யார் இந்த நிலவு-30
அபிராம் , ஆதர்சின் எச்சரிக்கையில் ஓடி வந்தவன், மஹந்த்தின் பார்வையில் கொத்தி நிலைக்குச் சென்றான், ஆதிராவை தன்னவள் என உரிமையை நிலைநாட்ட வேகமாக அவர்கள் நின்ற இடம் நோக்கிச் சென்றவன், மாமன் முன்னாடியே, அவர் மகளின் கையைக் கோர்த்துத் தன்னை ஒட்டி நிறுத்திக்கொண்டு, “மாமா, பேபிமா தெரியாத சொல்றாளுங்க” எனவும், “என்ன மாப்பிளைங்க சொல்றீங்க” என அவன் மகளின் கையைப் பிடித்து இழுப்பதை உறுத்துப் பார்த்து,குரலில் மட்டும் தேன் தடவியது போல் இனிமையாகக் கேட்டார்.
அவனும்,அவருக்குப் பின்னால் நின்றவனை ஜாடை காட்டிவிட்டு, “ அத்தைக்கு இப்பதானுங்க ஊசி போட்டாங்க, அவிக தூங்குறாங்க. யாரா இருந்தாலும் இப்போதைக்குப் பார்க்க முடியாதுங்க. சீப் டாக்டர் உங்களைப் பார்க்கோணுமுன்னு சொன்னாருங்க” என வேகமாக அவரிடம் பேசியவனை , “இல்லை ராம்” என அவள் மறுத்துப் பேச ஆரம்பித்தாள்.
“பேபிமா ,உன்னைக் கௌரி ஆண்ட்டி கூப்பிடுறாங்க வர்றீங்களா” எனக் கையில் ஓரழுத்தம் கொடுத்து, இழுக்காதே குறையாக அழைத்துச் சென்றான். கைலாஷ்,முதலில் மருமகன் செயலுக்கு முறைத்தவர், பின்னால் நின்றவன் பார்வையில் ,
’பரதேசி , உனக்குச் சைட் அடிக்க எம்பட மகள் தான் கிடைச்சாளா, அதுவும் என்ர முன்னாடியே’ என மனதில் வெகுண்டவர், “ஸாரி ,மிஸ்டர் போஸ்லே,உங்க புவாஜியை இன்னைக்குப் பார்க்க முடியாதுங்க “ எனச் செல்லமாகத் தட்டுவது போல் ஓங்கி ஓர் அடியை வைத்தார்.சுளீர் என்ற அடியில் , சுய நினைவு மீண்டவன்,
“ இட் ஸ் ஓகே மாமாஜி ,பார்க்க வேண்டியவர்களைப் பார்த்துட்டேனே “ என அவன் வினையமாகச் சொல்லவும், “அப்ப ,நீங்க கிளம்புங்க, நான் சீக்கிரமே சோலாப்பூர் வர்றேன்” என உதவியாளர் சம்பத்தை அழைத்து, அவனை வெளியேற்றி விட்டே உள்ளே வந்தார்.
“என்ன ராம் “ என ஆதிரா, அவனோடு சண்டை கட்டிக்கொண்டு இருக்க, “உங்களுக்குத் தான், உங்க பாபாவை கண்கட்டா ,மற்ற உலகமே மறந்து போயிடுங்களே அம்மணி, அவருக்குப் பின்னாடிநின்னு,உன்னை ஒருத்தன், எப்படிப் பார்த்தான் தெரியுமா, கண்ணைத் தோண்டி கையில் கொடுத்திருப்பேன், மாமா கூட வந்தானேன்னு சும்மா விட்டேன்” என இரத்தம் கொதிக்கப் பேசவும்,
“உங்களுக்கு , யாரைப் பார்த்தாலும் சக் , க்யா சந்தேகம் தான், ஆதி கூடப் பேசினா முறைக்கிறது, அவன் கொடுத்த ட்ரெஸ் போட்டா முக் திக்காதே ஹை, மே க்யா க்ரூ” என அவள் பதிலுக்குப் பேச,சண்டை வளர்ந்து கொண்டே போனது. கைலாஷ் வந்து , “என்ன நடக்குது இங்க, ஏன் கண்ணு,மாப்பிள்ளை எதுனா லொள்ளு பண்றானா, சொல்லு கண்ணு “ என விசாரிக்கவும்,”நஹி பாபா , சும்மா சண்டை” என மழுப்பினாள் ஆதிரா.
விஜயன், கஸ்தூரி, ரஞ்சனி மூவரும் பைரவியைப் பார்க்க வந்தனர்,கைலாஷ்,நண்பனிடம் முகம் திருப்ப, அவர் தங்கையைப் பார்க்கச் சென்றார்.
“தங்கச்சிமா “ என்ற விளிப்பில் , “வாங்கப் பாய் சாப்,வாங்க பாபி” என வரவேற்றனர், “கௌரி,பெட்டை நிமிர்த்தி விடு”எனவும், அதை அடஜஸ்ட் செய்யும் வழி தெரியாமல் தடுமாறினார் கௌரி, விஜயனும்,மேலும் கீழும் ஆராய்ந்து விட்டு, நர்ஸை அழைக்கச் செல்ல, உள்ளே வந்த ராஜன், ஒரு ரிமோட்டை எடுத்து அட்ஜெஸ்ட் செய்து, கௌரிக்கும் சொல்லிக்கொடுத்தார்.
கணவன் உள்ளே நுழைந்ததிலிருந்து, பாருவின் கண்கள் அவரை விட்டு அகலவில்லை,இதைப் பார்த்திருந்த ரஞ்சனி, “மாம்ஸ்,அத்தை உங்களைச் செமையா சைட் அடிக்கிறாங்க, நீங்க கொஞ்சம் நிமிர்ந்து தான் பாருங்களேன்” எனக் கிண்டலடிக்கவும், “பிச்சு போடுவேன், உன்ர அப்பன்,மெக்கானிக்கை தேடி போனானாட்டத்துக்குப் போயி பாரு கண்ணு “ என அனுப்பிவிட்டார்.
ரஞ்சி, மாமன் மேல் உள்ள கோபத்தோடு, வெளியே வர, சரியாக ஆதர்ஷ் மாட்டினான்.அபிராம் புலம்பல்கள் நினைவில் வர, “ஏய் புடலங்கா இங்க வா” என்றாள் . “மீ “என அவன் அதிர்ச்சியாகக் கேட்க,”நீயே தான்”என ஒருமையில் இறங்க, தனது பாதுகாவலர்கள் யாரும் கவனிக்கிறார்களா என ஆராய்ந்து விட்டு, யாரும் இல்லை எனவும் அவளிடம் வந்தான்.
‘உனக்கு என்ன, பெரிய லார்ட் லபக்குதாஸ்னு நினைப்பா” என ஆரம்பித்து, ஆதிராவோடு உறவு வைப்பது,கே ஆர் மாமாவைக் கேள்வி கேட்டது”அவன் செய்த குற்றங்களைப் பட்டியலிட்டவள், “பவானியத்தைக் காப்பாத்தினியேன்னு பேசாத விடுறேன்” என்றவளை சுவாரஸ்யமாகப் பார்த்தவன், “ஒ, அப்ப நீ இன்னும் பேசவே ஆரம்பிக்கலையா” என அவளை நோக்கியே முன்னேற, அவள் பின்னே சென்று ஒரு மூலையில் முட்ட,இவன் வாகாக, அவளைச் சிறையெடுத்தான். “வேண்டாம்,வேண்டாம்” என அவள் அரற்றியபடி, பெரிய மூச்சுக்கள் எடுத்து, வேர்த்து,விறுவிறுத்து நின்ற அவளை ரசனையோடு பார்த்தவன்,
“நான் ஊரையே மிரட்டுவேன்,நீ என்னை மிரட்டறியா , ஆனால் எனக்குச் சிரிப்பு தான் வருது, அடுத்த முறை இன்னும் நல்லா ட்ரைபன்னு” என்றவன்,தன கைக்குட்டையை எடுத்து, அவள் நெற்றி வியர்வையை ஒற்றி எடுத்தவன். “பெட்டர் லக் நெஸ்ட் டைம் ஸ்வீட்டி ‘ என அவள் கன்ன கதுப்பை, ஒரு விரலால் தீண்டிச் செல்ல, நெஞ்சம் படபடக்க நின்றாள் ரஞ்சனி.
கஸ்தூரி தான் பைரவியிடம் பேசிக்கொண்டிருக்க, ராஜன் கௌரியிடம் மட்டுமே பேசி விட்டு, வெளியேறப் போனார்,பைரவியின் தவிப்பைப் பார்த்த கஸ்தூரி, “அண்ணா “ என அழைக்கவும் நின்று திரும்பிப் பார்த்தவரிடம், “என்ர புருஷன் சார்பா, நான் உங்க கிட்ட மன்னிப்பு கேட்டுக்குறேனுங்க” எனக் கை கூப்பவும், “நீ என்னத்துக்குக் கண்ணு மன்னிப்பு கேட்கோணும், அவனுக்கும்,எனக்கும் நடுவால நீ வராத “என்றவரிடம்
“இத்தனை வருசமும், அப்டிதானுங்க அண்ணா இருந்தேன், ஆனால் நேத்து, உங்களைச் சொல்லி,சொல்லி நெம்பப் புலம்பிட்டாருங்க, நானும்,நீங்க செஞ்சது தப்புன்னு, சுருக்குனு சொல்லி போட்டேனுங்களா, அப்பலைய புடிச்சு மனுஷன் பேசறதே இல்லீங்க” எனக் கஸ்தூரி புலம்பவும், “உனக்காக வேணுமுன்னா, அவனை மன்னிக்கிறேன் கண்ணு”என்ற கைலாஷை, “ராஜ்” என அழைத்தார் பைரவி. கைலாஷ்,உடல் விறைத்து நிற்கவும் , மற்ற பெண்களிருவரும்,கணவன் மனைவிக்கு இடம் கொடுத்து, முன் அறைக்குச் சென்றனர்.
“ராஜ், நீங்க என்ன தண்டனைனாளும் எனக்குக் கொடுங்க, நான் தான் பாய்ஸாப் கிட்ட சொல்லக்கூடாதுன்னு சத்தியம் வாங்கினேன் “ என்றவர், கைலாஷ், அவருக்கு முதுகு காட்டியே விறைத்து நிற்கவும், கட்டிலிலிருந்து, இறங்க முயல, பக்கத்திலிருந்த சேலைன் ஏற்றும் ஸ்டென்ட் கீழே விழுந்தது,
“பாரு” என் திரும்பியவர், கீழே இறங்க முயன்றவரைத் தாங்கிக் கொள்ள,கைலாஷ் கழுத்தில் ,பாருவின் வலது கை அணைத்த படி இருந்தது. இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்த படி இருக்க, அவர்களது நயனங்கள் பேசிக்கொண்டன.
பாருவின் கண்களிலிருந்து கண்ணீர் பெருக்கெடுத்து ஓடவும், தானும் கலக்கியவர், “ உணர்ச்சி வசப்பட்டு அழுது,மறுபடியும் மோசம் பண்ணிட்டு போயிறாதே “ எனப் பாருவின் விழி நீரைத் துடைக்கவும், அவர் கையைப் பற்றிக் கொண்டவர், "உங்களை மோசம் பண்ணிட்டு, நான் மட்டும் சந்தோஷமாவா இருந்தேன்" என கோபமாக கேட்டார்.
"நான் அப்படியா சொன்னேன்" என முறைத்தவர் , " சரி விடுங்க அம்மணி, இப்ப இதைப் பத்தியெல்லாம் பேசவே வேண்டாம். உன் அண்ணன் காரன் வேற சண்டைக்கு வருவான்" என்றவர், அவரைச் சரியாக உட்கார வைத்தார்.
அவர் தொடுகையிலேயே, பைரவிக்கு மயிர்க்கூச்செறிய, அதை உணர்ந்தவர், "இருபது வருசமிங்கிறது பொய்யோ, ரஜ்ஜும்மாவுக்கு அக்காவாட்டமா இருக்கிற" எனக் கலைந்திருந்த அவர் சிகையைக் கோதிவிட, கணவனின் பாராட்டில் மகிழ்ந்தவருக்கு, வெட்கத்தில் சிவப்பும் ஏறியது.
" இரண்டு பார்வை தான், இதுக்கே நம்பளுக்குத் தாங்க மாட்டிங்குது. இதில எங்கிருந்து கோபத்தை மெயின்டைன் பண்றது " எனப் புலம்பியவர், தன்னையறியாமல் அவர் நெற்றியில் முத்தமிடப் பைரவி நிம்மதியடைந்தார். கதவு தட்டப்படும் ஓசையில், " வழக்கம் போல, உன்ர உடன் பிறப்பு வந்துட்டான்" என விஜயனைச் சொல்ல, அதே போல் அவர் தான் நின்றார்.
" வாங்க பாய்சாப்" என அழைத்த பைரவி, " ராஜ், ப்ளீஸ்" என்றார். அவர் மீண்டும் விறைப்பாகவே நிற்கவும்,
" ராஜா, நீ என்னை மன்னிக்கவே வேண்டாம்டா, வழக்கம் போல முகத்தைத் திருப்பு, பேசாத இருந்துக்க, வேற மாதிரியும் கூடப் பேசிக்க, ஆனால் துரோகின்னு மட்டும் சொல்லாத" என விஜயன் உருக்கமாகப் பேசவும், இரண்டு பெண்களும் பார்த்துக் கொண்டு இருக்கிறார்கள் என்பதை உணர்ந்தவர், நண்பனிடம் பேசாமல், கஸ்தூரியிடம், " இங்க பாரு கண்ணு, செய்யறதையெல்லாம் செஞ்சு போட்டு, உன்ர புருஷன் ரொம்பத் தான் சீன் போடுறான். இப்படிப் பேசியே தான், அண்ணனும் தங்கச்சியுமா நம்பளை ஏமாத்திறது. உனக்குப் புரியிதில்லை கண்ணு" எனத் தங்கையைச் சப்போர்ட்டுக்கு, அழைத்தார்.
" ஆமாங்கண்ணா, நானும் உங்க கட்சி தானுங்க. நேத்தே, நல்லா கொடுத்து கட்டிட்டேனுங்க. இனி நீங்க எப்ப, உங்க மச்சினனோட பேசுவீங்களோ, நானும் அப்பத் தான் அவிகளோட பேசுவேன்னு சொல்லிட்டேங்க. பொண்டாட்டிகிட்ட பேசாத இருக்கிறதே எவ்வளவு கஷ்டம்னு அவிகளுக்கும் தெரியட்டும் " என அண்ணன் கோஷ்டியில் தங்கை சேர, ஹாஹாவெனச் சிரித்தவர்,
" சபாஷ்டா கண்ணு, இப்பல்ல, இவன் தொங்கிப் போன முகத்துக்குக் காரணம் தெரியுது. அண்ணன் சொல்ற வரைக்கும், அதையே மெயிண்டைன் பண்ணு" என்றவர், உள்ளே நுழைந்த பெற்றவர்களையும், பன்னீரையும் ,"உங்களை நாளைக்குத் தான வர சொன்னேனுங்க " என ஆட்சேபனையாகக் கேட்டார்.
பாலநாயகம் மகனிடம் பேசவும் இல்லாமல் மருமகளை நோக்கி செல்ல, பன்னீர் தான், "மனசு கேட்கலைங்க மாப்பிளை, அது தான் கிளம்பி வந்துட்டோம்" எனப் பதில் தந்தார்.
"பவானி, எப்படிக் கண்ணு இருக்க " எனச் சௌந்தரியும், "ரொம்ப அலட்டிக்கத்தம்மா" எனப் பாலநாயகமும் தங்கள் மருமகளின் உடல்நலத்தைப் பற்றி மட்டுமே ,பக்கத்திலிருந்த கௌரியிடம் முக்கியமாகக் கேட்டறிந்தனர். பன்னீர், "பவானிமா,மாப்பிளைக்கு உம மேல,எவ்வளவு அக்கறை பார்த்தியில்ல, தங்கமான மனுஷனை விட்டு போட்டு இத்தனை வருஷம் எப்படிம்மா இருந்த" என உண்மையாக வருந்தினார்.
பைரவிக்கு, தான் யாரெனத் தெரிந்த பின்பும் தன்னிடம் ஒரு கேள்வியும் கேட்காதா மாமன் மாமியிடம். “ அத்தை, நான் யாருன்னு உங்களுக்குத் தெரிஞ்சிருக்கும், என் மேல உங்களுக்குக் கோபம் வரலையா” எனத் தயங்கி,தயங்கிக் கேட்டே விட்டார் பைரவி.
“கோபம்,எதுக்குக் கண்ணு, வருத்தம் தான். இப்படி ஒரு மருமகளை வச்சு பார்க்க, எங்களுக்குக் கொடுப்பினை இல்லையா, இல்லை ராஜா மாதிரி ஒரு புருஷன்கிட்ட இருக்க,உனக்குக் கொடுப்பினை இல்லையான்னு தெரியலை “ எனச் சௌந்தரி புலம்பவும், “எனக்குத் தான் அத்தை, உங்களோட எல்லாம் வாழக் கொடுப்பினை இல்லை “ எனப் பைரவி கண்ணீர் சிந்தவும்,
“எப்ப, எத பேசறதுன்னு உனக்கும் தெரியாதது,உன்ர மகனுக்கும் தெரியாது”எனக் கடிந்த பாலநாயகம், “நீ உடம்பை குணமாகிட்டு வீடு வந்து சேருமா,அது போதும்” என வழக்கம் போல் மருமகளுக்கு ஆதரவு தெரிவித்தார்.
இவர்களைத் தொடர்ந்து , ராமு, சுப்பு ஜோடிகளும் மருத்துவ மனைக்கு வர, இளம் ஜோடிகள் இரண்டும், அவர்களிடம் பேச்சுக் கொடுத்தபடி அழைத்து வந்தனர். ராமு ஆதரஸை பவானியை தக்க சமயத்தில் காப்பாற்றியதற்காக நன்றி தெரிவிக்க, “அது என் கடமை தாத்தா” என முறை கொண்டாடினான் ஆதர்ஷ்.
அபரஞ்சியும், சாரதாவும், நேற்றை விட இன்று தெளிவாகத் தெரிந்த ஆதிராவை , தங்கள் பேரனுக்குப் பொருத்தமாக இருப்பாளா என ஆராய்ச்சி பார்வை கொண்டு பார்த்தனர்.
“ஆத்தா, அம்மத்தா , என்ர செலகசன் ஓகே ங்களா “ என வினவவும், “ உன்ர செலகசன், இல்லைனாலும், இனி இது தான் பொண்ணு, சௌந்தரி பேத்தி ,ராஜன் மகள் “ இதுக்கு மேல என்ன வேணும்” என்றார் அபரஞ்சி.
இந்த இரண்டு ஜோடிகள் வரவைப்பார்த்து,இப்போது ஆட்சேபிப்பது விஜயன் முறையானது. “ஏனுங்கப்பா, சொல்லியிருந்தா நானே கூட்டிட்டு வந்துருப்பேனுலிங்க “ என்றார்.
“அதுவா முக்கியம்,வந்துட்டோம்ல விடு” என்ற ராமு, “ பவானி, ஒரு நிமிசத்தில பயமுறுத்திட்டடம்மா “ என்றார். சுப்பு,”இப்பொ உடம்புக்கு நல்லா இருகுல்லமா” என விசாரித்துக் கொண்டார்.
பெண்கள் கூட்டம் உள்ளறையில் பவானியோடு உட்கார்ந்து பேசிக்கொண்டிருக்க , மூன்று தலைமுறை ஆண்களும், ஆதர்சிடம் , பைரவியின் குடும்பப் பின்னணியைக் கேட்டறிந்தனர் .
பாலநாயகம், ஆதர்சிடம் “உன் நானிமாவையும் கூட்டிட்டு வா கண்ணு, பவானிக்கு உடம்பு சரியாகவுட்டி ,இவிக இரண்டு பேருக்கும் ஒ ரு நல்லது செஞ்சு பார்ப்போம்” என்றார். அவன் புரியாமல் ,முழிக்கவும் , “அவிக முறைப்படி தான கல்யாணம் நடந்தது, எங்க முறைப்படி, என் மகன் கல்யாணத்தை நடத்தி பார்த்துக்குறேன் “ என்றார் நாயகம்.
“அப்பா, என்ர மகளுக்குக் கல்யாண வயசு வந்திடிச்சுங்க , இப்ப போயி, நான் மணவறையில் உட்கார்ந்தா நல்லாவா இருக்கும், ஏனுங்கப்பா, ஆகிற வேலையைப் பாருங்க” என்றார் ராஜன்.
“நீ ,உன்ர மகளுக்குச் செஞ்சு பார்ப்பையில்ல, நான் எப்ப என்ர மகனை மாப்பிள்ளை கோலத்தில் பார்க்கிறது, உங்க அம்மாளாட்டம் , புதுப் பொண்ணா பார்கிறேன்னேன், உன்ர பொண்டாட்டியே தானே அறுபதாம் கல்யாணம்னு நினைச்சு பண்ணிக்க. எங்களுக்கும், எங்க மருமகளுக்கு நிறைவா செஞ்சோம்னு மனசுக்குத் திருப்தியா இருக்கும்” என நாயகம் முடிக்கவும்,
“நான் கூட,மகன் மேல பாசமாக்கும்னு நினைச்சேனுங்க, உங்க மருமகளுக்குச் செய்யறதுக்கு, நான் கூட நிற்கணுமாக்கும் “என ராஜன் இடக்கு பேச, பாலா முறைத்தார்.
“மாப்பிள்ளை, உங்க அப்பன் அவன் மருமகளுக்குச் செய்யட்டும், நாங்க எங்க மாப்பிள்ளைக்குச் செய்யிறோம்.”என ராமுவும்,
“உங்களை மாப்பிள்ளை கோலத்தில் பார்த்தா தான், எனக்கும் மனசு நிறையும் மாப்பிள்ளை , எனக்காக ஒத்துக்குங்க “ எனப் பன்னீர் கேட்கவும், பழைய நினைவுகள் மீள, “செய்ங்க மாமா “ என்று விட்டு வெளியேறி விட்டார்.
விஜயன் ஆற்றமாட்டாமல் பார்க்க, “நான் போறேன் பா” என அபிராம் மாமனுக்கு வால் பிடித்துப் பின்னாடியே சென்றான். மனம் அலைப்புறும் போது, ஒன்று மதுவை நாடினால், மற்றொன்று காரை எடுத்துக் கொண்டு அதிவேகத்தில் பறப்பார் , அந்த நேரம் அபிராம் தான் உடன் செல்வான். இன்றும் மாமனோடு அவசரமாக ஏறிக்கொள்ள, “மாப்பிள்ளை , உம்படக் கார்ல வாயா” எனப் பொறுமையாகவே சொன்னார்.
“நீங்க ஓட்டுங்க மாமா, எனக்கும் உங்க கிட்ட பேசனுங்க” எனவும்,”சரி வா” என அழைத்துச் சென்றார்.
மற்றவர்கள் அனைவரும், சமாதானமாகி ஏற்றுக் கொண்ட போதும், கைலாஷ் இரட்டை மனநிலை கொண்டவராக இருந்தார். இருபது வருடப் பிரிவுத் துயர், என்பதையும் தாண்டி, பாரு ஏன் என்னைத் தேடி வரவில்லை என்ற எண்ணமே, அவர் மனதில் குடைந்து கொண்டிருந்தது. இது எவ்விதம் தீரும் பார்ப்போம்.
No comments:
Post a Comment