அமர்ந்திருக்க, எதிரே மேஜைக்கு மறு புறம் அமர்ந்திருந்த விஜயன், இருவருக்கும் நடுவில் மேஜையின் பக்கவாட்டில் , கையைக் கட்டி,நெற்றியில் ஒரு பிளாஸ்டரோடு, முகம் அதைத்தது போலிருக்கத் தலை குனிந்து நின்ற அபிராமை , கண்டபடி திட்டிக் கொண்டிருந்தார்.
“ஏன்ரா , உனக்கு அறிவு இருக்குதா இல்லையா, நேத்திக்கு நீ செஞ்ச காரியத்துக்கு, உன்னையெல்லாம் என்னத்தைச் சொல்றது. தொழில் நடத்திட்டா போதுமா, அதில உன்ர மாமன் கை தூக்கி விட்டான், ஜெயிச்சுகிட்டே வந்துட்ட, உடனே நாம எடுக்கிற முடிவெல்லாம் சரின்னு, தலைக்கனம் வந்திரிச்சாக்கும். “ என என ஆரம்பித்த விஜயன் மகனுக்குப் பதில் சொல்லவும் வாய்ப்புத் தராமல் ஆந்திராவை கூட்டிச் சென்று ஆபத்தில் சிக்க வைத்ததுக்காகப் பேசிக் கொண்டே போக.
“அது தான், எதுவும் ஆகலைலிங்க , ஆரா சேஃப் தானுங்களே “ என அவன் ஒரு வார்த்தை சொல்லவும், மேலும் கோபமானவர், “என்ரா சேஃப் சரியான நேரத்துக்குப் போகலையினா, அவன் தாலியைக் கட்டியிருப்பான். அப்பறம் என்ன செஞ்சிருப்ப” எனக் கோபத்தில் உறுமினார் விஜயன்.
“அப்பா, இதுக்கு முன்னே மூணு தரம், இதேமாதிரி கூட்டிட்டு போயிட்டு தான் வந்திருக்கேனுங்க, நான் கட்டிக்கப் போற பொண்ணு, முதல்முதல்ல ஒன்னு என்ரகிட்ட கேட்டு, நாணு எப்படிங்க மாட்டேன்னு சொல்றது.
அதுவும் அத்தை ஐசியூல இருக்கையிலே, நம்ம அம்மா தான் மருத மலை முருகனை வேண்டிக்கச் சொன்னாங்கலாமாம், இவளும் வேண்டிகிட்டாலாமுங்க, அதே நேரம் மில்லுல வேலை பார்க்கிற பொண்ணுங்க, மலைக்குப் போயிட்டு வந்து விபூதி குடுத்துச்சுங்கலாம் , அதைப் பூசிவிடங்காட்டி தான் அத்தை பிழைச்சாங்கன்னு ஆரா நம்புறாளுங்க.
ஆயிக்காக வேண்டிகிட்டேன், என்னை முருகன் கோவிலுக்குக் கூட்டிட்டு போன்னு, கேட்குறா, நான் எப்படி மறுக்க முடியுங்க.” என்றவன்
”ஏனுங்க மாமா, அத்தை உங்க கிட்ட, இதுமாதிரி கேட்டிருந்தாங்கன்னா மாட்டேன்னு சொல்லிப் போடுவீங்களாக்கும். மலையவே தூக்கிட்டு வந்து இருக்கமாட்டிங்க . நீங்க செஞ்சா அது ஹீரோயிசம், நான் செஞ்சா சின்னப் புள்ளை தனமாகும்” என அப்பாவிடம் ஆரம்பித்து, மாமனிடம் அபிராம் பேச்சை முடிக்க, அப்போதும் இருவரும் கோபம் குறையாமல் தான் இருந்தனர்.
வழக்கமாக, விஜயன் தான் மகனைக் கண்டிப்பார், ராஜன் அப்போதும் மருமகனைத் தான் சப்போர்ட் செய்வார். இன்று இருவரும் அவனை ரவுண்டு கட்ட காரணம் நேற்றைய சம்பவம் தான்.
ராஜன் கௌரியிடம், வீட்டில் பைரவியும், பெரியவர்களும் தூங்கி விட்டார்களா என உறுதிப் படுத்திக் கொண்டவர், சத்தம் செய்யாமல் மகளை அவளது அறையில் கொண்டு வந்து படுக்க வைத்தார். மணப்பெண் கோலத்திலிருந்த மகளைக் காணவும், இதே போல் சிங்காரிக்கப் பட்டிருந்த பைரவியின் நினைவு தான் வந்தது. வாஞ்சையாக அவளது தலையைத் தடவியவர் , கண்கள் கலங்க , “மாஸிமா , ரஜ்ஜும்மா ட்ரெஸசை மாத்தி விட்டுடுங்க, நான் வந்துடுறேன்” எனப் போனை எடுத்து அபிராமையும், பாதுகாவலர்களையும் அழைத்துக் கட்டளைகள் இட்டார்.
அங்கங்கே காயங்களுடனிருந்த அபிராமையும் வீட்டுக்கு அனுப்பாமல்,தனது கெஸ்ட் ஹஸுக்கே அழைத்துக் கொண்டவர், மருத்துவரை வைத்து அவனையும் பரிசோதித்து, " பேசாத படுத்து தூங்கு" என அவர் கிளம்ப
, " சாரிங்க மாமா, ஆரா " என ஆரம்பித்தான். " தூங்கிட்டு இருக்கா, எதுவா இருந்தாலும், காலையில பேசிக்கலாம். படுத்துத் தூங்கு" என வீட்டுக்கு வந்தவர், மகளின் அறையை எட்டிப் பார்க்க, கௌரி அவளை உடை மாற்றி இரவு உடையோடு படுக்க வைத்திருந்தார்.
" மாஸிமா, ரஜ்ஜும்மாவுக்குத் துணைக்கு, இங்கையே படுத்துக்குங்க" என்று சொன்னவரின் முகம் தெளிவடையாமல் இருப்பதைப் பார்த்த கௌரி,
" இந்தச் சோட்டே போஸ்லே சாப் கூட அவ்வளவு டேஞ்சரில்லைங்க சாப். ஜெயந்த் மஹராஜ் தான், தீதியையும் ஆதிரா முலேவையும் தீர்த்துக் கட்டவே முயற்சி பண்ணுவார். அவரைத் தான் ஓரங்கட்டிடிங்களே இனிமே ஒண்ணும் பிரச்சனை இருக்காது" என ஆறுதல் சொல்ல,
தலையை ஆட்டியவர், " இத்தனை வருஷம், இந்த டென்சலையே பாருவுக்கு முடியாத போயிடிச்சாட்டத்துக்கு” என வருந்தவும், “ இவ்வளவு பெரிய விஷயம் நடந்தும் ,இன்றைக்குத் தீதி நிம்மதியா தூங்குகிறதுக்கு நீங்க தான் காரணம்” என்றார் கௌரி .
கைலாஷ், தன் அறைக்கு வந்து மனைவியின் உறக்கத்தைக் கலைக்காமல், வெகு நேரம் பார்த்திருந்தவருக்கு, ஏதேதோ எண்ணங்கள் வலம் வந்தது. “பாரு என்ற கிட்ட வந்திருந்தாலும், நான் அவளைக் காப்பாத்தியிருப்பேனா” என மீண்டும்,மீண்டும் தன்னைத் தானே கேட்டுக் கொண்டவருக்கு, இன்று ஆதிராவை , மஹந் தூக்கியது தாங்க இயலாத துக்கத்தைத் தான் தந்தது. மண்டை சூடேறுவது போலிருக்கவும், குளியலறை சென்றவர், வெகு நேரம் ஷவருக்கு அடியில் நின்றார். மீண்டும், ஆதிராவும்,பாருவும், மாற்றி,மாற்றிக் கண் முன் வந்து செல்ல, தேவையில்லாத பல விஷயங்களைப் பற்றி மனம் யோசித்தது.
உறக்கம் கலைந்த பைரவி, அறைக்குள் கணவர் வந்த சுவடுகள், அவருடைய மொபில்,வாட்ச், வாலட் ஆகியவை உணர்த்த,குளியலறை சென்றிருப்பார்
படுத்தே இருந்தார், இப்போது எழுந்தாலும்,அவரிடம் யார் வாங்கிக்கட்டுவது, அவர் வந்து படுத்த பிறகு, அவர் மார்பில் தலை சாய்த்துக் கொள்ளலாம், அதில் தான் எத்தனை சுகம் என எண்ணியவர், சுயம் தெளிந்தவுடன் கணவரைத் தேடி வராததை எண்ணி , தான் இழந்த சுகத்துக்காக ஏங்கினார்.
“எவ்வளவு தான் சோதனை வரட்டுமே,கொண்டவன் துணையும், சாய்ந்து கொள்ளத் தோள்களும் ,கண்ணீர் விடும் போது துடைக்கின்ற கரமிருந்தால் போதும் என , ராஜனுக்கு எதிர்ப்பதமாக யோசித்தார். அவர் யோசனையிலேயே அரை மணி கழிந்திருக்க, திடுக்கிட்டு மணியைப் பார்த்தவருக்கு, “ராஜ்க்கு முடியலையோ , அப்பவே என் மனசு சரியில்லாமல் இருந்ததே, ஆயி பவானி, எந்தச் சோதனையையும் கொடுத்திடாதே” எனக் கணவரின் நலத்தை வேண்டியபடி, குளியலறை கதவைத் தட்டி, “ராஜ் “எனப் பதட்டமாக அழைத்தார்.
கதவு தட்டும் ஓசையில் நடப்புக்கு வந்தவர், “இதோ வரேன்மா” எனக் குரல் கொடுத்தபடி, “ரெஸ்ட் ரூம் போகணுமோ என்னமோ” எனத் துண்டை அவசரமாக இடையில் கட்டிக் கொண்டு, உடலிலும்,தலையிலும் நீர் வழியக் கதவைத் திறந்தவர், " ஸாரி, ரொம்ப நேரம் காக்க வச்சிட்டேனா பாரு, நீ போயிட்டு வா" என இவர் வெளியே வர, இடுப்பில் ஒரு துவாலையைக் கட்டிக் கொண்டு, சொட்டச் சொட்ட நனைந்த தலைமுடியோடு வெளியே வந்த அவரது கோலம் ஒரு நிமிடம் பைரவிக்கு மூச்சடைத்து வெட்கத்தைத் தர, அவர் பேசியதில் இயல்புக்கு திரும்பி,
கணவரை முறைத்தவர் " நடுராத்திரியில் எதுக்கு இப்படித் தலையில ஊத்தியிருக்கீங்க" எனக் கடிந்தவர் அவர் கையிலிருந்த துவாலையை வாங்கி, அவரை நடத்திக் கொண்டு வந்து ஷோபாவில் அமர்த்தி, அவர் தலையைத் துவட்டியபடி, கேள்விகளாய் எழுப்ப, மனைவி தனக்கு முன்னிருந்த துவட்டுவதும் கருத்தில் படியாமல் பார்வை எங்கோ நிலைக் குத்தியிருந்தது.
அந்தத் தூவாலை ஈரமாகி விட்டதால், அவர் முதுகில் துளிர்த்திருந்த நீர் திவலைகளைத் தன் சேலை தலைப்பால் துடைத்து விட்டவர், இத்தனை கேள்விக்கும், தான் இவ்வளவு நெருங்கி நின்றும் , கமெண்ட் எதுவும் அடிக்காமல் அமைதியாக இருக்கும் கணவரின் செயலில் வித்தியாசத்தை உணர்ந்து, "ராஜ், என்ன ஆச்சு உங்களுக்கு. " என அவர் முகத்தைத் தன்னை நோக்கி உயர்த்த ,
பாருவின் முகத்தையே பார்த்திருந்தவர், " எப்படிப் பாரு, அத்தனையும் ஒத்தையில சமாளிச்ச" என்றவரின் கேள்வியில், கலவரமான பைரவி, " என்னாச்சு ராஜ், டின்னருக்குத் தான போனீங்க, ரஜ்ஜும்மா, ரஜ்ஜும்மாவுக்கு ஒண்ணும் இல்லையே. எங்க அவள்" என அவர் கண்களில் ஊடுருவி கேள்வி கனையைத் தொடுக்கவும்.
" ஒண்ணும் இல்லை. நான் சரியான நேரத்துக்குப் போயிட்டேன். அவள் ரூம்பில படுத்திருக்கா" எனப் பதில் தந்தவர், பாருவை இரு கைகளாலும் வளைத்து , தன் முகத்தை அவர் வயிற்றில் பதித்து அவர் முகத்தையே நோக்கியிருந்தவர் " உன்னைப் பார்த்த, அதே நிலமையில என்ர மகளையும் பார்த்திட்டேன்மா. நாசமா போற சொத்துக்காக,உங்க ஆளுங்க என்ன வேணாலும் செய்வாங்களா" என அவர் புலம்பவும்,
" ரஜ்ஜும்மாவையா , கட்டாயக் கல்யாணமா, யாரு" எனப் புரியாமல் வினவ, மஹந்தைப் பற்றிச் சொன்னார். பெரு மூச்செறிந்த பாரு, "ஒருத்தன் பல்லை பிடிங்கியாச்சேன்னு நிம்மதியா இருந்தேன், இது ஒரு புதுத் தொல்லையா." எனச் சலிப்பாகக் கேட்டவர்,
" அதுக்கு, ரஜ்ஜும்மாவோட பாபா வந்து, இப்படி ஷவர்ல நின்னா சரியா போயிடுமா. நீங்க அவளை விடக் குழந்தை தான்" என்றவர், அவர் முகத்தையும் தன் சேலை தலைப்பால் துடைத்து விட்டு," நடுராத்திரி, ஏசி 16 ஓடுது. தண்ணியை ஊத்திட்டு வந்து வெறும் உடம்போட உட்கார்ந்து இருக்கீங்க. இன்னும் இளமை திரும்புதோ" எனக் கடிந்து கொண்டவர், அவரை விடுத்து, வார்டு ரோபிலிருந்து, ஒரு வேஷ்டி, டீ சர்டை கொண்டு வந்து, " இதை மாத்துங்க, அப்புறம் ஃபீல் பண்ணலாம்" என அதட்டவும்,
" ஏனுங்க அம்மணி , நான் எவ்வளவு சீரியஸா ஃபீல் பண்ணிட்டு இருக்கேன். நீ என்னமோ, இது ரொம்பச் சாதாரண விசயமாட்டம் பேசுற" எனச் சினந்தார்.
“எனக்குப் பழகிடுச்சு ராஜ்,உங்களுக்கு இது தான முதல் தடவை,அது தான் இவ்வளவு எமோஷனல் ஆகிறீங்க. ஷவருக்குக் கீழ நின்னா மட்டும் போதாது, என்ர மனுஷனும் கூலாக்கோணும் “ என அவர் பாஷையில் சொல்லிக் காட்ட, “ஏனுங்க அம்மணி,ஏத்தமா” எனக் கோபப்பட , “என்ர புருஷன்கிட்ட இருந்து கொஞ்சமே ட்ரென்சர் ஆகிடுச்சு” எனச் சிரித்தவர் , வலுக்கட்டாயமாக டி சர்டை , அவர் தலையில் மாட்டி, ஒரு கையைப் பைரவி இழுக்கப் பார்க்க, அதில் கடுப்பானவர்,
" உன்ர தலை, இப்படியா, போடுவாங்க" எனக் கழட்டியவர், கைகளை முதலில் திணித்து, தலையில் மாட்டி அணிந்து காட்டியவர்,
" உன்ர தாத்தா சட்டையில தான், ஃபுல் ஓப்பனும், பொத்தான் துளையும் இருக்கும். அந்த ராஜ குடும்பத்துச் சட்டையையும், தங்கப் பொத்தானை திருடிட்டானுங்கனு முள்ளை வச்சு, போட்டு விட்டவ தான நீ" எனக் கோபபட்படவர், சட்டென எழு, வேஷ்டி கட்டும் முன்பே, தூவலை அவிழ, பைரவி, சட்டெனத் திரும்பிக் கொண்டவர், " என் குடும்பத்தை அப்புறம் திட்டலாம். முதல்ல தோதியை கட்டுங்க" என முகம் சிவக்கத் திரும்பி நின்று கண்ணை மூடிக் கொள்ள, ராஜனும் சற்றே இலக்குவனார்.
" ஏனுங்க அம்மணி, நீங்க, என்னை இப்படிப் பார்த்ததே இல்லையாக்கும். ரொம்பத் தான் சீன் போடுற. மருவாதையா திரும்பு, இல்லையான வேட்டியையும் கட்ட மாட்டேன்" என அவர் வம்பு பேசியபடி, மனைவியைப் பின்னிருந்து அணைக்க,
" ராஜ், ரொம்பப் பண்ணாதீங்க. முஜே ஷரம் ஆதி ஹை" என்றவரை, அவரே திருப்பி, இறுக்கக் கட்டிக் கொண்டு, " கண்ணைத் திற அம்மணி" எனக் கட்டளை இட, வெளிர் சிவப்பிலிருந்து, அடர் சிவப்பு வரை அத்தனை வண்ணங்களிலும் விதவிதமாய் வெட்கத்தைக் காட்ட, கைலாஷ் மனைவியில் லயித்திருந்தவர், அவர் அன்று சொன்ன பிறை நுதல் முதல், கழுத்து வரையிலேயே நூற்றுக் கணக்கில் முத்தங்களைப் பரிசாய் தர, அதை ஆழ்ந்து அனுபவித்த ,அகம் மகிழ்ந்திருந்த, பைரவி அவர் மார்பில் முகம் புதைத்து அவரை ஆலிங்கனம் செய்தபடி, சில பொழுதுகளைக் கடத்தி, "இப்பச் சொல்லுங்க ராஜ். என்ன ஆச்சு" என விசாரித்தார்.
மணியைப் பார்த்தவர், அவர் செய்கைக்கான காரணம் புரிய “வா’ வென மனைவியைக் கட்டிலுக்கு அழைத்துச் சென்று, " உனக்குத் தூக்கம் வரலையா அம்மணி " என வினவ, " அது தான் மாத்திரை கொடுத்துத் தூங்க வைக்க ஏற்பாடு செஞ்சிட்டு தான போனீங்க, தூங்கி எந்திரிச்சிட்டேன்' என்றவர், தான் சாய்ந்து உட்கார்ந்து, தன் மடியில் அவரைச் சாய்த்துக் கொள்ள, " உனக்கு ஒண்ணும் சிரமமில்லையே அம்மணி" என உறுதி செய்து கொண்டே அவர் வயிற்றில் தலை வைத்தார்.
இன்னும் ஈரப்பதம் இருந்த அவரின் சிகையில் விரலால் கோதி, லேசான அழுத்தத்தையும் கொடுக்க, சுகமாக அனுபவித்தவர், " இங்க பார், பாரு, இரண்டே நாள்ல நான் உன் அடிமையாகிட்டேன். ஏம்மா இத்தனை வருஷம் காக்க வச்ச, என்ர கூட இருந்திருந்தையினா, கண்டவனுக்கும் என்ர மகளைத் தூக்ககிற எண்ணம் வந்திருக்குமா" என அவர் கோபப்படவும்.
" அப்பவே உங்க மனைவி மேல தான் ராஜ், அந்த அரக்கன் கை வைக்க நினைச்சான். அவனுங்க யாரை இருந்தாலும்,மூர்க்கமா முயற்சி பண்ணத் தான் செய்வாங்க. எனக்காக, உங்களை மட்டும் இல்லாமல் உங்க குடும்பத்து மேலயும் கை வச்சிருவாங்களோன்னு எனக்குப் பயம். " என்ற மனைவியின் மற்றொரு கையை எடுத்து நெஞ்சில் வைத்துக் கொண்டவர்
" அப்ப என்னைக் கையாலாகாதவன்னு நினைச்சியாமா" என்றவரின் கண்களில் வழிந்த நீரைக் கண்டவர், " ராஜ்" எனப் பதறி அவர் சிகையில் தன் முகம் புதைத்தவர் கண்களிலும் கண்ணீர் " நான் உங்களை அப்படி நினைப்பேனா ராஜ் . எதா இருந்தாலும் நேரடியா அடிக்கனும்னு சொல்வீங்களே, எனக்காக எதாவது செய்யப் போய், உங்களை இழந்திடுவேணோன்னு ஒரு பக்கம் பயம். உங்களை நம்பி, உங்கள் குடும்பமும், தங்கச்சிகளும் இருந்தாங்களே" எனச் சமாதானம் சொல்ல,
" அவிகளுக்கு, செய்யறதுக்கு மட்டும் தான் எனக்கு உரிமை. உனக்குச் செயறதில இல்லையாக்கும். எப்படியோ என்னைத் தள்ளி நிறுத்திட்ட “ எனக் குறை பட்டவரை, “அந்தப் பயம் தப்புனு இப்ப புரியிது ராஜ், என்ன கஷ்டமா இருந்தாலும் இரண்டு பேருமா ,மனசு விட்டு பேசிக்கிட்டாலே, அதுலையே ஒரு ஆறுதல் கிடைக்கிது” என்றவரிடம்
“இன்னைக்கு என் மகளைப் பார்க்க முன்ன நான் தவிச்ச தவிப்பு, நீ ஒவ்வொரு நாளுமே அதைய தான அனுபவிச்சிருப்ப. அந்த நினைப்பே என் மனசை அறுக்குது" என்றார்.
" இனிமே, எனக்கு உங்களைக் கவனிச்சுக்கிறது மட்டும் தான் வேலை, இனி மீதி இருக்க நாளுக்கு , உங்கள் மகனும், மகளும் உங்க பொறுப்பு தான். டீல் ஓகேயா" என்றவர், கணவரின் முறைப்பை எல்லாம் பொருட்படுத்தாமல், அவரை நேராகப் படுக்க வைத்து, தான் அவர் மார்பில் தலை வைத்து ஒருகழித்துப் படுத்துக் கொண்டவர், கணவனின் மேனியெங்கும் தன் கரங்களால் வருடி " படே அச்சே லக்தே ஹைன்" என.மெல்லிய குரலெடுத்துப் பாட, மனதின் பாரம் சற்றே குறைந்து தூங்க ஆரம்பித்தார்.
இத்தனை நாள், அவர் மிதமிஞ்சிய போதையில் இருக்கும் போது தான், அலைப் பேசி வழியே ஆறுதல் தருவார் பாரு. அதுவும் புலம்பல் பாரு, பாரு என்று மட்டுமே இருக்கும். இன்று மகளுக்காகவும், தன்னால் குடும்பத்தைக் காக்க இயலவில்லையோ என்ற கவலையும் அவரை ஆட்டிப் படைத்தது. எதுவுமே, அவரவர் அனுபவிக்கும் போது தான் அதன் வீரியத்தை முழுதாக உணரமுடியும்.
ஆனால் இத்தனை வருடம் பிரிந்து இருந்த போதும், பைரவி, கைலாஷ் உணர்ச்சி வயப்பட்டு மன வேதனையைச் சுமந்த நேரம், நிலைமையைச் சரியாகவே ,அவர் மனதுக்கு இதம் தரும் விதம் இதமாகவே கையாண்டவர், தான் செய்த பிழையையும் உணர்ந்தார்.
அவர் சுவாசம் சீராகித் தூங்குவதை உறுதிப் படுத்திக் கொண்டவர். "உங்கள் மேல, என் நம்பிக்கை தகர்ந்து, என் புத்தியே பேதலிக்க வச்ச அந்த விசயம் மட்டும், உங்களுக்குத் தெரியவே வேணாம் ராஜ். உறவுகள் மேல நீங்க வச்சிருக்க நம்பிக்கையும் குறைய வேண்டாம். நீங்க என்னை இப்படியே ஏத்துக்கிட்டிங்களே, அதுவே போதும் " எனப் புலம்பியவர், எழுந்து சென்று மகளையும் பார்த்தார்.
சத்தம் கேட்டு கௌரி முழித்து, " தீதி" என அழைக்க, " நான் தான் கௌரி, ராஜ் எல்லாத்தையும் சொல்லிட்டார். இவளும் என்ன மாதிரியே கஷ்டப்படுறா பார்" என வருந்தியவர், மகளை வருடி முத்தமிட்டு தனது அறைக்குத் திரும்பினார்.
காலையில் கண் விழித்த ஆதிரா, நேற்றைய நினைவுகள் நினைவில் வர, ஆயி, பாபாவைச் சந்திக்கவே தயங்கினாள். ஆனால் காலையிலேயே, எழுந்து வந்த பைரவி மகளை முறைத்து நிற்க, "ஸாரி ஆயி. உங்களுக்காகத் தான் வேண்டுதல். அதுக்காகத் தான் போனேன்" எனச் செல்லம் கொஞ்ச,
" எனக்குத் தெரியாது. உன் பாபா தான் பயங்கர அப்சட், அவரைப் போய்ச் சமாதானம் பண்ணு" எனவும், பயந்து கொண்டே பாபாவின் அறைக்குச் சென்றாள்.
" பாபா" எனத் தனக்கே கேட்காத, வெளியே எழும்பாத குரவில் அழைத்தவள், அவர் அசையாமல் ஷோபாவில் அமர்ந்து செய்தித் தாள் வாசித்துக் கொண்டிருக்க, " ஸாரி பாபா. ஸாரி, ஸாரி. உங்களுக்குத் தெரியாம போனது தப்பு தான்.” என இரண்டு காதுகளையும் கையால் பிடித்துக் கொண்டு வந்து மன்னிப்பு கேட்டவள் ,
“ நான் எதுக்கு மருத மலைக்குப் போனேன்னு சொன்னா, நீங்களே சரின்னு சொல்லிடுவீங்க" என அவள் ஐஸ் வைக்க, கைலாஷ் உருகாமல் பாறையாய் அமர்ந்திருந்தார். “பாபா பேசமாட்டிங்களா, நீங்க வந்து காப்பாத்திடுவீங்கன்னு நம்பிக்கை தான் பாபா “ எனச் சமாதானம் பேசியவள் ,
" ஓகே, ஐயம் சாரி, நீங்க என்னை மன்னிச்சு, என் கூடப் பேசுற வரைக்கும், நான் தோப்புக்கரணம் போடுறேன்" என அவளே முடிவெடுத்து , “ஏக்,தோ,தீன்… எனத் தஸ் வரை சரியாகப் போட்டவள் அதற்கு அடுத்து இக்கீஸ் " என எண்ணிக்கையை 21லிருந்து ஆரம்பிக்க,
" ஏன்கண்ணு , பத்துக்கு அப்புறம் பதினொன்னு தான வரும் , நீ படிச்ச பள்ளிக் கூடத்தில மாத்தி சொல்லிக் கொடுத்தாங்களாக்கும். அப்படி எந்தப் பள்ளிக்கூடத்தில , உன்ர ஆயி உன்னைப் படிக்க வச்சா" எனக் கேட்டு இருவரையும் அவர் பேச, ஆதிரா முதல் உக்கிப் போடும் போதே உள்ளே நுழைந்திருந்த, பைரவி அமைதியாகப் பார்க்க, பாபா தன்னிடம் பேசியதிலேயே மகிழ்ந்து போன ஆதிரா ,
" அது தான பாபா, நீங்களே ஆயியை கேளுங்க. உங்ககிட்ட வளர்ந்திருந்தாலும் நீங்க படிச்ச ஸ்கூல்லையே படிச்சிருப்பேன். ஒன், டூ, த்ரீ படிக்கிறதுக்குள்ள ஒன்பது ஸ்கூல் ஐஞ்சு லேக்வேஜ் மாறிச்சு. மே க்யா கரூ " எனப் பாவமாக முகத்தை வைத்துக் கொண்டு அவள் கேட்கவும்,
" நான் தமிழ்ல எண்ணுறேன், நீ உக்கி போடு" என்றார் பைரவி.
" பாபா, ஆயி சரியா கவுண்ட் பண்றாங்களான்னு நீங்க பார்த்துக்குங்க" என்று விட்டு மேலும் இரண்டு போட, ராஜன் சிரிப்பை அடக்கமாட்டாமல் " வாடா கண்ணு" எனக் கை நீட்டவும்,
" ரஜ்ஜும்மா, 50 உக்கியாவது போடு, அப்பத் தான் உனக்குப் புத்தி வரும். ராஜ் நீங்க பேசாம இருங்க " எனக் கணவரையும் அடக்கிவிட, அதற்குள் பாபாவிடம் அடைக்கலமாகியிருந்தவள், " ஆயிக்காக மலை ஏறினதே கால் வலிக்கிது பாபா . மயக்க மருந்து இன்னும் தலை சுத்துது,நான் நாளைக்கு வேணா உக்கி போடுறேன் " என அவர் தோளில் சாய, மகள் பேச்சுச் சாதுர்யத்தில் , தன்னைப் போல் இருப்பதாக நினைத்த ராஜன்,
" டாக்டரை வரச் சொல்லுவோமாடா ரஜ்ஜும்மா" என மகளைக் கொஞ்சினார் . பைரவி , " இப்படிச் செல்லம் கொடுங்காதீங்க ராஜ். நேத்து அவன் தாலிக் கட்டியிருந்தா என்னடி பண்ணியிருப்ப' என அவர் கோபமாய் வினவ,
" அத்துப் போட்டிருப்பேன். போங்க ஆயி, அந்த மராட்டா லங்கூர் தான், பழைய காலத்தில இருக்குனா, நீங்களுமா" என அவள் கோபிக்க, " அப்படிச் சொல்லு கண்ணு" என்றவர், " ஆனாலும், நீ செஞ்சதுக்குத் தண்டனை உண்டு கண்ணு . நான் போன் போடும் போது ஆயியோட ஆபீஸ்க்கு வா" என அலுவலகத்துக்குக் கிளம்பினார்.
இதோ, விஜயன், மகனைத் திட்டி முடித்த சமயம், பைரவியோடு, ஆதிராவும் சேர்மன் அறைக்குள் நுழைய, ராஜனே எழுந்து மனைவியை வரவேற்றார். விஜயனையும், அபிராமையும் அங்கே பார்த்த பைரவி, " ஸாரி பாய்ஸாப், எங்களால அபிக்கும் தேவையில்லாத தொல்லை " என்றவர், அபிராமிடம் சென்று, " அடி பட்டதா பேட்டாஜி' என முகத்தையும், கை காலையும் ஆராய்ந்தார்.
விஜயன், ஆதிராவை விசாரித்துக் கொண்டிருக்க, பதில் எதிர் இருந்தவருக்குச் சொன்னாலும், அபிராம் ,ஆதிரா ஒருவரை ஒருவர் ரகசியமாய்ப் பார்த்துக் கண்ணால் பேசிக் கொண்டனர்.
மனைவியைத் தனது இருக்கையில் அமர்த்திய கைலாஷ், அவர் அருகில் மற்றொரு சேரை போட்டு அமர்ந்து, "விஜயா, இவங்க இரண்டு பேருக்கும் என்ன தண்டனை கொடுக்கலாம். " எனப் பெரியவர்கள் கூடிப் பேச, பைரவி, அபிராமிற்கும், விஜயன் ஆதிராவுக்கும் பரிந்து பேச ராஜன், இருவரும், தண்டனை என ஒரு தீர்ப்புச் சொல்ல, அபி வெகுவாக ஆட்சேபிக்க ,ஆதிரா தலை குனிந்தபடி வெளியேறி விட்டாள்.
என்ன தண்டனை கொடுத்தார் ராஜன், பொறுத்திருந்து பார்ப்போம்.
நிலவு வளரும்.
No comments:
Post a Comment