யார் இந்த நிலவு-37
சத்தாராவில் உள்ள ரமாபாயின் போஸ்லே மாளிகை. சற்று நேரத்துக்கு முன் தான் கோவையிலிருந்து கைலாஷ் ராஜனின் பெற்றவர்களும், விஜயனும் பேசினார்கள். பாலநாயகம் , சம்பந்தியம்மாவிடம் தன்னை அறிமுகப் படுத்திக் கொண்டு பேசவும், பைரவி, விஜயனை அழைப்பது போலவே, ரமாபாய் , பாலநாயகத்தை, “நமஸ்தே பாய்ஸாப், இருபத்திரண்டு வருஷம் முன்னாடி , இதே போல நான் உங்கள்ட பேசியிருந்தா, என் மகள் இவ்வளவு கஷ்டப் பட்டிருக்க மாட்டா. குன்னூர்ல உங்க கிட்ட தான இருந்தா, உங்க எல்லாரையும் பற்றிப் பெருமையா சொல்லுவா” என ஆரம்பிக்க,
ராஜகுடும்பத்துக்குரிய மிடுக்கோடு பேசுவார் என எதிர் பார்க்க, ரமாபாய் தன்மையாகப் பேசியதில், “வணக்கம்மா , அருமையான பொண்ணைப் பெத்து வளர்த்திருக்கீங்க அம்மா, எங்களுக்குத் தான், அந்த மருமகளை வச்சு சீராட்டக் கொடுத்து வைக்கலைங்க” என மருமகள் புராணம் பாடியவர், “இனி பழசைப் பேசி என்ன ஆகப்போகுதுங்க, வருங்காலத்தையாவது அவிக நிம்மதியா வாழட்டும்” என்றவர் அவர்களுக்கு மறுதிருமணம் செய்வதைப் பற்றிச் சொல்லி அழைப்பு விடுத்தார்.
“ரொம்ப நன்றி பாயிஸாப்,நான் உங்களுக்குக் கடமை பட்டிருக்கேன், ஒரு மகளுக்குச் சீரும் சிறப்புமா செய்ய முடியலைன்னு எவ்வளவு வேதனை பட்டிருக்கேன், எல்லாத்துக்கும் ஒரு விடிவு காலம் “ எனப் பேசும் முன் இருமியவர் , “நான் கட்டாயம் வர்றேன், நானாசாப் கிட்ட பேசுங்க “ என ஆதரசிடம் கொடுத்தார். அவனும், தாத்தா ,ஆத்தா எனப் பேசியவன்,மன நிறைவாய் போனை வைக்க, ராதா, பாலாஜியையும் அழைத்து, கோவை செல்வதைப் பற்றி ஆலோசனை செய்தனர்
ரமாபாய் , “ இருபது வருஷம் முன்னாடி என் மகளுக்குச் செஞ்சு பார்க்காத நல்லதையெல்லாம் ,இப்போ செஞ்சு பார்க்க போறேன், ராதா, போஸ்லே குடும்பச் செல்வாக்கு என்னனு காட்டணும், பைரவி, கணபத் ராய் வாரிசுன்னு காட்டணும்.நானாசாப், நமக்கு விசுவாசமானவங்க, உறவுகாரங்க, சீர் வரிசையை ஏற்பாடு பண்ணு , நாளைக்கே போய் இறங்குறோம்”என ஆவேசமாகப் பேச, அப்படியே நானிமா எனக் கட்டளையை நிறைவேற்ற ஆயத்தமானவன், “உலகத்திலேயே, ஆயி, பாபாவுக்குச் சீர் செஞ்சு,ஷாதி செய்து வைக்கிற முல்கா நானா தான் இருப்பேன்’ மனதில் பெருமைப் பட்டுக் கொண்டவனின் அலை பேசி அழைத்தது. அதற்குச் செவி கொடுத்தவன், “தொடர்ந்து கண்காணித்து, தகவல் கொடுங்க” என்றவன் நானிமாவிடம்
“உங்க தாமாத் கைலாஷ் ராஜன், தன் ருத்ர தாண்டவத்தை ஆரம்பிச்சுட்டார், “ என அறிவிக்க, ரமாபாய் யோசனையாகப் பார்த்தார்.
“நேற்று ஆயியை தன ரூமுக்கு தூக்கிட்டுப் போனார், இன்னைக்குக் காலையில் , ஜெயந்த் மகராஜ் உல்லாச மாளிகையிலிருந்து வரும் போது , ஆக்சிடென்ட் ஆகியிருக்கு “ என இரண்டையும் கோர்த்துச் சொல்ல, ரமாபாய் புன்னகையோடு,” உன் ஆயி தான் தூக்கத்திலேயே புலம்புவாளே ,அவருக்கு உண்மை தெரிஞ்சிருக்கும், சபாஷ். இதைத் தான் முன்னையே எதிர் பார்த்தேன். பைரவி பாய் திரும்பி வர்றனா, சோலாப்பூரும், பீபீ மில்சும் அலறணும், இந்தத் தடவை ஆர்ப்பாட்டமா போறோம் நானாசாப், தயார் கரோ ” எனக் கிழட்டுப் பெண் சிங்கமாய்க் கர்ஜித்தார் ரமாபாய்.
கேஆர் மாளிகையில், கைலாஷ் வாயைத் திறந்தாலே, மாமனாருக்கும் , மருமகளுக்கும் டென்ஷன் தான். பைரவியை, என்னைக் கல்யாணம் கட்டலேன்னா , ஜெயந்தை கட்டியிருப்பா , என எகத்தாளம் பேச காரணம், மாங்காயை தட்டியாச்சு என வந்த செய்தி தான், இவர் அதற்குமேல், உப்பு மொளகாபடி தூவி விடு “ எனப் பதில் அனுப்ப, முன்பு அவருக்குப் பீபீ மில்ஸில் வேலை பார்த்த பொழுது தோஸ்தாக இருந்த திலக்ஜி , க்யா என அதிர்ந்தார். அவர் குறிப்பிட்ட மாங்காய் ஜெயந்த் மஹராஜ் தான்.
நண்பனின் விசித்திரமான புன்னகையில், சுதாரித்த விஜயன், “என்றா , என்ன வேலைத்தனம்,எதோ வில்லங்கம்னு மட்டும்தெரியுது” என ரகசியமாய் வினவ குறுஞ் செய்தியைக் காட்டியவர், “உன்ர தங்கச்சிகிட்ட போட்டு விட்ட, பிச்சு போடுவேன், அவன் என் பாருவை நெம்ப நோகடிச்சிருக்காண்டா “ எனவும், “நல்லா வச்சு செய்யி, கதறட்டும் அந்த நாயி ” என விஜயன் டென்ஷனாகவும், "வெள்ளைக்கொடி காட்டிட்டு அலையற உன்னையவே பச்சைக் கொடி காட்ட வச்சிருக்கான் பார், பங்காளி தரமான பொருக்கி தான்" எனவும், "இது எப்ப" என்ற விஜயனிடம், "லைவ் ரிலே, கொஞ்சம் டிலே " எனப் புன்னகைக்க, பைரவி பெரியவர்களுக்குப் பரிமாறிக் கொண்டே இவர்களை முறைத்துக் கொண்டிருந்தார், 'தங்கச்சிமா பார்க்குது, அடக்கி வாசி" என எச்சரித்தார் விஜயன்.
முன்னதாகப் பாலநாயகம் , மருமகளை ஜெயந்தோடு சேர்த்துப் பேசியதில் கோபமானவர், “அவன் அப்படித்தான் கண்ணு பேசுவான், வாய் கொழுப்பெடுத்தவன், நீ போய் நேரத்துக்குச் சாப்பிடு” என அனுப்பி விட, "நான் இப்ப தான் மாத்திரை போட்டேன்,பத்து நிமிஷம் ஆகணும்,நீங்க வாங்க மாமா " என வசந்த விலாச வாசிகளைமுதலில் காலை உணவுக்கு உட்கார வைத்தார் பைரவி. அவர்கள் சாப்பிட்டு முடியவும், அவர்கள் வழக்கமான செக்கப்பை பற்றிப் பேசவும், சாரதா, அபரஞ்சி, "இது தான் பவானி, கரெக்ட்டா எல்லாத்தையும் நியாபகம் வச்சுக்குவா கண்ணு" எனச் சிலாகித்தனர்.
அபிராம், அவர்களை மேற்கொள் காட்டி "ஏனுங்க மாமா,நீங்க நேத்திக்குப் பேசினதெல்லாம் அத்தைக்கு நியாபகம், இருக்குதுங்களா, அவிக சிரிச்ச முகமா இருக்கிறதை பார்த்தா, அப்படித் தெரியலைங்களே" என வினயமாகக் கேட்கவும், " மாப்பிள்ளைங்க ,என்ர பொண்டாட்டியை எப்படிச் சமாளிக்கிறதுன்னு எனக்குத் தெரியும், நீங்க உங்க வேலையைப் பாருங்க" எனக் கடிய, "அங்க பாருங்க, நீங்க சாப்பிடவாறீங்கன்னு தெரிஞ்சும் , அந்தப் பக்கம் போறாங்க" என வம்பிழுக்க, அபிராம், விஜயன், ஆதிராவை சாப்பிட அனுப்பியவர், மனைவியை நோக்கி வந்தார்,
“பாபி, ரஞ்சனியை மட்டும் விட்டுட்டு வந்துடீங்களே” எனப் பைரவி குறைபட, “காலேஜ் போயிட்டாளுங்க அண்ணி “ என இருவருமாகப் பேசிக் கொண்டிருக்க,கணவரும் மகனும் சாப்பிட செல்வதைப் பார்த்த்து, "இதோ வந்திறேனுங்க அண்ணி "எனக் கஸ்தூரி வேகமாகப் பரிமாற்ற செல்ல, ,பைரவி அதே இடத்தில் கணவர் மீது கோபத்தோடு அமர்ந்திருந்தார்.
, “ஏனுங்க அம்மணி நீங்க சாப்பிடலையா .மாத்திரை போடனமில்லா வா அம்மணி” என ராஜன் அழைக்க வர, பைரவி ,"நீங்க சொன்னதில்லையே மனசு நிறைஞ்சு போயிடுச்சு, வேண்டாம் " என முறுக்கினார்.
“அடேங்கப்பா, கோபமாக்கும், உண்மையைத் தான சொன்னேன், " என மீண்டும் வம்பிழுத்தவர், " இப்ப நீ எந்திரிச்சு வரலையினாக்கும், எல்லார் முன்னாடியும் கிஸ் அடிப்பேன், உன்ர மகள் வேற இருக்கா, வசதி எப்படி” என மனைவியிடம் குனிந்து, தணிந்த குரலில் கேட்க, “உங்களை” என முறைத்தபடி உடன் வர, கைலாஷ் உல்லாசமாகச் சிரித்தபடி மனைவியைச் சாப்பிட அழைத்து வந்தவர், மருமகனை பார்த்து ஒரு லுக் விட, "உங்க லெவலே வேறயிங்க மாமா" எனச் சரண்டர் ஆனான்.
“மாம்ஸ், இன்னைக்கு என்ன ஒரே ஜாலி மூட்ல இருக்கீங்க “ என அபிராம் அடுத்தக் கேள்வி எழுப்ப, “பழைய பங்காளி ஒருத்தனுக்குப் பொறந்தநாள் கொண்டாடினேன் மாப்பிள்ளை” எனப் பூடகமாகவே பேச,விஜயன், பைரவியைப் பார்த்தபடி சிரித்ததில் அவர் யோசனையில் ஆழ்ந்தார்.
“பாபா,அதெப்படி ஆயிக்கு ஷாதி நடக்குதுன்னு தெரிஞ்சு போனீங்க” என ஆதிரா விவரம் கேட்க,”உன்ர நானிமாவும் எனக்குச் சப்போர்ட்டு ரஜ்ஜுமா , அவிக துப்பறிஞ்சு ஏற்பாடு செஞ்சு வச்சிருந்தாங்க” என அவர் விவரம் சொல்லப் பெரியவர்களும், ஆதிரா அபிராமும், அவர்கள் கதையைக் கேட்டிருந்தனர். விஜயனும் விளக்கினார்.அந்த நாளைய நினைவில் பைரவியின் கண்களில் எல்லாம் கலந்த ஓர் உணர்வு தெரிந்தது.
ஆதிரா கட்டாயக் கல்யாணத்தைப் பற்றிக் கேட்கவும், கைலாஷ், " உன்ர ஆயிக்கு சில நம்பிக்கை உண்டு, அதை மீற மாட்டா. இதைச் சாதகமா வச்சு தான், உன்ர பெரியம்மா வூட்டுக்காரன், உன்ர ஆயியை இரண்டாம் தாரமா கல்யாணம் கட்ட ஏற்பாடு செஞ்சான்" என அன்றைய நிகழ்வுகளைச் சொல்ல,
ஆதிரா, " ஆயி, அப்ப யாராவது வலுக்கட்டாயமா தாலி கட்டினாலும் ஒத்துக்கிறதா. இது என்ன நியாயம்" என அவள் ஆட்சேபிக்க, சௌந்தரி முதலான மூத்த தலைமுறை, " அந்தக் காலத்தில் அப்படித் தான கண்ணு இருந்துச்சு" எனப் பேச்சு ஓடியது.
" அதெல்லாம், அந்தக் காலம், அது உன் ஆயி ஊர்ல உள்ள பழக்கம். நம்மூர்ல அதெல்லாம் செல்லுபடியாகாது கண்ணு. ஒரு பொண்ணு மனசார ஏத்துக்கிட்டா தான், கட்டினவனே புருஷனாக முடியும் " என ராஜன் தமிழ் மண்ணுக்கே உரியப் புரட்சி கருத்தைச் சொல்ல, பைரவி முறைப்பையும் பொருட்படுத்தாது ஆதிரா பாபாவைச் சிலாகித்தாள்.
சோலாப்பூரில், போஸ்லேக்கள், பவானியின் இதே நம்பிக்கையைப் பயன்படுத்தி, ஆதிராவை மஹந்த் , கட்டாயத் திருமணம் செய்து விட்டால், சொத்து வரும், அதன் பின் விளைவுகளைச் சமாளித்துக் கொள்ளலாம் எனத் திட்டம் போட்டனர்.
மஹந் தனது அடுத்தத் திட்டத்தைச் செயல்படுத்த , கோவையை சுற்றியபடி தயாராக இருந்தான். ஏற்கனவே இரண்டு முறை, ஆதிராவை கடத்த முயன்று தோற்றிருந்தவன், இந்த முறை மில்லை விட்டு அவளை வெளியே வரவழைத்தோ, அல்லது மில்லிருந்தே தூக்கவோ, துணிந்து முயல்வதாக இருந்தான்.
ஜெயந்தின் , ஆக்சிடென்ட் செய்தியைக் கேட்ட மச்சினங்களும், மருமகன்களும் , “அப்படியாவது வீட்டில் அடங்கிக் கிடக்கட்டும் “ ,சம்பிரதாயத்துக்கு மருத்துவ மனைக்குச் சென்று பார்த்தனர்.விபத்து என்றே பார்த்தனரே ஒழிய இதில் கைலாஷின் கை இருக்கும் எனக் கனவிலும் என்ன வில்லை.அப்படிப் பயந்திருந்தால், மஹந்த்தின் விபரீதமான திட்டத்தைக் கை விட்டிருப்பார்கள். விதி யாரை விட்டது.
பைரவி, கணவரிடம், " என்னோட நம்பிக்கையைக் குறைச்சு சொல்லாதீங்க ராஜ் . ஆயி பவானி, ஆசி இல்லாமல், நம்ம இத்தனை வருஷம் கழிச்சு சேர முடியுமா" என வாதாட,
" அதையே முன்னுதாரணமா காட்டாத. இந்தக் காலத்தில் அதெல்லாம் ஒத்து வராது. இந்த மில்லில் , எத்தனை பொம்பளை பிள்ளைகள் இருக்கு, கண்ணும் கருத்துமா பார்க்கையிலேயே, பத்தில ஒண்ணு ஏமாந்து வருதுங்க, இல்லைனா பாலியல் வன்முறை" என ராஜன் ஆட்சேபிக்க, விஜயனும், அபிராமூமே அதை ஆதரித்தனர்.
" சரி, இந்தப் பேச்சு போதும் விடுங்க. கல்யாண வேலையை ஆரம்பிக்கோணும். " எனச் சௌந்தரி அதைப் பற்றி விவாதிக்க, அதிலும் ராஜன், " ரொம்பவெல்லாம், யாரும் அலைய வேண்டாம். ஆளுகளை வரச் சொல்லுவோம்" என முடித்து விட,
பாலா “எல்லாம் இவன் வச்ச சட்டம் தான் “ என மகனை நொடிக்க , ராமசாமி, “விடு மச்சி, ராஜன் பவானி “கல்யாணம் நடந்தா சரி தான் எனச் சொல்ல, “மாமா, பவானி இல்லை பைரவி, இல்லையினா பார்வதின்னு சொல்லுங்க” எனத் திருத்த, "சரிங்க மாப்பிள்ளைங்க "என ராமு பவ்யமாகச் சொல்லவும் ,மற்றவர்கள் சிரிக்க,பாலா மகனை முறைத்தார்.
ராஜனே ,"மாமா, பவானிங்கிறது அவிக அக்கா பெயர், அவிக அக்கா புருஷன் அந்தாளு தான் பொம்பளை பொறுக்கி, உங்க மருமகன் இந்த விஷயத்தில் ராமனில்லைங்கலா , அதுக்குத் தான் சொன்னேனுங்க, குடும்பத்தில குழப்பம் வந்தி கூடாது பாருங்க" என மனைவியைப் பார்த்துக் கொண்டே அவர் கமெண்ட் அடிக்க, "இப்படி வேற உங்களுக்கு நினைப்பு இருக்கா" என்றார் பைரவி.
" அம்மா, எங்க மாப்பிள்ளை சொன்னாலும் சொல்லலைனாலும் ராமன் தான். அவர் பேரை வேணா, நாமளும் கைலாஷ் ராம் னு மாத்திடுவோம்" என்றார் பன்னீர்.
"ஏற்கனவே இரண்டு ராம் இருக்கோம்,போதும், அவர் ராஜானாவே இருக்கட்டும் " என்றார் ராமசாமி.
"இன்னொரு ராம் யாருடா" எனப் பலநாயகம் புரியாமல் கேட்கவும், "அட என்ர பேரன் தான், உன்ர பேத்தி அப்படித் தானே கூப்பிடுது, அது ஒவ்வொரு தரமும்,ராம், னு கூப்பிடையில் நம்மளாதான் கூப்பிடுதாக்கும்னு ஏமாந்து போறேன்" என அவர் சோகமாகச் சொல்ல,
" உன்னை யாருடா ராம் னு கூப்பிட்றது,நீ ராமுப்பய தானே " என்றார் பாலா.
"ஏனுங்க மாமா,தனியா இருக்கையிலே அத்தை கூப்புடுவாங்களா இருக்கும், அது தான் , என்ர மகள் கூப்பிட்டாலும் திரும்பி பார்க்கிறிங்க "எனக் கைலாஷ் கேலி பேச,
"யாரு , உங்க அத்தை , அவ கூப்பிட்டாலும், அப்படிக் கூப்பிட்டிருந்தா தான் இன்னும் இரண்டு புள்ளை பெத்திருப்பேனுங்களே மாப்பிள்ளை, உங்களுக்காவது, இன்னும் இரண்டு சாய்ஸ் கிடைச்சிருக்கும் " என ராமசாமி மனைவியைச் சேர்த்து வம்பிழுக்க,
"மாமா, ஆளை விடுங்க, என்ர உசிர வாங்க , உங்க மகன் ஓருத்தனே போதும்" என ராஜனும், "தங்கச்சிமா , உன்ர புருஷன் பேசறதை கேட்டியா" எனப் பாலா கோர்த்துவிட,
"உங்க பிரண்டை, திரும்பி என்னைப் பார்த்துச் சொல்லச் சொல்லுங்க அண்ணா , பதில் சொல்றேன் " என்றார் ரஞ்சி. பைரவி,"நானே கேட்கணும்னு நினைச்சேன்மா " என விவரம் கேட்க,
"பொண்டாட்டி சிரமப் படக்கூடாதுன்னு, அவன் போய் ஆபரேஷன் பண்ணிக்கிட்டான் மா" எனச் சுப்பிரமணி விளக்கம் சொல்ல, அதைக் கேட்டுக் கொண்டிருந்த ஆதிரா, ஆச்சர்யமடைந்து, "ஸ்வீட் ராம் தாத்தா" என ராமசாமியைக் கட்டிக்கொண்டு கன்னத்தில் முத்தமிட, மற்றொரு ராம் முறைத்தான். அதையும் கேலி செய்தது சிரித்து மகிழ்ந்தனர்.
நகை, துணிமணி, பலகாரம் , விருந்து எனக் கே ஆர் மில்லே தடபுடலாக ஏற்பாடுகள் நடந்தேற, எட்டு நாள் கழித்து முகூர்த்தம் குறித்து இருந்தனர். அதற்கு அடுத்த நாள்,ராஜன் தனது குடும்பத்தை அறிமுகப்படுத்தி, சில முக்கிய முடிவுகளை அறிவிக்க இருந்தார்.
அன்று பகலில்,கல்யாண ஏற்பாடுகள் பற்றிப் பேசி மும்மரமாக இருந்தவர்களை , மதியம் ரெஸ்ட் எடுக்க, எனக் கட்டாயமாகச் சங்கத்தைக் கலைத்து , பெரியவர்களை ஓய்வெடுக்க அனுப்பி விட்டு, மனைவியை அழைத்துக் கொண்டு தனது அறைக்கு வந்து விட்டார் கைலாஷ்.
“அப்ப , அப்ப கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துக்கப் பாரு, எதுக்கு எல்லா வேலையும் இழுத்து போட்டுக்குற, நீ ஓடி, ஓடி சேவகம் பண்ணதெல்லாம் போதும், இனிமேலாவது எனக்காக வாழப் பழகு”என் கடிந்தவர்,மனைவியைப் பெட்டில் உட்கார வைத்து, மாத்திரை,தண்ணீரையும் கொடுத்துப் போட சொன்னார்.
அவரையே கண்ணெடுக்காமல் பார்த்திருந்த பாரு,”ராஜ்” என அழைத்து அருகில் அமர்த்தி அவர் தோளில் சாய்ந்து கண்மூடிக் கொண்டார்.
“என்னவாம் அம்மணிக்கு, நல்லாதான் படுத்துத் தூங்கிறது” என்றவர், தலையணை இருக்குமிடம் தள்ளிச் சாய்ந்து உட்கார்ந்து, மனைவியை வசதியாகச் சாய்த்துக் கொள்ள, “நான் உங்களை ரொம்பத் தவிக்க விட்டுட்டேன், எனக்காவது ரஜூம்மா இருந்தா, நீங்க எந்தப் பிடிமானமும் இல்லாமல் எப்படி இருந்தீங்க” என வருந்தவும்,
“யார் சொன்னது பிடிமானம் இல்லைனு, பீபீ மில்ஸ்ல நீ செய்ய நினைச்ச மாற்றத்தையெல்லாம் கொண்டு வரேன்னு, உன் கனவு வார்த்தை ஒவ்வொன்னையும் நிறைவேத்தனும், அப்பா,அம்மா காலத்துக்குப் பிறகு, உன்கிட்ட வந்தரனும்ன்னு நினைச்சிருந்தேன், கடவுள் ,எம்பட மேல கொஞ்சமா கருணை வச்சு இப்பவாவது அனுப்பிவிட்டானே , அதை நினைச்சு சந்தோச பட்டுக்குறேன் “ என மனைவியின் நெற்றியில் முத்தமிட, "ம்" என அவர் மார்பில் வசதியாகச் சாய்ந்திருந்தார், இப்படி இருப்பதில் தான் எத்தனை நிம்மதி,சுகம். தனக்கு நல்லது,கேட்டதை யோசித்து அதைச் செய்ய ஒருவர், இன்று தான் முழுமையாக ராஜனின் ராணியாக உணர்ந்தார். மோனா நிலையிலேயே இருவரும் லயித்து இருக்க,
“பாபா, ஆயி “ என வெளியிருந்து கதவைத் தட்டினாள் ஆதிரா, “உள்ள வாடாமா “ என அவர் குரல்கொடுக்க, பைரவி அவசரமாகக் கணவரிடமிருந்து விலகப் போனார், “அட நம்ம மகள் தானே வருது, சும்மா இரு” என மனைவியைக் கைவளைவிலேயே வைத்துக் கொண்டவர், புன்னகையோடு உள்ளே நுழைந்த மகளை, “வாடாம்மா “ என மறுகை நீட்டி அழைக்கவும், முதலில் அவர்கள் தனிமையில் குறுக்கிடத் தயங்கிய மகள் , “சும்மா வாடாமா, பேசிட்டு தான் இருக்கோம்” என அவர் கைநீட்ட, ஓடி வந்து அவர் கையைப் பற்றிக் கொண்டவள், பாபாவின் கன்னத்தில் மித்தமிட்டு விட்டு, அவர் தோளில் தலை சாய்த்திருந்த ஆயிக்கும் முத்தம் கொடுத்து, தன மகிழ்ச்சியை வெளிப்படுத்தினாள்.
" ஆயி, ஐயம் ஸோ ஹேப்பி, பாபாவோட உங்களைச் சேர்த்துப் பார்க்க எவ்வளவு சந்தோஷமா இருக்குத் தெரியுமா. நீங்க இரண்டு பேரும் பர்பெக்ட் மேட்ச். சீரியஸ்லீ எனக்கு யாரு மேலையாவது, பொறாமை வந்துதுன்னா, அது பாபாவோட பாரு மேல தான். அப்ப அது நீங்க தான்னு தெரியாது. நீங்களும் பாபாவை எவ்வளவு உயர்வா சொல்லுவீங்க. இரண்டு பேருமே, ஒருத்தர் மேல, ஒருத்தர் எவ்வளவு அன்பு வச்சிருக்கீங்க. இரண்டு மாசம் குடும்பம் நடத்தினவங்க, அதை மனசில வச்சுக்கிட்டே இருபத்திரண்டு வருஷமா காத்திட்டு இருக்கீங்களே, ரியலி ஐ ப்ரவுட் ஆஃப் மை பேரண்ட்ஸ்" என உணர்ச்சி வயப் பட்டுப் பேசிக் கொண்டே போக, பாருவின் கண்களில் கண்ணீர்.
" ரஜ்ஜும்மா, என்னடா, என்ர பொண்டாட்டியை அழ வச்சிட்ட" என அவர் மனைவியின் கண்ணீரைத் துடைத்தபடி, மகளை வலது கையில் அணைத்துக்கொள்ள," ட்ரூ லவ், எவ்வளவு நாள் ஆனாலும் மாறாமல் இருக்கும். அதுக்கு நீங்க தான் சாட்சி" என மகள் பேசப் பேச, உணர்ச்சி வயப்பட்ட பைரவி,
" இல்லைடா ரஜ்ஜும்மா, உன் பாபா தான் , என்னை விட க்ரேட். ஒரு நிமிஷம், இவரைச் சந்தேகப்பட்டதுக்குத் தான், நான் இருபது வருஷம், வனவாசம் அனுபவிச்சேன். ஒரு வார்த்தை கேட்காமல் என்னை ஏத்துக்கிட்டார் பார்" என அழவும்,
“விடுங்க ஆயி,பாபாவே உங்களை ஏத்துக்கிட்டாங்கன்னா, பழசை எதுக்குப் பேசுறீங்க” எனக் கடிந்தவள், “வந்த விஷயத்தையே மறந்துட்டேன்” என்றவள், அலுவல் சம்பந்தமாக , சில சந்தேகங்களைக் கேட்டு, இதைச் செய்கிறேன் என அறிவித்து,
"வரேன் பாபா, ஆயி சும்மா மனசை போட்டு குழப்பிக்காம, பாபாவோட ரொமேன்டிக் டைம் ஸ்பென்ட் பண்ணுங்க "எனக் கண் சிமிட்டியவள், ஆயி எதுவும் சொல்வதற்குள் கதவை அடைத்து பறந்து சென்றாள்
"என்னமா ரெடியா, ரஜ்ஜூம்மா சொன்னது போலச் செய்யலாமா" என்ற கணவரின் குறும்பு பேச்சிலும், பார்வையிலும் வெட்கிய பைரவி, "உங்களை மாதிரியே, ரஜ்ஜூம்மாவையும் ,ஷரம் இல்லாமல் பழக்கி வச்சிருக்கீங்க, எப்படிப் பேசுறா பாருங்க" எனப் பாரு பொரிந்து தள்ள,ராஜனின் சிரிப்புச் சத்தம் அறையை நிறைத்தது.
ஆதிராவின் பிடிவாதம்,ஆயி போலவே அவளது நம்பிக்கை, ஆதர்ஷை கட்டாயப்படுத்தி முன் மாலை பொழுதில் மருதமலை சென்றாள். மஹந்தால் ஆபத்து வருமா,கைலாஷுக்கு தெரிந்தால் என்ன ஆகும் பொறுத்திருந்து பார்ப்போம்.
நிலவு வளரும்.
No comments:
Post a Comment