Wednesday, 16 March 2022

யார் இந்த நிலவு-36

யார் இந்த நிலவு-36 

பாலநாயகம், சௌந்தரி இருவருக்கும், தாம் இருபத்திரண்டு ஆண்டுகளுக்கு முன் , மகனுக்குக் கால் கட்டுப் போடுவதாக நினைத்து, எவ்வளவு பெரிய தவறு செய்துள்ளோம் என்பது அன்று முழுதாக புரிந்தது. பன்னீரும் கூட மகளுடைய ஆசைக்கு மற்றொரு பெண்ணின் வாழ்வைக் குலைத்திருக்கிறோம் என அன்று புரிந்தது. இத்தனை நாள் ராஜியின் இழப்பு இந்த வீட்டை ஆட்டுவதாக நினைத்தவர்கள், இன்று தான் அது பைரவி அனுபவித்த வேதனையின் தவிப்பு என உணர்ந்தனர். 


கைலாஷ், மனைவியைத் தனது அறைக்குத் தூக்கிச் சென்ற பிறகும் கூட, விஜயனிடம் மூவருமே வெகு நேரம் புலம்பிக் கொண்டிருந்தனர். 


" ராஜனுடைய மனைவி பேசினான்னு ,  ராஜி சொன்னதைக் கேட்டு, இந்தப் பொண்ணு வாழ்க்கையைப் பறிகொடுத்திருக்குமோ. ஆனால் ராஜி கல்யாணத்துக்கு முன்னாடியே, ஏன் அப்படிச் சொல்லனும் " எனப் பன்னீர் யோசிக்கவும், 


" ஏனுங்கண்ணா, ராஜி மனசில அந்த நினைப்பு வரக் காரணமே நாம தானுங்களே, இவிக அம்மாவெல்லாம் ராஜன் சம்சாரம்னே சொல்லுவாங்க, என்ர மகளுங்களும் அண்ணின்னு தானுங்களே கூப்பிடுங்க. " என விளக்கம் சொன்னார் சௌந்தரி


பாலநாயகம், " எது எப்படியோ, இரண்டு பொண்ணுங்க மனசு நொந்ததில அவன் வாழ்க்கையும் போச்சு. இருபத்திரண்டு வருச, இளமைக் காலத்தை தொலைச்சிருக்கான். " என நாயகம் இன்று மகனுக்காகக் கலங்கினார்.


ஆதிரா,தன் பாபாவுக்கு முன் சென்று அவர் அறைக் கதவைத் திறக்க, தண்ணீர், மாத்திரை, பால் எனக் கௌரி வரிசையாக அனுப்பினார். அபிராமும், ஆதிராவுமாக உதவி செய்ய, மனைவியைத் தன் படுக்கையில் கிடத்தினார் ராஜன்


ஆதிரா ஆயியின் தேவைகளைக் கவனித்து விட்டு வெளியேற, அபிராம், " மாம்ஸ், ஆல் த பெஸ்ட். உலகத்திலேயே மாமனாருக்கு" என ஆரம்பித்தவன் , அவர் முறைப்பில் மீதி வாக்கியத்தை முடிக்காமல் நிறுத்தி விட்டு, வெளியே ஓடியே விட்டான்.


ஆதிரா தன் பாபாவின் அறையில் ஆயி உறங்குவதைப் பார்த்து விட்டு வந்தவள், தனது அறையில் கண்ணீர் பெருக்கோடு அமர்ந்திருக்க, " ஆரா பேபி, கூல் எல்லாம் சரியாகிடும். நீதான் அவங்க இரண்டு பேருக்கும் இடையில் பாலமா இருக்கோணும்" என அவளருகில் அமர்ந்து ஆறுதல் சொல்ல, 


அவன் தோளில் சாய்ந்து கொண்டவள், " இன்னைக்கு, நீங்க ஆயியை வெளியே போக விடாமல் தடுத்திங்களே, அப்ப மராத்தில திட்டினாங்களே, அந்த வார்த்தை எல்லாம் ஆயி வாயிலிருந்து வரும்னு நான் கற்பனை கூட செஞ்சதில்லை. மென்டல் ஹராஸ்மெண்ட் ஆகியிருக்கும் போல. பாபா பக்கத்தில் இல்லாததால இன்னும் என்னன்ன அனுபவிச்சாங்களோ" என அவள் கவலைப் படவும், 


" அவங்க மனக் காயத்தை எல்லாம் மாமா சரி பண்ணிடுவார் ஆராம்மா. இனி அவங்க வாழ்க்கையில் வசந்த காலம் தான். பெருமைக்குச் சொல்லலை, மாமா அப்படி பார்த்துக்குவார்" என அவன் நம்பிக்கை தர, 


" அது தெரியும், ஆனால் இன்னைக்கு நடந்ததை மீறி ஆயி வர்றது ரொம்பச் சிரமம். தாலியைக் கழட்டி கொடுன்னு கேட்டது, அவங்க மனசில ரொம்ப பாதிக்கும்" என இவர்கள் பேசிக் கொண்டிருக்கையிலேயே, ஆதர்ஷிடமிருந்தும் போன் வந்தது. " கௌரி மாஸி சொன்னாங்க. ஆயியைத் தனியா விட வேண்டாம்னு, நானிமா சொல்றாங்க" என்றான். 


" நீ கவலைப் படாத மச்சி, மாம்ஸ், அத்தை ரெஸ்ட்ரூம்  போன கூட காவலுக்கு நிற்பார்." எனப் பேசி வைத்தவன், 


“ஆரா பேபி, நீ இன்னைக்கு மாமாகிட்ட, என்னை நல்லா மாட்டிவிட தெரிஞ்ச. நீ கேட்டியேன்னு மருதமலைக்கு உன்னை கூட்டிட்டு போனேன்னு தெரிஞ்சது, டின்னு கட்டிடுவார். ஆதர்ஷ் சொன்னது சரிதான் அம்மணி, நீ சரியான ஓட்ட வாய்" என அபிராம் கோபித்துக் கொள்ள, அவனை முறைத்தவள், 


" நான் அடம்பிடிச்சேன்னு மட்டும் தான் கூட்டிட்டு போனீங்களாக்கும். உங்க வேண்டுதல், என்னை மலை ஏற வச்சீங்க" என ஆதிராவும் பதிலுக்கு கோவித்தாள். 


"அது, மருதமலை முருகன், என் லவ்க்கு அருளுனார், அதுக்கான வேண்டுதல், ஆனா நான் ஒருதடவை தான் வரேன்னு வேண்டியிருந்தேன், என் கோட்டா முடிஞ்சிருச்சு  அம்மணி. " என அவன் சமரசத்துக்கு வரவும். 


" நான் ஆயிக்காக வேண்டுனது, இன்னும் இரண்டு வாரம் பேலன்ஸ் இருக்கு, நீங்க கூட்டிட்டு போய் தான் ஆகனும்" என அவள் கண்டிசன் போட்டாள். 


" ஆரா பேபி, உன்ர ஆயி குடும்பத்தால வர்ற ரிஸ்கை விட, உன்ர பாபா, அது தான் என்ர மாமா கோபத்துக்கு பவர் ஜாஸ்தி. அது உனக்கு புரியமாட்டேங்குது" என அவன் புலம்பவும், 


அவனை ஒட்டி அமர்ந்து,  "ராம் பேபி, பாபாவுக்கு தெரிஞ்சா, நான் சமாளிச்சிக்கிறேன். எனக்காக இது கூட செய்யமாட்டிங்களா"என குழைந்தாள். அதில் கிறங்கியவன், "ஆரா பேபி, நீ சும்மா கேட்டாளே செய்வேன். இப்படியெல்லாம் கேட்கிறியாடா, மாட்டேன்னு சொல்ல முடியுமா" என அவளை மேலும் அணைக்க, 


" ராம், இதெல்லாம் ஷாதிக்கு அப்புறம் தான், கீப் த டிஸ்டன்ஸ்" என கறாராக சொல்ல, " உன்ர காரியம் ஆகவும், என்னை கழட்டி விடுற அம்மணி" என முறைக்கவும், ப்ளீஸ் என அவள் கண்ணால் இறைஞ்ச, " சரி போ"  தள்ளி அமர்ந்தான். 


" ஆரா பேபி அன்னைக்கு , மீட்டிங் போயிட்டு வந்தமில்ல, நம்மளை ஒருத்தன் பாலோ பண்ணானானே , அவனை நீ இதுக்கு முன்னை பார்த்திருக்கியா ” என வினவ 


“இல்லை ராம் , புது ஆளா இருக்கான், பாபா கூட நாம போகும் போது, அவங்க வர்றதில்லை கவனிச்சிங்களா “ என இவள் பதில் கேள்வி கேட்க,


 ”நானும் நோட்டீஸ் பண்ணேன் பேபி , ஆதர்ஷ் சொல்றதை வச்சு பார்த்தமின்னாக்க , உன்ர பெரியப்பா ஆளுங்க உன்னைக் கொல்ல ட்ரை பண்றானுங்க, நிறையத் தடவை உன்ர அம்மத்தா ஆளுங்க உன்னை காப்பாத்தி இருக்காங்கலாமாம் . அவிக பழைய  ஆளுங்களை எல்லாம் , ஒத்துக்கிட்டோம்னு உன்ர இரட்டை சொல்றாப்ல பேபி. அப்ப இப்ப வர்றது, உன்ர முறைப் பையனாட்டத்துக்கு “ என அபிராம் தன கணிப்பைச் சொல்லவும், 


“க்யா, அப்படினா” என அவள் விளக்கம் கேட்க, “உன்ர மாமன் மகன்னு சொன்னேன்” என அ தன கூற்றைப் புளி போட்டு விளக்க, ஆதிரா, “எனக்கு மாமான்னா விஜயன் அங்கிள் மட்டும் தான், மாமா மகனும் நீங்க மட்டும் தான். அந்த மராட்டா லங்கூரையெல்லாம் முறை சொல்லாதீங்க “ என அவள் சீறினாள்.


“ஓ , பேபி என்ன சொன்ன, மராட்டா லங்கூரா ,அந்த மஹிஷாசுரனுக்கு ஏத்தப் பேர் தான் “ என முதலில் சொன்னவன், “இருந்தாலும் ,இப்படியெல்லாம் சொல்லாத அம்மணி ,ஆள்  அம்சமா தான் இருந்தான்” என ஆதிராவை வம்பிழுக்க, 


“அது தான் அவங்க கர்வம், ராஜ வம்சம்னு பெருமை.ஆனால் பொண்ணுங்களை இன்னும் போகப் பொருளா தான் பார்க்கிறாங்க, இதிலிருந்து மீறி சுயமா நின்றது, நானிமாவும், ஆயியும் தான். ஆனால் அதுக்கு அவங்க கொடுத்த விலை ரொம்ப அதிகம்” என ஆதிரா உணர்ந்து பேச,


 “நான் விளையாட்டுக்குத் தான் பேபிம்மா சொன்னேன் ,உன்னை ஹெர்ட் பண்ணியிருந்தா சாரி பேபி” என்றவன், “ எதுவா இருந்தாலும், என்னைத் தாண்டி தான் உன்கிட்ட வரமுடியும், ஒரு விஷயம் மட்டும் நியாபகம் வச்சுக்க பேபி , உன் ஆயி செஞ்ச தப்பை நீ செய்யாத, அவங்க மாமாவை முழுசா நம்பி வந்திருந்தாங்கன்னாக , அவிக  வாழ்க்கையில இவ்வளவு போராட்டமே இல்லை. அவிக செஞ்ச தப்பை நீயும் செஞ்சிடாத, நீ எப்பவும் எதையும் என்ர கிட்ட  மறைக்கக் கூடாது “ என அவன் நிபந்தனை வைக்க, சரி என ஒத்துக் கொண்டாள் , ஆனால் அதை நடைமுறைப் படுத்துவதில் சிக்கல் வரும் என நினைத்தால் இல்லை.  


கைலாஷ் ராஜன், கட்டிலில் கிடத்திய மனைவியையே பார்த்திருந்தார்.சற்று நேரம் முன்பு சிம்மமெனக் கர்ஜித்தவள் ,படுக்கையில் ஓய்ந்து , நித்திரையில் இருக்கிறாள், சில மணி நேரங்களுக்குள், அவரது பாருவுக்குள் எவ்வளவு மாற்றங்கள், அத்தனை உணர்வு சிக்கலில் மனைவி இருப்பதையும் புரிந்து கொண்டவர், நித்திரையாவது சுகமாக இருக்கட்டும், என அதே ரஜாயை போர்த்தி விட்டு, ஏசியின் வேகத்தையும் அதிகரித்து , ஒருக்களித்துப் படுத்து மனைவியின் முகத்தையே பார்த்திருந்தவருக்கு, மனைவியின் கடந்த காலம் மிகுந்த மனவேதனையைத் தந்தது. 


ஒரு நிமிடம், தன்னையே விலக்கித் தூர நிறுத்தினாளே என யோசித்தவருக்கு, அப்போ எப்படி இருந்திருப்பா. ஜெயந்த் ,தன் மீதிருந்த கோபத்தையும் சேர்த்து இவளிடம் காட்டினானோ. என்னைப் பத்தி எப்படிப் புளுகியிருக்கான் ராஸ்கல். அவன் பொம்பளை பொறுக்கி நாய் வேற, பாருவை என்ன செஞ்சானோ, என மனம் உழல, அவனிடமிருந்து காப்பது போல் மனைவியை அணைக்க, அவர் தொடுகை தந்த பாதுகாப்பு உணர்வில் அனிச்சையாய், திரும்பி அவரோடு ஒன்றிக் கொண்டவர், " ராஜ், விட்டுட்டு போகாதீங்க" என முணுமுணுத்தார். 


" இதை, அன்னைக்கே சொல்லியிருந்தா, விட்டுட்டுப் போயிருக்க மாட்டேனே பாரு" எனப் புலம்பிய படி, தன்னில் இறுக்கிக் கொள்ள, " சோடியேஜி (விடுங்க) ரஜ்ஜும்மா வளர்ந்திட்டா. ஷரம் நஹி ஆயி" எனச் சிணுங்கவும்.


" அடிப் பாவி, நான் எதுவுமே செய்யலை, கனவுலையே குடும்பம் நடத்தி புள்ளை பெத்திருப்பா போலயே" என வியந்தவர்,


' விஜயன் என்னமோ சொன்னானே,இரண்டு வருசமா அரை மயக்கத்தில் கிடைக்கையில, போன்ல பேசி இவள் தான் வழிக்குக் கொண்டு வந்தாலாமாம், அப்ப அது, கனவு இல்லையா, வருஷ, வருஷம் சந்தன்கட் கூஃபா கர்க்கு வந்ததும், பாருவோட ஆவி இல்லையா, பாருவே வா. அன்னைக்கு ஆஸ்பத்திரியிலும் இதைச் சொன்னாளே, 


வந்ததது ஆவியா, இந்தப் பாவியான்னு தெரியாதா அளவுக்கு நான் அப்பாவியா இருந்திருக்கேன். என்ன பெரிய பிஸ்னஸ் டைகூனு, சரக்கடிச்சிட்டு, பாருன்னு வந்திட்டா, தேவதாசாட்டம் திருஞ்சிருபேனாட்டத்துக்கு" எனத் தான் கனவென நினைத்ததெல்லாம் நினைவுக்குக் கொண்டு வர முயன்று மங்கிய நிலவொளியில் மனைவியையே யோசனையோடு பார்த்திருந்தார்.


ஏசி அறையிலும் புழுக்கம் தாங்காமல் , அப்போது தான் சட்டையோடே படுத்திருப்பது நினைவு வந்தவராக, எழுந்து கழட்டிப் போடப் போன போது தான், சட்டையில் பாருவின் நெற்றி வகிட்டில் வைக்கும் குங்குமம் ஒட்டியிருப்பது தெரிந்தது. அதை வருடியவர்,


" என்ர பேருக்குக் குங்குமத்தை வைக்காதேன்னு எப்படிச் சொன்னேன். அது அவளுக்கு ரொம்பச் செண்டிமெண்ட், சை ராஜா, உன்ர நாக்கில் சனி தாண்டா இருக்கு" எனத் தன்னையே நொந்து கொண்டு, சட்டையை அழுக்குக் கூடையில் போடப் போனவருக்கு, அந்தக் குங்கும கறை வேறு கதையும் சொன்னது.


ஒவ்வொரு முறையும் சந்தன் கட் போய் வரும் போது, சட்டையில் இந்தக் கறை வரும். சலவைக்குப் போட்டாலும் போவது இல்லை எனச் சத்தியன்  சொன்னது நினைவில் வர, அது பாரு தரும் பரிசு எனச் சட்டைகளைத் தனியாகப் பாதுகாத்து வைத்ததும் நினைவில் வர, அர்த்த ராத்திரியில் அவசரமாகச் சென்று சட்டைகளைத் தேடி எடுத்து ஒப்பிட்டார். மனைவி தன்னை ஒரேதா தவிக்க விட வில்லை, அவ்வப்போது வந்து ஆறுதல் சொல்லி இருக்கிறாள்.


சந்தன்கட் போய் வந்தால் மட்டுமே தான், அந்த வருடத்தை நிம்மதியாக ஓட்டுவதையும் நினைத்தவர், மீண்டும் கட்டிலுக்கு வந்து, மனைவியை முத்தமிட்டவர், " ஒரு தடவை, இப்படி யோசிச்சிருந்தா, உன்னைக் கையும் களவுமா பிடிச்சிருப்பேனே பாரு " என ஆத்தாத்துப் போனார். 


இரவு முழுவதும், மனைவியையே பார்த்த படி படுத்திருந்தவருக்கு, மனைவி ஆழ்ந்த உறக்கத்தில் உதிர்த்த வார்த்தைகள், அவர் அனுபவித்த வேதனையைச்  சொல்ல, ஜெயந்தை அப்போதே கொல்லும் வேகம் வந்தது, உடனே எழுந்தவர், நாடு நிசியில் யாருக்கோ போன்  அடித்து,  சில கட்டளைகள் இட, அடுத்த நாள் அதுவும் நடந்தேறியது. 


கட்டளைகள் இட்ட பின்னே கொஞ்சம் ஆசுவாசம் அடைந்தவர், “ என் டார்லிங்க் ,இனி என்னைத் தவிர வேற யாரையுமே நெருங்க விடமாட்டேன் “ என மனைவியைச் சேர்த்து அணைத்துக் கொண்டு நித்திரை புகுந்தார்.


வழக்கம் போல், காலை ஆறு மணிக்குக் கண் விழித்த பைரவிக்கு, தன்னை அணைத்தபடி படுத்திருந்த கணவனின் வலது தோள்பட்டை தான் தெரிந்தது. விவாகமான கொஞ்ச நேரத்திலேயே, குண்டடிபட்டதன் தழும்பு. கனவில் அவரைக் காண்பதாக நினைத்தவர், அதனை வருடி, இதழொற்றலையும் தந்த பொழுது தான், அது கனவில்லை நிஜமென உணர்ந்தார்


" ஓ, ஆயி பவானி, பார்த்திடப் போறார்" எனப் பதறி எழ முயற்சி த்த போது தான், இது கூஃபா கர் இல்லை, வேறு ஒரு அறை என்பதை உணர்ந்தார். தூக்கம் தெளிந்தவர், இருள் விலகி, அருணன் அரும்பிய நேரம், தன்னை மறந்து உறங்கும் கணவரையும், கவனமாக ஆராய்ந்ததில் தன் நிலை உணர்ந்து, இது யாருடைய அறை என யோசித்தார். 


அவரிடமிருந்து தன்னை உருவிக் கொண்டு எழு முயல, அந்த அசைவில், "பாரு ,என்ன அம்மணி " என்றவர், விளக்கைப் போட்டு விட்டு, ரெஸ்ட் ரூம், இந்தப் பக்கம்" எனக் காட்டினார். பைரவி அவசரமாக எழுந்து குளியலறை சென்று கால் மணியில் முகத்தில் நீரடித்து, நினைவுகளைத் திருப்பிக் கொள்ள முயன்றார், ஹார்ட் அட்டாக், கைலாஷிடம் வந்தது வரை நினைவு இருந்தவருக்கு,நல்ல வேளையாக நேற்றைய நிகழ்வு நினைவில் இல்லை. அதுவும் கணவன் கை அணைப்பில் இருந்தோமே என வெட்கமும், கூடவே ஓர் நிம்மதியும் வந்தது.


குளியலறை சென்று தாமதம் ஆனதிலேயே, ராஜனும் மனைவியை எதிர் கொள்ளத் தயாராகவே இருந்தார். பைரவி தேவைக்கு அதிகமான நேரம் எடுத்துக் கொள்ள, பதட்டமான கைலாஷ், கதவைத் தட்டி மனைவியை அழைக்கப் போனார், 


அதே நேரம் கதவைத் திறந்து வெளியே வந்த பைரவி, எதிரே கணவரைப் பார்த்த அதிர்ச்சியில் கால் தடுமாறி விழப் போக" பாரு" எனச் சட்டெனத் தாங்கியவர், " மயக்கம் வருதா அம்மணி, எதாவது குடிக்கிறியா" என அழைத்து வந்து ஷோபாவில் அமர்த்தியவர், தண்ணீர் பருக கொடுத்து விட்டு, இன்டர்காமில் கௌரியிடம் கட்டா சாய் அனுப்பச் சொன்னார். 


பைரவி " இது எந்த ரூம், நான் எப்படி வந்தேன்" எனவும், மனைவிக்கு எதுவும் நினைவில் இல்லை என நிம்மதி பெரு மூச்சு விட்டவர், சட்டென யூகித்து ஒரு கதை புனைந்தார் ,


 " நம்ம ரூம் தான் அம்மணி . எத்தனை நாளைக்கு உறமுறையாட்டமா, கீழ் ரூம்புலையே இருப்ப. எனக்கு என்ர பொண்டாட்டியைப் பக்கத்திலேயே வச்சுக்கனும்னு ஆசையிருக்காதா, அது தான் தூக்கிட்டு வந்துட்டேன். ஏன் உனக்கு இஸ்டமில்லையாக்கும்" என கைலாஷ் கோபம் போல் கேள்வி எழுப்பவும், பைரவி  குழப்பமாகவே பார்த்தவர், 


"அத்தை, மாமாட்ட, கேட்டிங்களா. அவங்க எதுவும் சொல்லலையா" எனத் தயக்கமாக வினவினார். 


" என்ர பொண்டாட்டியைத் தூக்கிட்டு வர்றதுக்கு, யார்கிட்ட பர்மிஷன் கேட்கனுங்கிற. கீழ் ரூம்ல இருந்தியான, எப்ப பாரு, அந்த மாஸிமா, உன்ர கூடவே இருக்கிறாங்க, உன்ர மாமா, அத்தை, அப்பான்னு ஆராவது, உன்ர நலம் விசாரிக்க வந்திடுறாங்க. நாலு அடி தள்ளியே நிக்க வேண்டியதாருக்கு, இப்படியே போனாக்க , நான் எப்பத்தான் என்ர பொண்டாட்டியை கொஞ்சறது அம்மணி . ஏற்கனவே இருபது வருஷம் வீணாப் போச்சு , விட்டதை பிடிக்க வேண்டாமாக்கும் , அதுக்குத் தான்" என கோபமாக ஆரம்பித்து, தன் ஆசையைச் சொல்லி,  காதலாகி மனைவியை ஒட்டி அமர்ந்து, கையோடு கையை சேர்த்துக் கொண்டவர், 


"உனக்குத் தான் புருஷனைத் தள்ளி நிறுத்தியே பழக்கம், ரூம்புக்கு கூப்பிட்டாலும், வந்திருப்பியாக்கும். புருஷனை தாங்குற பொண்டாட்டி கிடைக்கவெல்லாம் கொடுத்து வச்சிருக்கோணும், எனக்குத் தான் அந்த கொடுப்பினை இல்லை, நாமாவது பொண்டாட்டியை தாங்குவோம்னு தூக்கிட்டு வந்துட்டேன், இதிலென்ன தப்பு " என , நேற்று பைரவி தன் மீது சொன்ன கம்பளைண்ட்டையே, அவர் மாற்றிச் சொல்லவும், பைரவி குழம்பிப் போனாலும் கணவனை முறைத்தார்.


அதே நேரம், " பாபா" என அழைப்பில், " ரஜ்ஜும்மா கூப்பிடுறாலாட்டத்துக்கு " என எழுந்து அவர் கதவைத் திறக்க, டீ கப்போடு நின்றவள், " ஆயி, ஓகேயா" என ரகசியமாகக் கேட்க, இவர் கட்டை விரல் மட்டும் உயர்த்தி விட்டு, " நீ ஏன் கண்ணு  இதையெல்லாம் தூக்கிட்டு வர" என ட்ரேக்காக  அவர் கையி நீட்ட, 


" இட்ஸ் ஓகே, பாபா. நான் உங்க இரண்டு பேரோடவும் டீ குடிக்கலாம்னு வந்தேன் " என்றபடி உள்ளே வந்தவள், " குட்மார்னிங் ஆயி" என அவரை நோட்டமிட்டாள். அவர் முகம் தெளிவில்லாமல் இருக்கவும் ,டீபாயில் ட்ரேயை வைத்தவள், அவர் கன்னத்தில் முத்தமிட்டு விட்டு, " ஐயம் சாரி ஆயி, இனி எவ்வளவு வேலை இருந்தாலும் உங்களோட டைம் ஸ்பெண்ட் பண்ணுவேன். எனக்குத் தனியா இருந்து பழக்கம் இருக்குங்கிறதுக்காகவே, என்னை விட்டுட்டு போவீங்களா" என சலுகையாகக் கேட்க, " நான் அப்படிச் சொன்னனா, ரஜ்ஜும்மா" என வினவினார். 


கைலாஷ், அவசரமாக நடுவில் புகுந்தவர், " நாங்க இரண்டு பேருமே, உன்னை மிஸ் பண்றோம்னு பேசிக்கிட்டோம், அம்மணி. ரஜ்ஜும்மா அதையத் தான் சொல்றா. இல்லடா கண்ணு" என்றவரின் கேள்வியில் ஆம் எனச் சொல்லச் சொல்லும் பதிலிருக்க, ஆதிராவும் நொடியில் புரிந்து சமாளித்தவள்,


 "ஆமாம் ஆயி, இங்கப் பாருங்க கட்டா சாய் , பாபாவும் நானும் இதில தான் முதல்ல ப்ரண்ட் ஆனோம்" என இரண்டு கப்புகளில் ஊற்ற, 


" ரஜ்ஜும்மா, பாபா இரண்டு நிமிசத்தில ரெப்ரெஸ் ஆகிட்டு வர்றேன். இல்லைனா உன்ர ஆயி திட்டுவா" என்ற படி, பைரவி தலை மறைவில் நின்று, ஆயிக்கு எதுவுமே ஞாபகம் இல்லை, எனச் சைகை காட்ட மகள் புரிந்து கொண்டாள்.


மருமகள் இன்று ஏதேனும் ஆட்டம் காட்டினாலும், சமாளிக்க , எதற்கும் இருக்கட்டும் என அடுத்த நாள் காலையில், ராமு, அபரஞ்சி, சுப்பு, சாரதா, விஜயன் குடும்பம் என ஒரு கூட்டத்தையே காலை உணவுக்கே கூட்டி விட்டார் சௌந்தரி. 


பாலநாயகம், மகன், மருமகள் கல்யாணம் குறித்து, கலந்தாலோசித்துக் கொண்டிருக்க, 'மருமகள், எந்த நிலைமையில இருக்கிதுன்னு, தெரிஞ்சு கிட்டு முடிவெடுக்கலாமில்லிங்க" என சாரதா யோசனை சொல்லவும், எல்லாருமே கவலையோடு மாடியைப் பார்த்துக் கொண்டிருந்தனர்.


கைலாஷ் ராஜனின் அறைக் கதவு திறந்து, இருவரும் தயாராகி கீழே வர, பைரவி புதுப் பொண்ணு போல் தயங்கித் தயங்கி வர, கைலாஷ் உரிமையாய் மனைவியை அணைத்தபடி, " பார்த்து, அவசரப் படாத மெல்ல இறங்கு அம்மணி. எல்லாரும் நம்மவிக தான், எதுவும் தப்பா எடுத்துக்க மாட்டாங்க" எனக் காலம் காலமாக வாழும் இணை பிரியா தம்பதி போல், இருவரும் இறங்கி வர, நேற்றைய பைரவியின் கோபத்தைப் பார்த்தவர்கள், அதிசயித்தனர்.


" என்னத்தைச் சொல்லு, உன்ர மாமன் சம்சாரத்தை சமாளிக்கிறதில் கில்லாடி தான்" என விஜயன், மகனிடம் ரகசியம் பேச, " அது தெரிஞ்ச விசயந்தானுங்களே, அநேகமா, பர்ஸ்ட்" என அவன் ஆரம்பித்தவன், அப்பாவின் முறைப்பில், " இல்லைங்கப்பா, பஸ்ட் ஆதிரா தான வந்திருக்கோணோம், காணாமேன்னு பார்த்தேன்" என வழிந்தபடி சமாளித்தான் அபிராம் . 


 " மாப்பிள்ளை, பவானியை சரிகட்டிட்டாராட்டத்துக்கு, இனி கல்யாணத்தைப் பத்தி மட்டும் பேசுவோம்" என்றார் ராமு.  பைரவியை, பழைய பவானியாகப் பார்த்ததில் பெரியவர்களுக்கும் மகிழ்ச்சி. 


" வாங்க மாமா, வாங்க அப்பா. சாப்பிட எடுத்து வச்சிட்டாங்களா இல்லையா, கௌரி, செல்லி" என வந்தவர்களை வரவேற்று, வேலையாட்களை அழைத்தபடி பைரவி சாப்பாடு அறைக்கு விரைய, " மெல்ல போ அம்மணி" என எச்சரித்து அனுப்பினார் கைலாஷ். 


கௌரி, " தீதி, நீங்க உட்கார்ந்துகிட்டே சொல்லுங்க. நான் எடுத்து வைக்கிறேன்" என வர,


 " அண்ணி, உடம்புக்கு நல்லா இருக்குதுங்களா, நேத்து உங்க அண்ணன் வந்து சொல்லவுமே" என கஸ்தூரி ஆரம்பிக்க, கைலாஷ் அவசரமாக இடை புகுந்தவர், எல்லாருக்கும் சொல்வது போலவே, 


" விஜயன் என்ர கல்யாணத்தைப் பற்றி தான கண்ணு சொன்னான். என்ர உடன் பிறந்தவளுங்க வர முடியலைனா என்ன கண்ணு, சாங்கியம் செய்யத் தங்கச்சி நீ இருக்கேல்ல" எனப் பேச்சை மாற்றினார் ராஜன். 


அதை கேட்ட சௌந்தரி  “நேத்தே போன் போட்டு பேசிட்டேன், சங்கீதாலும்,கவிதாலும் குடும்பத்தோட வர்றாங்க, நீ உம்பட பக்கம் ஆளுங்களுக்கு எல்லாம் சொல்லிப் போடு” என்றார் மகன் கேள்வியாய் பார்க்கவும், “ உன்ர சம்சாரம் வீட்டுப் பக்கம் ராஜகுடும்பத்துக்கு “ என நீட்டி முழங்கவும், 


“அத்தை,என் மேல கோபமா இருக்கீங்களா,நான் எதாவது தப்பா சொல்லிட்டனா,உங்க மகனும் எதையோ மறைகிறார்  “ எனப் பைரவி, சௌந்தரி கையை பிடிக்கவும், 


“அதெல்லாம் ஒண்ணுமில்லையம்மா, இப்ப தான் உங்க கல்யாண விஷயமா, உங்க அம்மாகிட்ட பேசினோம், அதுதான் உங்க அத்தை சம்பந்தி முறுக்கை காட்டுறா “ என பாலநாயகம் சமாளித்தார். 


“மாமா,மறுபடியும்  கல்யாணம் அவசியமா, நீங்க தான் என்னை மருமகளா ஏத்துக்கிட்டீங்களே “எனப் பைரவி தயங்கவும் , “கைலாஷ்-பாரு கல்யாணம் நடந்தே ஆகோணும், நாங்க எல்லாரும் பிக்ஸ் ஆகிட்டோம்” என பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வேலையாட்கள் வரை கோரஸ் பாட, பாரு பேச்சற்று, ராஜனைப் பார்க்க, அவர் கண் சிமிட்டியதில் 


தலையைக் குனிய, “ஆயி, ஐயம் , ஸோ எக்ஸைடேட். சரின்னு சொல்லுங்க ஆயி” என ஆதிராமாடியிலிருந்து இறங்கி வந்து  அம்மாவைக் கட்டியணைத்துக் கொஞ்சவும்,  


“சுப்கர், இத்தனை வயசில மறுபடியும் துல்ஹன் ஆகிறதா, முஜே ஷரம் ஆதி ஹை “என வெட்கப்பட்டுத் திரும்ப, “ஆயி, இப்படியே நின்னு ஷர்மாயியே, பாபாவும் ஸைட் அடிச்சுக்கட்டும் பாவம்” எனக் கேலி பேச, கேஆர் மாளிகை கல்யாண களை கட்டியது.


விஜயன், “ தங்கச்சிமா, ஆதர்ஷ் மருமகன் கிட்ட பேசிட்டேன், உங்க ஆயி  குடும்பத்தோடு கிளம்பி வர்றாங்க “ என அறிவித்தவர், 


பெரியவர்களிடம் “நம்ம வீட்டையே  பொண்ணு வீடா  வச்சுக்குவோமுங்க, ராணியம்மா வந்த பிறகு, தங்கச்சியம்மாவையும் அங்க கூட்டிட்டு போயிடுவோமுங்க, அஞ்சு நாள் கழிச்சு, கல்யாணம் முடிஞ்சு நீங்க வீட்டுக்கு அழைச்சுக்குங்க “என விஜயன், பைரவி, பாலநாயகம், சௌந்தரியிடம் விளக்கிக் கொண்டிருந்தார். 


அதிர்ச்சியான ராஜன், “ விஜயா, நீ பாட்டுக்கு பிளானை போட்டா என்ன அர்த்தம்ங்கிறேன், கல்யாணம் கட்டிக்கிறதுக்கு தான் ஓகே சொல்லிருக்கேனே , தவிர பாருவையோ, என்ர மகளையோ எங்கையும் அனுப்பமுடியாது. என்ன விளையாடுறியா” எனக் கோபப் பட்டார். 


அவர் வார்த்தையில் உள்ள உண்மையை அபிராம், ஆதிரா இருவரும் உணர்ந்து, ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.


“அட, சாங்கியம் இருக்குதில்ல கண்ணு”என சாரதா, இடையிட, 


“சின்னம்மா, நான் சொல்றது தான் சாங்கியமுங்க. போஸ்லே குடும்பம் தங்கறதுக்கு,கெஸ்ட் ஹவுஸை ரெடி பண்ணி கொடுத்துடுவோமுங்க , கல்யாணம்  மில்லுக்கு உள்ளறையே  முக்கியமானவிகளைமட்டும்  வச்சு சிம்பிளா  நடக்கும் . நீங்க எல்லாரும் பொண்ணு வீடோ,மாப்பிள்ளை வீடோ, இங்கையே தங்கிக்குங்க . 


அடுத்த நாள், அதுவும் மில்லுகுள்ள இருக்கிற மண்டபத்திலையே   ஆளுங்களை கூட்டி, என்ர குடும்பத்தை அறிமுகப்படுத்திக்கிறேனுங்க என்னங்க அம்மணி சரி தானுங்களே “ என ராஜன் மனைவியையும் அபிப்பிராயம் கேட்க, பைரவிக்கும் அதுவே சரியெனப் பட்டது. தனது மனதை, தான் சொல்லாமலே உணர்ந்துக் கொள்ளும் கணவர் மீது காதல் பெருகியது. 


" சரி தான் ராஜ். நானும் இதைத் தான் சொல்றதுன்னு இருந்தேன். நம்மவங்களை மட்டும் வச்சு மறுபடி ஷாதி பண்ணிக்கலாம். இல்லைனா இருபத்திரெண்டு வருஷம் முன்ன நமக்கு கல்யாணம் ஆனதான்னு சந்தேகப்படுவாங்க. " என பைரவி தன் கவலையைச் சொல்ல, 


' இவளே தான், நேத்திக்கு அந்தக் கல்யாணத்தை செல்லாதுன்னு சொன்னா. அது ஞாபகத்துக்கு வரும் முன்ன  மறுபடியும் தாலியை கட்டிப் போடனும், இல்லையினா ஷேர்னி இன்னொரு ஆட்டம் காட்டும் ‘என மனதில் திட்டம் போட்டவர், 


" அதென்ன அம்மணி, அப்படிச் சொல்லிப் போட்ட, சாங்கியம் சம்பிரதாயத்தோட நடந்த கல்யாணம் தானே.உன்னை மடக்கிற வழி அது தான் தெரிஞ்சு, பங்காளி  பக்காவா ஏற்பாடு செஞ்சிருந்தான். மாப்பிள்ளை மட்டும் தானே மாறினேன். இல்லையின்னா,இந்நேரம்  நீயும் அந்த  ஜெயந்த் மகராஜ்க்கு சேவை செஞ்சுகிட்டு இருப்ப “ என அவர் வார்த்தையை விட, பாரு முறைத்து நின்றார். 


“அட வெட்டி பேச்சை விட்டுப்போட்டு ஆக வேண்டியதை மட்டும் பேசு” என்றார் நாயகம்.


கைலாஷ் பாருவின் மறு  திருமணமும், அதை தொடர்ந்து கைலாஷ் அதிரடியாய் செய்ய உத்தேசித்து இருக்கும் காரியங்களும், போஸ்லேகளிடம் என்ன எதிர்வினையை தரும் பொறுத்திருந்து பார்ப்போம். 


நிலவு வளரும். 




No comments:

Post a Comment